மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்
சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது.
அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர்.
29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது.
மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்..
கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்.
30/08/2023 சென்னை பாலவாக்கம் – துரைப்பாக்கம் பகுதிகளில் நடைபெற்றது.
முதல் கூட்டம் பாலவாக்கம் அண்ணா சாலையில் பூர்ணிமா தலைமையில் மாலை 5 மணிக்கு தொடங்கியது. இரண்டாம் கூட்டம் துரைப்பாக்கம் 200 அடிச் சாலையில் முழக்கம் உமாபதி தலைமையில் மாலை 7 மணிக்கு தொடங்கியது. கழக இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமார், பகுதிச் செயலாளர் எட்வின் பிரபாகரன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள். நூற்றுக்கணக்கான IT ஊழியர்கள் உரைகளை ஆர்வத்தோடு கேட்டனர். இரவு உணவை தோழர் விஜய் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.
31.08.2023 அன்று 79வது கூட்டம் மாலை 5 மணிக்கு சுண்ணாம்பு கொளத்தூர் மைதானம் அருகிலும், 80வது கூட்டம் இரவு 8 மணிக்கு நன்மங்கலம் ஏழுமலை தெருவிலும் நடைப்பெற்றது. அருண் கோமதி தொடக்கவுரையாற்றினர்.
திராவிட முன்னேற்றக் கழக 1வது வார்டு மாமன்ற உறுப்பினர் பாலாஜி கூட்டத்தில் கலந்து கொண்டு தோழர்களுக்கு பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
01.09.2023 வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு புழுதிவாக்கம் பேருந்து நிலையம் அருகிலும், மாலை 8 மணிக்கு ஆலந்தூர் மண்டித் தெருவிலும் நடைப்பெற்றது. காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் இரவி பாரதி, அருண் கோமதி ஆகியோர் தொடக்க உரையாற்றினர். நாத்திகன் – உமாபதி குழுவின் நையாண்டி அரசியல் கலை நிகழ்ச்சி அரங்கேறியது. முதல் கூட்டத்தில் CPI (M) பகுதிச் செயலாளர் வெங்கடேசன், திமுக மாவட்ட பிரதிநிதி வேல்முருகன், பெரியாரியலாளர் கனகராஜ் ஆகியோரும், இரண்டாவது கூட்டத்தில் ஆலந்தூர் பகுதி திமுக நிர்வாகிகளான மணிகண்டன், கார்த்திக், தீபக், விசிக சிறுபான்மையினர் அணி மாநில துணைச் செயலாளர் அபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிறைவாக பங்கேற்ற கழகத் தோழர்கள் அனைவருக்கும் திமுக நிர்வாகிகள் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்து, அனைவருக்கும் இரவு உணவை ஏற்பாடு செய்து கொடுத்தனர்.
கோவை : கோவை மாவட்ட கழகத்தின் சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? 15வது தெருமுனைக் கூட்டம் ரத்தினபுரி ஜீவானந்தம் திமுக அலுவலகம் முன்பு நடைப்பெற்றது.
மாநகர அமைப்பாளர் மாதவன் தலைமை வகித்தார். கூட்டத்தை திமுக வட்டச் செயலாளர் செல்வமணி தொடங்கி வைத்தார். கிருஷ்ணன் – புரட்சி தமிழன் குழு தெருமுனைக் கூட்ட விளக்கப் பாடல்களைப் பாட, நிர்மல்குமார் – வெங்கடேசன் குழு கேள்வி- பதில் உரையாடல் நிகழ்வை நடத்தினர்.
கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி,மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன், மதிமுக கணபதி பகுதி செயலாளர் இராமநாதன், கழக கோவை மாவட்ட செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் தமிழ்நாடு மாணவர் கழக மகிழவன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.
நிறைவாக மாநகரச் செயலாளர் வெங்கடேசன் நன்றி கூறினார்.
ஈரோடு வடக்கு : ஈரோடு வடக்கு மாவட்ட கழக சார்பில் 27.08.2023 ஞாயிறு அன்று மாலை 04.30 மணியளவில் திங்களூரிலும், இரண்டாவது கூட்டம் மாலை 6:00 மணிக்கு துடுப்பதியிலும் நடைபெற்றது.
அர்ச்சுனன், துரை, செந்தில், வெள்ளதுரை, சந்தோஸ்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். பெரியார் விழுதுகள் அறிவுக்கனல் – யாழ்மதியின் பெரியாரியப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.
மாவட்டக் கழக அமைப்பாளர் கோபி நிவாசு, நம்பியூர் ரமேசு தொடக்கவுரையாற்றினர். கழக வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன், தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.
நிறைவாக மாவட்டச் செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் நன்றி கூறினார்.
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக சார்பில் ஒட்டன்சத்திரம் பகுதிக்கு உட்பட்ட வெரியப்பூர் பேருந்து நிலையம், வெரியப்பூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு, கேதையறும்பு, தாராபுரம் சாலை, ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், லக்கயன்கோட்டை, அத்திக்கோம்பையிலும் ஆகஸ்ட் 27,28 ஆகிய இரண்டு நாட்கள் தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்றது.
கபாலி, பெரியார், ராஜா ஆகியோரின் பகுத்தறிவுப் பாடல்களுடன் கூட்டம் தொடங்கியது.
தேனி ராயன், மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.
மாவட்ட இணையதள பொறுப்பாளர் ராஜா கூறினார்.
தோழர்கள் இரவு தங்குவதற்காக அறைகளை வழக்குரைஞர் ஜெயராஜ், மண்டப உரிமையாளர் ரஹ்மத்துல்லா, ஆகியோர் ஏற்பாடு செய்தனர்.
பெரியார்முழக்கம் 07092023