Author: admin

காவிரி உரிமை: மன்னையில் கண்டன கூட்டம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில்  திராவிடர் விடுதலைக் கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்  தலைமையில் நடைபெற்றது. மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன், காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகங்களை விளக்கிப் பேசினார். பெரியார் முழக்கம 03112016 இதழ்

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடியில்  வடக்கு சோட்டையன் தோப்பில் 24.9.2016 சனிக்கிழமை மாலை 6 மணியளவில்  பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா கல்வியை காவி மயக்கும்  புதிய கல்வி கொள்கை 2016யை கண்டித்து பொதுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். வடக்கு சோட்டைன், தோப்பு தோழர்கள் கே. சந்திரசேகர், செ. செல்லத் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ச.கா. பால சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய பொதுவுடைமை கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.பி. ஞானசேகரன், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய செயலாளர் சங்கரன், கழக மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் க. கண்ணன், விடுதலை சிறுத்தைக் கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்காமை. இக்பால், கழகத் தோழர் கோ. அ. குமார், வி.சி.க....

பெண்ணுரிமை பேசும் விளம்பரப் படம்

பெண்ணுரிமை பேசும் விளம்பரப் படம்

பொம்பளை பொம்பளையா இருக்கணும்’, ‘பொம்பளை மாதிரியா நடந்துக்குற?’, ‘பொம்பளைன்னா என்னனு தெரியுமா உனக்கு?’ – இப்படிப் பெண் என்கிற சொல்லே ஒரு குறியீடாகப் பிரயோகிக்கப்படுகிறது. எப்போதெல்லாம் ஒரு பெண் ‘பெண்’ணாக நடந்து கொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறார்? நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, யார்க்கும் அஞ்சாத நெறிகளைப் பெண்கள் வென்றெடுக்கும்போதெல்லாம் அது அவர்களுக்கான பண்புகள் அல்ல எனச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், ஆண்களிடம் இத்தகைய பண்புகள் காணப்படும்போதெல்லாம் அவர்கள் போற்றிப் புகழப்படுகிறார்கள். எப்படிச் செய்துகாட்டுவது? நம் சமூகச் சூழலில் மட்டுமல்ல; உலகம் முழுவதும் இதே நிலைமைதான் என்பதை நிரூபித்திருக்கிறது ஓர் அமெரிக்க விளம்பரப் படம். பிரபல அமெரிக்க நிறுவனமான பி அண்டு ஜி (ஞ&ழு) தங்களுடைய தயாரிப்பான ‘ஆல்வேஸ்’ (யடறயலள) சானிட்டரி நாப்கின்னை விளம்பரப்படுத்த ஆவணப்பட பாணியில் குறும்படம் ஒன்றைத் தயாரித்திருக்கிறது. ‘டூ திங்க்ஸ் லைக் எ கேர்ள்’ (னுடி கூhiபேள ‘டுமைந ஹ ழுசைட’) என்கிற இந்தப் படத்தில் சில விளம்பர மாடலிங் பெண்கள்,...

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுத் திறனை முடக்கும் மனப்பாடக் கல்வி

அறிவுசார்ந்த கல்வியை மறுத்து, தொழில் சார்ந்த பயிற்சி யாளராக மட்டும் இளைஞர்களை மாற்றுவதே மோடி அரசின் கல்விக் கொள்கை! இத்தகைய கல்வி முறையைக் கண்டித்து, 1954ஆம் ஆண்டிலேயே பெரியார் எழுதிய கட்டுரை இது. நம் நாட்டு மாணவர்கள் கல்விப் படிப்பினால் எந்தவிதமான பகுத்தறிவையும் எதையும் ஆராய்ந்து அறியும்படியான தன்மையையும் அடைய முடிவதில்லை; அவர்கள் படிக்கின்ற படிப்பினால் பிற்கால வாழ்க்கையைத் தரித்திரமின்றி நடத்த வேண்டும். அதற்காக, ஏதாவது உத்தியோகத் துறையிலோ, வேறு பணம் சம்பாதிக்கின்ற வழியிலோ பயன்பட வேண்டும் என்பதற்காகவே படிக்கிறார்கள். பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு அறிவு வளர வேண்டும் என்ற காரணத்திற்காகப் பள்ளிக்கு அனுப்புவதில்லை; படித்துப் பட்டம் பெற்று வந்ததும் ஜீவனத்துக்கு வேண்டிய முறையில் எங்காவது உத்யோகம் கிடைக்குமா என்ற நோக்கத்தோடேயே பெற்றோர்கள் முயற்சிக்கிறார்கள். இவர்களும் இதற்குத்தான் முயற்சிக் கிறார்கள் என்றால், மாணவர்களும் அந்த நோக்கத்தைத் தான் எதிர்பார்த்துத் தம்முடைய பள்ளிப் படிப்பைக் கற்றுப் பட்டம் பெற வேண்டும் என்ற ஒரே...

ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு

ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு

நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் 06.10.2016 அன்று தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. குமார பாளையம் நகர கழகத் தலைவர் மீ.த.தண்டபாணி வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் முன்னதாக பாவலர் இரா.நிறைமதி தலைமையில் “தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது “மதமே” என்ற தலைப்பில் பொன் கதிரவன், “பெண்ணடிமையே”என்ற தலைப்பில் நா.அன்பழகன், “சமூக அநீதியே” என்ற தலைப்பில் மதுபாரதி, “ஜாதியே” என்ற தலைப்பில் பகலவனும் கவிதை நடையில் சிறப்பாக எடுத்துரைத்தனர். கவியரங்கம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக  துரை தாமோதரனின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது. சாமியார்களின் மோசடித்தனங்களை விளக்கி மக்களின் அறியாமையைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. பின்னர் பா.செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், செயலாளர் மு.சரவணன், அமைப்பாளர் மா.வைரவேல், ...

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு

நீதிபதிகள் நியமனங்களில் சமூகநீதி மறுப்பு

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு 15 புதிய நீதிபதிகள் அக்டோபர் 5ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனர்.   இதில் 3ரூ மக்கள் தொகை கொண்ட  பார்ப்பனர்கள் மூவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர், விவரம் பின்வருமாறு: டாக்டர் அனிதா சுமந்த், ஆர்.சுப்பிரமணியன், சி.வி.கார்த்திகேயன் ஆகிய மூன்று பார்ப்பனர்கள்(20ரூ) தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கௌல் உட்பட  மொத்தமுள்ள 54 நீதிபதிகளில் 9 பேர் பார்ப்பனர் என்பது ஏறக்குறைய 17 சதவீதம் பேர். அதிலும் அனிதா சுமந்திற்கு வயது 45 தான் ஆகிறது அவர் உச்ச நீதிமன்றம் வரை செல்லக்கூடிய வாய்ப்பு பெற்றுள்ளார். ஆனால் பிற்படுத்தப்பட்ட நீதிபதிகள் வயதோ 55க்கும் மேலாகிவிட்டது. 150 ஆண்டு வரலாற்று சிறப்பு மிக்க நீதிமன்றத்தில் இதுவரை தேர்ந்தெடுக்கப்படாத சமூகப் பிரிவுகள் ஏராளம், ஏராளம். ஆகவே உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதியை கடைபிடிக்க வேண்டும் என்று கோருவதே சரியாக இருக்கும். இந்த 70 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் இதுவரை ஒரு பிறன்மலை கள்ளர்கூட...

பெண்களின் புதிய அகராதி

பெண்களின் புதிய அகராதி

சமூகத்தைக் கட்டமைப்பதில் மொழியின் பங்கு முக்கியமானது., மொழி கடவுளின் படைப்பல்ல. அது மனிதர்களால் உருவாக்கப்பட்டு, காலம்தோறும் வளர்த்தெடுக்கப்படுவது. ஆணாதிக்கச் சமூகம் மொழியைத் தன் தேவைக்கேற்ப வளர்த்தெடுத்துள்ளது. மொழியில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் ஏராளம். அண்ணல், வீரன் போன்ற தமிழ்ச் சொற்களுக்கு இணையான பெண்பால் சொற்கள் கிடையாது. அதுபோல, விதவை, மலடி, வாழாவெட்டி, கற்புக்கரசி, பதிவிரதை, முதிர்கன்னி, மோகினி, அணங்கு போன்ற சொற்களுக்கு இணையான ஆண்பால் சொற்கள் கிடையாது. வைப்பாட்டி, தாசி, வேசி, அமங்கலி, வாயாடி, ஓடுகாலி என்று பெண்களைச் சிறுமைப்படுத்தும் ஆணாதிக்கச் சொற்கள் பல தமிழில் உண்டு. ஆணாதிக்கச் சமூகம் பெண்ணை எப்படிப் பார்க்கிறதோ, அப்படியே அவர்களால் உருவாக்கப்பட்ட மொழியும் பெண்ணைப் பார்க்கிறது. பெண்ணுக்கு உரிய வயதில் திருமணமாகாவிட்டால், அவளை ‘முதிர்கன்னி’ என்று ஏசுகிறது. ஆனால் திருமணமாகாத ஆண், ‘பிரம்மச்சாரி’என்று போற்றப்படுகிறான். பெண், திருமணமாகி கணவனை விட்டுப் பிரிந்து வாழ்ந்தால், ‘வாழாவெட்டி’என்று தூற்றப்படுகிறாள். மனைவியைப் பிரிந்து வாழும் ஆடவனுக்கு இந்த அவச் சொல்...

ஜாதி வெறியர்களை கண்டித்து சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் 03112016

தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும், விளையாட்டு திடலை சுற்றிவர சொல்லியும் கொடுமை படுத்தியுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர் .அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் ( TC...

மதவெறி பண்பாடு, இப்படித்தான்!

மதவெறி பண்பாடு, இப்படித்தான்!

