பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.7.2023 அன்றுகாலை 10 மணியளவில் பழனியில் உள்ள பூம்புகார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மருத மூர்த்தி முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் செயற்குழு உறுப்பினர் இரா.உமாபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் “வைக்கம் போர் இன்னும் முடியவில்லை” என்கிற தலைப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதித் தீண்டாமை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டியல் தயாரிப்புக்கு தனிப் படிவங்களை அச்சிட்டு நூறு கிராமங்களுக்கு மேள் நேரில் சென்று தீண்டாமைக் கொடுமைகளை திரட்டியுள்ளனர்.
1. எது திராவிடம்? எது சனாதனம்? என்னும் தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 50 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது.
2 ஐம்பது புரட்சிபெரியார் முழக்கம் இதழுக்கு ஒரு மாதத்திற்குள் சந்தா சேர்த்து தலைமைக்கு அனுப்புவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பெரியார் முழக்கம் 20072023

You may also like...