மணிப்பூர் மக்களுக்கு தமிழகம் துணை நிற்கும்
ஜுலை 18 அன்று சென்னையில் மணிப்பூர் மாணவர்கள் அங்கு நடக்கும் கலவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் , இயக்கங்கள் மக்களின் ஆதரவைக் கேட்டனர். இந்த சந்திப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மணிப்பூரில் மத வெறி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு மாநில, ஒன்றிய பாஜக செய்யும் சதிகளை விளக்கினார். உலக நாடுகள், ஐநா மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் பிரச்சனையை கவலையுடன் அணுகும் போது பிரதமர் மோடி அதுகுறித்து வாய்திறக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டினார்.
மெய்தீஸ் பிரிவினருக்கு மாநில பாஜக ஆட்சியே கமாண்டோ போலீஸ் உதவியுடன் ஆயுதங்களைத் தந்து தாக்குதலை தூண்டிவிடுவதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், பச்சை தமிழகம் சுப.உதயகுமார் ஆகியோரும் பங்கேற்றனர். கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் உமாபதி, கரு.அண்ணாமலை, கழகத் தோழர்கள் அஜித்,விஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர்.