காவிரி நீர் உரிமைக்காக சென்னையில் பெரியாரிய-அம்பேத்கரிய-மனித உரிமை, தமிழ்தேசியம், பொதுவுடைமை இயக்கங்கள் ஒன்றிணைந்து சென்னையில் ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை செப்.20 அன்று நடத்தின. கைது செய்யப்பட்ட தோழர்களை காவல்துறை கொண்டு சென்ற  கீழ்ப்பாக்கத்திலுள்ள திருமண மண்டபம் எது தெரியுமா? அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பை உருவாக்கியவர்களும் ‘பிராமணர்’ களிலேயே மிகவும் உயர்வானவர்கள் என்று உரிமை கொண்டாடும் ‘சரசுவதி பிராமணர்களுக்கான’ திருமண மண்டபம். அந்த மண்டபத் தின் முதல் மாடியிலேய ‘சரசுவதி பிராமணர்’ சங்கத்துக்கான அலுவலகம் இயங்குகிறது. 500க்கும் அதிகமான தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் மண்டபத்தின் தாழ்வாரத்திலேயே நிற்க வைக்கப்பட்டனர். மண்டபத்தை திறந்துவிட நிர்வாகிகள் மறுத்தனர். தோழர்கள் போராட்டத்துக்குப் பிறகே காவல்துறை தலையிட்டு மண்டபத்தை திறந்து விட முன் வந்தார்கள். உள்ளே மின் விளக்கு, மின் விசிறி போட மறுக்கவே அதற்கும் போராட்டம். அதன் பிறகே மின்சார இணைப்பை தந்தார்கள். ‘கழிவறை’களை மூடி விட்டனர். அவ்வளவு கூட்டத்துக்கும் ஒரே ஒரு...

பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?

பெரியார் – இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தியது ஏன்?

1956இல் புத்தருடைய 2500 ஆவது ஆண்டு விழா சென்னை இராஜாஜி மண்டபத்தில் அரசினர் சார்பாக நடைபெற்றது. அந்த விழாவில்,  பெரியாரும் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சியை சென்னை வானொலி நிலையம் பதிவு செய்து இரவு 10 மணிக்கு ஒலிபரப்புவதாக உறுதி அளித் திருந்தது. ஆனால், அதன்படி அது செய்யவில்லை! நாளேடுகளும் பெரியார் கலந்து கொண்டதால் புத்தர் விழாவை வெளியிடாமல் இருட்டடிப்புச்செய்தன. “ஒரு வார காலத்துக்குள் பதிவு செய்தவற்றை வானொலி நிலையம் ஒலிபரப்ப வேண்டும். அல்லது, அதற்கான காரணத்தைச் சொல்ல வேண்டும். இல்லா விட்டால், இராமன் படம் கொளுத்தப்பட்ட செய்தி மக்கள் அறியும்படி செய்யப்படும்” – என்று பெரியார் அறிவித்தார். 20.7.56 அன்று திருச்சிராப் பள்ளியில் கூடிய திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில், “1.8.56 அன்று தமிழ்நாடு எங்கிலும் இராமன் பட எரிப்புப் போராட்டம் நடத்தப்படும்” என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. “கடவுள் தன்மை, ஒழுக்கம், நாணயம், சாதாரண அறிவு...

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (2) தமிழர் பகுதியில் சிங்களர்களின் உல்லாச விடுதிகள் அருட்தந்தை ஆ. குழந்தை

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (2) தமிழர் பகுதியில் சிங்களர்களின் உல்லாச விடுதிகள் அருட்தந்தை ஆ. குழந்தை

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பி யுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) சமயம் இலங்கையில் பௌத்தம், கிறித்தவம், இந்து. இசுலாம் போன்ற மதங்கள் இருந்தா லும் பௌத்தம் ஆட்சி செலுத்துகிறது. இதனால் எல்லா சமய தலைவர்களும் இலங்கை பௌத்த நாடு அல்லது சமயம்சார்ந்த நாடு என்று கூறுகின்றனர். இதனால் பௌத்த சமயத்தின் பெயரில் புத்தர் விகார்களை(சிலைகளை)தமிழர் பகுதிகளில் அதிகமாக நிறுவுகின்றனர். இரணைமடு அம்பகாமம் என்ற இடத்தில் உள்ள கனக சொக்கலிங்க நாதர் கோவிலுக்கு அருகில் புத்தர் சிலையை வைத்தனர். இதனால் நான்கு குளங்களையும் 8,000 ஏக்கர் நிலங்களை இராணுவத்தின் உதவியால் சமயம் கட்டுப் படுத்துகின்றது. மன்னார் திருக்கேதீஸ்வரர் கோவில் நிலத்தில் 10 ஏக்கர் நிலத்தை புத்தர்...

