தக்கலை – நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி ஆர்ப்பாட்டம்
தக்கலையில் : குமரி மாவட்டத் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக நீட் தேர்விலிருந்து விலக்குக் கோரி தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைப் பெற்றது. கழக மாவட்டச் செயலாளர் தமிழ் மதி தலைமைத் தாங்கினார். நீதி அரசர் (தலைவர்.பெ.தொ.க) முன்னிலை வகித்தார். விஸ்ணு வரவேற்புரை நிகழ்த்தினார். பால் பிரபாகரன் (கழக பரப்புரைச் செயலாளர்) கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி தோழர்கள் மேசியா (ப.நா.புரம் ச.ம.தொ.செயலாளர்,வி.சி.க,), போஸ் (சமூக ஆர்வலர்), முரளீதரன் (பொது பள்ளிகான மாநில மேடை செயலாளர்), இரமேஸ், இராஜேஸ் குமார், இராதாகிருஷ்ணன், (ஆஊருஞ(ஐ), ஜாண் மதி, சூசையப்பா, அனி ஆகியோர் உரையாற்றினர். மஞ்சு குமார் நன்றியுரையுடன் முடிந்தது.
பெரியார் முழக்கம் 30032017 இதழ்