பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (3) ‘தேசியக் கொடி’ எரிப்பு அறிவிப்பும் அதன் தாக்கமும்
22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையி லிருந்து. பகுதி 2 இந்தித் திணிப்புக்கு எதிராக இந்திய தேசியக் கொடியை எரிக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 17.7.1955 அன்று திருச்சியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழு 1955 ஆகஸ்ட் 1ஆம் தேதி கொடி எரிப்புப் போராட்டம் நடத்தும் முடிவை எடுத்தது. இது குறித்து 20.7.1955 அன்று வெளி வந்த ‘விடுதலை’ நாளேட்டில் பெரியார் அறிக்கை வெளியிட்டார். நாடெங்கும் கடும் எதிர்ப்புகள் வந்தன. குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்து கடுமையான எதிர்ப்பு வந்தது. அப்போது பெரியார் இவ்வாறு எழுதினார்: “குமரன் காத்த கொடியை கொளுத்தலாமா என்கிறார்கள் நம் நாட்டு கம்யூனிஸ்டுகள். உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம் கம்யூனிஸ்ட் கட்சி தான் என்கிறார்கள். நம் நாட்டு கம்யூனிஸ்டுகளைப் பொறுத்தவரை அத்தனையும் பொய்யாகிவிட்டது. குமரன்...