Category: பெரியார் முழக்கம் 2021

மதுரை மாவட்ட கழகம் சார்பில் மாவீரர் நாள்

மதுரை மாவட்ட கழகம் சார்பில் மாவீரர் நாள்

மதுரை மாவட்ட திவிக சார்பில் மாவீரர் நாள் நிகழ்வு பத்திரிக்கையாளர் அரங்கில் 27.11.2021 அன்று மாலை 6 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்விற்கு மாநகர் தலைவர் திலீபன் செந்தில் தலைமை தாங்கினார். மாவட்ட கழகக் காப்பாளர் தளபதி மற்றும் மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தனர். வேலு ஆசான் பறை இசை குழுவினரின் பறையாட்டத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கழக அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, விடுதலைச் சிறுத்தைகள் மாநில துணை பொது செயலாளர் வெ.கனியமுதன், தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர் மீ.த.பாண்டியன் ஆகியோர் – மாவீரர் சுடரேற்றி மாவீரர் உரை நிகழ்த்தினர். ஈழப் போராட்டத்தில் பெரியார் இயக்கத்தின் பங்கை மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி எடுத்துரைத்தார். மதிமுக, தமிழ் புலிகள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மே 17 இயக்கம், விடுதலை சிறுத்தைகள், மக்கள் பாதை, தமுமுக உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட தோழமை அமைப்பு மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் – முதல்வர் கைது கோரி போராட்டம் : கழகம் பங்கேற்பு

சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் – முதல்வர் கைது கோரி போராட்டம் : கழகம் பங்கேற்பு

கோவை கோட்டைமேடு சின்மயா வித்யாலயா பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனிடமும் இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல், மாணவிக்கு மனநல ஆலோசனைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வரையும் கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆசிரியரையும் முதல்வரையும் கைது செய்யக் கோரி பள்ளி முன்பு பல்வேறு முற்போக்கு இயக்கங்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகே ஆசிரியரும், முதல்வரும் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் போராடிய அமைப்பினரிடம் நேரடியாக வந்து குடும்பத்துக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  என்று உறுதியளித்துள்ளார். போராட்டத்தில் கோவை தி.வி.க. தோழர்களும் தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் சந்தோஷ் உள்ளிட்ட தோழர்களும், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள், எஸ்.டி.பி.அய். உள்ளிட்ட அமைப்பினரும்...

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளி யீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல் முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார். நூலைப் பெற : 9566331195 / 7373684049 பெரியார் முழக்கம் 02122021 இதழ்

தலையங்கம் அய்.அய்.டி.களில் தொடரும் ‘மனு தர்மம்’

தலையங்கம் அய்.அய்.டி.களில் தொடரும் ‘மனு தர்மம்’

நாட்டின் உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனமான ‘அய்.அய்.டி.’கள், பார்ப்பன ஆதிக்கத்தில் சிக்கி, ‘மனு தர்மத்தை’ அறிவிக்கப்படாத சட்டமாக பின்பற்றி வருகிறது. கடும் போராட்டத்துக்குப் பிறகு மாணவர், ஆசிரியர் தேர்வுகளில் 27 சதவீதம், 22.5 சதவீதம் இடஒதுக்கீட்டைப் பின்பற்ற சட்டம் இயற்றிய பிறகும், பார்ப்பன நிர்வாகம் இடஒதுக்கீட்டை முழுமையாகப் பின்பற்றாததோடு, நிறுவனம் நடத்தும் ‘தகுதி’க்கான தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அற்பக் காரணங்களுக்காக படிப்பைத் தொடர விடாமல் தடுத்து விடுகிறது. 1996 முதல் 2000 வரை சென்னை அய்.அய்.டி.யின் பார்ப்பன மேலாதிக்கத்தை எதிர்த்து பெரியார் திராவிடர் கழகம் தொடர் போராட்டங்களை நடத்தி, அங்கே நடக்கும் ‘பாகுபாடு’களை  பார்ப்பனி யத்தை பொது வெளிக்கு வெளிச்சப்படுத்தியது. கடந்த நவம்பர் 24, 2021 அன்று உச்சநீதிமன்றம் அய்.அய்.டி.களில் இடஒதுக்கீட்டைப் பின்பற்றப் படாததை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு பொது நல வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ளது. குறிப்பாக ஆய்வுப் படிப்புகளில் பட்டியல் இனப் பழங்குடி மாணவர் களுக்கான ஒதுக்கீடுகள் மறுக்கப்படுகின்றன....

