Category: பெரியார் முழக்கம் 2017

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

“எங்கள் கழகத்தில் இணைவதைவிட அவருடைய பாதுகாப்பே எங்களுக்கு முக்கியம்”

இஸ்லாமிய அடிப்படை வாதத்துக்கு பலியான கழகத் தோழர் பாரூக்கின் தந்தை, திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்தாலும் அவர் கழகத்தில் இணைவதைவிட அவரது பாதுகாப்பையே நாங்கள் முக்கியமாகக் கருதுகிறோம்” என்று கோவை மாவட்டக் கழகத் தோழர்கள் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளனர். இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ வெளியிட்டுள்ள செய்தி: “பாரூக்கின் தந்தை திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைத்துக் கொள்ள முன் வந்தாலும் கோவை மாவட்ட கழகத்தின் தோழர்கள் பாரூக்கின் தந்தை பாதுகாப்பே முக்கியம். அது பற்றித் தான் நாங்கள் கவலைப்படுகிறோம் என்று கூறினார்கள். இப்போது எங்கள் கவலை எல்லாம் பாரூக்கின் இரண்டு குழந்தைகளுக்கும் எதிர்காலத்தில் கல்வி வழங்க வேண்டும் என்பதுதான். வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பது ஒரு குழந்தையின் விருப்பம். அது குறித்தே நாங்கள் சிந்தித்து வருகிறோம். மற்றபடி பாரூக்கின் தந்தை எங்களது கழகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் எங்கள்...

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான  பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

பாரூக்கின் தந்தை ஹமீது உருக்கமான பேட்டி “திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைய விரும்புகிறேன்”

 ‘கொள்கைக்காகவே பலியான மகனுக்காகப் பெருமை அடைகிறேன்’ “பெரியார் என்ற தலைவர் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; அவரது கொள்கைகள் பற்றி தெரியாது. ஆனால் அவரின் பகுத்தறிவுக் கொள்கைகள்தான் இன்றைய தேவையாக இருக்கிறது என்ற முடிவுக்கு நான் வந்துள்ளேன்” என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டுக்கு (மார்ச் 31) அளித்த பேட்டியில் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் தந்தை ஆர் ஹமீது (54) கூறியிருக்கிறார். “தந்தை பெரியாரின் கொள்கைகளை நான் படிக்கத் தொடங்கி விட்டேன்” என்றும் அவர் கூறினார். கோவை உக்கடம் பகுதியில் மக்கள் நெருக்கடி மிகுந்த பிலால் எஸ்டேட் எனும் குறுகிய வீதியில் அவரது சிறிய வீட்டில் அமர்ந்து பேசிய அவர், “நான் திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைவது என்று முடிவு செய்துள்ளேன்” என்றார். “மூட நம்பிக்கை களுக்கு எதிராக நான் போராடப் போகிறேன். ஆனால் மதங்களுக்கு எதிராகப் பேசுவதில் எனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை. நம்முடைய ‘ஆன்மா’தான் கடவுள் என்று நம்புகிறேன்” என்றார்...

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

மதத்தை மறுக்கும் ‘இஸ்லாமிய’ நாத்திகர்கள் கடும் கண்டனம்

இஸ்லாமிய மதத்தை மறுத்து நாத்திகர் பண்பாட்டுக் கழகம் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு சார்பாக சென்னை பாரூக் நினைவு கூட்டத்தில் அலாவுதீன் பதிவு செய்த கண்டனம்: பாரூக் பிறந்த சமூகம் சார்ந்த இஸ்லாம் சமயத்திலிருந்து வெளியேறி எம்மில் பெரும்பாலான நண்பர்களைப் போலவே தன்னையும் மதமற்றவராக இஸ்லாமிலிருந்து வெளியேறியவர் என்று அறிவித்துக் கொண்டார். அதோடு அல்லாமல் இஸ்லாம் என்பது அர்த்தமற்ற – அபத்தமானது. விமர்சனங்களுக்கும், விசாரணைகளுக்கும் அப்பாற்பட்டது அல்ல என்ற கருத்துகளையும் வலிமையாக வலியுறுத்தி வந்தார். பாபர் மசூதி இடிப்பிற்குப் பின்னர் இந்து மதவெறியர்களுக்கு இணையாக இஸ்லாமிய அடிப்படைவாதிகள், பாமர இஸ்லாமிய மக்களை திட்டமிட்டு அரணாக்கிக் கொண்டு, தங்களது சொந்த இலாபத்திற்காக மதத்தின் பெயரால் மக்கள் அனைவரையும் பிளவுபடுத்தும் ஆபத்தான செயலில் ஈடுபடுவதையும் தொடர்ந்து விமர்சித்து வந்தார். தந்தை பெரியார் உள்ளிட்ட பகுத்தறிவாளர்களின் அறிவார்ந்த கருத்துக்களை கேட்க, படிக்கக் கூடாத மக்களாக முஸ்லிம்களை கையாளும் இஸ்லாமிய அடிப்படை வாதிகளையும் பயங்கரவாதிகளையும் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்துவ...

பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன். பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி: கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள். ‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர்....

சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு ‘தமிழ் இந்து’ தலையங்கம்

‘தமிழ் இந்து’ நாளேடு மார்ச் 24ஆம் தேதி பாரூக் படுகொலைக் குறித்து எழுதிய தலையங்கம். கோவையில் நடந்திருக்கும் இளைஞர் ஃபாருக் கொலை அதிர்ச்சியைத் தருகிறது. இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் மோசமான சூழலின் வெளிப்பாடு என்பது அதிர்ச்சியைத் தாண்டி ஆழ்ந்த கவலையை உருவாக்கு கிறது. திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்து செய லாற்றிவந்த ஃபாருக், சமூகத்தின் சாதி, மதப் பாகுபாடு களையும் மூடநம்பிக்கைகளையும் சாடிவந்தவர். தொடர்ந்து இறைமறுப்புக் கொள்கைகளைப் பேசிவந்தவர். அவருடைய செயல்பாட்டின் காரணமாகவே நடந்ததாகச் சொல்லப்படும் இந்தக் கொலை, தமிழகத்தில் உருவாகிவரும் சகிப்பின்மையின் அப்பட்டமான வெளிப்பாடு. தமிழகத்துக்கு நாத்திகப் பிரச்சாரம் புதிதல்ல. அதற்கென்று நீண்ட நெடிய மரபு இங்கு இருக்கிறது. குறிப்பாக, நவீன அரசியல் வரலாற்றில் சாதிக்கு எதிராக இங்கு பெரியார் தொடங்கிய கலகம் அதன் மையத்திலேயே கடவுளுக்கும் மதத்துக்கும் எதிரான குரலைத் தாங்கியது. ஆத்திகர்கள் இதற்குக் காலம் முழுவதும் கடுமையாக எதிர்வினையாற்றி வந்திருக்கிறார்கள். ஆனால், அது ஆகப் பெருமளவில்...

