நம்பியூரில் கண்டன ஆர்ப்பாட்டம்
கூடங்குளம் அணு உலையை மூடக் கோரியும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்க முயலும் கேரள அரசைக் கண்டித்தும், தமிழகத்திற்கு துரோகம் இழைக்கும் மத்திய அரசைக் கண்டித்தும் கழகத்தின் நம்பியூர் ஒன்றியம் சார்பாக 1.1.2012 அன்று நம்பியூர் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அமைப்பாளர் செல்வக்குமார் தலைமையேற்க நம்பியூர் ஒன்றிய அமைப்பாளர் ரமேசு முன்னிலை வகித்தார். கழகத்தின் தலைமை ஆலோசனைக் குழு உறுப்பினர் இரத்தினசாமி, மாவட்ட தலைவர் நாத்திகசோதி, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம், விடுதலை சிறுத்தைகள் ஒன்றிய பொறுப்பாளர் பழனிசாமி, நாம் தமிழர் கட்சி வெங்கட், n.த.மு.தி.க. நகர பொறுப்பாளர் அல்லாபிச்சை, எலத்தூர் பேரூர் கழக செயலாளர் கதிர்வேல், புரட்சிகர விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர் முன்னணி இராமக்குட்டி, தலித் விடுதலைக்கட்சி மாவட்ட செயலாளர் முருகன் (எ) அப்துல்லா, உழவர் சிந்தனை பேரவை பரமேஸ்வரன் ஆகியோர் மத்திய காங்கிரசு அரசின் துரோகத்தையும் கேரள அரசின் விரோத போக்கினையும் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினனர். அழகிரி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை அருளானந்தம், ரமேசு, செல்வக்குமார் மற்றும் நம்பியூர் மற்றும் கூடக்கரை தோழர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெரியார் தி.க., நாம் தமிழர், ம.தி.மு.க., தே.மு.தி.க. தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 09022012 இதழ்