Category: பெரியார் முழக்கம் 2023

விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

விஷ்ணுவும் சிவனும் எங்கிருந்து வந்தவர்கள்

இராட்சதர்கள் தபசு செய்தார்கள்; வரம் பெற்றார்கள்; அந்த வரத்தைக் கொண்டு அக்கிரமம் செய்தார்கள் – என்பதெல்லாம் இந்நாட்டுப் பழங்குடி மக்களையும், அவர்கள் தலைவர்களையும் இராட்சதர்கள் என்று சொல்லிக் கொல்லுவதற்குக் கடவுள்களும், தேவர்களும் என்ற பெயர்க்கொண்ட ஆரியர்கள் வழிதேடிக் கொண்ட ஒரு சாக்கே அல்லாமல் அவர்களது வரம் எதுவும் பயன்பட்டதாகத் தெரியவில்லை.   விஷ்ணு, சிவன் ஆகியவர்கள் யாவர்? எப்போது உண்டானார்கள்? எப்படி உண்டானார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? – என்பதற்கு ஒரு ஆதாரமும் கிடையாது.   பெரியார், குடிஅரசு – 20.10.1947 பெரியார் முழக்கம் 22062023 இதழ்

சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

சனாதனத்திற்கு எட்டு வாரம் கெடு!

  சனாதனம் பற்றி எட்டு வாரங்களுக்குள் விளக்கம் தர வேண்டும் என்று தமிழ்நாடு ஆளுநர் ரவிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கிடுக்குப்பிடி போட்டு இருக்கிறது. அப்படி ஒரு வளையத்துக்குள் ஆளுநரை சிக்க வைத்தவர் த.பெ.தி.க துணைத் தலைவர், மூத்த பெரியாரியலாளர் நமது வழக்கறிஞர் துரைசாமி.   ஆளுநர் அதற்கு என்ன பதில் சொல்வார், ‘நீதிபதி அவர்களே! சனாதனத்திற்கு காலவறையறைகளே கிடையாது என்று எங்கள் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வாக்கர் கூறிவிட்டார், அதைத்தான் நானும் கூறினேன். காலத்தால் வரையறுக்க முடியாத சனாதனத்துக்கு எட்டு வாரங்கள் கெடு விதிக்கலாமா? ’பிராமணியம் கூறுவதைத் தான் நான் பேசுகிறேன். என்னை மட்டும் ஏன் குறி வைத்து தாக்குகிறீர்கள்? இது நியாயமா? சனாதன தர்மமா? என்று பதில் கூறுவாரா? நமக்கு தெரியாது.   ஆனாலும் எங்கள் துரைசாமி சார் அப்போதும் விடமாட்டார் அடுத்து ஒரு தகவலை அதிரடியாக கேட்பார் ’உலகம் தோன்றிய போது சனாதனம் தோன்றி விட்டது என்று கோல்வக்கர் கூறுவதை...

இந்துத்துவா; குழப்பவாதிகளுக்கு ரொமிலா தாப்பர் பதிலடி

இந்துத்துவா; குழப்பவாதிகளுக்கு ரொமிலா தாப்பர் பதிலடி

(இப்போது பேசப்படும் இந்துத்துவா அரசியல் குறித்து பிரபல வரலாற்று அறிஞர் ரொமிலா தாப்பர் இந்து ஆங்கில நாளேட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூன் 18 2023இல் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார் புதிய சிந்தனை வெளிச்சங்களை தரும் அந்த பேட்டியில் சுருக்கமான தமிழ் வடிவம்)   இந்துத்துவா பேசுவோர் வரலாற்றை அணுகும்முறை முற்றிலும் தவறானது என்கிறார் தாப்பர். வரலாற்றை அறிவதற்கு அது குறித்து ஆதாரங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும், பிறகு அது குறித்த தெளிவான கோட்பாடுகளை உருவாக்குதல் ஆகியவை அடிப்படை. ஆனால் இப்போது பேசப்படும் இந்துத்துவாவுக்கு இந்த அணுகுமுறை ஏதும் இல்லை. கடந்த காலங்களில் நிகழ்ந்தவை, பேசப்பட்டவை என்ற கற்பனைகளை வரலாறுகளாக கட்டமைக்கிறார்கள். கடந்த கால கற்பனை புனைவுகளை நிகழ் காலத்துக்கான அடையாளம் என்கிறார்கள். எந்த முறையான ஆதாரங்களையோ ஆய்வுகளையோ இவர்கள் முன்வைப்பது இல்லை. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றுவதற்கு இந்துக்களின் வரலாறுகளே ஏனைய மதங்களின் வரலாறுகளை விட மிகவும் பொருத்தமானது என்ற நோக்கத்தோடு...

உத்ரகாண்ட்டில் இஸ்லாமிய வெறுப்பரசியல்

உத்ரகாண்ட்டில் இஸ்லாமிய வெறுப்பரசியல்

இந்து கடவுளர்கள் வாழும் உத்ரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழக்கூடாது என்று சங்கிகள் இஸ்லாமியர்களை வன்முறையால் வெளியேற்றி வருகிறார்கள். அவர்கள் வீடுகளைப் பறிமுதல் செய்து வருகிறார்கள், புஷ்கர் சிங் தாமி முதல்வராக உள்ள இம்மாநிலத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. விசுவ இந்து பரிஷத் என்ற இந்து அமைப்பும் ’தெய்வங்கள் வாழும் பூமி’ என்ற அமைப்பை நடத்தி வரும் தட்சண் பாரதி என்பவர் தலைமையிலான மத வெறியர்களும் சட்டத்தைக் கையில் எடுத்துக்கொண்டு இந்த இன வெறி ஆட்டத்தை நடத்தி வருகிறார்கள். பாஜக ஆட்சி அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் இந்த வெறிச்செயலை அனுமதித்துக் கொண்டு இருக்கிறது.   2019 – லேயே இந்த இன ஒதுக்கல் என்ற மத வெறுப்பு அரசியல் இங்கே தொடங்கிவிட்டது. ’இந்து தெய்வங்கள் வாழும் பூமி’ அமைப்பு உத்ரகாண்ட் மாநிலத்தில் இஸ்லாமியர்கள் வாழக் கூடாது, ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளை கொண்டாடக் கூடாது என்று ஒன்றரை லட்சம் துண்டு...

அமலாக்கத்துறை பாஜகவின் தொண்டர் படையா?

அமலாக்கத்துறை பாஜகவின் தொண்டர் படையா?

அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடியாக கைது  செய்யப்பட்டிருக்கிறார்.  தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்  வகையில்  அமலாக்கத்துறை நுழைந்து இருக்கிறது.  இவைகளெல்லாம் எப்படி நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை நாம் யோசித்து பார்க்க வேண்டும்.  செந்தில் பாலாஜி அதிமுகவிலோ, பாஜகவிலோ இருந்திருந்தால் அவர் மீது எந்த நடவடிக்கையும் பாய்ந்திருக்காது. அவர் திமுகவில் சேர்ந்து குறிப்பாக கோவை மண்டலத்தில் பாஜக ஆதிக்கத்தை தகர்த்துவிட்டார் என்ற ஒரே ஆத்திரத்தின் காரணமாக அவர் பழிவாங்கப்படுகிறார். செந்தில்பாலாஜி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று கூறியும் அவரை அமைச்சர் என்ற நிலையில் இருந்தும் கூட நள்ளிரவில் அவரை ஏன் கைது செய்கிறார்கள்?   ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து துறையில் வேலைவாங்கி தருவதாக கூறி செந்தில் பாலாஜி பணம் வாங்கினார் என்பது குற்றசாட்டு. ஊழல் நடந்தது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில். எடப்பாடி பழனிசாமி இப்போது ஊழல் அமைச்சர் என்று கூறுவதன் மூலம் ஜெயலலிதாவையும் சேர்த்து அவமானப்படுத்துகிறார்....

ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்கும் ‘நீட்’

ஒடுக்கப்பட்டோரை வஞ்சிக்கும் ‘நீட்’

2023 ஆம் ஆண்டிற்கான ‘நீட்’ தேர்வில், தேசிய அளவில் 50 இடங்களைப் பிடித்த மாணவர்களின் பின்னணி குறித்து ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழ் ஆய்வு நடத்தியுள்ளது.   அவர்களில் 38 மாணவர்களின் பள்ளி, கல்வி வாரியம், ‘நீட்’ தேர்வுக்காக பெற்ற பயிற்சி உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன. அந்த 38 மாணவர்களில் 29 பேர் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்தவர்கள்; 5 பேர் ஆந்திர மாநில பாடத் திட்டத்திலும், 3 பேர் மராட்டிய மாநிலப் பாடத் திட்டத்திலும், 2 பேர் மேற்குவங்க மாநிலப் பாடத் திட்டத்திலும் படித்தவர்கள். அதேபோல், விவரங்கள் சேகரிக்கப்பட்ட 38 பேரில், 29 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள். 7 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்புகளையும், இருவர் பட்டியலினத்தையும் சேர்ந்தவர்கள். சாதனை படைத்த மாணவர்கள் 38 பேரில் 37 பேர் ‘நீட்’ தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி பெற்றவர்கள். ஒருவர் மட்டுமே சிறப்புப் பயிற்சி பெறாதவர். ஆனால்,...