இதுவே கழகத்தின் நிலைப்பாடு “இனி தோழமையை முடிவு செய்ய வேண்டியது இஸ்லாமிய அமைப்புகள்தான்!”

பெரியார் இயக்கத்துடனான தோழமையை முடிவு செய்ய வேண்டியது, இஸ்லாமியர் அமைப்புகள்தான் – இதுவே கழகத்தின் நிலைப்பாடு என்று சென்னையில் பாரூக் படத்திறப்பு நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார். இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் இறை மறுப்பாளராக இருந்த ஒரே காரணத்துக்காக படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் படுகொலைக்கு கண்டனக் கூட்டம் கருத்தரங்கமாக சென்னையில் மார்ச் 26 மாலை இராயப்பேட்டை இலாயிட்ஸ் சாலையில் உள்ள விஜய் திருமண மண்டபத்தில் கழக சார்பில் நிகழ்ந்தது. ‘பாரூக் படுகொலையும் நமது நிலையும்’ என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கிற்கு மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகரன், ‘சேவ் தமிழ்’ செந்தில், திருமுருகன் காந்தி (மே 17) வழக்கறிஞர் திருமூர்த்தி, இஸ்லாமியராக பிறந்தாலும், இஸ்லாமிய மதக் கருத்தியலை மறுக்கும் தோழர்கள் நடத்தும் நாத்திகர் பண்பாட்டுக் கழகம் சார்பில் அலாவுதின் ஆகியோர்...

பாரூக் படுகொலை: இஸ்லாமிய எழுத்தாளர்கள் – ஜனநாயக சக்திகள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதம் தலைதூக்குவது மோசமான விளைவுகளை உருவாக்கி விடும் என்று இஸ்லாமிய எழுத்தாளர்கள், ஜனநாயக சக்திகள் கவலையையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர் பாரூக்கின் படுகொலை – பல இஸ்லாமிய சிந்தனை யாளர்கள், முற்போக்கு இஸ்லாமிய குழுவினரிடம் அதிர்ச்சியையும் அச்சத்தையும் உருவாக்கியிருப்ப தோடு, அரை நூற்றாண்டுக்கு மேலாக திராவிடர் இயக்கத்துக்கும் இஸ்லாமியர்களுக்கிடையே நிலவிய நட்பு உறவையும் சிக்கலாக்கி இருக்கிறது என்று ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு  (மார்ச் 24, 2017) எழுதியிருக்கிறது. கீரனூர் ஜாகிர் ராஜா, நாவல் சிறுகதைகளை எழுதி வரும் இலக்கியவாதி. தன்னுடைய நாவல்களில் பகுத்தறிவு, முற்போக்கு கருத்துகளை எழுதி வருகிறார். ‘மீன்காரத் தெரு’  என்ற அவரது நாவலில் திண்டுக்கல் கீரனூர் இஸ்லாமியர்களிடையே நிலவும் வர்க்க குழு பாகுபாடுகளை சித்தரித்திருந்தார். தொழில் வணிகத்தில் வசதியுடன் வாழும் ‘இராவுத்தர்’ பிரிவினர், மசூதிகளில் சேவை பணி செய்யும் வசதி யற்ற ‘லப்பை’ பிரிவினருடன் திருமண உறவுகளை தடை...

மதுரையில் இரயில் மறியல்

மதுரையில் இரயில் மறியல்

தமிழகத்தை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை நிறுத்தக் கோரியும் சிங்கள அரசின் தமிழக மீனவர் படுகொலையைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் இரயில் மறியல் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்றது. மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா. மணி கண்டன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் காசு.நாகராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிட்டு ராசா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கோபால் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர். பெரியார் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறே இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 22 தோழர்கள் காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். பெரியார் முழக்கம்...

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

பறிபோகிறது, தமிழர் வேலை வாய்ப்புகள் தபால் ஊழியர் பணிநியமனத்தில் இந்திக்காரர்களின் மோசடி

தமிழ்நாட்டில் உள்ள தபால் நிலையங்களில் தபால்காரர் பதவிகளை நிரப்பக்கோரி கடந்த ஆண்டு 21.10.2016 அன்று தமிழ்நாடு  தபால் வட்டத்தின் சார்பில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது. இப்பதவிக்கு தமிழகம் மட்டுமல்லாமல் இந்திய அளவில் இருந்து ஒரு லட்சத்திற்கு மேற்பட்டோர் விண்ணப்பித்து நுழைவுத்தேர்வும் எழுதினர். இத்தேர்வில் தமிழில் கட்டாயமாக 25 மதிப்பெண்களுக்கு தேர்வெழுதவேண்டும்.இதன் முடிவுகள் நான்கு நாட்களுக்கு முன்னர் இணையத் தில் வெளியிடப்பட்டது. தமிழில் வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததால் மற்ற தாள்களில் தேர்ச்சி பெற்றவர்கள் தமிழில் தோல்வி அடைந்து இருந்தனர். ஏதோ, தமிழ்ப் பேராசிரியர் பதவிக்கு தேர்வு நடப்பதுபோல் அவ்வளவு கடினமாக வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு, தமிழில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சிபெற்றவர்களின் பட்டியலைப் பார்த்ததும் நம்மவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இவர்கள் யாரும் தமிழ்நாட்டில் இல்லை, தமிழர்களும் இல்லை அனைவரும் அரியானா, மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஒருவருக்கும் தமிழ் தெரியவில்லை தொடர்பு கொண்ட சற்று நேரத்திற்கு பின் இவர்களின் அலைபேசிகள்...

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்

தக்கலையில்  : குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக  நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. கழக மாவட்டச் செயலாளர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். நீதி அரசர் (தலைவர்.பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்), இரமேஸ், இராஜேஸ் குமார், இராதாகிருஷ்ணன், (ஆஊருஞ(ஐ), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் உரையாற்றினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 30032017 இதழ்

தமிழ்நாடு மாணவர் கழகம்  ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்து கிருட்டிணன் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிரப்பக் கூடிய இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்ச் 19 பகல் 12 மணியளவில் நடந்தது. மத்திய கைலாஷ் அருகே மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டபோது காவல்துறை கைது  செய்தது. பாரி சிவக்குமார் தலைமையில் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

பாரூக் கொலையைக் கண்டித்து இராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம்

