தெருமுனைக் கூட்டங்கள் வெற்றிநடை; மக்கள் பேராதரவு
சென்னை : எது திராவிடம்? எது சனாதனம்? முதல் தெருமுனைக் கூட்டம், ஜுலை 10, மாலை 5 மணிக்கு மடிப்பாக்கத்தில் நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
இரண்டாவது கூட்டம் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மூன்றாவது கூட்டம் 11.07.2023 அன்று மாலை 5 மணிக்கு நங்கநல்லூரில் எட்வின் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் பறை இசைக்க கூட்டம் தொடங்கியது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி முடிந்த பிறகு அங்குள்ள தலைவர் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பி மரியாதை செலுத்தப்பட்டது.
நான்காவது கூட்டம் மடிப்பாக்கம் கூட் ரோட்டில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது. கழக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரு.உமாபதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தோழர்கள் கடைவீதி வசூலில் ஈடுபட்டதை பார்த்த மாணவி ஒருவர், அவரது தாயுடன் வந்து ரூ.100 நன்கொடையளித்து தோழர்களை ஊக்கப்படுத்தினார்கள். இது தோழர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஐந்தாவது தெருமுனைக் கூட்டம் 12/07/2023 அன்று ஆதம்பாக்கம் – நங்கநல்லூர் ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்றது. புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து ஆதம்பாக்கத்தில் நிகழ்வு தொடங்கியது. காங்கிரஸ் நிர்வாகி நேரு ரோஜா, திமுக முன்னாள் கவுன்சிலர் ஆதம் கு. விஜயன், லயோலா பிரான்ஸிஸ் ஆகியோர் கலந்து கொண்டு ஆதரவளித்தனர். கழக தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன் , மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
அதனைத் தொடர்ந்து ஆறாவது கூட்டம் மாலை 7 மணிக்கு நங்கநல்லூர் 48வது தெருவில் ஜெய்பீம் அறிவுமானனின் பகுத்தறிவுப் பாடல்களோடு நிகழ்வு தொடங்கியது. தோழர்கள் ஜெயபிரகாஷ், அருண்கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
விசிக விக்னேஷ், பிறைசூடன் ஆகியோரும், அமைப்பு சாரா தோழர்களான ராபின், திரிசூலம் கலைச்செல்வன், பெரும்பாக்கம் ஜெய்ராம் ஆகியோரும் நிகழ்ச்சியை வெகுவாகப் பாராட்டினர்.
மாவட்டத் தலைவர் வேலவேந்தன், மயிலை ராவணன், ம. கி. எட்வின் பிரபாகரன், இரண்யா, ராஜேஷ், கோபி, மயிலை அருண், அசோக், ப்ரீத்தி, அகராதி உள்ளிட்டோர் துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ராயப்பேட்டை அருண், ஆட்டோ அருண், காவை அஜித், சூர்யா, வீரா, உதயா, மஞ்சுநாதன் ஆகிய தோழர்கள் சிறப்பான களப்பணியில் ஈடுபட்டனர்.
ஏஞ்சல் தையலக உரிமையாளரும் பெரியாரியலாளருமான பிரபு, தானாக முன்வந்து தேநீர் வழங்கினார். கடை உரிமையாளர்கள் நன்கொடையாக 4,280 வழங்கினர்..
ஏழாவது கூட்டம் 13.07.2023 மாலை 5 மணிக்கு வேளச்சேரி காமராசர் சாலையில் பாடகர் ஜெய்பீம் அறிவுமானனின் பகுத்தறிவு பாடல்களுடன் தொடங்கியது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் பிரபாகரன் சிறப்புரையாற்றினார்கள்.
எட்டாவது கூட்டம் மாலை 7 மணிக்கு வேளச்சேரி நூறடி சாலை பாரத் பெட்ரோலியம் பங்க் அருகில் தொடங்கி நடைப்பெற்றது. கழகத் தோழர் ஈரோடு பேரன்பு பெரியார் மற்றும் இட ஒதுக்கீடு பற்றிய ராப் பாடலை பாடினார், இது பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
பின்னர் தோழர் நாத்திகன் தொடக்கவுரையாற்ற, கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் சிறப்புரையாற்றினார்கள். கூட்டத்தை இளைஞர்கள், உழைக்கும் மக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்து கருத்துக்களை கேட்டறிந்தனர்.