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட் டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சி யளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து...

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

சட்ட எரிப்புப் போராட்டம் நடத்திய நவம்பர் 26இல் தோழர்கள் – ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்பு

1957 நவம்பர் 26ஆம் நாள் அரசியல் சட்டத்தை அரசியல் நிர்ணயசபை ஏற்ற நாளாகும். அதே சட்டம் மதத்தை அடிப்படை உரிமையாக்கி, அதன் வழியாக ஜாதி இழிவுகளைக் காப்பாற்றுவதற்குப் பாதுகாப்பான பிரிவுகளை உள்ளடக்கியிருந்தது. ஜாதி ஒழிப்புக்குத் தடையாக இருந்த சட்டத்தின் உட்பிரிவுகளான 13(2), 25(1), 26(1), 26(2) மற்றும் 368 பிரிவுகளை தீயிட்டுக் கொளுத்தும் போராட்டத்துக்கு பெரியார் ‘நவம்பர் 27’அய் தான் தேர்வு செய்தார். ஒரு நாட்டின் அரசியல் சட்டப் பிரிவுகளையே 10,000 பேர் தீயிட்டுக் கொளுத்திய போராட்ட வரலாறு பெரியார் இயக்கத் துக்கு மட்டுமே உண்டு. சரியாக போராட்டத்திற்கு 24 நாட்களுக்கு முன் தஞ்சையில் நடந்த சிறப்பு மாநாட் டில் போராட்ட அறிவிப்பை பெரியார் அறிவித்தார். 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை தோழர்கள் தண்டிக் கப்பட்டனர். தோழர்கள் எவரும் எதிர் வழக்காட வில்லை. ‘சட்டத்தை எரித்தேன்; தண்டனை ஏற்கத் தயாராக உள்ளேன்’ என்று நீதிமன்றத்தில் வாக்கு மூலம் தந்தனர்....

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். 01.12.2021 புதன்கிழமை : காலை 10.00 மணி: தர்மபுரி மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கிருட்டிணகிரி இரவு தங்கல் 02.12.2021 வியாழக்கிழமை : காலை 10.00 மணி வேலூர் மாவட்டம் மதிய உணவு மணல் 06.00 மணி: சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்.) 03.12.2021 – வெள்ளிக்கிழமை : காலை 10.00 மணி: விழுப்புரம் மாவட்டம். மூன்றாம் கட்ட பயணம் நிறைவு. நான்காம் கட்ட பயண விபரம். 12.12.2021 – ஞாயிறு : காலை 10.00 மணி ஈரோடு தெற்கு மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கரூர் மாவட்டம் தூத்துக்குடி. திருநெல்வேலி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் பெரியார் முழக்கம் 25112021...