இராசிபுரம் நகர திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக, கோவைத் தோழர் பாரூக், இஸ்லாமிய அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து  கண்டன ஆர்ப்பாட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அமைப்பாளர் இரா.பிடல்சேகுவேரா தலைமை ஏற்க, ம.தி.மு.க.நகரச் செயலாளர் நா.ஜோதிபாசு,   சி.பி.ஐ . எஸ். மணிமாறன், புரட்சிகர இளைஞர் முன்னணியின் பாலகிருஷ்னன் ஆகியோரது கண்டன உரையைத் தொடர்ந்து மாவட்ட செயலாளர் சரவணன், மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,  மாவட்ட பொருளாளர் அ.முத்துப்பாண்டி, ஈரோடு மாவட்ட செயவாளர் வேணுகோபால் மற்றும் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ப.இரத்தினசாமி வெளியீட்டுச் செயலாளர் இராம.இளங்கோவன் கண்டன உரையாற்றினர். திருப்பூர் தோழர் சங்கீதா நன்றியுரை கூற ஆர்ப்பாட்டம் நிறைவுபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

பாரூக் படுகொலை: பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் பாரூக் படுகொலையைக் கண்டித்து மார்ச் 25 மாலை 5 மணியளவில் பெரம்பலூர் பேருந்து நிலையம் காந்தி சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம், மாவட்ட தலைவர் தாமோதரன் தலைமையில் நடைபெற்றது. என். செல்லத்துரை (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), திருச்சி மாவட்ட பொறுப்பாளர்கள் தமிழ் முத்து, குணராசு, வீ. ஞான சேகரன் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி), கிருட்டிணசாமி (அம்பேத்கர் அறக்கட்டளை), அக்ரி. ஆறுமுகம் (தி.க.), சித்தார்த்தன் (தி.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். பாரூக் குடும்பத்துக்கு தோழர்கள் ரூ.13,000 நிதியை மாவட்ட தலைவர் தாமோதரனிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

ஈரோடு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம்

இஸ்லாம் அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட கோவை தி.வி.க. தோழர்  பரூக் ,  ஈரோடு மாவட்டம் (தெற்கு) சார்பாக 19.03.2017 அன்று மாலை 7 மணிக்கு மரவபாளையத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர் ப.குமார் தலைமை ஏற்க, மறைந்த தோழருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. காவை இளவரசன், கோபி வேலுச்சாமி ஆகியோர் இரங்கலுரையாற்றினர். தோழர்கள் திரளாக கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 30032017 இதழ்

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

கழக கட்டமைப்புக்கு நன்கொடை

திருச்சி, உய்யகொண்டான் திருமலை, சண்முகா நகர், பணி நிறைவு வனச் சரக அலுவலர் இல. கோவிந்தசாமி கழகக் கட்டமைப்பு நிதியாக ரூ. 10,000/- (ரூபாய் பத்தாயிரம் மட்டும்) கழகத் தலைவர் கொளத்துர் மணியிடம் வழங்கினார். நன்றியுடன் பெறப்பட்டது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். “கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது. பெரியார் முழக்கம் 23032017 இதழ்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

மாணவர் முத்துகிருட்டிணன் இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர், தோழர்கள்

கழகத் தலைவர் கொளத் தூர் மணி, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட் உள்ளிட்ட தோழர்கள், டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தற் கொலை செய்ததாகக் கூறப்பட்ட ஆய்வு மாணவர் முத்துகிருட்டிணனின் இல்லம் சென்று அவரது குடும்பத் தாரை சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மக்கள் கண் காணிப்பகத்தின் செயல் இயக்குநர் ஹென்றி திபேன், அவரது குழுவினருடன் வந்து  ஆறுதல் கூறினார். ஆய்வு மாணவர்  சேலம் முத்து கிருட்டிணனன் உடல் 16-3-2017 அன்று  காலை 6.00 மணியளவில் சேலம், அரிசிபாளையத்தில் உள்ள அவரது இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டு மக்களின் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மாவட்ட செயலாளர் டேவிட், மாநகரத் தலைவர் பாலு, செயலாளர் பரமேசு, மூணாங்கரடு சரவணன், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் திருச்செங்கோடு வைரவேல், ஆத்தூர் மகேந்திரன் உள்ளிட்ட முப்பதுக்கும் மேற்பட்ட தோழர்கள் காலை 8.00 மணிக்கே மாணவர் முத்து கிருட்டிணன் இல்லம் வந்துவிட்டனர்....

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத...

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

கழகத் தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

கழகத் தோழர் ஃபாரூக் கடந்த 16.03.2017 அன்று இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும்கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் சமூகம் குறித்த கவலையோடு சிந்தித்து அதற்காக திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக்கின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொணா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக்  குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் துரைசாமி  வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy – Savings A/c No : 10235169636. IFSC Code : SBIN0009314.  State bank of india, Veerapandi...

கொள்கைத் தோழர் – கோவை ஃபாரூக் உயிரைப் பறித்தது – இஸ்லாமிய அடிப்படைவாதம்

கோவை திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாருக், பெரியார் கொள்கையை ஏற்று கடவுள்- மத மறுப்பாளராக வாழ்ந்ததோடு தனது முகநூலிலும் தனது மதத்தின் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக கருத்துகளைப் பதிவிட்டு வந்தார். இறை மறுப்பாளராக இருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இஸ்லாமிய அடிப்படைவாத வெறியில் ஊறிப்போன ஒரு கும்பல் அவரை கொடூரமாக வெட்டி கொலை செய்தது. கடந்த 16ஆம் தேதி இரவு உக்கடம் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அருகே இந்த கொடூர சம்பவம் இரவு 11.15 மணியளவில் நடந்தது. பழைய இரும்புப் பொருள்களை விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார் ஃபாரூக். தொழில் தொடர்பாக பேச விரும்புவதாக தனக்கு வந்த தொலைபேசி அழைப்பை ஏற்று, பேசிய நபர் வரச் சொன்ன இடத்துக்கு தனது மோட்டார் பைக்கில் புறப்பட்டார். சுத்திகரிப்பு நிலையம் அருகே பின்னாலிருந்து வந்த ஒரு கும்பல் தாக்கி கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடியது. வழியில் சென்றவர்கள் அலறல் சத்தம் கேட்டு உதவிக்கு...

