மீனவர் படுகொலைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிஜ்ஜோ என்ற மீனவர்  உயிரிழந்ததோடு ஜெரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார். இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திய  அதேநேரம் இலங்கையின்  அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழர்கள்  மத்தியில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாகியுள்ளதோடு இலங்கை  நாடாளுமன்றத்திலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இலங்கை  நாடாளுமன்றத்திலே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒரு நாட்டின் எல்லையை  தாண்டிய குற்றத்துக்காக ஒருவரை படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்தபோது மீனவர் கடற்படையால் சுடப்பட்டுள்ளார், சர்வதேச கடல் எல்லையை யார் தாண்டி வந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர சுட்டுத் தான் கொல்ல வேண்டும் என்பது பரிகாரம் அல்ல என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் நாடாளுமன்றத்திலே இலங்கை கடற்படையை கடுமையாக சாடியுள்ளார்.

பெரியார் முழக்கம் 16032017 இதழ்

You may also like...