மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?
1925-இல் நீதிக்கட்சியில் இருந்த கிஆபெ விஸ்வநாதன் திருச்சி நகர நீதிக்கட்சி தலைவர் மகனை உடன் அழைத்துச் சென்று முதன்முதலில் பனகல் அரசரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கூட நீதிக்கட்சியின் தலைவர் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததை சுட்டிக்காட்டினார்.
உடனே பனகல் அரசர் மருத்துவக் கல்லூரி அதிகாரியை தனது அறைக்கு அழைத்து விவரம் கேட்கிறார். அந்த மாணவருக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை, அதனால் தான் இடம் கிடைக்கவில்லை என்று அதிகாரி விளக்கம் தருகிறார். அப்படி ஏதும் சட்டம் இருக்கிறதா என்று பனகல் அரசர் கேட்க, சட்டம் ஏதுமில்லை அது மரபாகத்தான் பின்பற்றப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறுகிறார். அத்தகைய மரபுகள் தேவையில்லை, அதை பின்பற்ற வேண்டாம் என்று பனகல் அரசர் கூற மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த தகவல் முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதன் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று நூலை எழுதியவர், பிரபல எழுத்தாளர் முகம் மாமணி. சனாதனத்தின் சதியை திராவிடம் எப்படி முறியடித்தது என்பதற்கு இதுவே நல்ல உதாரணம்.
வாலாஜா வல்லவன் உரையில் இருந்து.
பெரியார் முழக்கம் 20072023