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

பட்டியல் தயாரிப்பு – தெருமுனைக் கூட்டங்கள் ; திருப்பூர் மாவட்டம் தீவிரம்

திருப்பூர் மாவட்ட திவிக ஆலோசனைக் கூட்டம் 12.06.2023 திங்கள் மாலை 4.30 மணி அளவில்  மாஸ்கோ நகர் மாதவன் அலுவலகத்தில் நடைபெற்றது ஆலோசனைக் கூட்டம் கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் தலைமையில் கழகப் பொருளாளர் சு.துரைசாமி அவர்களின் முன்னிலையில் நடைபெற்றது.   கூட்டத்தில் ஏப்ரல் 29,30 நடைபெற்ற மாநாட்டில் திருப்பூர் மாவட்டம் சார்பாக சிறப்பாக கலந்துகொண்டு பேரணியில் இரண்டாம் இடம் பரிசு பெற்றமைக்கு பேரணியில் கலந்துகொண்ட அனைத்து தோழர்களுக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.   இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கழக செயலவையில் அறிவிக்கப்பட்ட படி தீண்டாமை நடக்கும் இடங்கள் கணக்கெடுப்பு மற்றும் தமிழ்நாடு முழுவதும் நடைபெற உள்ள 1000 தெருமுனை கூட்டங்களில் திருப்பூர் மாவட்டத்தில் 50 கூட்டங்கள் நடைபெற வாய்ப்புள்ள இடங்கள் குறித்தும் ஆலோசனைகள் நடைபெற்றன.   மேலும் தாராபுரத்தில் நகராட்சி அரசு அலுவலகத்திற்குள் நிர்வாண அகோரி சாமியார்களை அழைத்து வந்து  பூஜை நடத்திய நகராட்சி ஆணையர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி...

அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி ஒன்றிய ஆட்சியால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

அமித்ஷாவுக்கு டி.ஆர்.பாலு பதிலடி ஒன்றிய ஆட்சியால் புறக்கணிக்கப்படும் தமிழ்நாடு

  ஒன்பது ஆண்டுகால பாஜக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு ஒரு சிறப்புத் திட்டம் கூட அளிக்கவில்லை என அமித் ஷா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாக திமுக எம்.பி டி.ஆர்.பாலு பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் கேட்ட கேள்விக்கு ஆக்கப்பூர்வமாக பதில் சொல்ல முடியாத  ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முழுக்க முழுக்க கற்பனைக் கதையை உருவாக்கி, தமிழ்நாட்டிற்குப் பல திட்டங்களை அள்ளி வீசியது போல் “கானல் நீர்” தோற்றத்தை ஏற்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தமிழ்நாடு, பாஜக ஆட்சியில் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பது  அக்மார்க் உண்மை என்பதை அமித்ஷாவே புரிந்து கொண்டு, திசை திருப்பி தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றலாம் என நினைக்கிறார். ஐக்கிய முற்போக்குக் கூட்ட ணியில் திமுக பங்கேற்றிருந்த போது தமிழ்நாட்டிற்கு சாதித்த திட்டங்களை மிக அழகாக பட்டியலிட்டார் முதலமைச்சர். அதுபோன்ற சாதனை மிக்க சிறப்புத் திட்டங்கள் ஒன்று கூட இந்த 9...

கலைஞர் 100.. வரலாற்றுப் பக்கங்களில் இருந்து

கலைஞர் 100.. வரலாற்றுப் பக்கங்களில் இருந்து

திராவிடர் இயக்க வரலாற்றோடு கலைஞர் வரலாறும் இணைந்தே பயணிக்கிறது. இளைய தலைமுறையின் புரிதலுக்காக அந்த வரலாற்றின் சுருக்கமான தொகுப்பை பெரியார் முழக்கம் பதிவு செய்கிறது.   பெரியாரின் சுயமரியாதை இயக்கம் தொடங்கிய 1924 இல் பிறந்த கலைஞர், சுதந்திரம் பெறுவதற்கு 9 ஆண்டு காலத்திற்குப் முன்பு தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அந்த பயணம் 80 ஆண்டு காலம் 2018 வரை நீடித்தது.   ஐந்து முறை தமிழக முதல்வராக இருந்தார். அதில் இரண்டு முறை சட்ட விரோத குறுக்கு வழிகளால் பதவிக்காலம் முடிவதற்கு முன்பே ஒன்றிய ஆட்சியால் அவரது ஆட்சி கலைக்கப்பட்டது.   அறுபது ஆண்டு காலம் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர், போட்டியிட்ட ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி பெற்றார்.   நான்கு வயதில் தந்தை விருப்பப்படி இசைப் பயிற்சிக்கு சென்றார் கலைஞர். கோயில்களில் தான் இசைப் பயிற்சி நடக்கும், கோயில்கள் பெரிய மனிதர், உயர் சாதியினர் வரும் இடம் என்பதால்...

மதம் எனும் சமுதாயக் கொள்கை

மதம் எனும் சமுதாயக் கொள்கை

மதம் இல்லாமல் மக்கள் வாழ முடியாது. அதாவது நான் சொல்லும் மதம், கடவுளுக்கும் மக்களுக்கும், சம்பந்தமும் மோட்சமும் விதியும் மன்னிப்பும் சமாதானமும் மேல் லோகத்தில் அளிப்பது என்கிற மதம் அல்ல. மற்றெதுவென்றால், மனிதனுக்கு மனிதன் மரியாதையாய், (பணிவாய்) அன்பாய், ஒற்றுமையாய், ஒழுக்கமாய், உதவியாய், வாழும் கொள்கை என்று சொல்ல எனக்கு இஷ்டம். இதை நீங்கள் மதம் என்று சொல்ல வேண்டும் என்றாலும் ஆட்சேபிக்கவில்லை. இப்படிப்பட்ட மதம் இல்லாமல் மனிதன் சமுதாயத்தில் வாழ்வது சங்கடமாகும். பெரியார் பெரியார் முழக்கம் 15062023 இதழ்

குஜராத் நீதிபதியின் ”மனுஸ்மிருதி” தீர்ப்பு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

குஜராத் நீதிபதியின் ”மனுஸ்மிருதி” தீர்ப்பு மக்கள் சிவில் உரிமைக் கழகம் கண்டனம்

அகமதாபாத்: பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமியின் கருக்கலைப்பு வழக்கில் ‘மனுஸ்மிருதி’யை மேற்கொள் காட்டி குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.   பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி 7 மாத கர்ப்பமாக உள்ள நிலையில், கருக்கலைப்புக்கு அனுமதி கோரி சிறுமியின் தந்தை குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி சமிர் தாவே, கருக்கலைப்பு தொடர்பாக முடிவு எடுக்கும் முன் சிறுமி மற்றும் அவரது வயிற்றில் வளரும் குழந்தையின் ஆரோக்கியம் குறித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ராஜ்கோட் மருத்துவமனைக்கு உத்தரவிட்டார்.   மருத்துவ நிபுணர்கள் குழு வரும் 15-ம் தேதிக்குள் இது குறித்து நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட நீதிபதி, அந்த அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என கூறியுள்ளார்.   இந்த உத்தரவின்போது சில கருத்துக்களை நீதிபதி சமிர் தாவே தெரிவித்தார். “சமஸ்கிருதத்தில்...

தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

தலையங்கம் பட்டியல் தயாரிப்புப் பணியைத் தொடங்கி விட்டீர்களா?

கழக செயல் வீரர்களே கிராமங்களில் நிலவும் தீண்டாமை சக மனிதர்களின் சுயமரியாதையை பறித்து இழிவுபடுத்தும் அவலங்களை கணக்கெடுக்கும் பட்டியல் தயாரிக்கும் பணியை தொடங்கி விட்டீர்களா?   சேலம் மாநாட்டில் நாம் உருவாக்கிய செயல்திட்டத்தை நாம் விரைவு படுத்த வேண்டும் வேறு எந்த அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் செய்ய முன்வராத இந்த எதிர்நீச்சல் போடும் சமுதாயக் கடமையை நாம் சுமந்து களம் இறங்கி உள்ளோம்.   கிராமங்களில் அரசியல் சட்டங்கள் ஆட்சி செய்யவில்லை, மாறாக உள்ளூர் சாதி ஆதிக்கவாதிகள் தங்களின் சாதிவெறியை பழக்கவழக்கம், பண்பாடு என்ற பெயரில் விளிம்பு நிலை மக்கள் மீது திணிக்கிறார்கள். பார்ப்பனியத்தின் அடிமைகளாகி ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து கோரத் தாண்டவம் ஆடுகிறார்கள்.   கோயிலுக்குள் தீண்டாமை, பொது வீதிகளில் நடப்பதற்கு தடை, தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடி வெட்டும் கடைகளில் தீண்டாமை, திருவிழாக்களில் பங்கேற்பதற்கு தடை, சுடுகாட்டில் சடலங்களை புதைக்கவும் தடை, மரணத்திற்குப் பிறகும்...