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

திராவிடரை இழிவுப் படுத்தும் ‘இராம லீலா’ ‘இராமன்’ – நன்மையின் உருவமா? பெரியார்

நன்மையின் உருவம் ‘இராமன்’; தீமையின் உருவம் ‘இராவணன்’ என்று கூறி, டெல்லி இராம் லீலா மைதானத்தில், இராவணன் உருவத்தை எரிக்கிறார்கள். இராமன் குறித்து பெரியார் எழுப்பும் இந்த கேள்விகள் இராமன் யோக்கியதையை உணர்த்தும். கைகேயியை மணம் செய்து கொள்ளும்போதே தசரதன் நாட்டைக் கைகேயிக்குச் ‘சுல்கமாக’க் கொடுத்து விட்டதும், அதனால் நாடு பரதனுக்குச் சொந்தமாக வேண்டியது என்பதும் இராமனுக்கு நன்றாய்த் தெரியும். நாட்டைக் கைப்பற்றவே இராமன் தகப்பனுக்கும், கைகேயிக்கும், குடிகளுக்கும் நல்ல பிள்ளையாக நடந்து வந்திருக்கிறான். பரதன் ஊரில் இல்லாத சமயத்தில் பட்டாபிஷேகம் செய்ய தசரதன் செய்யும் சூழ்ச்சிகளுக்கெல்லாம் சம்மதித்து முடிசூட்டிக் கொள்ள முனைகிறான். இலட்சுமணன் பொறாமைப்பட்டு ஏதாவது செய்து கெடுத்து விடுவானோ என்று கருதி, இலட்சுமணனை ஏய்க்க, ‘இலட்சுமணா, உனக்காகத்தான் நான் முடிசூட்டிக் கொள்கிறேன்; நீதான் நாட்டை ஆளப் போகிறாய்’ என்று ‘தாஜா’ செய்கிறான். பட்டாபிஷேகம் நடக்குமோ, நடக்காதோ என்று ஒவ்வொரு நேரமும் கவலைப்பட்டுக் கொண்டே இருந்திருக்கிறான். ‘நாடு உனக்கு இல்லை;...

கையில் கதாயுதம்!

கையில் கதாயுதம்!

உ.பி.யில் தேர்தல் வரப் போகிறது அல்லவா? அதற்காக பிரதமர் வழக்கமாக பங்கேற்கும் ‘இராம லீலா’ கொண்டாட்ட மும், புதுடில்லியிருந்து ‘கான்பூருக்கு’ இடம் மாற்றப்பட்டுவிட்டது. பிரதமர் முன்னிலையிலேயே ‘இராவணன் உருவம்’ எரிக்கப்பட்டிருக் கிறது! ‘இராவணன்’ பயங்கரவாதத்தின் அடையாளம் என்று பேசியிருக்கிறார் மோடி. அப்போது அவரது கையில் பூக்கொத்து இருந்ததாக நினைத்து விடாதீர்கள். கையில் ‘கதாயுதம்’ என்ற புராண கால ஆயுதத்தைத் தான் வைத்துக் கொண்டிருந்தார். எதிரிகளை மண்டையில் அடித்து சாகடிப் பதற்காக, புராண காலங்களில் கண்டு பிடிக்கப்பட்ட ஆயுதம் இது! மேடையில் மரத்துக்குப் பின்னால் நின்று, ‘வாலி’யை இராமன் சாகடிப்பதற்குப் பயன்படுத்தி னானே அந்த ‘வில்-அம்பு’ எனும் ஆயுதமும், மோடிக்கு பரிசாக வழங்கப்பட்டதாம். இவ்வளவு ‘புராண கால ஏவுகணைகளை’ யும் ஏந்திக் கொண்டுதான் இராவணன் பயங்கரவாதி என்றும், பயங்கரவாதத்தை ஒழிப்போம் என்றும் கூவியிருக்கிறார் மோடி. இராமன், சீதையை கடத்தியது பயங்கர வாதம் என்றால், ‘இராமன்-இலட்சுமணன் அண்ட் கோ’, இராவணன் சகோதரி ‘சூர்ப்பனகை’யின் முகத்தையும்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் ஆந்திராவில் ‘இராவண விழா’

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம். “இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சென்னை 05112016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் வடசென்னை மாவட்ட தோழர்கள் கழக பாடகர் தோழர் அருள்தாஸ் தலைமையில், தோழர் விஜயன் வரவேற்புரையில், தோழர் பாஸ்கர் தோழர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் 5:11:2016 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . நிகழ்காலத்திலும் பெரியாரின் தேவையை உணர்த்தும் பல்வேறு தலைப்புகளில் பொதுச்செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன், முனைவர். சுந்தரவள்ளி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை அருண், சிறப்புரையாற்றுகிறார்கள். தோழர் காவை. இளவரசன் வழங்கும் அறிவியல் நிகழ்ச்சி மந்திரமா – தந்திரமா மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தோழர் வேலு நன்றியுரையுடன்நிகழ்ச்சியை முடித்து வைப்பார் . அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் மதுரை 03112016

இன்று 03112016 பெரியாரிய, தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம். நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன் ஆகியோரின் கொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிகளை கைது செய். குற்றவாளிகளை தப்பவிடாதே! சாதிவெறிக்கு துணை போகாதே! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சிபிஐ விசாரணை நடத்து. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை அனைத்து தோழமை இயக்கங்களும் இணைந்து நவம்பர் 3 அன்று நடத்த உள்ளோம். வாய்ப்புள்ளோர் பங்கேற்கவும்

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது . மாணவர்கள், மாணவியர்கள் தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கைகளை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணிதொகுதி MLA ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். செய்தி : தோழர் உமாபதி, மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

