மதுரையில் ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது !

ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது !
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மதவெறி பாஜகவின் மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் 14.10.2016 காலை 11 மணியளவில் மதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது.

கழக அமைப்புச்செயலாளர் ரத்தினசாமி,பொருளாளர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா.,தோழர் காமாட்சி பாண்டி,மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில், மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட கழக தோழர்களும்,தோழர் மீ.த.பாண்டியன் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை),மேரி (சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை), சிதம்பரம்(ஆதித்தமிழர் கட்சி),தமிழ் நேயன் (தமிழ் தேச மக்கள் கட்சி), குமரன்,புரட்சிகர இளைஞர் முண்ணனி, நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), ஆதவன் (ஆதித்தமிழர் பேரவை), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் ரபீக்(இளந்தமிழகம்), அண்ணாமலை (சட்டபஞ்சாயத்து இயக்கம்) ஆகியோர் உள்ளிட்ட இயக்க தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

காவல்துறை தடையையும் மீறி நடைபெற்ற இப்போராட்டத்தில் காவல்துறையினருக்கும் போராட்டகாரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காவல்துறை 67 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் காவல்வைக்கப்பட்டனர்.தோழர்கள் மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

14632894_1821853294765229_2786139146387212933_n 14650552_1821853528098539_4535999047230854047_n 14666186_1821853304765228_4426360344043683117_n 14681727_1821853588098533_4859888300746369755_n 14691133_1821854594765099_1514916943077859227_n 14716126_1821853604765198_6372324561501715810_n 14717165_1821853298098562_2653361828967022701_n 14720353_1821854111431814_9186309183000035770_n 14732113_1821854564765102_6524595762439547881_n

You may also like...