வினா – விடை

வினா – விடை

இந்தியாவின் அடுத்தப் பிரதமராக தமிழர் வர வேண்டும்   – அமித்ஷா அதுக்கு சீமானின் சம்மதத்தை வாங்கிட்டிங்களா ஜீ!   தமிழ்நாட்டில் 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் – அமித்ஷா அமலாக்கத்துறை, வருமானவரித்துறைக்கு எல்லாம் தொகுதிகளை கைப்பற்றும் உரிமை இல்லை ஜீ   மதுரை ஆதீனம் பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினப்பிரவேசம்                                      – செய்தி டெல்லிக்கு விமான சவாரி, உள்ளூரில் பல்லக்கு சவாரி   கர்பிணிப் பெண்கள் இராமயணமும் மகாபாரதமும் படித்தால் சுகப்பிரசவம் நடக்கும்                         – தமிழிசை உண்மைதான், குந்திதேவி சூரியனோடு உறவு கொண்டு கர்ணனை பெற்றவளாயிற்றே!   பெரியார் முழக்கம் 15062023 இதழ்

ஆதினங்களின்  பல்லக்கு சவாரியை  தடை  செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

ஆதினங்களின் பல்லக்கு சவாரியை தடை செய் மயிலாடுதுறையில் கழகம் – தோழமை அமைப்புகள் ஆர்ப்பாட்டம், கைது

சைவத்தையும் தமிழையும் பரப்புவதற்காக சைவ மதங்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதீனங்கள் இன்றைக்கு அந்த பணியை விட்டுவிட்டு இந்துத்துவாவின் தூதர்களாக மாறிப் போய் இருக்கிறார்கள். மோடிக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவின்போது நேரு சென்று செங்கோல் ஒன்றை ஆதீனங்கள் பரிசாக அளித்து இருக்கின்றன.   அந்த செங்கோல் மவுண்ட் பேட்டன்  பிரபுவிடம் இந்தியாவில் ஆட்சி  மாற்றத்திற்கு அடையாளமாக தரப்பட்டது என்று  ஒன்றிய ஆட்சியும், அமித்ஷாவும் கட்டிவிட்ட கற்பனைகளை திருவாடுதுறை ஆதீனம் இந்து நாளேட்டில் அளித்த பேட்டியில் மறுத்துவிட்டார். அப்படி எந்த ஆதாரமும் இல்லை என்றும், எதற்காக மவுண்ட் பேட்டனிடம் போய் செங்கோலை கொடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருக்கிறார். ஆக பாஜகவின் பொய்யான கதை வசனம் கிழிந்து தொங்கி இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.   இந்த மடாதிபதிகள் மோடியின் ஆட்சி தான் இந்த காலம் முழுவதும் நீடித்திருக்க வேண்டும் என்று அரசியலும் பேசி இந்துத்துவாவின் பரப்புரையாளர்களாக மாறிப்போய் இருப்பதோடு  தருமபுரம்...

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

தீண்டாமைப் பட்டியல் : ஈரோடு தெற்கு மாவட்டம் களமிறங்குகிறது

ஈரோடு தெற்கு மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் மே 26, மாலை 6 மணியளவில் மாவட்டச் செயலாளர் எழிலன் தலைமையில் நடைபெற்றது. இதில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏப்ரல் 29.30 ஆகிய தேதிகளில் சேலத்தில் நடைபெற்ற இது தமிழ்நாடு இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு மிக எழுச்சியோடு நடைபெற உழைத்திட்ட அனைத்து தோழர்களுக்கும் கூட்டம் பாராட்டுதலையும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறது. மே 21-இல் சேலத்தில் கூடிய தலைமை செயலவை கூட்டத்தில் தலைமை அறிவித்த வைக்கம் போராட்டம் இன்னும் முடியவில்லை  . இன்றும் தொடரும் தீண்டாமையை கணக்கெடுக்கும் பணியை இரண்டு குழுவாக பிரிந்து ஜூன் 04,05 ஆகிய தேதிகளில் கிராமப்புரங்களில் நிலவும் தீண்டாமையை கணக்கெடுத்து தலைமைக்கு தெரிவிப்பது. “எது திராவிடம்? எது சனாதனம்?” என்ற தலைப்பில் ஈரோடு புறநகர் பகுதிகளில் 25 கூட்டங்களும், மாநகரப் பகுதிகளில் 25 கூட்டம் என 50 கூட்டங்கள் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது. தெருமுனைக் கூட்டங்களின் நிறைவுக் கூட்டம் ஈரோடு...

மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

மேல்பாதி – திரெளபதி கோயிலில் பட்டியல் சமூகத்தின் நுழைவு உரிமை மறுப்பைக் கண்டித்து மதுரையில் கழகம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மேல்பாதி திரெளபதி கோவிலில் பட்டியல் சமூக மக்களின் வழிபாட்டு உரிமையை மறுக்கும், ஜாதி வெறியர்களை கண்டித்தும், இந்து அறநிலையத்துறையின் கீழுள்ள அனைத்து கோவில்களிலும் அனைத்து மக்களுக்குமான வழிபாட்டு உரிமைகளை நிலை நிறுத்திட கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் மா.பா.மணிஅமுதன் தலைமை தாங்கினார்.மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி முன்னிலை வகித்தார்.   தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், விடுதலை சிறுத்தைகள் துணைப் பொதுச்செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்தேசியப் புலிப்படைத் தலைவர் ஆ.முத்துப்பாண்டி, மக்கள் தமிழகம் கட்சி பொதுச்செயலாளர் நிலவழகன், மக்கள் சட்ட உரிமை இயக்கம் அண்ணாத்துரை, புரட்சிகர இளைஞர் முன்னணி குமரன், நிலக்கோட்டை வீர லட்சுமி, “உயர்நீதி மன்றத்தில் தமிழ் போராட்டக்குழு” ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் பகத்சிங், தமிழ்தேச குடியரசு இயக்கம் மெய்யப்பன், தபெதிக தமிழ் பித்தன், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட தோழர்கள் கண்டன உரையாற்றினார்கள். யோகேஸ், வேங்கைமாறன், குமார்,...

சமத்துவபுரம் – டைடல் பார்க் – இரண்டுமே தேவை ஏ.எஸ். பன்னீர்செல்வம்

சமத்துவபுரம் – டைடல் பார்க் – இரண்டுமே தேவை ஏ.எஸ். பன்னீர்செல்வம்

சமத்துவபுரம், டைடல் பார்க் [தொழில்நுட்பப் பூங்கா] இரண்டுமே ஒரே நேரத்தில் தொடங்கப்பட வேண்டும் என்பதே பெரியார்,அண்ணா பார்வை, என கலைஞர் கூறினார் கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னைச் சந்திக்கும் பத்திரிகையாளர்களும் கல்வியாளர்களும் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றை நான் எழுதுவதற்கான காரணம் என்னவென்று தொடர்ந்து கேட்டுவருகின்றனர். ஒரு தேசத்தை உருவாக்குவதில் இரண்டு விதமான கற்பனைகள் உண்டு: ஒரு கற்பனைக்கு Holding together என்றும் மற்றொரு கற்பனைக்கு Coming together என்றும் அரசியல் விஞ்ஞானத்தில் கூறப்படுகிறது. இதில் Holding together என்ற கருத்தாக்கத்தில் அரசு இயந்திரத்துக்கும் பாதுகாப்புத் துறைக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து, மக்களுக்கான அதிகாரம் மற்றும் உரிமைகள் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்படுகின்றன. ஆனால், Coming together என்ற கருத்தாக்கத்தில் சாமானிய மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள் முதலியவை முக்கியத்துவம் பெற்று, அரசு இயந்திரம் மக்களின் உரிமைகளை நிறைவேற்றும் ஒரு கருவியாக மாறுகிறது. கலைஞரின் செயல்திட்டம்: அதிகாரக் குவிப்பில் நம்பிக்கை உடைய கட்சிகள் அனைத்தும் Holding...

