பெங்களூர் வந்த இராஜபக்சேவுக்கு கறுப்புக் கொடி

9-02-2019 காலை 10 மணி அளவில் ‘இந்திய இலங்கை வெளியுறவு கொள்கையின் எதிர்காலம்’  என்ற தலைப்பிலான  இந்துக் குழும நிகழ்வில்  கலந்து கொள்ள பெங்களூருக்கு வந்த இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் பெங்களுர் ப்ரீடம் பார்க் அருகில் நடந்தது.

கருநாடக தமிழர் கூட்டமைப்பு விடுத்த அழைப்பின் பேரில் பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகள் உள்பட சுமார் 300 பேர் இந்திய சிங்கள இனக்கொலை கூட்டணியை  அம்பலப்படுத்தியும் இனக்கொலையாளி இராஜபக்சேவே திரும்பிப் போ என்றும் இனக்கொலைக்கு துணை போகிற இந்துக் குழுமம் ராமை கண்டித்தும் எழுச்சியுடன் முழக்கமிட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழர் கட்சி, நாம் தமிழர் கட்சி, கருநாடக தமிழர் பாதுகாப்பு இயக்கம், பாசிச எதிர்ப்பு  கூட்டமைப்பு, கருநாடக தமிழர் பேரவை, கன்னட தமிழர் பெடரேசன், கருநாடக தமிழ் மக்கள் இயக்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, தங்க வயல் நாம் தமிழர் கலை இலக்கிய பாசறை, இளந்தமிழகம்,  மே 17 இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், புரட்சிகர இளைஞர் முன்னணி மற்றும் சனநாயக சக்திகள் கலந்து கொண்டனர். பிறகு 50 பேருக்கு மேல் காவல் துறையால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு பிற்பகலில் விடுவிக்கப்பட்டனர்.

திராவிடர் விடுதலைக் கழகம், கருநாடக தமிழ் மக்கள், மே 17 இயக்கம், கருநாடக தமிழர் கட்சி, இளந்தமிழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, க.த.மு.க. ஆகிய அமைப்பின் தோழர்கள் கைதாயினர்.

இந்நிகழ்வு இராவணன் தலைமையில் பழனி, சரவணன், சித்தார்த்தன், குமார், தயாளன், வில்லாளன், வடிவேல், இராமர் உள்பட கழகத் தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 07022019 இதழ்

You may also like...