இலங்கை துணை தூதரக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 26102016

யாழ் பல்கலை மாணவர்கள்  சிங்களக் காவல்துறையால் சுட்டுக் கொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகை – 400 பேர் கைது. கடந்த 2016 அக்டோபர் 21அதிகாலை கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிங்களக் காவல்துறை இரு தமிழ் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற உண்மையை மறைத்து, அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் காட்டவே முதலில் முயன்றனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை இப்போது சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது சொல்லியிருக்கும் சமாதானங்கள் ஏற்புடையவையாக இல்லை. இரு மாணவர்களும் காவலரணில் வண்டியை நிறுத்தாமல சென்றதால் சுட நேரிட்டது என்ற விளக்கத்தை இப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள மனோ கணேசனே ஏற்கவில்லை. துரத்திப்பிடிக்கத்தானே உங்களுக்கு அதிநவீன 1000 சிசி மோட்டார் சைக்கிள்கள் தரப்பட்டுள்ளன என்று அவர் கேட்டுள்ளார். சுடுவதென்றாலும் முதலில் வான் நோக்கியும் பிறகு...

தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் சுவரொட்டி

உண்மையை உரக்க சொன்ன தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து, அவருக்கு மிரட்டல் விடுக்கும் பார்ப்பனீய சக்திகளை எச்சரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

”தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்”

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50-ஆண்டுகளாக எழுதியும், பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மான அவமானத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும், முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி வைத்தத் தன்மைக்கு...

தோழர் தஞ்சை பசு.கௌதமன் உடல்நலத்தை கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக்கழக தோழர், எழுத்தாளர் தஞ்சை பசு. கௌதமன் அவர்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக தந்தை பெரியாரின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு குறித்து பெரியாரின் பதிவுகளை ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”என்கிற தலைப்பில் 5 தொகுதிகள் 6000 பக்கங்கள் அடங்கிய புத்தகத்தை கடந்த சில வருடங்களாக தொகுத்து வந்தார்.தொடர்ச்சியான ஓய்வில்லா எழுத்துபணி காரணமாக உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுதிருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு கடந்த 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.உடல் நலம் தேறி தற்போது நலமாக உள்ளார்.. இச் செய்தியறிந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர்தோழர். கொளத்தூர்மணி அவர்கள்17.10.2016 அன்று மதியம் தஞ்சையில் உள்ளதோழர் தஞ்சை பசு.கௌதமன் அவர்கள்இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்எழுத்தாளர் தஞ்சை சண்முகசுந்தரம் மற்றும்திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசுமற்றும் கழக தோழர்கள் கோவில்வெண்ணி செந்தமிழன், தஞ்சை காசிம் ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 27102016...

ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி தஞ்சாவூர் உத்மதானி 18102016

தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடரும் ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதிய கட்டமைப்பு ஜாதிய வன்கொடுமைகள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் தம்பதியினரை ஆணவப்படுகொலைகள் செய்வது, இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை போன்ற பல்வேறு வடிவங்களில் விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினரால் இழைக்கப்படும் வன்கொடுமைகள் பார்;ப்பன மதமான இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது. ஒரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் அவனை பல்வேறு ஜாதிகளாக பிரித்து சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அம்மக்களை சிறுமைப்படுத்தி பார்பனர்கள் தங்கள் மேலாண்மையை காலம் காலமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். பார்;;ப்பனர்களால் வேசிமகன்கள் என இன்றும் இழிவுப்படுத்தப்படும் சூத்திர இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது சூத்திர இழிவு நிலைக்கு எதிராக போராடாமல், தங்களை இழிவுப்படுத்தும் பார்பனர்களையும், அவர்கள் தூக்கி பிடிக்கும் பார்பன...

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை”

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை” – நாச்சியார்கோவிலில் தோழர் கொளத்தூர்மணி பேச்சு. தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர்விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச்சுடரொளி குடந்தைஆர்பிஎஸ்ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர்நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்;ச்சி நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகபேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத்தலைவர் தோழர்கொளத்தூர்மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம்...

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” 23102016

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நாள் : 23.10.16 ஞாயிற்றுக்கிழமை இடம் : தோழர் சிவகாமி ஆசிரியர் இல்லம், பெரியார் காலனி, (T.T.P மில் பின்புறம்)திருப்பூர். நேரம் : காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்புக்கு : தோழர் சிவகாமி ஆசிரியர், அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். 9842448175. வாய்ப்பு உள்ள பெண்கள் இச்சந்திப்பு நிகழ்வில்கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். தோழர்கள் இச்செய்தியை பரவலாக்கி தங்கள் இல்ல பெண்களையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாச்சியார் கோயில் 17102016

17.10.2016 6.00 மணிக்கு நாச்சியார் கோயிலில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். கழக தலைவர் சிறப்புரை.

மதுரையில் ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது !

ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது ! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மதவெறி பாஜகவின் மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் 14.10.2016 காலை 11 மணியளவில் மதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது. கழக அமைப்புச்செயலாளர் ரத்தினசாமி,பொருளாளர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா.,தோழர் காமாட்சி பாண்டி,மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில், மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட கழக தோழர்களும்,தோழர் மீ.த.பாண்டியன் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை),மேரி (சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை), சிதம்பரம்(ஆதித்தமிழர் கட்சி),தமிழ் நேயன் (தமிழ் தேச மக்கள் கட்சி), குமரன்,புரட்சிகர இளைஞர் முண்ணனி, நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), ஆதவன் (ஆதித்தமிழர் பேரவை), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் ரபீக்(இளந்தமிழகம்), அண்ணாமலை (சட்டபஞ்சாயத்து இயக்கம்) ஆகியோர் உள்ளிட்ட இயக்க தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்து...

நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் இளைஞர் பலி

திருச்செங்கோட்டில் 13.10.2016 அன்று நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மூளைச்சிதறி சௌந்தர்ராஜன் எனும் இளைஞன் மரணமடைந்தார். சட்டவிரோதமாக நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பிற்கு காரணமான கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு,நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் மனு அளித்தனர்.

ரயில் மறியல் போரட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது !

காவிரி நதிநீர் உரிமையை பாதுகாக்கவும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்திட மத்திய அரசை வலியுறுத்தியும் நடைபெறும் இப்போராட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகம் முழு ஆதரவினை தெரிவித்து ரயில் மறியலில் பங்கேற்கிறது. அனைத்து விவசாய சங்கங்கள்,அரசியல் கட்சிகள், இயக்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் நாளை மற்றும் நாளை மறுநாள் (17.10.2016 – 18.10.2016) ஆகிய நாட்களில் நடைபெற இருக்கும் ரயில் மறியல் போராட்டத்தில் கழக தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம் திருப்பூர் 16102016

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம். 16.10.16 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூர்,பல்லடம் சாலை, DRG CLASSIC ஹோட்டலில் “கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழக தலைவர் கலந்து கொண்டு திருப்பூர் குணா அவர்கள் எழுதியுள்ள “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்” நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூல் அறிமுகம் நடைபெற்றது.இந்நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் அவர்கள் எழுதியுள்ளார்,இந்நூலை தோழர் பழனி சஹான் அவர்கள் தொகுத்துள்ளார். மேலும் இந்நிகழ்வில் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, பதியம் பாரதிவாசன்,எழுத்தாளர் திருப்பூர் குணா,வழக்கறிஞர் உமர்கயான் (தமிழக மக்கள ஜனநாயக கட்சி),அருண் (திருவள்ளுவர் பேரவை,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் , தோழர் பழனி சஹான்,ஷேக் பரீத்,வழக்கறிஞர் ராமராஜ்,தங்கராஜ் பாண்டியர், செல்வாபாண்டியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, தமிழர் நடுவம்,...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! கோபி

“மகளிர் சந்திப்பு.” தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 16.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. இடம்: L.கள்ளிப்பட்டி, கோபிசெட்டிபாளையம். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்சி 16.10.2016. ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலைவரை கோபிசெட்டிபாளையம்,L.கள்ளிப்பட்டியில் உள்ள தோழர் மணி மொழி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. 17 பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் இடம்பெற்றன.பொது இடங்களில் பெண்களுக்கான இயல்பான உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் பொது இடங்களில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்புக்கு: தோழர் மணிமொழி, 9786922952. ந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திவிக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து, 10.10.2016 அன்று மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். பல்வேறு அமைப்புகளின் சார்பாக அவற்றின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.. கண்டன உரையாற்றியோர்: பிரபு,தி.க குமரகுருபரன்,த.பெ.தி.க விநாயகமூர்த்தி,விடுதலைச் சிறுத்தைகள் கி.வே.பொன்னையன்,தற்சார்பு விவசாயிகள் சங்கம் சித்திக், த.மு.மு.க பார்த்திபன், பி.யு.சி.எல் நிலவன்,தமிழ்த்தேச நடுவம் சிந்தனைச் செல்வன், தமிழ்ப்புலிகள் தமிழ் இன்பன், விடுதலை வேங்கைககள் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியசாமி, காந்திய மக்கள் இயக்கம் விடுதலைச் செல்வன், தலித் விடுதலைக் கட்சி லுக்மான், எஸ்.டி.பி.ஐ ஆதவன், தமிழக...

மதுரையில் ரயில் மறியல் போராட்டம்!

14.10.2016 மதுரையில் ரயில் மறியல் போராட்டம்! கழக தலைவர் தலைமையில் நடக்கவுள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய ஆளும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஐ கண்டித்து. தோழமை அமைப்புகள் பங்கேற்கின்றன.

பள்ளிபாளையம் காவல்நிலையம் முற்றுகை !