சைவம் – வைணவம்

சைவம் – வைணவம்

சைவம், சிவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்கிற வார்த்தைகளும் ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழக்கை சுலபத்தில் தள்ளிவிட முடியாது மற்றும் சைவக் கடவுள்கள் பெயரும் கடவுளின் பெண் சாதிப் பிள்ளைகளின் பெயரும் அனேகமாய் முழுதும் ஆரிய மொழிப் பெயர்களே தவிர வேறில்லை.  மற்றும் அப்பெயர்களுக்கு ஏற்ற காரணங்களும் அக் காரணங்களுக்கு ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட கதைகள்  தாம் ஆதாரமேயொழிய வேறில்லை மற்றும் அப் பெயர்களுக்கும் கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பதும் பெரிதும் ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்த்ததாக சொல்லப்படுபவைகளை அல்லாமல் வேறு இல்லை. சைவம் என்கிற பெயரும், சிவன் என்றால் அன்பு என்கின்ற வியாக்கியானமும் கூட ஆரிய கொள்கைகளை சிறப்பாகவே ஆபாசங்களையும், வேள்விக் கொடுமைகளையும் முறையே வெளியாக்கியும்  ஒழிக்கவும்  வந்த  புத்த இயக்கத்தை  எதிர்த்து  அவரது கொள்கையை ஒழிக்கவே சைவம் என்பதாக ஒன்று கற்பிக்கப்பட்ட தே தவிர மற்றபடி அச் சைவம் என்பதற்கும் அதன் கொள்கைகளுக்கும் அதில் காணப்படும் பல்வேறு கடவுள்களுக்கும்...

சோதிடத்தையும் சட்டத்தையும் இனைத்து தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் ; உச்சநீதிமன்றம் கண்டனம்

சோதிடத்தையும் சட்டத்தையும் இனைத்து தீர்ப்பு வழங்கிய அலகாபாத் உயர்நீதிமன்றம் ; உச்சநீதிமன்றம் கண்டனம்

உத்திரபிரதேசத்தில் ஒரு நீதிபதி சட்டத்தையும் சோதிடத்தையும் ஒன்றாக இணைத்து தீர்ப்பு ஒன்றை வழங்கியிருக்கிறார். சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை உருவாக்கிய இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு வந்தது. பாலுறவு வன்கொடுமைக்கு உள்ளான ஒரு பெண் நீதி கேட்டு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடினார், அலகாபாத் நீதிபதி அந்த பெண்ணை பாலுறவுக்கு உள்ளாக்கியவன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று  ஒரு தீர்ப்பை வழங்கினார்.  குற்றம் சாட்டப்பட்டவர் பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது, எனவே நான் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த நீதிபதி அலகாபாத் பல்கலைக்கழகத்தின் சோதிடத் துறைக்கு இரண்டு பேர் ஜாதகத்தை எடுத்துச் சென்று அந்த பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்டறிந்து அதன் பிறகு முடிவு செய்யுங்கள் என்று ஒரு வினோதமான தீர்ப்பை கொடுத்து விட்டார். இந்த தீர்ப்பை சமூக வலைதளங்களில் பார்த்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர...

தலையங்கம்    தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’

தலையங்கம் தொடர்வண்டித் துறையில் ’நவீனத் தீண்டாமை’

ஒடிசா இரயில் விபத்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி விட்டது. மிகக் கொடூரமான இரயில் விபத்தாக இது அமைந்துவிட்டது.  300க்கும் மேற்பட்ட உயிர்கள் இதுவரை பலியாகி விட்டன. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த தொடர்வண்டி சமூகத்தில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. சமூகத்தினுடைய மக்களின் அசைவியக்கங்களை அது துரிதப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சாதி, மத, வர்ணாசிரம பேதம் இல்லாமல் அனைத்து சாதியினரையும் அனைத்து மதத்தினரையும் சுமந்து செல்கின்ற ஒரு வாகனமாக அது மாறியது. பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய தொடர் வண்டி மற்றும் நவீன தொழிற்சாலைகள் காரணமாக இந்தியாவில் தேக்கமுற்றுக் கிடந்த சமுதாயம் உடையத் தொடங்கியது என்றார் காரல் மார்க்ஸ். தேக்கமுற்ற சமுதாயம் என்பதை விளக்க வேண்டுமானால் பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயம் உடையத் தொடங்கியது என்பதே ஆகும். இந்த பார்ப்பன அதிகார கட்டமைப்பு சமுதாயத்தினால் உலகில் ஏனைய நாடுகளில் நிகழ்ந்ததைப் போல இங்கே நில உடமை முதலாளித்துவ சமூகங்கள் உருவாகவில்லை. மார்க்சிய மொழியில் கூற வேண்டுமானால்...

பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் ;

பாஜகவும் பாலியல் குற்றச்சாட்டுகளும் ;

உத்தரகாண்ட் மாநிலத்தில்  பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் பல்காரியா கடந்த ஆண்டு அக்டோபரில் தனது அலுவலகத்தில் பணியாற்றிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்.  இதை வெளியே சொல்ல கூடாது என தனது டிரைவரையும் கடுமையாக தாக்கினார். மற்றும் அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. கடந்த 2018ல் முன்னாள் ஒன்றிய பாஜக அமைச்சர் எம்.ஜே அக்பர் மீது ஆறு பெண் பத்திரிக்கையாளர்கள் பாலியல் குற்றச்சாட்டு கூறினர். கொல்கத்தாவில் பேட்டி தருகிறேன் என்று கூறி ஓட்டலுக்கு வரவழைத்து பாலியல் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டின் மீது ஈரத் துண்டை போட்டு வெற்றிகரமாக மறைத்து விட்டது மோடி தலைமையிலான ஒன்றிய அரசு.   அரியானா மாநில பாஜக தலைவர் சுபாஷ் பராலாவின் மகன் விகாஸ் பராலா. [இவரும் பாஜகவில் பொறுப்பில் இருந்தார்] தனது நண்பர் ஆசிஷ் குமாருடன் சேர்ந்து IAS அதிகாரியின் மகளை பாலியல்...

பாஜகவின் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்

பாஜகவின் மீது குவியும் பாலியல் குற்றச்சாட்டுகள்

ஒவ்வொரு விளையாட்டு வீரர்களும் நாட்டுக்காக பதக்கம் வென்று பெருமை சேர்க்க வேண்டும் என்பதை தங்களது இலக்காக கொண்டு விளையாடி வருகின்றனர். அதற்காக பல்வேறு தியாகங்களையும் விலையையும் கொடுத்து  போராடுகின்றனர். ஒலிம்பிக்கில் தங்களது நாட்டைச் சேர்ந்த வீரர்கள் பதக்கம் வென்று சாதிக்க வேண்டும் என்று நினைக்கும் உலக நாடுகள் பல ஆயிரம் கோடியை செலவு செய்து வருகிறது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பாஜக எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சிங் மல்யுத்த வீராங்கனைகள் பலரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார் என்பது மல்யுத்த வீராங்கனைகளின்  குற்றச்சாட்டு. இவரால் பாதிக்கப்பட்ட வீராங்கனைகளில் 7 பேர் இவர் மீது டெல்லி கண்ணா ப்ளேஸ் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். பாஜக எம்பி என்பதால் வழக்கம்போல் புகாரைக் கிடப்பில் போட்டது டெல்லி காவல்துறை. நீதிமன்றம் தலையிட்ட பின்னர் தான் முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய வேண்டும், அவர் மீது நடவடிக்கை எடுக்க...

இந்தியாவில் ஏன் ரயில் விபத்துகள்?

இந்தியாவில் ஏன் ரயில் விபத்துகள்?

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தாததே காரணம் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரு இலட்சம் கோடியை செலவிடாத ரயில்வே துறை 2017 – 2018 ஆம்  நிதியாண்டில் – ரயில்வே பாதுகாப்பை மேம்படுத்த ரூ.1 இலட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியை ரயில்வே துறை பயன்படுத்தவில்லை, இதை அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து இருப்பதாக கூறிவிட்டது. கடந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய கணக்கு தணிக்கை அறிக்கையில் [CAG] இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. டெல்லி: நவீன தொழில்நுட்பத்தை முழுமையாக பயன்படுத்தி ரயில் விபத்துகளை வளர்ந்த நாடுகள் தடுக்கும் நிலையில், ஒடிசா விபத்தால் இந்திய ரயில்வேயின் விபத்து தடுப்பு தொழில்நுட்பம் கேள்விக்குறியாகி உள்ளது. ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தால், இந்திய ரயில்வேயின் பாதுகாப்பு திறன்கள் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்த விபத்தில் இதுவரை 300க்கும் மேற்பட்டோர் பலியானதாக கூறப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். ரயில் விபத்துக்கள், தடம் புரண்டது, ரயில்கள் மோதுவது உள்ளிட்ட காரணங்களால்...

