தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிகிறது!
உலகின் மிகப் பெரிய ‘ஜனநாயக நாடு’ என்று கூறப்படும் இந்தியாவில் பொதுத் தேர்தலை நடத்தும் அதிகாரம் படைத்த ‘தேர்தல் ஆணையம்’ அதன் நம்பகத் தன்மையை இழந்து நிற்கிறது. இதுவரை நடந்த எந்த பொதுத் தேர்தலிலும் தேர்தல் ஆணையம் இப்படி ஒரு சார்பாக நடந்து கொண்டதே இல்லை. ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றாகவே மாறிப்போய் செயல்பட்டார் தேர்தல் ஆணையத் தலைவர் சுனில் அரோரா. இராணுவத்தின் தாக்குதலை ஆட்சியின் சாதனையாகப் பேசக் கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை பகிரங்கமாக மீறினார் மோடி. நாட்டின் சட்டத்தை மதித்து நடக்க வேண்டிய பிரதமரே இப்படி தரம் தாழ்ந்து செயல்பட்டார். தேர்தல் ஆணையத்தின் ஒரு சார்பு நிலையை மூன்று பேர் கொண்ட ஆணையத்தின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்த அசோக் லாவசா ஏற்கவில்லை. தேர்தல் ஆணையம் விதித்த கட்டுப்பாடுகளை மீறிய மோடியின் பேச்சு, விதி மீறல்களுக்குள் வராது என்று தலைமை தேர்தல் அதிகாரி...