ஒன்பதாவது கூட்டம் 14.07.2023 மாலை 5 மணிக்கு ஆதம்பாக்கம் பகுதியில் கூட்டம் நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானனின் பகுத்தறிவு பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், சேத்துப்பட்டு இராசேந்திரன், அருண்கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
பத்தாவது கூட்டம் மாலை 7 மணிக்கு ஆதம்பாக்கம் மோகனாம்புரி முதல் தெருவில் நடைபெற்றது. ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடினார், பலகுரல் மன்னன் அய்யா காண்டீபன் நடிகவேள் எம்.ஆர்.இராதா குரலில் சமகால அரசியலை பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் ரவி பாரதி, தோழர்கள் குகன், தேன்மொழி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினார்கள். நிகழ்ச்சி முடிவில் தி.மு.கழக நிர்வாகிகள் சுப்புராஜ், மணிகண்டன், கண்ணன் ஆகியோர் தெருமுனைக் கூட்டத்தைப் பாராட்டி தோழர்களுக்கு பயனாடை அணிவித்தனர்.
வேளச்சேரி, மடிப்பாக்கம் பகுதிகளில் நடைப்பெற்ற 10 தெருமுனைக் கூட்டங்களை இரண்யா, எட்வின் பிரபாகரன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். – (ஏனைய பகுதிகளின் செய்தி அடுத்த இதழில்)
சேலம் மேற்கு : மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தொடக்க கூட்டம் 12.07.2023 புதன் காலை 10 மணிக்கு குஞ்சாண்டியூரிலும், இரண்டாவது கூட்டம் மாலை 4 மணிக்கு மேச்சேரி பேருந்து நிலையத்திலும் நங்கவள்ளி கிளைக் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைக் கழக பேச்சாளரும் சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவருமாகிய கோனூர் வைரமணி, திவிக நங்கவள்ளி நகர செயலாளர் சு.பிரபாகரன் தலைமையேற்று நடத்தினர். சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூரியகுமார் வரவேற்புரையாற்றினார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களையும் நமது இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகளையும் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் மக்களுக்கு எடுத்துரைத்தார். அதைத்தொடர்ந்து தொடக்க உரையாக கழகத்தின் தலைமை குழு உறுப்பினர் காவை ஈசுவரன் எது சனாதனம்? எது திராவிடம்? எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
கோனூர் வைரமணி திமுக தலைமைக் கழக பேச்சாளர் மற்றும் சேலம் மேற்கு மாவட்ட இலக்கிய அணி தலைவர், கிருஷ்ணன் CPI, ந.செல்வம் தமிழ்நாடு மாணவர் கழகம், ப.செல்வகுமார் தமிழ்நாடு மாணவர் கழகம், கிருஷ்ணன் விசிக ஒன்றிய செயலாளர் மேச்சேரி கலந்து கொண்டு எது திராவிடம்? எது சனாதனம்? என்பதை மக்களுக்கு எடுத்துரைத்தனர்.
கிருஷ்ணன் நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்து சென்றார். இறுதியாக கவியரசு நன்றி கூறி கூட்டம் நிறைவடைந்தது.
சேலம் மாநகரத்தின் இரண்டாவது தெருமுனை கூட்டம் தாதகாபட்டியில் உள்ள அருணாசலம் மெயின் ரோட்டில் 13-07-2023 அன்று மாலை 6.30 மணிக்கு தொடங்கி இரவு 9.50 வரை சிறப்பாக நடந்து முடிந்தது.
இக்கூட்டத்திற்கு சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ் தலைமையேற்று நடத்தினார். மாநகர ராஜசேகர் வரவேற்புரையாற்றினார். கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை முன்னிலை வகித்தார். கூட்டத்தின் முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சு சுதர்சன் பெரியாரின் பொன்மொழியை வசித்து கூட்டத்தை துவக்கி வைத்தார். யாழினி பெரியார் பாடல்கள் பாடினார். ஆத்தூர் மகேந்திரன் மந்திரமா? தந்திரமா? நிகழ்வை நடத்தினார்.
அதைத்தொடர்ந்து மாநகரச் செயலாளர் ஆனந்தி எது சனாதனம்? எது திராவிடம்? எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பிரபு மற்றும் பாலமுருகன் ஆகியோர் கலைநிகழ்ச்சி ஒன்றை நடத்தி திராவிடம் மக்களுக்கு என்ன செய்தது என விளக்கினர். அதைத்தொடர்ந்து நங்கவள்ளி அன்பு எது சனாதனம்? எது திராவிடம்? எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். இறுதியாக செல்வமணி நன்றியுரை கூறி கூட்டம் நிறைவடைந்தது. இளம்பிள்ளை கோபி, வெற்றி முருகன் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
15.07.23 காமராசர் பிறந்த நாளில் மாலை 6.30 மணியளவில் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், காவலாண்டியூர் கிளைக்கழக சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனை பரப்புரை தொடக்கக் கூட்டம் கண்ணாமூச்சியில் நடைபெற்றது.