வேதங்கள் அறிவியல் கோட்பாடுகளாம்; இஸ்ரோ தலைவர் உபதேசம்

வேதங்கள் அறிவியல் கோட்பாடுகளாம்; இஸ்ரோ தலைவர் உபதேசம்

ஜோதிடத்தை மய்யமாக வைத்து எழுதப்பட்ட வேதங்கள் தான் அறிவியல் கோட்பாடு களின் பிறப்பிடம் என்று இஸ்ரோ தலைவர் எஸ்.சோம் நாத் வேத பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப் பிடமே வேதங்கள்தான். ஆனால், மேற்குலக படைப்பு கள்போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப்பட் டுள்ளன” என்று சமஸ்கிருத வேத பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் கூறியுள்ளார்.   மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகரிஷி பாணினி சமஸ்கிருத மற்றும் வேதிக் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.   அவர் மேலும் பேசுகையில்,  “அறிவியல் கோட்பாடுகளின் உண்மையான பிறப்பிடம் வேதங்களே. ஆனால், மேற்குலக படைப்பு கள் போல் அவை வேறு போர்வையில் கொடுக்கப் பட்டுள்ளன. கணிதத்தின் அல்ஜீப்ரா, ஸ்கொயர் ரூட்ஸ், நேரம் தொடர்பான கணக்குகள், கட்டுமானக் கலை, பிரபஞ்சத்தின் கட்டமைப்பு, விமான அறிவியல், உலோக...

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

கோவை – சென்னை மாவட்டக் கழக கலந்துரையாடல் மாநாட்டுத் தீர்மானங்களை செயல்படுத்த – தோழர்கள் தீவிரம்

சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம், 28.05.2023 ஞாயிறு மாலை 6 மணியளவில், முருகேசன் திருமண மண்டபத்தில்  சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது.   கழகத்தின் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நோக்கவுரையாற்றினார்.  மாவட்டத் தலைவர் வேழவேந்தன் முன்னிலை வகித்தார்.   நிகழ்வில் சேலத்தில் நடைபெற்ற மாநாட்டிற்கான வரவு செலவு கணக்குகள் குறித்தும் செயலவையில் இயற்றப்பட்ட தீர்மானம் குறித்தும் “எது திராவிடம்! எது சனாதானம்!” சென்னையில் 200 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அன்பு தனசேகரன், கரு.அண்ணாமலை உட்பட்ட சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கோவை மாவட்ட தலைவர் மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் அவர்கள் தலைமையில் 25.5.2023 அன்று கோவை இரயில் நிலையம் அருகேயுள்ள வழக்கறிஞர் கார்கி அலுவலகத்தில் மாலை 5 மணிக்கு கலந்துரையாடல் கூட்டம்  நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு...

சனாதனத்தின் கொடூர வரலாறு (3) சுயமரியாதை திருமண சட்டத்தில் பெரியார் தந்த திருத்தம் தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

சனாதனத்தின் கொடூர வரலாறு (3) சுயமரியாதை திருமண சட்டத்தில் பெரியார் தந்த திருத்தம் தொகுப்பு : விடுதலை இராசேந்திரன்

1954 : தீண்டப்படாதார் கோயில் நுழைவு உரிமையை பார்ப்பனர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். காசி விசுவநாதன் கோயிலில் தீண்டப்படாதவரை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த பார்ப்பனர்கள் அவர்களுக்கென்று தனி வழி ஒன்றை உருவாக்கி அந்த வழியாக மட்டும்தான் கோவிலுக்குள் நுழைய வேண்டும் என்று கூறினார்கள். ஏனைய பிற சாதி பக்தர்களோடு கலந்து அவர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று பெரும் போராட்டத்தை நடத்தினர்.   1955 :  தீண்டாமையை ஒழித்து சட்டம் கொண்டுவரப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதை அமுல்படுத்துவதற்கு இந்திய அரசு சட்டமேற்றியது. அந்த சட்டத்தில் அம்பேத்கர் தெரிவித்த பல கருத்துகளை புறக்கணித்தது.   1956 பம்பாய் சட்டமன்றம் கோயில் நுழைவுக்கு ஒரு சட்டம் இயற்றியது, சுவாமி நாராயணன் பரம்பரை என்ற ஒரு பிரிவினர் யாரை கோவிலுக்கு விடலாம் என்கின்ற உரிமை தங்களுக்கு உண்டு என்று உரிமை கோரி சில பிரிவினருக்கு அனுமதி மறுத்து கோயிலை மூட உரிமை தங்களுக்கு உண்டு என்று வாதிட்டனர்....

பழந்தமிழர் பெருமை தேவையில்லை

பழந்தமிழர் பெருமை தேவையில்லை

வீணாகப் பழந்தமிழர் கொள்கை என்பதும், பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பது அந்நியனை ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படக்கூடியதாக ஆகிவிட்டன. இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாகி விட்டது.   பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது சமூகம் இல்லை. பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு செல்ல வேண்டியவனே ஒழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஒரு ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாது மக்களை ஏமாற்ற அதை பயன்படுத்திவிடக் கூடாது என்பதோடு அவ்வளவு மடையர்களாகவும் நாம் இல்லை. இன்று நம் பண்டிதர் பலருக்குப் பகுத்தறிவு இல்லாமல் போனதற்கு காரணமே பழந்தமிழர் வாழ்க்கை, பழங்கொள்கை  பேச்சைப் பேசி இனி ஆக வேண்டிய காரியம் எதுவும் இல்லை   ஆதலால், பொதுமக்கள் பழந்தமிழர் கொள்கைப் பேச்சுப் பித்தலாட்டத்திற்கு...

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்பி மீது 40 கிரிமினல் வழக்குகள்

பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான பாஜக எம்பி மீது 40 கிரிமினல் வழக்குகள்

பாலியல் குற்றசாட்டுக்குள்ளான பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைது செய்யாமல் – பாஜக ஆட்சி காப்பாற்றி வருகிறது. பாதிக்கப்பட்ட மல்யுத்த வீராங்கனைகள் தொடர்ந்து போராடுகிறார்கள். புதிய நாடாளுமன்றத்தின் முன்பு போராடச் சென்ற வீராங்கனைகளை காவல்துறை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்தனர்.   மல்யுத்த வீரர் – வீராங்கனைகளை குண்டுக் கட்டாக தூக்கி கைது செய்த சம்பவத்திற்கு தில்லி மகளிர்ஆணையத் தலைவர் ஸ்வாதி மலிவால் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பிரிஜ் பூஷண் சரண்  சிங்கை உடனடியாக கைது  செய்யுமாறு தில்லி போலீஸ் கமிஷனர் சஞ்சய் அரோராவிற்கு கடிதம் எழுதி உள்ளார். அக்கடிதத்தில், “இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராக இருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் பிரிஜ் பூஷண் சிங் மீது ஒரு சிறுமி உட்பட பல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை முன்  வைத்தனர். குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஏற்கனவே 40 கிரிமினல்  வழக்குகள் உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் தலையிட்டு 2 எப்.ஐ.ஆர்கள்...

செங்கோல் நாடகம்

செங்கோல் நாடகம்

டெல்லி புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சோழர் கால செங்கோலை நிறுவி இருப்பதாக ஒன்றிய ஆட்சி கூறுகிறது. மோடி புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை ஒரு மதச் சடங்காக மாற்றி இருக்கிறார், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் கூட அனுப்பப்படாமல் அவமானபடுத்தப்பட்டிருக்கிறார்.   அவர் ஏன் அவமதிக்கப்பட்டார் என்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு. ஒன்று அவர் ஒரு பெண்; இரண்டு அவர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்; மூன்றாவது கணவனை இழந்தவர்; பார்ப்பனிய தர்மப்படி வேதச் சடங்குகளில் இவர் பங்கேற்க முடியாது எனவே தான் அவர் இந்த புறக்கணிப்புக்கு உள்ளாகி இருக்கிறார். திறப்பு விழாவுக்கு தேர்வு செய்யப்பட்ட நாள் சாவர்க்கர் பிறந்தநாள், சாவர்க்கர் மனுஸ்மிருதியை இந்தியாவின் புனிதமான இந்துக்களின் வழிகாட்டும் நூல் என்று பெருமைப்படுவதோடு எழுத்துப்பூர்வமாகவும் பதிவு செய்துள்ளார் (Women in Manushmirthi – Volume 4, Prabhat Publishers) மனுஸ்மிருதிப்படி...