சாதனை மகளிருக்கு கழகம் பாராட்டு விருது

சாதனை மகளிருக்கு கழகம் பாராட்டு விருது

திருச்சி திராவிடர் விடுதலைக் கழக சார்பில் மார்ச் 10ஆம் நாள் உலக மகளிர் நாளும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் மற்றும் சாதனைப் பெண்களுக்கு விருது வழங்கும் விழாவும் திருச்சி ரவி மினி அரங்கில் சிறப்புடன் நடந்தன. டார்வின்தாசன் தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பாளர் மனோகரன் வரவேற்றுப் பேசினார். விழாவில் வழக்கறிஞர் பானுமதி, பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறைத் தலைவர் பேராசிரியர் மணிமேகலை, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையாற்றி சாதனை மகளிருக்கு விருதுகளை வழங்கினர். விருது பெற்ற மகளிர் விவரம்: ச. பெட்ரிசியாமேரி – இவரது கணவர் முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்த நிலையில், மேரி துணிவுடன் முடிதிருத்தும் தொழிலில் தானே இறங்கினார். ஆண்கள் குழந்தைகளுக்கான முடிதிருத்தத்தை துணிவுடன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே நடத்தி வருகிறார். க. இராஜேசுவரி : இரசாயனம் இல்லாத மூலிகைப் பொருள்கள் உற்பத்தி செய்யும்...

இனம் கூடி சேர்ந்து எழுக!

இனம் கூடி சேர்ந்து எழுக!

(மகுடம் இசை முழக்கத்தின் நிறைவு காட்சியாக கலைஞர்கள் வல்லிசையோடு குழுவினர் பாடிய எழுச்சிப் பாடல்) இடிகொண்ட மேகமாய் இசைதந்த வேகமாய்1 இனம்கூடி சேர்ந்து எழுக விடிகின்ற பொழுதுக்கு வென்றநம் வரலாற்றை விரிவாகச் சொல்லித் தருக! உயிருக்குள் ஒளியாகி உணர்வுக்குள் மொழியாகி உலகாள வந்த தமிழே! ஒருபோதும் அடங்காது ஒடுங்காது ஓயாது உன்னோடு நான்கொண்ட உறவே! (இடிகொண்ட) அன்பெங்கள் அறமாக அறிவெங்கள் வரமாக அகற்றுவோம் சாதி நோயை! ஆணுக்கு பெண்சமம் என்பதே நீதியாய் ஆக்குவோம் புதியபாதை! (இடிகொண்ட) எழில்கொண்ட வரலாறு இலக்குகள்  தெளிவோடு இலக்கண இலக்கியங்கள்! இழக்காமல் இன்றைக்கும் எம்மோடு வளர்கின்ற இசைக்கலை வாத்தியங்கள்! (இடிகொண்ட) அழியாத வாழ்வியல் அகத்திணை புறத்திணை அறம்கூறும் நல்ல நூல்கள்! அவ்வையும் கம்பனும் திருமூலர் வள்ளுவன் அடையாளம் தந்த பேர்கள்! (இடிகொண்ட) களம்கண்டு நின்றாலும் கரைதாண்டிச் சென்றாலும் கரையாத எங்கள் உணர்வு! கலையாக மொழியாக காற்றோடு இசையாக கலந்தேஎம் உயிர்வாழும் உறவு! (இடிகொண்ட) கோபங்கள் குறையாமல் கொடுத்ததை...

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன்...

மீனவர் படுகொலைக்கு இலங்கை  நாடாளுமன்றத்தில் கண்டனம்

மீனவர் படுகொலைக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் கண்டனம்

இலங்கை கடற்படையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  இராமேஸ்வரத்தை சேர்ந்த பிரிஜ்ஜோ என்ற மீனவர்  உயிரிழந்ததோடு ஜெரோன் என்ற மீனவர் காயம் அடைந்தார். இந்த செய்தி தமிழக மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்திய  அதேநேரம் இலங்கையின்  அனைத்து பகுதிகளிலும் வாழும் தமிழர்கள்  மத்தியில் மிகப்பெரும் அதிர்வலைகளை உருவாகியுள்ளதோடு இலங்கை  நாடாளுமன்றத்திலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் மீதான துப்பாக்கி சூட்டு சம்பவத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ் தேசிய  கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சா.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இலங்கை  நாடாளுமன்றத்திலே கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் தனது உரையில், “ஒரு நாட்டின் எல்லையை  தாண்டிய குற்றத்துக்காக ஒருவரை படுகொலை செய்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.  சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி வந்தபோது மீனவர் கடற்படையால் சுடப்பட்டுள்ளார், சர்வதேச கடல் எல்லையை யார் தாண்டி வந்தாலும் அவர்களை கைது செய்ய வேண்டுமே தவிர சுட்டுத் தான் கொல்ல வேண்டும் என்பது பரிகாரம் அல்ல...

பொய் வழக்கிலிருந்து கழகத் தோழர்கள் விடுதலை !

பொய் வழக்கிலிருந்து கழகத் தோழர்கள் விடுதலை !

திருப்பூர் மாஸ்கோ நகர் பல்வேறு தரப்பட்ட உழைக்கும் மக்கள், சிறுபான்மையின மக்கள் வசிக்கும் பகுதியாகும். இப்பகுதி மக்களை குற்றப்பரம்பரையினர் போல் பாவிக்கும் திருப்பூர் மாவட்ட காவல்துறை, நடவடிக்கை எனும் பெயரில் திடீரென சோதனைகள் செய்வது,பொய் வழக்குகள் போடுவது என தொடர்ச்சியாக பொது மக்களுக்கு தொல்லைகள் கொடுத்து வந்தது. முதன்முறையாக காவல்துறை போட்ட பொய் வழக்கை நீதிமன்றத்தில் தகர்த்துள்ளது திராவிடர் விடுதலைக்கழகம். மாஸ்கோ நகர் பகுதியில் இருந்து கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டு ஜாதிவெறி, மத வெறியர்களுக்கு எதிராக துணிச்சலுடன் களச் செயல்பாடுகளில் இயங்கிவந்த தோழர்கள் மாதவன், நாகராசு ஆகியோர் மீது 2015 ஆம் ஆண்டு காவல்துறை துணையுடன் மத, ஜாதி வெறியர்கள் பொய் வழக்கை பதிவு செய்தார்கள். கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல்துறையால் கடுமையாக தாக்கப் பட்டு  26 நாட்கள் சிறையில் அடைத் தார்கள். அப்போது இக் கைதைக் கண்டித்து கழகத்தின் சார்பில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கின் தீர்ப்பு 05.03.2017...

திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

திருப்பூரில் ஜாதி, சடங்கு மறுப்புத் திருமணம்

20.02.2017 அன்று காலை திருப்பூர் அம்மாபாளையம்,பெரியார் படிப்பகத்தில் க.விஜயலட்சுமி-ச.வீரகுமார் ஆகியோரின் ஜாதி மறுப்பு, சடங்கு மறுப்புத் திருமணம் திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட கழகத் தலைவர் முகில்ராசு தலைமையில் நடை பெற்றது. இத்திருமணத்திற்கு அதிமுக பகுதி செயலாளர் இரா.கோபிநாதன், கழகத் தோழர் நகுலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை இணை யர்கள் கழகத் தோழர்கள் முன்னிலையில் உறுதிமொழியாக ஏற்றுக்கொண்டனர். குட்டி பிரசாந்த், மாநகர தலைவர் தனபால், அமைப்பாளர் முத்து, ஜெயா, நசீர், பாலு சந்தர் கணேசன்  இந்நிகழ்வில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பெரியார் முழக்கம் 16032017 இதழ்

டெல்லி நேரு பல்கலையின் தமிழக தலித் மாணவர் உயிர்ப் பலியானார்!

