சேலம் மேற்கு மாவட்டத்தில் கழகம் எழுச்சி

தமிழர்களின் வாழ்வுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டம் முழுவதும் தொடர் போராட்டங்கள் கழக சார்பில் நடந்தன.

மேட்டூர் : ஈழத் தமிழர் பிரச் சினை, முல்லைப் பெரியாறு, கூடங் குளம் அணுமின் நிலையம் ஆகிய பிரச்சினைகளில் தமிழர்களின் வாழ் வுரிமைகளை பாதிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மத்திய அரசு, மற்றும் கேரள அரசைக் கண்டித்து மேட்டூரில் 11.12.2011 சனி மாலை 4 மணிக்கு மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட் டத்திற்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முல்லை வேந்தன், மாவட்ட செயலாளர் சூரியகுமார் முன்னிலை வகித்தனர். மாவட்ட அமைப் பாளர்கள் நங்கவள்ளி அன்பு, டைகர் பாலன் உரைக்குப் பின் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை யும், கேரள அரசையும் கண்டித்து கண்டன ஒலி முழக்கங்கள் எழுப்பப் பட்டன.  ஆர்ப்பாட்டத்தை விளக்கி துண்டறிக்கைகள் அச்சிடப்பட்டு, பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. மாவட்ட பிரச்சாரக் குழு பொறுப்பாளர் கோவிந்தராசு நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ்., கொளத்தூர், நங்கவள்ளி, மல்லியகுந்தம் பகுதி களைச் சேர்ந்த பொறுப்பாளர்களும் தோழர்களும் ஏராளமாக கலந்து கொண்டனர்.

நங்கவள்ளி: தமிழர்களின் வாழ் வுரிமைக்கு எதிராக தொடர்ந்து செயல்படும் மத்திய அரசைக் கண்டித்து நங்கவள்ளி கழகம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 25.12.2011 ஞாயிறு மாலை 5 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையம் அருகில் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் கிருட்டிணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சூரியகுமார், அமைப்பாளர் டைகர்பாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ம.தி.மு.க.வைச் சார்ந்த மொழிப்போர் தியாகி திருக்குமரன், நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த மணிகண்டன் ஆகியோர் உரைக்குப்பின் மாவட்ட அமைப் பாளர் நங்கவள்ளி அன்பு, மாவட்டத் தலைவர்முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன  உரையாற்றினர். நங்கவள்ளி கிளைக் கழகப் பொறுப்பாளர் இராசேந்திரன் நன்றி கூறினார். பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கிதுண்டறிக்கைகள் மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது.

மேச்சேரி: 28.12.2011 மாலை 5 மணிக்குமேச்சேரி பேருந்து நிலையம் அருகில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோரியும், முல்லைப் பெரியாறு நீர் உரிமையை நிலைநாட்ட வலியுறுத்தி மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்தும் மேச்சேரி ஒன்றிய பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு காவை ஈசுவரன் தலைமை தாங்கினார். மாவட்ட பிரச்சாரக் குழு பொறுப் பாளர் கோவிந்தராசு, உலகத் தமிழர் பேரமைப்பின் சேலம் மாவட்ட ஒருங் கிணைப்பாளர் தம்பி பழனிச்சாமி, மேட்டூர் வட்டார கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் சங்கத் தலைவர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மாவட்ட தலைவர் முல்லை வேந்தன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். மேச்சேரி பகுதி பொறுப் பாளர் கோ.தமிழ் இளஞ்செழியன் நன்றி கூறினார். நங்கவள்ளி, மல்லியகுந்தம், மேட்டூர் பகுதிகளை சார்ந்த பொறுப்பாளர்களும், தோழர் களும், பெரியார் தொழிலாளர் கழகத்தைச் சார்ந்த பொறுப்பாளர் களும், தொழிலாளர்களும் கலந்து கொண்டனர். துண்டறிக்கைகள் விநியோகிக்கப்பட்டன.

குஞ்சாண்டியூர்: 31.12.2012 சனி மாலை 5 மணிக்கு மேட்டூர் குஞ்சாண்டியூர் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழர்கள் வாழ்வுரிமைகளை பாதிக்கும் மத்திய அரசைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கழக மாவட்டஇளைஞரணி அமைப் பாளர் சு.குமரப்பா தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, மாவட்ட பொரு ளாளர் ஆசைத்தம்பி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினர். மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை யும், கேரள அரசையும் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப் பாட்டத்தை விளக்கி  துண்டறிக்கைகள் பொது மக்களிடம் விநியோகம் செய்யப்பட்டன. பல்வேறு பகுதிகளைச் சார்ந்த ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அருள்செல்வம், குஞ்சாண்டியூர் மனோகரன் ஆகியோர் சிறப்பாக செய்தனர். காந்தி நகர்அருள்செல்வம் நன்றி கூறினார்.

தாரமங்கலம்: 5.1.2012 மாலை 4 மணிக்கு தாரமங்கலம் அண்ணா சிலை அருகில் மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து தார மங்கலம் ஒன்றிய கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பட்டத்திற்கு தார மங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்சூரியகுமார், மாவட்ட இளைஞரணி தலைவர் விஜயகுமார், மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோகுலக் கண்ணன் உரைக்குப் பின் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி அன்பு, மாவட்ட தலைவர் முல்லைவேந்தன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  கண்டன ஆர்ப்பாட்ட ஏற்பாடுகளை கே.ஆர். தோப்பூர் கண்ணன், பவளத்தானூர் மாரியப்பன், தனசேகர் சரவணன், குடந்தை பாலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஆர்ப்பாட்டததில் கொளத்தூர், எளம்பிள்ளை, நங்கவள்ளி, மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ்.சிந்தாமணியூர் பகுதிகளைச் சார்ந்த பொறுப்பாளர் களும் தோழர்களும் கலந்து கொண் டனர். மேட்டூர் அனல்மின் நிலையம், நங்கவள்ளி ஸ்பின்னிங் மில் பெரியார் தொழிலாளர் கழக பொறுப்பாளர் களும் தோழர்களும் கலந்து கொண்டனர். கே.ஆர். தோப்பூர் கண்ணன் நன்றி கூறினார்.

ஒரே மாதத்தில் சேலம் மேற்கு மாவட்டத்தில் அய்ந்து ஊர்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

செய்தி தொகுப்பு: முல்லைவேந்தன்

பெரியார் முழக்கம் 02022012 இதழ்

You may also like...