வினா விடை

வினா விடை

சர்வதேச நாடுகள் நெருக்கடியான சிக்கல்களுக்கு தீர்வுகாண இந்தியாவையே நாடுகின்றன.             – ஆளுநர் தமிழிசை உண்மை தான் நெருக்கடிகளை திசைதிருப்பி மக்களை ஏமாற்ற இங்கே இலவச ஆலோசனைகள் வண்டி வண்டியாக கிடைக்கும்.   கோவிந்தராஜர் ஸ்ரிதேவி பூதேவியுடன் திருப்பதியில் கற்பக விருட்ச வாகனத்தில் வீதி வீதியாக உலா வந்தார்     – செய்தி கற்பக விருட்சம் எந்த நிறுவனத்தின் தயாரிப்பு? பெட்ரோல் வண்டியா? டீசல் வண்டியா?   கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் பாஜக அணிகளின் தலைவர்களை மாவட்ட தலைவர்கள் கண்காணிக்க வேண்டும் – அண்ணாமலை அவர்களின் பட்டியலை வைத்து கட்சியில் பதவி உயர்வு வழங்கி கவுரவிக்க உதவியாக இருக்கும், அதனால் தான்!   தீட்சிதர்கள் நடத்திய குழந்தை திருமண படங்கள் பத்திரிக்கைகளில் வெளிவந்த்துள்ளன                 – செய்தி அதனால் என்ன? அவர்கள் கைலாயத்தில் இருந்து சிவ பெருமானோடு வந்த பூ தேவர்கள். இந்தியாவின் சட்டங்கள் அவர்களுக்கு பொருந்தாது, சந்தேகம் என்றால் ஆளுநரைக் கேட்டுக் கொள்ளுங்கள்.  

தமிழ்நாட்டு “ஆவினை” குஜராத் அமுல் விழுங்க சதித் திட்டம்

தமிழ்நாட்டு “ஆவினை” குஜராத் அமுல் விழுங்க சதித் திட்டம்

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக ஆட்சி, தமிழ்நாட்டில் சிறப்பாக செயல்பட்டுவரும் ஆவின் பால் நிறுவனத்தை சீர்குலைத்து – குஜராத் “அமுல்” பாலை விற்க சதித்திட்டம் தீட்டிவருகிறது. தமிழக முதல்வர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியிருக்கிறார்.   ஆவினில் தயிர் பெயரை ‘தஹி’ என்று மாற்றுவதற்கு ‘நஹி’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்ததால், புதிய வழியில் குஜராத்தின் அமுல் நிறுவனம் மூலம் தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து பாலை கொள்முதல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேநேரத்தில், கர்நாடகாவை தொடர்ந்து தமிழகத்திலும் அமுல் பால் (தூத்) தொழில் தொடங்க கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்தநிலை நீடித்தால் கிராம பொருளாதாரம் முற்றிலும் அழிந்துவிடும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஊரக பால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டும் அவர்களின் பொருளாதார மேம்பாட்டிற்காகவும், மாநிலத்தில் உள்ள நுகர்வோர்களுக்கு சரியான விலையில் தரம் மற்றும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட பால் மற்றும் பால்...

இணையதளப் பொறுப்பாளர் விஜய்குமார் –  புதிய இல்லம் : கழகத் தலைவர் திறந்து வைத்தார்

இணையதளப் பொறுப்பாளர் விஜய்குமார் – புதிய இல்லம் : கழகத் தலைவர் திறந்து வைத்தார்

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜய் குமாரின்  கண்மணி இல்லத்தைக்  கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழகக் கொடி யேற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சட்டக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் கனக விநாயகம், ஸ்டாலின், சிபி.எம்.எல். மாவட்டக் குழு உறுப்பினர் தினேஷ்குமார், அருண், சூழலியலாளர் முனைவர் உதயகுமார், பெரியார் விழுது இளம்பரிதி உள்ளிட்ட பல்வேறு தோழர்கள் கலந்துகொண்டனர். மற்றும் விஜயகுமார், கழக வார ஏடான “புரட்சிப் பெரியார் முழக்கம்” வளர்ச்சி நிதியாக ரூ.5000 மற்றும் சென்னை மாவட்டக் கழக வளர்ச்சி நிதியாக ரூ.5000  வழங்கினார். தோழர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது பெரியார் முழக்கம் 30032023 இதழ்

ராகுலை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை ஆதரிப்பது ஏன்?

ராகுலை எதிர்ப்பவர்கள் மனுதர்மத்தை ஆதரிப்பது ஏன்?

சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருக்கிறது. 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது கோலாரில் பிரச்சாரம் செய்த ராகுல் காந்தி அனைத்து திருடர்களும் மோடி என்ற ஒரு குடும்பப் பெயர் வைத்துள்ளனர் என்று போகிற போக்கில் ஒரு கருத்தைக் கூறினார். இதை எதிர்த்து பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் வழக்குத் தொடர்ந்தார். அந்த விசாரணை முடிந்த நிலையில் அவரை குற்றவாளி என்று அறிவித்த நீதிமன்றம் இரண்டு ஆண்டு சிறை தண்டனையையும் விதித்துள்ளது. ஒட்டுமொத்த மோடி சமூகத்தையும் அவமதித்து விட்டார் என்று இந்த தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. மனுதர்மம் இன்றைக்கும் பார்ப்பனரல்லாத மக்களை சூத்திரர் என்று கூறுகிறது. சூத்திரர்கள் என்று சொன்னால் பார்ப்பனர்களுக்கு வைப்பாட்டி மக்கள், விலைக்கு வாங்கப்பட்டவர்கள், அடிமை சேவகம் செய்பவர்கள் என்றெல்லாம் மனுதர்மம் எழுதி வைத்திருக்கிறது. அது தடை செய்யப்படவில்லை. ஒட்டு மொத்த பார்ப்பனரல்லாத மக்களும் பெண்களும் சூத்திரர் என்ற இழிவுக்கு இப்போதும் உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அதற்குப் பாதுகாப்பு...

மோடி – ஜாதிப் பெயர் அல்ல

மோடி – ஜாதிப் பெயர் அல்ல

அதானியைக் காப்பாற்றுவதற்காக நாடாளுமன்றத்திற்குள்ளேயே வரவிடாமல் ராகுல் காந்தியை தடுத்துவிட்டது ஒன்றிய ஆட்சி. ஆனால் இப்போது மோடி என்ற பிற்படுத்தப்பட்ட சமூகத்தை ராகுல் காந்தி இழிவு செய்து விட்டார் என்று ஒரு பொய்யான பிரச்சாரத்தை பாஜக தலைவர்கள் கட்டவிழ்த்துவிட்டு இருக்கிறார்கள். இந்தப் பிரச்சாரத்தில் உண்மை இருக்கிறதா? ராகுல் காந்தி குறிப்பிட்ட நீரவ் மோடி, லலித் மோடி, மெகுல் சோக்ஸி ஆகிய மூவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் அல்ல. அவர்கள் முன்னேறிய ஜாதியினர். மோடி என்பதும் கூட ஒரு ஜாதி இல்லை. பெயருக்குப் பின்னால் மோடி என்று போட்டுக் கொள்வது ஒரு மரபு பெயர். அது ஜாதிப் பெயரல்ல. பிலு மோடி என்று நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் இருந்தார். அவர் பார்சி சமூகத்தைச் சேர்ந்தவர். அதேபோல் பாகல் என்று சொல்லப்படுகிற ஒரு மரபுப் பெயர் பலராலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநில முதலமைச்சராக இருக்கிற பூபேஷ் பாகல் ஒரு பிற்படுத்தப்பட்ட...

வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி பேச்சு நாதசுவரக் கலைஞர், தோளில் துண்டு போடுவதையே எதிர்த்தது சனாதனம்

வரலாற்று நிகழ்வை சுட்டிக்காட்டி கொளத்தூர் மணி பேச்சு நாதசுவரக் கலைஞர், தோளில் துண்டு போடுவதையே எதிர்த்தது சனாதனம்

இளைஞர்கள் கணவனை இழந்த பெண்களையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று 1930இல் தீர்மானம் போட்டவர் பெரியார். ¨        சிறுபான்மைப் பண்பாடு பார்ப்பனர் களுக்கானது; சிறுபான்மை மதம் முஸ்லீம், கிறிஸ்தவர்களுக்கானது என்று பெரியார் விளக்கினார். ¨        மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் திராவிடர்கள் என்று பதிவு செய்யக் கோரியது – நீதிக்கட்சி மாநாடு. பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) ஒரு திருமண ஊர்வலத்தின் போது நாதஸ்வரம் வாசித்துக் கொண்டு செல்கிறார்கள். ஒரு பெரிய புகழ்பெற்ற இசை கலைஞர். அஞ்சாநெஞ்சன் அழகிரி அவர்கள் இசையில் ஆர்வம் உடையவர். அந்த இசையை கேட்க சென்று விட்டார். அந்த நாதஸ்வரக் கலைஞர் அங்க வஸ்திரத்தை இடுப்பில் கட்டி இருக்கிறார். வியர்வையைத் துடைப்பதற்கு தோளில் போட்டிருந்தார்....

குழந்தைகள் பழகு முகாம்: ஒரு வேண்டுகோள்!