டெல்லி நேரு பல்கலையின் தமிழக தலித் மாணவர் உயிர்ப் பலியானார்!

பா.ஜ.க.வின் ஆட்சி டெல்லியில் பல்கலை வளாகங்களில் பார்ப்பன ‘இந்துத்துவா’வை திணித்து வருகிறது. ‘இந்துத்துவா’வை ஏற்க மறுக்கும் மதச் சார்பின்மை சமூகநீதி கருத்துடைய மாணவர்களின் கருத்துரிமைகளை மறுத்து அவர்கள் மீது வன்முறை தாக்குதல்களையும் நடத்தி வருகிறது. அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் அகில பாரதிய வித்தியார்த்தி பரிஷத் மதவெறி கொள்கைகளை எதிர்த்ததற்காக பழி வாங்கப்பட்ட ரோகித் வெமுலா என்ற தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார். டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மரண தண்டனைக்கு எதிராக கருத்து தெரிவித்து, அப்சல்குரு முறைகேடாக தூக்கிலிடப்பட்டதைக் கண்டிக்கும் வகையில் அவரது நினைவு நாள் நிகழ்வை நடத்திய கன்யாகுமார் உள்ளிட்ட 5 மாணவர்கள் தேச பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்பட்டனர். இப்போது அதே ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் ‘பிஎச்.டி.’ ஆய்வு நடத்தும் சேலத்தைச் சார்ந்த தமிழ்நாட்டு மாணவர் முத்துகிருட்டிணன், பார்ப்பன இந்துத்துவ அடக்குமுறையால் மன உளைச்சலுக்கு உள்ளாகி மடிந்துள்ளார்....

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

தலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும்...

பழனியில் பெரியார் படிப்பகம் திறப்பு

பழனியில் பெரியார் படிப்பகம் திறப்பு

திண்டுக்கல் மாவட்டம் பழனி அ.கலையம்புத்தூர் திராவிடர் விடுதலை கழகத்தின் தந்தை பெரியார் படிப்பகத் துவக்க விழா 28.02.2017 அன்று காலை 10.00 மணிக்கு வண்டிவாய்க்கால் பகுதியில் சிறப்பாக நடைப்பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி படிப்பகத்தை திறந்து வைத்தார். திவிக சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்க, வி. ஜான்சன் கிறிஸ்டோபர் (மாவட்ட செயலாளர் விசிக), பாஸ்கர் (மக்கள் ஜனநாயக குடியரசு கட்சி), து. சுரேஷ், மள்ளர் (சிறைவாசிகள் மீட்பு இயக்கம்), கரு. இரணியன் (தமிழ்ப் புலிகள்) மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த தோழர்கள் சிறப்புரை யாற்றினார். இறுதியாக கழகத் தலைவர் படிப்பகத்தைப் பயன்படுத்துதல் பற்றியும், அதன் பலன் பற்றியும் கருத்துரை வழங்கி நிறைவு செய்தார். படிப்பகம் உருவாக ஒத்துழைத்த பகுதி கழகத் தோழர்கள் பா.ராஜசேகரன், ஆ.திருச் செல்வம், ஜான்குட்டி, மா.கார்த்திக், வே.ஆனந்தன், ஆ.மாரியப்பன் (எ) துரையன், சு.சங்கிலிபாலன், மு.கார்த்திக்ராஜா, மு.அரங்கநாதன், க.மாரிமுத்து, த.சபரி நாதன் அனைவருக்கும்...

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

சங்கராச்சாரிகளின் ‘குடுமிபிடி’ சண்டைகள்

ஆதிசங்கரர் என்ற கேரள பார்ப்பனர், புத்தமதத்தை வீழ்த்தி அழிப்பதில் பெரும்பங்காற்றியவர். அவர் நான்கு சங்கர மடங்களை மட்டுமே உருவாக்கினார். பத்ரிநாத், சிருங்கேரி, துவாரகா, பூரி ஆகிய நான்கு மடங்களே அவை. காஞ்சிமடம், ஆதிசங்கரர் நிறுவியது அல்ல; அது கும்பகோணத்திலிருந்து காஞ்சிக்கு மாற்றப்பட்டு, ஆதி சங்கரர் உருவாக்கியதாக பொய்யாக ஆவணங்களை உருவாக்கினார்கள். இப்போது சங்கரமடங்கள் என்றும் ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்டவை என்றும் 50க்கும் மேற்பட்ட சங்கராச் சாரிகள் வந்து விட்டனர். டேராடூன் நகரிலிருந்து செயல்படும் சமூக செயல்பாட்டாளர் அஜய்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள சங்கராச்சாரிகள், சங்கர மடங்கள் குறித்த தகவல்களை மனித வளத்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைச்சகங்களிடம் கேட்டார். இது குறித்த எந்த தகவலும் தங்களிடம் இல்லை என்று அமைச்சகங்கள் கூறிவிட்டன. ஆக எந்த சங்கரமடமும் அரசு கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படவில்லை என்பது தெரிகிறது. காசியில், ‘அகில இந்திய அக்ஹரா பிரஷாத்’ என்ற அமைப்பு இருக்கிறது....

நீட் தேர்வைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வைக் கண்டித்து தக்கலையில் ஆர்ப்பாட்டம்

குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம். சார்பாக  நீட் தேர்வைக் கண்டித்து தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் 4.3.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாவட்டச் செயலாளர் தமிழ்மதி தலைமை தாங்கினார். நீதி அரசர் (தலைவர். பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட் டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம்), போஸ் (சமூக ஆர்வலர்),  முரளீதரன் (பொது பள்ளிக்கான மாநில மேடை செயலாளர்),  இரமேஷ், இராஜேஷ் குமார், இராதா கிருஷ்ணன், ஜான் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் கலந்து கொண்டனர். தோழர்கள் அனைவரும் மோடி அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை முழங்கினர்.  மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 09032017 இதழ்

நந்தினிக்கு நீதி கேட்டு மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

நந்தினிக்கு நீதி கேட்டு மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

மேட்டூர் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 8.2.2017 புதன் அன்று மாலை 4 மணிக்கு மேட்டூர் பெரியார் பேருந்து நிலையம் முன்பு அரியலூர் தலித் சிறுமி நந்தினி கூட்டுப் பாலியல் பலாத்காரப் படுகொலையை செய்த இந்து முன்னணியினரை கைது  செய்ய வலியுறுத்தி நீதி கேட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி. கோவிந்தராசு (சேலம் மேற்கு மாவட்டம் கழக செயலாளர்) தலைமையில், க. இராதாகிருட்டிணன் (ஆதித் தமிழர் பேரவை), க. ராஜாத்தி (அனைத்திந்திய மாதர் சங்கம்), செ. கருப்பண்ணன் (தீண்டாமை ஒழிப்பு முன்னணி), மா. சிவக்குமார் (விடுதலை சிறுத்தைகள் கட்சி) ஆகியோர் உரையாற்றினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி கண்டன உரையாற்றினார். சு. குமரப்பா எழுச்சியாக முழக்கங்களை முழங்கினார். அ.சுரேசுகுமார் (நகர செயலாளர்) நன்றி கூறினார். கூட்டத்தில் மேட்டூர் நகர தலைவர் செ. மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், அ.அண்ணாதுரை, மாவட்ட பொருளாளர் சு.சம்பத்குமார்,...