ஆயுத பூஜை கழக தோழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடிய பள்ளிபாளையம் காவல்நிலையத்தில்… நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைங்களில் இந்து மத பண்டிகையான ஆயுதபூஜை கொண்டாட கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. கழகத்தின் கோரிக்கையையும் ஏற்காமலும், அரசின் சட்ட விதிகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக அரசின் மதசார்பினையை சீர்குலைக்கும் வகையில் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் ஆயுதபூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தது,இதை அறிந்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் தலைமையில் கழக தோழர்கள் காவல்நிலையம் சென்று விசாரித்தனர். பள்ளிபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜா தோழர்களிடம் ஒருமையில் பேசி கலைந்து செல்லுமாறு மிரட்டியதோடு உள்ளே வைத்து அடித்து விடுவதாகவும் மிரட்டினார். உடனடியாக தோழர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆயுத பூஜையை நிறுத்துமாறும், பூஜைக்கு தயார்படுத்திய பொருட்களை அப்புறப் படுத்துமாறும், ஒருமையில் தகாத வார்த்தைகளை பேசிய துணை ஆய்வாளர் ராஜாவை மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை வைத்தனர்,...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை – மன்னார்குடியில் கண்டன பொதுக்கூட்டம்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை வாக்கு அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது” மன்னார்குடியில் மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேச்சு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாற்றிய மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசியபோது, ‘இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த எந்தஒரு மத்திய அரசும், ஒரு மாநிலத்திற்கெதிராக வெளிப்படையாக செயல்பட்டதில்லை ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும் தான் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்திரவிட்டும், அத்தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாஜக ஆட்சியை பிடிக்க...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 09.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.OO மணி வரை. இடம்: சீதாராம்பாளையம்,தெப்பாறை, திருச்செங்கோடு தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”மகளிர் சந்திப்பு” 9.10.2016. ஞாயிறு அன்று திருச்செங்கோடு சீதாராம்பாளையம் செப்பாறையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பெண்கள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் தங்கள் வாழ்வில் பெரியாரியலின் தாக்கங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெரியாரியல் அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக கூறினர்.பெரியாரியல் வாழ்க்கை நெறியில் கணவருடன் சிக்கல்களை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் முரண்பாடுகளை எளிதில் களைய முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினர். மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் தாய்வழிசமூக...

பொள்ளாச்சியில் பிஎஸ்என்எல் அலுவலக முற்றுகை 05102016

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் காவிரி சிக்கலிலும் தொடர்ந்து இரட்டை வேடம் போடும் மத்திய பிஜேபி மோ(ச)டி அரசைக் கண்டித்து 5.10.2016 பொள்ளாச்சியில் நடந்த BSNL அலுவலகம் முற்றுகை போராட்ட நாளிதழ் செய்தி ….

மத சார்ப்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைப்பதும் , ஆயுத பூஜை செய்வதும் சட்டப்படி குற்றமாகும் – பொள்ளாச்சி ஆனைமலை

திராவிடர் விடுதலைக் கழகம்- பொள்ளாச்சி & ஆனைமலை பகுதியில் மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும் ஆயுதபூஜை வழிபாடு நடத்துவதும் சட்ட விரோதமாகும் என்றும், அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே என்றும் கழகத் தோழர்களின் பதாகை மற்றும் சுவரொட்டிகள்  

பாஜக தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 07102016

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறி தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மதவாத பா.ஜ.க வை கண்டித்து முற்றுகையிட்ட கழக தோழர்கள் 54 பேர் கைது ! 07.10.2016 காலை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி தலைமையில் பாஜகவை கண்டித்து முழக்கமிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற கழக தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார்,காஞ்சீபுரம் ரவிபாரதி,மாவட்ட பொறுப்பாளர்கள் வேழவேந்தன்,ஏசுகுமார், பிரகாசு உள்ளிட்ட தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 10102016

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் ஒருங்கிணைப்பில், காவிரி ஆணையம் அமைக்க முடியாது என கூறி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் மதவாத பாஜக வை கண்டித்து, நாள் : 10.10.16 திங்கட் கிழமை நேரம் : மாலை 4 மணி. இடம் : வீரப்பன் சத்திரம்பேருந்து நிலையம் அருகில், ஈரோடு. மேற்கு மண்டல தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் !

கண்டனக்கூட்டம் ! மன்னார்குடி 08102016

கண்டனக்கூட்டம் ! காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் மோடி அரசைக் கண்டித்து. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்….. நாள் : 08.10.2016 அன்று மாலை 6மணியளவில் இடம் : பந்தலடி கீழ்புறம்,மன்னார்குடி. சிறப்புரை : தோழர்.தஞ்சை விடுதலைவேந்தன், (மதிமுக தலைமை கழக பேச்சாளர்)

ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும்...

நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்!