குழந்தைகள் பழகு முகாம்: ஒரு வேண்டுகோள்!

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் 2023 மே மாதம் 5 நாட்கள் நடைபெற உள்ளது. 10 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். இடம், நேரம், கட்டணம் பின்னர் அறிவிக்கப்படும். பதிவு செய்து கொள்ள விரும்பும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் சிவகாமி  : 9842448175 சிவகுமார் :  96888 56151 பெரியார் முழக்கம் 30032023 இதழ்

மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சகப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு பட்டை நாமம்!

மத்திய அமைச்சரவையில் அமைச்சக துறைகள் – 42. இதில் தலைமை நிர்வாகம் (ஏ பிரிவு) கண்காணிப்பு (பிரிவு பி) திறன் மிக்க தொழிலாளர்கள் (Workers Skilled – பிரிவு சி) திறன் பெறாத தொழிலாளர்கள் (Workers Unskilled). இவர்களில், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை – 22.62 சதவீதம் மட்டுமே. பட்டியல் பிரிவினர் – 17.38 சதவீதமே. பழங்குடிப் பிரிவினர் – 10.18 சதவீதமே. 5 மத்திய அமைச்சகங்களில் ‘ஏ’ பிரிவில் ஒரு பிற்படுத்தப்பட் டோர்கூட இல்லை – 0. 7 அமைச்சகங்களில் ‘பி’ பிரிவு அதிகாரிகளில் ஒரு பிற்படுத்தப்பட்டோர்கூட இல்லை – 0. (இது 31.3.2022 நிலவரம்) ஆதாரம் :      Department of Public Center Prises Survey  – 2021. 22 தகவல் :        ஜி. கருணாநிதி (செயலர் – அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் சம்மேளனம்) பிற்படுத்தப்பட்டோருக்காக போலிக் கண்ணீர் வடிக்கும் பா.ஜ.க. சங்கிகளே – இதற்கு என்ன...

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

ஆர்.எஸ். பாரதிக்கு பதிலடி ‘ராசி’ மீது எனக்கு நம்பிக்கை இல்லை – உதயநிதி ஸ்டாலின்

காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “எனக்கு ராசி மீது நம்பிக்கை இல்லை; உழைப்பின் மீது தான் நம்பிக்கை” என்று கூறினார். முன்னதாகப் பேசிய தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, “2019ஆம் ஆண்டிலிருந்து கடந்த 5 தேர்தல்களாக நான் பிரச்சாரம் செய்யும் இடங்களில் எல்லாம் வெற்றி கிடைத்து வருகிறது. அதற்கான ‘ராசி’ என்னிடம் இருக்கிறது” என்றார். இதற்கு பதிலளித்துப் பேசிய அமைச்சர் உதயநிதி, “எனக்கு ராசி மீதெல்லாம் நம்பிக்கை கிடையாது. அண்ணன் ஆர்.எஸ். பாரதிக்கு நம்பிக்கை இருக்கும் என்றால் அதை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன். வெற்றிகளுக்கு எல்லாம் காரணம் தலைவர், கழகப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பு; ராசி அல்ல” என்று மேடையில் பதிலடி தந்தார் உதயநிதி. பெரியார் முழக்கம் 30032023 இதழ்

“இது தமிழ்நாடு”  சனாதனத்துக்கு சாவுமணி அடிக்கும் பெண்ணுரிமைத் திட்டங்கள்

“இது தமிழ்நாடு” சனாதனத்துக்கு சாவுமணி அடிக்கும் பெண்ணுரிமைத் திட்டங்கள்

உலகப் பொருளாதார மன்றத்தின் பாலினச் சமத்துவ இடைவெளியைக் குறைக்கும் 2022ஆம் ஆண்டறிக்கை பெண்களின் பொருளாதாரம், கல்வி, உடல் நலம் மற்றும் அரசியல் பங்கேற்புக் குறித்து ஆராய்கிறது. 145 நாடுகள் தர வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. இதில் இந்தியாவின் இடம் 136. பொருளாதாரப் பங்கேற்பில் 143ஆவது இடத்தில் கடைசியிலிருந்து மூன்று இடங்களுக்கு மேலே இருக்கிறது. பெண்கள் உடல்நலன் பேணுவதில் பெண்களுக்கு கடைசி இடம். இதுதான் சனாதனம் – மதவாதம் பேசும் பா.ஜ.க. ஆட்சியின் “சாதனை”. திராவிட ஆட்சி நடத்தும் தமிழ்நாட்டில் மட்டும் நிலைமை முற்றிலும் வேறு. தேசிய அளவிலான மெக்கன்சே ஆய்வு (2015), பாலினச் சமத்துவத்தைப் பேணுவதில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாட்டையும், கேரளாவையும் குறிப்பிடுகிறது. 32 சதவீதப் பெண்கள் தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்கின்றனர். இது அகில இந்திய சராசரியைவிட இரண்டு மடங்கு அதிகம் – இதுதான் திராவிட மாடல். உயர்கல்வியில் பெண்கள் சேர்க்கை வீதம் 49 சதவீதம். அகில இந்திய அளவில் இது 25 சதவீதம்...

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

சென்னையில் இணையதளப் பிரிவு கருத்தரங்கம்

கழகத்தின் இணையதளப் பிரிவு கருத்தரங்கம் சென்னை மாவட்ட இணையதளப் பிரிவு பொறுப்பாளர் இரண்யா தலைமையில் 26.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டுச் செய்திகளை முன்னெடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. யூடியூபில் செயல்பட வேண்டிய அவசியம், யூடியூப் சேனல்களைத் தொடங்கி இயக்குவது குறித்த அடிப்படையான தகவல்கள், சமூக வலைத்தளமான டிவிட்டரில் செயல்பாடுகளை தீவிரப்படுத்துதல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து கருத்தரங்கில் பேசப்பட்டது. பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., நாம் தமிழர் உள்ளிட்ட அமைப்புகள், கட்சிகளால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் அவதூறுகளை முறியடிக்க, தோழர்கள் சமூக வலைதளங்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாம் என்பது குறித்து சில முன்னணி யூடியூபர்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர். இறுதியாக திருப்பூர் மகிழவன் நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 30032023 இதழ்

மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்

மாநில மாநாடு: களப்பணியில் பம்பரமாய் சுழலும் தோழர்கள்

உதயநிதியுடன் சந்திப்பு : அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைவர் கடந்த மார்ச் 26 மாலை சென்னை அன்பகத்தில் சந்தித்து, மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்தார். கட்டாயம் வருவேன் என்று அமைச்சர் உறுதியளித்தார். தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உடன் சென்றிருந்தனர். மாநாட்டுக்கான இரண்டு நாள் நிகழ்ச்சிகள் உறுதி செய்யப்பட்டுவிட்டன. கழகத் தலைவர், பொதுச் செயலாளர், தலைமைக் கழகச் செயலாளர், சென்னை மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட தோழர்கள் கடந்த மூன்று நாள்களாக அமர்ந்து கலந்து பேசி நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. பேச்சாளர்களிடம் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. மாநாட்டுத் தீர்மானங்கள் – மாநாட்டில் எடுக்கும் உறுதி மொழிகளை கழகத் தலைவர், பொதுச் செயலாளர் கலந்து பேசி இறுதி வடிவம் கொடுத்து வருகின்றனர். ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகே தோழர்கள் சுவரெழுத்து எழுதிக் கொண்டிருந்த போது முன்னாள் நகர கூட்டுறவு வங்கி இயக்குநரும், அ.இ.அ.தி.மு.க. பிரமுகருமான...

குக்கிராமங்களிலும் பேராதரவு

குக்கிராமங்களிலும் பேராதரவு

சின்னஞ்சிறு கிராமங்களிலும் மாநாட்டுக்கு மக்களிடம் பேராதரவு காணப்படுகிறது. கொளத்தூர் அருகே உள்ள உக்கம் பருத்திக்காடு எனும் கிராமத்தில் கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்திய வசூலில் மக்கள் அளித்த தொகை 1 இலட்சத்து 500 ரூபாய். தாரமங்கலத்தில் 21ஆம் தேதி மக்கள் அளித்த நன்கொடை ரூ.52,100/- பெரியார் முழக்கம் 23032023 இதழ்

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 8.3.2023 புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகளிர் தின விழா திருப்பூர் அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் கொண்டாடப்பட்டது. நிகழ்விற்கு சுசிலா அவர்கள் தலைமை ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். நஜ்முன்னிசா வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தோழர்கள் சங்கீதா, வீரலட்சுமி, ஷோபனா ராணி, சகுந்தலா, காயத்ரி ஆகியோர் “பெண்களின் உரிமைகள் பற்றியும் பெரியாரின் பெண் விடுதலை கொள்கைகள்” பற்றியும் கருத்துரை யாற்றினர். நிறைவாக சங்கவி நன்றியுரை ஆற்றினார். நிகழ்வில் முத்துலட்சுமி, கௌசல்யா, மனிஷா, திவ்யா, ரூபா, விஜி, காளியம்மாள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, வெற்றிமாறன், வெற்றிகொண்டான், ரித்திசாய், ஃபெர்லின் சோபியா, ஷெர்லின் மரியா, மெர்சி, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.இரவு உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 23032023...