நெடுவாசலில் கழகத் தலைவர்

நெடுவாசலில் கழகத் தலைவர்

03.2017 அன்று சனிக்கிழமை நெடு வாசலில் ஹைட்ரோ, கார்ப்பன் திட்டத்திற்கு எதிராகப் போராடிக் கொண்டிக்கும் கிராம மக்கள் உடன் களத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து உரையாற்றினார். உடன் கழக மாநில பொருளாளர் திருப்பூர் சு, துரைசாமி, திருச்சி பேராவூரணி மற்றும் கழகத் தோழர்கள். பெரியார் முழக்கம் 09032017 இதழ்

மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில்...

சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

சாதியும் காதலும் – கவிஞர் இரவிபாரதி

உன் சாதி பிறக்கும் முன் என் காதல் பிறந்தது உன் சாதியைவிட என் காதலே சிறந்தது உன் சாதியை காக்கவே எங்கள் காதலை அழிக்கிறாய் நீ பிறந்த சாதிக்காய் பெற்ற மகளை கொல்கிறாய் கூலி கேட்டு போராடிய போது வரவில்லையே சாதி வெண்மணியில் கருகியபோது எட்டி பார்க்காத சாதி திருமணம் என்ற உடன் வந்து விடுகிறதே சாதி சாதிய திருமணம் உன் சொத்தை கொள்ளையடிக்கும் சாதி மறுப்பு திருமணம் சமத்துவம் வளர்க்கும் பற்றிப் படரும் சாதிநோய்க்கு பெரியாரியலே அருமருந்து சாதி நோய்ப்பிடித்த தமிழனே அதை மனம் கோணாமல் நீ அருந்து. (சென்னை காதலர் நாள் விழாவில் வழங்கியது)

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி வாசுதேவ் – தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் – கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன்...

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

2015ஆம் ஆண்டு அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது நினைவுகூர வேண்டும். காமன்வெல்த் நாடுகள், பன்னாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு கலப்பு விசாரணை, தீர்ப்பாயத்தை அமைப்போம் என்பதே அத்தீர்மானம். மனித உரிமை ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 47 நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இப்போது பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இலங்கை. தமிழர்கள் பிரச்சினைக்கு அந்த அரசு மேற் கொள்ள வேண்டிய விசாரணை ஆணையம் நியமித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அய்.நா. காலஅவகாசம் தந்தது. இப்போது பிப்.24 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருக்கும் அய்.நா. கூட்டத்தில் அப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமல், மேலும் தங்களுக்கு கால அவகாசம் கேட்கிறது இலங்கை. தமிழர் பிரச்சினையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்பதே இதில்...

கழகத் தொடர் போராட்டம் வெற்றி மயிலைப் பகுதி மதுக்கடை மூடப்பட்டது

கழகத் தொடர் போராட்டம் வெற்றி மயிலைப் பகுதி மதுக்கடை மூடப்பட்டது

24.3.2017 அன்று தமிழக அரசு 500 மதுபானக் கடைகள் சென்னை மண்டலத்தில் மூடப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பாலத்தின் அருகிலுள்ள பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் அரசு மதுபானக் கடையை (கடை எண்.912) மூட தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் பகுதி பொது மக்கள் பல போராட் டங்கள் நடத்தி வந்தனர். இப்போது இந்தக் கடை தமிழக அரசு அறிவிப்பால் மூடப்பட்டது.  இதன் மகிழ்வாக கழகம் சார்பில் தோழர்கள், ஊர் பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். பெரியார் முழக்கம் 02032017 இதழ்

தலித் மக்கள் உரிமைகளை பறித்த ‘வாஸ்து’ நம்பிக்கை

தலித் மக்கள் உரிமைகளை பறித்த ‘வாஸ்து’ நம்பிக்கை

வாஸ்து மூடநம்பிக்கை ஜாதிவெறிக்கு துணை போவதோடு அரசின் நலத் திட்டங்களையே முடக்குகிறது என்பதற்கு  சான்றாக தெலுங்கானாவிலிருந்து ஒரு செய்தி வந்துள்ளது. தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ், அரசு செலவிலேயே திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ.5 கோடி தங்க நகைகளை காணிக்கையாக்கினார். அரசு செலவிலேயே தனது ஆலோசகராக, ஒரு வாஸ்து பண்டிதரை நியமித்துக் கொண்டிருக்கிறார். முதலமைச்சர் அலுவலகத்தையும் சொந்த இல்லத்தையும் ஒன்றாக்கி, அரசு செலவிலேயே 25 கோடி செலவில் வாஸ்து முறைப்படி மாளிகை ஒன்றையும் எழுப்பியிருக்கிறார். அதே தெலுங்கானா மாநிலத்தில்தான் இப்படி ஒரு கூத்தும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஏழை மக்களுக்கு இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு கட்டும் திட்டம் ஒன்றை அரசு அறிவித்துள்ளது. திப்பண்ணப்பேட்டை எனும் இந்த கிராமத்தில் இத்திட்டத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டு, 2.27 ஏக்கர் இடத்தில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. கிராமத்தில் 20 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 16 பயனாளிகள் ‘தலித்’ பிரிவினர். கிராமத்தின் பிரதான சாலை அருகே கட்டப்படும்...

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

மீத்தேன் திட்ட செயல்பாட்டுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் அடங்கியிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இன்னொரு வடிவில் இயற்கை எரிவாயு எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் பெயர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த திட்டம் மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்போது மோடி அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி 760 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் படிந்துள்ள மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எரிவாயுவை வெளிக்கொணரும் வகையில் காவிரிப் படுகையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அளித்திருந்தது மத்திய அரசு....

