சென்னையில் தோழர்கள் சாலை மறியல்

ஃபாரூக் கொலையுண்டார் என்ற செய்தியறிந்து அடுத்த சில மணி நேரங்களிலே சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அண்ணாசாலையில் சாலை மறியலில் ஈடு பட்டனர். தோழமை அமைப்புகள் மே 17, இளந்தமிழகம், த.பெ.தி.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் விரைந்து வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.

“கடவுள் உண்டு என்று கூறும் உரிமை உனக்கு உண்டு என்றால் இல்லை என மறுக்கும் உரிமை எமக்கு உண்டு. கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை” என்று தோழமை அமைப்புகளே உணர்ச்சிகரமாக முழக்கமிட்டனர். பெரியார் சிலை அருகே 30 நிமிடம் சாலைபோக்குவரத்து நின்றது. காவல்துறை 70க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து இரவு விடுதலை செய்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமாபதி முன்னிலையில் இந்த மறியல் நடந்தது.

பெரியார் முழக்கம் 23032017 இதழ்

You may also like...