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் ‘பறிபோகும் மாநில உரிமைகள்’ விளக்கப் பொதுக்கூட்டம்

11-03-2023 அன்று மாவட்ட தலைவர் மதியழகன் தலைமையில் நைனார்பாளையத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது . கழக பரப்புரைச் செயலாளர் தூத்துகுடி பால்.பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார் ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள் விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூஆ.இளையரசன். கடலூர் மாவட்டத் தலைவர் மதன்குமார், கடலூர் மாவட்டச் செயலாளர் சிவக்குமார். கள்ளக்குறிச்சி மாவட்டச் செயலாளர் இராமர், மாவட்ட அமைப்பாளர் சாமிதுரை, மாவட்டத் துணைச் செயலாளர் வெற்றிவேல், நைனார்பாளையம் நடராஜ், பெரியார் வெங்கட், அசி.சின்னப்பா, தமிழர் பாவலர் கீர்த்தி, பெரியார் பிஞ்சு பாடகர் திராவிட மகிழன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டும் கருத்துரையாற்றியும் சிறப்பித்தார்கள். தோழர்களும் பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டு பேசப்பட்ட கருத்துகளை ஆர்வமுடன் கேட்டார்கள். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்!

மாநாடு தொடர்பாக சுவரெழுத்து, வசூல் பணிகள், மக்கள் காட்டும் ஆதரவு, அது தொடர்பான அமைப்புகளின் செயல்பாடுகளை உடனுக்குடன் கீழ்க்கண்ட எண்களுக்கு பகிரி (றுhயவளயயீயீ) வழியாக அனுப்பி வைக்க வேண்டுகிறோம். பரிமளராசன் – 78719 62024 விஷ்ணு – 89733 41377 பெரியார் முழக்கம் 23032023 இதழ்

மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மார்ட்டின் இல்ல மண விழா: கழக ஏட்டுக்கு நன்கொடை

மேட்டூர் கழகப் பொறுப்பாளர் மார்ட்டின் விஜயலட்சுமி இணையரின் மகள் அன்புக்கரசி – ஹமீது ஆகியோரின் ஜாதி – மத மறுப்பு மணவிழா மார்ச் 12, 2023 அன்று கள்ளக்குறிச்சியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப்பட் டுள்ளது. நன்றியுடன் பெற்றுக் கொண்டோம். பெரியார் முழக்கம் 23032023 இதழ்

நீதித் துறையில் சனாதனம்

நீதித் துறையில் சனாதனம்

112 ஆண்டுகால சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பட்டியல் இனத்தவர்கூட நீதிபதியாக வர முடியவில்லையே என்று கேட்டார் பெரியார். கலைஞர் ஆட்சி நடந்தது; வரதராசன் என்ற தலித் – தலைமை நீதிபதி யானார். பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார். இப்போது நீதித்துறையில் நிலை என்ன? ட           நீதித் துறையில் இடஒதுக்கீடுகள் இல்லை; கே.ஆர். நாராயணன், குடியரசுத் தலைவராக இருக்கும்போது மட்டும் இதற்காகக் குரல் கொடுத்தார். அது வெற்றி பெறவில்லை. தற்போது உச்சநீதி மன்றத்தில் தலித் நீதிபதிகள் 2 பேர் மட்டுமே. ட           மோடி ஆட்சி பரிந்துரைக்கும் நீதிபதிகளில் ஆர்.எஸ்.எஸ். உணர் வுள்ளவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பில் இருந்த ஒருவர் நீதிபதியாக்கப் பட்டுள்ளார். அவர் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாக்கி தனது முகநூலில் பதிவிட்டவர். ட           உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி, 1989இல் தேர்வு செய்யப்பட்டார். இது வரை உச்சநீதிமன்றத்தில்...

அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி.களில் ‘சனாதனம்’

அய்.அய்.டி., அய்.அய்.அய்.எம். பார்ப்பன கூடாரங்களாகி விட்டன. அங்கே சமஸ்கிருதம் வேதம் கற்பிக்கப்படுகிறது. அம்பேத்கர், பெரியார் படிப்பு வட்டம் தடை செய்யப்படுகிறது. பார்ப்பன வேத பிரச்சாரங்கள், உபதேசம் செய்கிறார்கள். மாட்டிறைச்சி சாப்பிட்டால் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். சைவம், அசைவம் என்று உணவுக் கூடத்தில் பாகுபாடு. தலித் மாணவர்கள், பேராசிரியர்களாக இருக்கும் பார்ப்பனர்கள் தரும் இடையூறுகள் அவமதிப்புகளால் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ட மும்பை அய்.அய்.டி.யைச் சார்ந்த தலித் மாணவர் தர்ஷன் சோலங்கி விடுதியின் 7ஆவது மாடியிலிருந்து குதித்து அண்மையில் தற்கொலை செய்து கொண்டார். 2014இல் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு என்ன நிலை? ட 2014 முதல் 2021 வரை அய்.அய்.டி., அய்.அய்.எம். மத்திய பல்கலைக் கழகங்களில் 122 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மக்களவையில் இது அரசு தாக்கல் செய்த அறிக்கையில் ஒப்புக் கொள்ளப்பட்ட தகவல். 122 பேரில் 24 மாணவர்கள் பட்டியல் இனப் பிரிவினர். 41 பேர் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்....

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டிலேயே பெரியார் பட்டம் வந்து விட்டது!

பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) நம்முடைய நாட்டின் முன்னேற்றத்திற்கு தொழிலாளர்களின் முன்னேற்றமும் அவசியமான படியால் அவரவர்களின் வேலைக்குத் தகுந்தபடியும் அவர்கள் சுகமாக வாழ்வதற்கு வேண்டிய அளவு கூலி கொடுப்பதோடு ஒவ்வொரு தொழிலும் கிடைக்கும் இலாபத்தில் அந்தந்த தொழிலில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது. இது மாநாட்டுத் தீர்மானம். இதை கடைசி வரைக்கும் பெரியார் வலி யுறுத்தி வந்தார். “நீங்கள் பணம் போட்டால் நான் என் உழைப்பைப் போடுகிறேன். நாம் இரண்டு பேரும் பங்காளிகள் என்று எப்போதாவது கம்யூனிஸ்டுகள் சொல்லி யிருக்கிறீர்களா” என்று பெரியார் கேட்டார். “அவர்களுக்கு இலாபத்தில் வரும் பங்கை பிரித்துக் கொடு” என்றார். பெரியாருக்கு பெரியார் என்று யார்...

புள்ளி விவரங்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!

புள்ளி விவரங்கள் கூறும் அதிர்ச்சித் தகவல் தேசிய மய வங்கிகளின் மேலாளர் பதவிகளில் 92 சதவீதம் பார்ப்பன உயர்ஜாதியினரே!

இந்தியாவில் பொதுத்துறை வங்கிகளின் உயர் பதவிகளில் ஆதிக்கம் செலுத்துபவர்களாக இப்போதும் பார்ப்பனர்களும் ,மேல் சாதியினருமே, இருந்து கொண்டிருக்கிறார்கள். இந்த புள்ளி விவரங்கள் மிகவும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றன. அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கோ. கருணாநிதி. இந்திய வங்கிகளின் உயர்நிலைப் பதவிகளில் இருப்போர் சமூக ரீதியாக எந்தெந்தப் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலை கேட்டு பெற்று இருக்கிறார். அந்த தகவல்களின்படி தலைமை பொது மேலாளர், பொது மேலாளர் ஆகிய பதவிகளில் இருப்பவர்களில் 88ரூ முதல் 92ரூ வரை பார்ப்பன, உயர் சாதியைச் சேர்ந்தவர்கள். அதாவது பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள். பொதுப் பிரிவைச் சார்ந்தவர்கள் என்றாலே அதில் பார்ப்பனர்களும், உயர் சாதிக்காரர்களும்தான் இருப்பார்கள். தமிழ்நாடு மட்டும் இதற்கு விதிவிலக்காகக் கூற முடியும். இந்தப் பிரிவில் ஓரளவு பிற்படுத்தப்பட் டோரும், தாழ்த்தப்பட்டோரும் வருகிறார்கள். ஏனைய மாநிலங்கள் அனைத்திலும் பொது போட்டி என்று சொல்லப்படுகிற பொதுப்பிரிவு உயர் சாதியினருக்காகவே தாரை வார்க்கப்பட்டு...