மதுரையில் இரயில் மறியல்

தமிழகத்தை சுடுகாடாக்கும் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்தை நிறுத்தக் கோரியும் சிங்கள அரசின் தமிழக மீனவர் படுகொலையைக் கண்டிக்கத் தவறிய மத்திய அரசைக் கண்டித்தும் இரயில் மறியல் போராட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மதுரையில் நடைபெற்றது.

மதுரை மாவட்டக் கழகச் செயலாளர் மா.பா. மணி கண்டன் போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

இதில் எஸ்.டி.பி.அய். மாவட்ட செயலாளர் அபுதாகிர், பெரியார் திராவிடர் கழக ஒருங்கிணைப் பாளர் காசு.நாகராசன், தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்ட தலைவர் கிட்டு ராசா, ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், கோபால் ராமகிருஷ்ணன் மற்றும் ஆதித்தமிழர் பேரவை உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்களும் கலந்து கொண்டனர்.

பெரியார் நிலையத்திலிருந்து ஊர்வலமாகப் புறப்பட்டு ஆளும் மத்திய அரசை கண்டித்து முழக்கமிட்டவாறே இரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற 22 தோழர்கள் காவல் துறையினரால் தடுத்து கைது செய்யப்பட்டனர். மாலை தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 30032017 இதழ்

You may also like...