திருப்பூரில்  நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்

திருப்பூரில் நந்தினிக்கு நீதி கேட்டு கண்டன ஆர்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் 10.02.2017 வெள்ளிக்கிழமை அன்று மாலை 3.30 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் பாலுறவு வன்முறை படுகொலைக்கு உள்ளான நந்தினி சாவுக்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து முன்னணி மாவட்ட தலைவர் ராஜசேகரை கைது செய் ! வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்று ! நந்தினி குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கு ! தலித் மக்களின் பாதுகாப்பை உறுதி செய் ! – என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தோழமை இயக்கத்தைச் சேர்ந்த பேரவையின் மாவட்டச் செயலாளர் சோழன், திருவள்ளுவர் பேரவை அருண் குமார், இஸ்லாமிய அமைப்பின் ரஹ்மான், கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, மாவட்ட செயலாளர் நீதிராசன், மாநகர செயலாளர் மாதவன் ஆகியோர் கண்டன உரையாற்றி னர். தோழர் சங்கீதா, கொளத்துப் பாளையம் இராமசாமி, முத்து, தனபால், கருணாநிதி, அகிலன், பரிமளராசன்...

முகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்

முகமூடி போட்டு பாபர் மசூதியை இடித்த கும்பல்

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) மத நம்பிக்கைகள் உணர்வுகளோடு பிணைந்து கிடக்கின்றன. இந்த உணர்வுகளை மதவெறியாகக் கட்டமைக்கப்படுவது மிக மிக எளிது. பகுத்தறிவை மறுக்கும் வெற்று உணர்வுகள் அவ்வளவு ஆபத்தானவை. ‘நாம் எல்லோரும் இந்து; அதுவே நமக்குப் பெருமை அதுவே நமது அடையாளம்; அதுவே நமக்கான நாடு’ என்று பேசுவதும் உணர்வுகளைத் தூண்டி அதை வெறியாக மாற்றுவதும் தான் சங்பரிவார்களின் தொடர்ந்த வேலைத் திட்டமாக இருக்கிறது. அதற்காகவே அவர்கள் நிகழ்வுகளை திட்டமிட்டு உருவாக்கு கிறார்கள். இந்த உணர்வுகளை ஒரு முனைப் படுத்துவதற்கு ஒரு எதிரியை கட்டமைக்க வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது. இஸ்லாமியர்கள் இந்துக்களுக்கு எதிரானவர்கள். பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிரி நாடு என்ற இவர்களின் முழக்கம்,...

கடவுள் – மதங்களை ஒரு பெண் மறுக்கக் கூடாதா?

கடவுள் – மதங்களை ஒரு பெண் மறுக்கக் கூடாதா?

‘ஆனந்தவிகடன்’ மார்ச்  2017 இதழில், சபிதா எழுதிய கட்டுரையிலிருந்து. ‘கணவனை மதிக்காத மனைவியை, படுக்கையைவிட்டு விலக்கி, அடித்துக் கட்டுப்படுத்த லாம்’ என்கிறது குர்ஆன் 4:34. “பெண்ணைப் படைத்த போதே அவளை பொய் சொல்லும் குணத்துடனும், நகைகளுக்கு ஆசைப்படுபவளாகவும், கோபம், தற்குறித்தனம், சிறுமதி, ஏமாற்று, கெட்ட நடத்தை போன்ற சகல துர்குணங்களுடனும் ஆண்டவன் படைத்துவிட்டான். அவளிட மிருந்து தன்னைக் காத்துக் கொள்ள ஆண் கடுமையான முயற்சி மேற்கொள்ள வேண்டும்” என்கிறது மனுசாஸ்திரம். “பெண்களுக்கு, உண்மைக் கும் பொய்க்கும் வேறுபாடு பார்க்கத் தெரியாது. அவர்கள் மணலைப் போல உறுதியற்ற வர்கள்; பாம்பைப் போல கொடூர மானவர்கள்” என்கிறது பௌத்தம். “பாவ உடம்பைப் பெற்ற பெண் – கடவுளை ஆணில்தான் காண வேண்டும்” என, கிறிஸ்துவம் சொல்கிறது. இப்படியான மத மற்றும் சமயங்களின் தாக்கம்தான் ‘சீறும் பாம்பை நம்பு – சிரிக்கும் பெண்ணை நம்பாதே!’ என ஆட்டோவின் பின்னால் இன்று வரை எழுத வைக்கிறது; சக...

ஈஷாவின் முன்னாள் சீடர் அம்பலப்படுத்துகிறார் ‘குரு’ வேடம் போடுவோர் எவரையும் நம்பாதீர்!

ஈஷாவின் முன்னாள் சீடர் அம்பலப்படுத்துகிறார் ‘குரு’ வேடம் போடுவோர் எவரையும் நம்பாதீர்!

ஜக்கி வாசுதேவ் உரைகளால் ஈர்க்கப்பட்டு, பிறகு தெளிவு கிடைத்த பிறகு அதிலிருந்து வெளிவந்த அனுபவத்தை வாசுகி பாஸ்கர் என்ற முன்னாள் சீடர் முகநூலில் இவ்வாறு பகிர்ந்துள்ளார். ஈஷா மையம் சட்டத்துக்கு புறம்பாக நடப்பது மட்டுமே நாம் ஈஷாவை எதிர்ப்பதற்கு காரணமாக இருக்கக் கூடாது என்று நான் நினைக்கிறேன். அது அரசியல். சட்டப் பிரச்சினை, பாரதப் பிரதமர் மோடியே சிவனை திறந்து வைக்க வருவதால் சட்டப் பிரச்சினைகள் வலுவிழந்து போகுமென்பதை குழந்தைகூட கணிக்கும். ஜக்கிவாசுதேவ் இந்து மத அடையாளத்தோடு இருப்பதால், இதை எதிர்ப்பது, இந்து மதத்திற்கு எதிரான வழக்கமான பிரச்சாரமாக வும் நிறையப் பேர் நினைக்கக் கூடும். நாம் எவ்வளவு விளக்கினாலும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது. ஆனாலும் நாம் ஒருவரை ஆதரிக்க, எதிர்க்க வலுவான காரணம் இருக்க வேண்டும். ஜக்கியின் ‘அத்தனைக்கும் ஆசைப்படு’ என்ற புத்தகம் ஒரு நண்பர் மூலம் எப்படியோ எனக்கு வந்து சேர்கிறது. ஒருவித வெறுப்போடு தான்...

