விழுப்புரம் மாவட்டம் பிரிப்பு: வரவேற்று கழக சார்பில் சுவரொட்டிகள்
தமிழகத்தில் பெரிய மாவட்டமாக இருந்து வந்தது விழுப்புரம் மாவட்டம். பொதுமக்கள் தங்களது பல்வேறு துறை சார்ந்த வேலைகளுக்காகவும் மாவட்ட ஆட்சியர் சந்திப்பதற்கும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய சூழல் இருந்து வந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து புதியதாக கல்லக்குறிச்சி மாவட்டம் அறிவிக்கும்படி தமிழக அரசுக்கு பொதுமக்களும் கட்சிகளும் இயக்கங்களும் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தன. இந்த நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று கல்லக்குறிச்சி புதிய மாவட்டமாக அறிவித்த தமிழக அரசை வாழ்த்தி நன்றி தெரிவிக்கும் விதமாக கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக கல்லக்குறிச்சி மாவட்டத்தில் போஸ்ட்டர்கள் ஒட்டப்பட்டன.
பெரியார் முழக்கம் 07022019 இதழ்