நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாகை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் மயிலாடுதுறையில் 09.01.2019 அன்று காலை 11.00 மணியளவில் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில்  நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் ஈரோடு ரத்தினசாமி, திருப்பூர் துரைசாமி, சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் குழு உறுப்பினர் நா. இளையராஜா வரவேற்றார். கழக வார பத்திரிகை புரட்சிப் பெரியார் முழக்கம் மற்றும் மாத இதழ் நிமிர்வோம் சந்தா தலைவரிடம் கொடுக்கப்பட்டது. கீழ்க்கண்ட புதிய நிர்வாகிகளை கழகத் தலைவர் அறிவித்தார்.

மாவட்டத் தலைவர்  ம.மகாலிங்கம்; மாவட்ட செயலாளர் தெ.மகேசு; மாவட்ட பொருளாளர் ந.விஜயராகவன்; மாவட்ட அமைப்பாளர் கு.செந்தில் குமார்; மாவட்ட துணைத் தலைவர் தெ. ரமேஷ்; மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் நன்மாறன்

மயிலாடுதுறை நகரம்: நகரத் தலைவர் நாஞ்சில் சங்கர்; நகர செயலாளர் நி.நடராசன்; நகர அமைப்பாளர் தில்லை நாதன்; நகர துணை தலைவர் ராஜராஜன்; நகர துணை செயலாளர் ஜாகிர் உசேன்.

மயிலாடுதுறை ஒன்றியம் – அமைப்பாளர்கள் பீமாராவ், பாலமுருகன்

செம்பனார்கோயில் ஒன்றியம் – அமைப்பாளர் கலிய மூர்த்தி

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...