திருப்பூரில் மகளிர் தின விழா

திருப்பூர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 8.3.2023 புதன்கிழமை மாலை 6 மணியளவில் மகளிர் தின விழா திருப்பூர் அம்மாபாளையம் பெரியார் படிப்பகத்தில் கொண்டாடப்பட்டது.

நிகழ்விற்கு சுசிலா அவர்கள் தலைமை ஏற்று பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி முன்னிலை வகித்தார். நஜ்முன்னிசா வரவேற்புரையாற்றினார்.

தொடர்ந்து தோழர்கள் சங்கீதா, வீரலட்சுமி, ஷோபனா ராணி, சகுந்தலா, காயத்ரி ஆகியோர் “பெண்களின் உரிமைகள் பற்றியும் பெரியாரின் பெண் விடுதலை கொள்கைகள்” பற்றியும் கருத்துரை யாற்றினர். நிறைவாக சங்கவி நன்றியுரை ஆற்றினார்.

நிகழ்வில் முத்துலட்சுமி, கௌசல்யா, மனிஷா, திவ்யா, ரூபா, விஜி, காளியம்மாள் மற்றும் பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, வெற்றிமாறன், வெற்றிகொண்டான், ரித்திசாய், ஃபெர்லின் சோபியா, ஷெர்லின் மரியா, மெர்சி, தழல் சிறகன், இயல் ஆழியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கேக் வெட்டப்பட்டது.இரவு உணவாக மாட்டுக் கறி வழங்கப்பட்டது.

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...