உடைந்து தொங்கும் மோடி பிம்பம்
10 ஆண்டுகால மோடி ஆட்சியில் உலக நாடுகள் கண்டு அஞ்சுகிற அளவுக்கு மிகப்பெரிய வல்லாதிக்க சக்தியாக இந்தியாவை வளர்த்துவிட்டார் என பார்ப்பனக் கூட்டம் தங்களுக்கு தாங்களே குதூகலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் உலக நாடுகளின் புள்ளி விவரங்கள் அனைத்தும் மோடி ஆட்சி இந்தியாவின் இருண்ட காலம் என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டிக்கொண்டிருக்கின்றன. • உலக பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் இந்த ஆண்டு இந்தியா 159வது இடத்துக்கு பின்தங்கிவிட்டதாக உலகளாவிய ஊடக கண்காணிப்பு நிருபர்கள் ஆய்வறிக்கை கூறுகிறது. தரவரிசையில் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கையே 176-தான். இந்த பட்டியலில் 2022ஆம் ஆண்டில் 150-வது இடத்தில் இந்தியா இருந்தது. ஆண்டுக்கு ஆண்டு நிலைமை மோசமாகிக் கொண்டே செல்கிறது. • 2023ஆம் ஆண்டுக்கான சர்வதேச வறுமைக் குறியீட்டுப் பட்டியலில் இந்தியா 111-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளது. மொத்த நாடுகளின் எண்ணிக்கை 125. இந்த பட்டியலிலும் முந்தைய ஆண்டில் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது. • 2022ஆம் ஆண்டு...
