தமிழக அரசு தேர்வாணையத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊடுருவலா?

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் பட்டியல் இனப் பிரிவு மற்றும் அருந்ததியினரிடமிருந்து அருங்காட்சியகத் துறையில் ‘கியுரேட்டர்’ என்ற வேலைக்கு விண்ணப்பங்கள் கோரி ஜன.24, 2009இல் ஒரு விளம்பரம் வெளியிட்டிருக்கிறது.  நிரப்பப்படாமல் இருக்கும் பதவிகளுக்காக நீதிமன்றத்தில் வந்த வழக்கைத் தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவுப்படி இந்த அறிவிப்பாணை வெளி வந்திருக்கிறது.

இதற்கான கல்வித் தகுதியைப் பார்க்கும்போதுதான் வியப்பு மேலிடுகிறது.

விலங்கியல், தாவரவியல், மானுடவியல், தொல்லியல், வரலாற்றியியல் அல்லது சமஸ்கிருதம் ஏதாவது ஒன்றில் உயர்பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும் என்று அறிவிப்பாணை கூறுகிறது.

தமிழ்நாட்டில் அருங்காட்சியகத்தில் கியுரேட்டர் பணியில் சேர, பட்டியல் இனப்பிரிவினருக்கு சமஸ்கிருதப் படிப்பை தமிழக அரசு ஏன் ஒரு தகுதியாக்குகிறது?

தமிழ்மொழிக்கோ, ஆங்கிலத்துக்கோ தரப்படாத தகுதி, சமஸ்கிருதத்துக்கு மட்டும் ஏன் தர வேண்டும்? அதுவும் தமிழ்நாட்டில்?

கியுரேட்டர் பதவிக்கு சமஸ்கிருதம் எந்த வகையில் தொடர்புடையது?

சமஸ்கிருதம் படித்த சில நபர்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு இந்த வேலை வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இது சேர்க்கப்பட்டிருக்கிறதா?

மாதம் ரூ.36,700லிருந்து 1 இலட்சத்து 6 ஆயிரத்து 200 வரை ஊதியம் பெறக் கூடிய பதவிகள் இவை. தமிழ்நாடு அரசு தேர்வவாணையத்துக்குள்ளே ‘சங்கிகள்’ ஊடுருவி இந்த உள்ளடி வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்களா?

பெரியார் முழக்கம் 21022019 இதழ்

You may also like...