தமிழ்நாடு மாணவர் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் கண்டித்தும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக ஆய்வு மாணவர் முத்து கிருட்டிணன் மரணத்துக்கு நீதி விசாரணை கோரியும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரி, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு நிரப்பக் கூடிய இடஒதுக்கீட்டுக்குரிய இடங்களில் நீட்  தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரியும் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் மார்ச் 19 பகல் 12 மணியளவில் நடந்தது. மத்திய கைலாஷ் அருகே மாணவர்கள் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கமிட்டு ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்டபோது காவல்துறை கைது  செய்தது. பாரி சிவக்குமார் தலைமையில் ஜெயப்பிரகாஷ் முன்னிலையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 20 தோழர்கள் கைது செய்யப்பட்டனர். மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

பெரியார் முழக்கம் 30032017 இதழ்

You may also like...