வடசென்னையில் காந்தி படுகொலை கண்டனக் கூட்டம்

30.1.2012 அன்று வடசென்னை மாவட்ட கழக சார்பில் சென்னை அயன்புரம் பகுதியில் காந்தியார் படுகொலை செய்யப்பட்டது ஏன்? எதற்கு? எப்படி? என்ற தலைப்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அயன்புரம் பகுதி அமைப்பாளர் சி.மணிவண்ணன் தலைமையில் மாவட்ட தலைவர் எ.கேசவன் முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடசென்னை மாவட்ட அமைப்பாளர் வி.ஜனார்த்தனன் வரவேற்புரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் ஆனூர் செகதீசன், மூத்த வழக்கறிஞர் செ. துரைசாமி, மாவட்ட செய லாளர் வழக்கறிஞர் சு. குமார தேவன் ஆகி யோர் சிறப்புரை யாற்றினர். பரசு ராமன் நன்றியுரை யாற்றினார்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் சம்பூகன் கலைக் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாடகர்கள் அருள்தாஸ், நாத்திகன், கீர்த்தி ஆகி யோர் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினர்.

பெரியார் முழக்கம் 09022012 இதழ்

You may also like...