ஒரு பெரியார் தொண்டரின் கடிதம் – நன்கொடை

பொன் இராமச்சந்திரன் என்ற பெரியார் பற்றாளர், கழகத் தலைவருக்கு எழுதிய கடிதம் இது:

பேரன்பிற்குரிய பெரியார் திராவிடர் கழகத் தலைவர் அவர்களுக்கு வணக்கம்.

தங்கள் கழகத்தின் பகுத்தறிவுப் பரப்புரை பணிகளைக் கண்டு பெரிதும் மகிழ்கிறேன். பாராட்டுகிறேன். பகுத்தறிவாளர்களின் கூட்டங்கள் அரங்கங்களின் அடைபட்டுப் போன அவலமான நிலையில் பெரியார் திராவிடர் கழகக் கூட்டங்கள் வீதிகளில் நடப்பது போற்றத்தக்கது. மக்களிடம் பகுத்தறிவு  கருத்துக்கள் சென்றடைய வீதிக் கூட்டங்களே பயன்படும்.

நம்மவர்களின் ஊடகங்கள் – நாள், கிழமை, திங்களிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள் – எல்லாம் வெட்கமில்லாமலும், வெட்கத்துடனும் பார்ப்பனர்களையும் மிஞ்சி மூடத்தனத்தைப் பரப்புகின்றன. காரணம், இனப்பற்று, நாட்டுப் பற்று, மொழிப் பற்றுகளைவிட பணப்பற்று மிகுந்து விட்டது. என்ன செய்வது? பெரும் பொருளும், மனவலிவும், துணிவும், சலியாத உழைப்பும் மிக்க இன்னொரு பெரியார் எப்போது வருவார் என மனம் ஏங்குகிறது.

உங்களைப் போன்றவர்களின் மனத் துணிவும், இனமொழி நாட்டுப் பற்றும்,  பகுத்தறிவுப் பணியும் தான் நம் தமிழர்களைக் காப்பாற்றும். தொடர்ந்து தொண்டாற்ற பொருள் வளம் வேண்டும். என்னால் இயன்ற அணு அளவான ரூ.2000 (ரூபாய் இரண்டாயிரம் மட்டும்) பெரியார் திராவிடர் கழகத்திற்கு அளிப்பதில் மகிழ்கிறேன். தங்களின் தொண்டு தொடர விழைகின்றேன்.

– பொன். இராமச்சந்திரன், ‘அருளகம்’, 5, 2ஆம் தெரு, ஈசுவரன் நகர், பம்மல், சென்னை-75.

பெரியார் முழக்கம் 19012012 இதழ்

You may also like...