இக்கூட்டம் மேட்டூர் டி.கே.ஆர். இசைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் இசை நிகழ்ச்சியோடு துவங்கியது. மாரி வரவேற்புரையாற்ற கொளத்தூர் தி.மு.க. ஒன்றியச் செயலாளர் ம.மிதுன் சக்ரவர்த்தி தலைமையேற்று உரையாற்றினார். சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தராசு, அ.முருகேசன் தி.மு.க கண்ணாமூச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து சதாசிவம் தி.மு.க. மாவட்ட மாணவரணி பொருப்பாளர், சேட்டுகுமார் கொளத்தூர் கிழக்கு ஒன்றியச் செயலாளர் வி.சி.க, சிவக்குமார் சட்டமன்ற தொகுதி செயலாளர் வி.சி.க, கிருஷ்ணன் நல்லம்பள்ளி ஒன்றியம் வி.சி.க, சித்துசாமி தி.வி.க, நாத்திகசோதி ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் தி.வி.க, கோனூர் வைரமணி மாவட்ட இலக்கிய அணித்தலைவர், தலைமைக்கழக பேச்சாளர் தி.மு.க, எது சனாதனம்? எது திராவிடம்? குறித்து சிறப்புரையாற்றினார்கள். காவை ஈசுவரன் கழக தலைமைக்குழு உறுப்பினர், கூட்டத்தை தொகுத்து வழங்கினார்.
தங்கராசு கிளைச் செயலாளர் நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது.
அ.முருகேசன் தி.மு.க கண்ணாமூச்சி, அனைவருக்கும் அசைவ உணவு ஏற்பாடு செய்திருந்தார். கொளத்தூர் விஜி, சசிகுமார், கண்ணையன், காவை இளவரசன், அபிமன்யு, பழனிசாமி, சென்னப்பன், இளவரசன், பச்சியப்பன், சந்திரன், பரமேஸ், சேகர், கொளத்தூர் குமார், மேட்டூர் அண்ணாதுரை, குமரப்பா, முத்துராஜ், சீனிவாசன், மேட்டூர் ஆர்.எஸ். நாகராஜ், நங்கவள்ளி கிருஷ்ணன், அருள், பிரபாகரன் கலந்துகொண்டனர். மற்றும் தி.மு.க,ல் வி.சி.க பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.
15/07/2023 அன்று இளம்பிள்ளை கழகம் சார்பாக தெருமுனை கூட்டம் மகுடஞ்சாவடியில் மாலை 4 மணிக்கு மற்றும் பெருமாகவுண்டம்பட்டியில் மாலை 6 மணிக்கும் இன்று மாலை நடைபெற்றது. முத்துமாணிக்கம் தலைமையேற்க, தங்கதுரை முன்னிலை வகித்தார்.
கூட்டத்தின் நோக்கம் குறித்து மோகன்ராஜ், திவ்யா கோபி, தமிழ்நாடு மாணவர் கழக செல்வா ஆகியோர் உரையாற்றினர்.
தொடர்ந்து ஆத்தூர் மகேந்திரன் மந்திரம் அல்ல தந்திரமே எனும் அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடத்தி உரையாற்றினார். கோபி நன்றி உரையாற்றினார்.
சேலம் கிழக்கு மாவட்டம், இளம்பிள்ளை கிளைக் கழக சார்பில் 16.07.2023 ஞாயிறு மாலை 4 மணியிலுருந்து 6 மணி வரை சின்னப்பப்பட்டி பகுதியிலும் இரண்டாவது கூட்டம் இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை தாரமங்கலம் அண்ணா சிலை அருகிலும் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை தலைமையேற்றார். மாவட்ட அமைப்பாளர் முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார். ஆத்தூர் மகேந்திரனின் மந்திரமா? தந்திரமா? நிகழ்வு நடைபெற்றது.
இளம்பிள்ளை திவ்யா, இளம்பிள்ளை மோகன்ராஜ், செல்வகுமார் தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகியோர் கலந்து கொண்டு எது திராவிடம்? எது சனாதனம்? என்பதை விளக்கி மக்களுக்கு எடுத்துரைத்தனர். இளம்பிள்ளை கோபி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கவியரசு நன்றியுரை கூற கூட்டம் முடிவுற்றது.
