தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !

நாள் : 09.10.2016. ஞாயிறு

நேரம் : காலை 10.00 மணி முதல்
பிற்பகல் 3.OO மணி வரை.

இடம்: சீதாராம்பாளையம்,தெப்பாறை, திருச்செங்கோடு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”மகளிர் சந்திப்பு” 9.10.2016. ஞாயிறு அன்று திருச்செங்கோடு சீதாராம்பாளையம் செப்பாறையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பெண்கள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் தங்கள் வாழ்வில் பெரியாரியலின் தாக்கங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெரியாரியல் அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக கூறினர்.பெரியாரியல் வாழ்க்கை நெறியில் கணவருடன் சிக்கல்களை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் முரண்பாடுகளை எளிதில் களைய முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.

மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் தாய்வழிசமூக அமைப்பையும்,அதிலிருந்து பெண்ணடிமைத்தனமான சமூக அமைப்பியல் மாற்றம் குறித்து விளக்கினார்.மேலும் பெண்விடுதலையில் பெரியாரின் பங்களிப்பு குறித்தும் தற்போது பெரியார் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விரிவாக பேசினார்.

இச்சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது எனவும்,3 மாதத்திற்கு ஒருமுறை இது போன்ற மகளிர் சந்திப்புகளை நடத்த வேண்டும் என நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தோழர்கள் கூறினர்.

14670685_1818518961765329_1452021617668797741_n 14671231_1818519005098658_7340814763793924935_n

You may also like...