புரோகிதத் தொழில் ‘கார்ப்பரேட்’ நிறுவனமாகிறது

புரோகிதத் தொழில் ‘கார்ப்பரேட்’ நிறுவனமாகிறது

‘வேதங்களுக்கு காலம் இல்லை; அது கடவுளால் உருவாக்கப்பட்டது; அநாதியானது’ என்று இப்போதும் பார்ப்பனர்களும் ஆர்.எஸ்.எஸ்.சும் கூறிக் கொண்டிருக்கின்றன. அது பழைமையானது என்பதற்காகவே அர்ச்சகர்கள் ‘பஞ்சகச்சத்தோடு’ கீழே மட்டும் மறைத்துக் கொண்டு மேலாடை இல்லாமல், உச்சிக்குடுமி, பூணூல் கோலங்களோடு வலம் வருகிறார்கள். ஆனால், வேத காலங்களில் தோன்றாத நவீன பைக்குகளையும், கார்களையும் கூச்சநாச்சமின்றி பயன்படுத்து கிறார்கள். இந்து மத சாஸ்திரம், கடல் தாண்டக் கூடாது என்றாலும், அதையும் மீறி விமானங்களில் ‘சாஸ்திரமாவது; புடலங்காயவது’ என்று கருதி பறக் கின்றனர். இந்த இரட்டை வாழ்க்கையை சுட்டிக் காட்டினால், ‘இந்து விரோதி’, ‘பிராமண துவேஷி’ என்கிறார்கள். இப்போது, ‘புரோகிதம்’ கார்ப்பரேட் தொழிலாகவே மாறியிருக்கிறது. இது குறித்து ‘இந்து’ ஆங்கில நாளேடு (பிப்.27) விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது. பல கோடி ரூபாய் முதலீட்டில் ‘ஹரிவரா’ என்ற கார்ப்பரேட் கம்பெனி ஒன்று இப்போது செயல்படத் தொடங்கி இருக்கிறதாம். இதன் நிறுவனரும் நிர்வாக அதிகாரி யுமான அருண்குமார் சோமாஸ்...

கோவை முழுதும் ‘மோடி’ எதிர்ப்பலைகள் கருப்புக் கொடி: கழகத்தினர் கைது

கோவை முழுதும் ‘மோடி’ எதிர்ப்பலைகள் கருப்புக் கொடி: கழகத்தினர் கைது

வெள்ளியங்கிரி வனப் பகுதியை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து 4 இலட்சம் சதுர அடியில் யோகா மய்யம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் என்ற மோசடி ‘குரு’, ‘ஆதியோகி சிவன்’ என்ற ஒரு சிலையை திறந்து வைத்துள்ளார். இந்த சட்ட மீறலுக்கும் ஆன்மீக மோசடிக்கும் ஏற்பு வழங்குவதுபோல பிரதமர் மோடி இந்த சிலை திறப்பு நிகழ்வில் பங்கேற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் 24.2.2017 அன்று கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கினார். பிற்பகல் 4.30 மணியளவில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே கருப்புக் கொடிகளுடன் தோழர்கள் திரண்டு, மோடிக்கும் ஜக்கி வாசுதேவுக்கும் எதிரான முழக்கங்களை எழுப்பினர். 5 மணியளவில் தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 15 பெண்கள் உள்பட 150 தோழர்கள் கைது செய்யப் பட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரம் கழகத் தோழர்களை ஏற்றி...

பணிந்தது அதிகாரம் ஈரோட்டில் கழகத்தின் வெற்றி!

பணிந்தது அதிகாரம் ஈரோட்டில் கழகத்தின் வெற்றி!

ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல்துறைக் கண்காணிப் பாளரும் மத விழாவில் கலந்து கொள்ள மாட்டோம் என உறுதி அளித்ததால் கழகம் அறிவித் திருந்த போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. இராமாநுஜரின் ஆயிரமா வது ஆண்டு ஜெயந்தி விழா என்ற பெயரில் 18.02.17 அன்று ஈரோடு, பெருந்துறை ரோடு பரிமளம் மகாலில் நிகழ்வு ஒன்று நடக்க இருந்தது. இந்நிகழ்வில், ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவரும், ஈரோடு மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரும் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டு பதாகைகளில் விளம்பரம் செய்யப்பட்டு இருந்தது. மதச் சார்பற்ற நாடு என்று சொல்லிக் கொள்ளும் நாட்டில், இதுபோன்ற மதம் சம்பந்தப்பட்ட விழாக்களில் அரசு அதிகாரிகள் கலந்து கொள்வது கூடாது என வலியுறுத்தி, நிகழ்வு நடைபெற உள்ள ஈரோடு பரிமளம் மகால் முன்பு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அனைத்து முற்போக்கு இயக்கங்களை ஒருங்கிணைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. அதிகாரி களுக்கும்...

மோடி எதிர்ப்பை இருட்டடித்த ஊடகங்கள்

மோடி எதிர்ப்பை இருட்டடித்த ஊடகங்கள்

மோடிக்கு கோவையில் கருப்புக் கொடி காட்டி பல்வேறு இயக்கங்கள் காட்டிய எதிர்ப்பு களை ஊடகங்கள் திட்டமிட்டு இருட்டடித்தன. 3 நாட்கள், நாளேடுகளுக்கு ஈஷாவின் ஜகத்குரு பல கோடி ரூபாயை வாரி இறைத்து தந்த விளம்பரங்களும், தொலைக் காட்சிகளுக்கு தந்த விளம்பரங் களுமே ஊடகங்களின் இருட்டடிப்புக்கு முக்கிய காரணம். பெரும் முதலாளிகளும் அரசியல் தலைவர்களும் நடத்தும் அச்சு ஊடகங்களும் தொலைக் காட்சிகளும் வருமானத்தை முன் வைத்தே செயல்படுவதால் மக்கள் எதிர்ப்புகளை புறந்தள்ளி விட்டனர்; மக்களைவிட விளம்பரங்களுக்கு பணத்தை வீசும் ‘ஆன்மிகக்  குரு’க்களின் ‘ஆசீர்வாதங்களே’ அவர்களுக்கு முக்கியத் தேவை போலும்! பெரியார் முழக்கம் 02032017 இதழ்

சென்னையில் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு விழா

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் காதலர் தினத்தை யொட்டி ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர்களுக்கு பாராட்டு விழா 14.02.2017 அன்று மாலை 6 மணியளவில் கழக தலைமை அலுவலகத்தில் நடை பெற்றது. இந்நிகழ்விற்கு மாவட்டச்செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். செந்தில் குனுடு முன்னிலை வகித்தார். 10 ஜாதி மறுப்பு இணையர்களைப் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அரங்க. குணசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட தலைவர் வேழவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். ரவிபாரதி, தாஜ் நிஷா ஆகியோர் கவிதை வாசித்தனர்.  அருள்தாஸ் பாடல்களை பாடினார். இந்நிகழ்வில் 70க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு அளிக்கப்பட்டது. பாராட்டு விழா 9 மணியளவில் நிறை வடைந்தது. பாராட்டுப் பெற்ற  ஜாதிமறுப்பு திருமணம் செய்த காதல் இணையர் ஜெயமாலா-மனோகர்;...