தாரமங்கலம் பகுதி குடந்தை பாலன், தமிழரசன் மேச்சேரி, இளம்பிள்ளை பகுதி ரமேஷ், தமிழ்மணி, சேகர், ரவி, தமிழ், நிலா, நங்கவள்ளி பகுதி கிருஷ்ணன், பிரபாகரன், ஆர்.எஸ். பகுதி நாகராஜ், கொங்கனாபுரம் கவியரசு, பொட்டனேரி பகுதி ரவிக்குமார் ஆகிய பலர் இதில் கலந்துகொண்டனர். கடும் மழையையும் பொருட்படுத்தாமல் தோழர்கள் இடைவிடாது இன்றைய தெருமுனைக் கூட்டத்தை மிகவும் சிறப்பாக நடத்தி முடித்தனர்.
ஈரோடு தெற்கு 15.07.2023 ஈரோடு தெற்கு மாவட்டக் கழகம் சார்பாக மணக்காட்டூரில் கர்ம வீரர் காமராசரின் 121-வது பிறந்தநாள் விழா மற்றும் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனை கூட்டம் மாவட்ட செயலாளர் எழிலன் தலைமையில் தொடங்கியது.
இக்கூட்டத்தில் அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், திராவிட மாடல் , திராவிடர் விடுதலைக் கழகத்தின் பயணங்கள் , கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட காணொளி ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்கள் காணொளியை ஆர்வத்தோடு பார்வையிட்டனர்.
மாவட்ட இளைஞரணி செயலாளர் பேரன்பு கொள்கைப் பாடல்கள் பாடினார், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி எது சனாதனம்? எது திராவிடம்? குறித்து சிறப்புரையாற்றினார். கோகுல், கோபிநாத், பழனிசாமி,குமார்,பிரபு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை தோழர் சரவணன், சு.ச.க. பாண்டியன் ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்..
இரண்டாம் நாளாக 16.07.2023 ஞாயிறு அன்று பெருமாள் மலையில் இராசண்ணா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் எழிலன், கிருஷ்ணமூர்த்தி, பழனிசாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி அற்புதராஜ் ஆகியோர் உரையாற்றினர். கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக அம்பேத்கர், பெரியார், திராவிட மாடல், தி.வி.க. கடந்துவந்த பாதை, கழகத் தலைவரின் எது சனாதனம்? எது திராவிடம்? விளக்க காணொளிகள் ஒளிபரப்பப்பட்டது. சி.எம்.நகர் பிரபு, திருமுருகன், விஜயரத்தினம், முருகன் ரங்கம்பாளையம் பிரபு, அழகு ஆகிய தோழர்கள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் : தஞ்சை மாநகர கழகம் சார்பாக எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டம் தஞ்சை கீழவாசல் பகுதியில் சண்.பாண்டியநாதன் தலைமையில் நடைபெற்றது.
பரப்புரையில் குடந்தை ஒன்றிய கழக அமைப்பாளர் வெங்கடேசன், ரோலர் பாரி, திராவிட இயக்க தமிழர் பேரவை மாநில அமைப்பாளர் காசு. நாகராசன் சிறப்புரையாற்றினார்.
அதனைத் தொடர்ந்து இரண்டாவது இடமாக தஞ்சை சிவகங்கை பூங்கா அருகில் நடைபெற்ற பரப்புரையில் தஞ்சை மாவட்ட கழக அமைப்பாளர் திருவேங்கடம் துவக்க உரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழக திருப்பூர் மகிழவன், காசு நாகராசன் உரையாற்றினார்கள்.
மூன்றாவது இடமாக தஞ்சை ரயிலடி அருகே நடைபெற்ற பரப்புரையில் தமிழ்நாடு மாணவர் கழக பொள்ளாச்சி சபரி கிரி அவர்கள் துவக்கவுரையாற்றினர். கோவை மாவட்ட கழக செயலாளர் வெள்ளிங்கிரி, காசு நாகராசன் சிறப்புரையாற்றினார். ஒரத்தநாடு ஒன்றிய கழக செயலாளர் சிவசுப்பிரமணியன் அவர்கள் நன்றி தெரிவித்தார்.
நாச்சியார் கோவில் கழகத் தோழர்கள் சோலை மாரியப்பன், ஆனைமலை ஆனந்த், மணி, நடராசன், கௌதமன் திராவிடர் இயக்க தமிழர் பேரவை சார்பாக கலந்து கொண்டனர்.
பெரியார் முழக்கம் 20072023