9-9-2016 அன்று பிற்பகல் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், தமிழக மக்கள் ஜனயாகக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அக்கட்சியி தலைவர் புதுக்கோட்டை ஷெரீப் தலைமையில்,  பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து சிறைவாசிகளையும், மத பேதம் இன பேதம் பார்க்காமல் விடுதலை செய் என்ற ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

குறவர் இனமக்கள் போராட்டம் 09092016 சென்னை

9-9-2016 அன்று குறிஞ்சி நிலக் குறவர் இன மக்களின் மனித உரிமை மாண்பைப் பாதுகாக்கவும், தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று உடனடியாக நடைமுறைப் படுத்தக் கோரியும், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காளை 10-00 மணி முதல் மாலை 5-00 மணீவரை நடை பெற்றது. அவ்வார்ப்பட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு கோரிக்கைகளை ஆதரித்தும், எண்ணிக்கை பலமும், பொருளாதார பலமும் இன்றியும், இன்னமும் அமைப்பாக்கப் படாமல் உள்ள அம்மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், குரலற்ற அம்மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  எப்போதும் குரலாக இருக்கும் என்றும் உறுதி கூறியும் உரையாற்றினார்.. பெரியார் முழக்கம் 13102016 இதழ்

இரமேசு பெரியார் – அல்லி வாழ்க்கை இணையேற்பு விழா சித்தையன் கோட்டை 11092016

11-9-2016 ஜாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தோழர்கள் அல்லி – இரமேசு பெரியார் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வே.மதிமாறன்,  மக்கள் மன்றம் மகேஸ்   புத்தர் கலைக்குழு மணிமாறன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் இரமேசு பெரியார், ஒப்பந்தவிழாவில் பெரியாரின் உடையாகிய கருப்பு சட்டை லுங்கியுடன் இருந்தார். மாலைகள் அணிவதற்கு முன்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பறையை அணிவித்துக் கொண்டனர். விழா முடிவில் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. தங்கள் திருமணம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்தான் நடைபெறவேண்டும் என்பதிலும், மாட்டுக்கறி உணவு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த தோழர்கள் அல்லி- இரமேசு பெரியார்  இருவரும் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட  ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் ஆவர். தோழர் இரமேசு பெரியார் மக்கள்...

கால் பந்தாட்டப் போட்டி – தெருமுனைக் கூட்டங்களுடன் மயிலையில் 4 நாள் பெரியார் பிறந்த நாள் விழாக்கள்

சென்னையில் மயிலாப்பூர் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தோழர்கள் பெரியார் பிறந்த நாள் விழாவை கால்பந்து போட்டிகளோடு இணைத்து நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்கள். கடந்த செப். 26ஆம் தேதி போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கும் விழா, அறிவியல் பரப்பும் மூடநம்பிக்கை எதிர்ப்பு கலை நிகழ்ச்சிகளுடன் விழா எழுச்சியுடன் நடந்தது. இது குறித்த செய்தி: சென்னை மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் , துடிப்பாக செயல்படக்கூடிய இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, கழகப் போராட்டங்களிலும், களப்பணிகளிலும் முன்னணியில் நிற்கும் தோழர்கள், பெரியார் பிறந்த நாளையொட்டி பார்ப்பனரல்லாத இளைஞர்களின் விளையாட்டாகத் திகழும் கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தி வருகிறார்கள். இந்த ஆண்டுக்கான போட்டி, கடந்த செப்.25ஆம் தேதி இராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள மாநகராட்சி மைதானத்தில் நடந்தது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மோகன கிருட்டிணன் தொடங்கி வைத்தார். 16 அணிகள் போட்டியில் பங்கேற்றன. அம்பேத்கர் பெயரில் இயங்கும் அணி...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு தடை

கழகத் தோழர்களுக்கு…                                                                                                          அரசு அலுவலகங்கள், காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதற்கு எதிரான அரசு ஆணைகள் நீதிமன்றத் தீர்ப்புகளை உள்ளூர் காவல் நிலையத்துக்கு அனுப்பி வைத்து ஆயுத பூஜைகளை நிறுத்திட வேண்டும் என்று வலியுறுத்துமாறு கழகத் தோழர்களை கேட்டுக் கொள்கிறோம். கொளத்தூர் மணி தலைவர்  திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 06102016 இதழ்

கோவை கழகத் தோழர் பாரூக்

கோவை கழகத் தோழர் பாரூக்

கோவை கழகத் தோழர் பாரூக்மீது குண்டர் சட்டமாம்! கோவையில் இந்து அமைப்புகளைச் சார்ந்த வன்முறையாளர்கள் கலவரம் – சூறையாடல்களை நடத்தியபோது உக்கடம் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத்தோழர் குழந்தைக்கு பால் வாங்க வந்தார்; அவரை எந்தக் காரணமும் இன்றி காவல்துறை கைது செய்ததை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டில் வெளியிட்டிருந்தோம். இப்போது அவர் மீது காவல்துறை குண்டர் சட்டத்தை ஏவியிருக்கிறது. இரண்டு இஸ்லாமிய தோழர்கள் மீது மட்டும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இருவரும் எந்த இஸ்லாமிய இயக்கத்தோடும் தொடர்பில்லாவர்கள். ஒருவர் பாரூக், திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்; மற்றொரு தோழர் எந்த இஸ்லாமிய இயக்கத்தோடும் தொடர் பில்லாதவர். காவல்துறையின் இந்த அநீதிக்கு கழகம் வன்மையான கண்டனம் தெரிவிக்கிறது. பெரியார் முழக்கம் 06102016 இதழ்