ஜெய் பீம் – பலருக்கும் துயரம், சிலருக்கோ சிரிப்பு

ஜெய் பீம் – பலருக்கும் துயரம், சிலருக்கோ சிரிப்பு

ஜெய் பீம் சர்ச்சைகள் குறித்து ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேட்டில் (21.11.2021) தொடர்ந்து எழுதி வரும் அருண் ராம், எழுதியுள்ள கட்டுரையின் சுருக்கமான கருத்துக்கள். பார்வையாளர்களின் எண்ணிக்கையில் இதுவரை ரேட்டிங்கில்  (ஐஆனுb) முதல் நிலையில் இருந்த ‘தி ஷாவ்ஷங்க் ரிடம்சன்’ (கூhந ளுhயறளாயமே சுநனநஅயீவiடிn) மற்றும்  ‘தி காட்பாதர்’ (கூhந ழுடினகயவாநச) படங்களை பின்னுக்குத் தள்ளிவிட்டு ரேட்டிங்கில் முதலிடத்திற்கு வந்திருக்கிறது ‘ஜெய் பீம்’ திரைப்படம். பார்வையாளர்களின் ஒருமித்த உணர்வுகளை படம் பிரதிபலிப்பதே இந்த வெற்றிக்கான காரணம். கரங்களை கட்டிக்கொண்டு இந்தப் படங்களை பார்க்க முடியாது. கரங்களை நெஞ்சில் தொட வைக்கும் படம் இது. கணவனை கொலை செய்தவர்களிடம், ‘அதற்கு ஈடாக பணத்தை வாங்கிக் கொண்டால் என் வயிற்றில் வளரும் குழந்தைக்கு என் அப்பா யார் என்று கேட்டால், அதற்கு நீங்கள் தரும் பணம் பதில் சொல்லுமா?’ என்று கேட்கிறார் செங்கேனி. இதை நான் எழுதுவது ஒரு திரைப்பட விமர்சனமாக அல்ல....

சூர்யாவுக்கு மிரட்டல் : பா.ம.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி சென்னை, மதுரையில் கழக சார்பில் மனு

சூர்யாவுக்கு மிரட்டல் : பா.ம.க. பிரமுகர் மீது நடவடிக்கை கோரி சென்னை, மதுரையில் கழக சார்பில் மனு

ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவுக்கு எதிராக வன்முறை மிரட்டல் விடுத்த பா.ம.க. – மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை, மதுரையில் கழகத் தோழர்கள் காவல்துறையில் மனு அளித்தனர். சென்னையில் : ஜாதியை பிரதானமாக வைத்தே இயங்கும் பாமக தரப்பில் அதிக மிரட்டல்கள் ‘ஜெய்பீம்’ படத் தயாரிப்பாளர் நடிகர் சூர்யாவிற்கு வந்து கொண்டே உள்ளன. குறிப்பாக பாமக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி, “நடிகர் சூர்யா அவர்களை எட்டி உதைக்கும் இளைஞருக்கு ஒரு இலட்சம் தருவதாகவும், சூர்யா தரை வழியாக எங்கும் பயணம் செய்யமுடியாது, வான் வழியாக தான் செல்ல முடியும்” என்றும் மிரட்டியுள்ளார். சமூக பதட்டத்தையும், வன்முறையையும் , ஜாதிய மோதலையும், இளைஞர்கள் மத்தியில் ஜாதிய வன்மத்தை விதைக்கும் வகையிலும், திட்டமிட்டு உள் நோக்கத்துடன் பேசியுள்ளார். இதற்கான, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி...

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

கோவை மாவட்டக் கழக முடிவுகள்

1. 11. 2021 இரவு 8 மணி அளவில் கோவை மாவட்ட மாநகர பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் ஊடிகேநசநnஉந உயடட மூலம் நடைபெற்றது. இந்த கலந்துரை யாடல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்: 2. 1957 நவம்பர் 26இல் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை கொளுத்திய போராளிகளின் நினைவை போற்றும் வகையில் வண்ண சுவரொட்டி அடித்து கோவை மாவட்டம் முழுதும் பரவலாக ஒட்டுதல். 3. நவம்பர் 26 2021 அன்று கோவை மாவட்ட கழகத் தோழர்கள் ஒன்றுகூடி ஜாதி ஒழிப்பு போராளிகளை நினைவு கூர்ந்து உறுதிமொழி ஏற்று வீர வணக்கம் செலுத்துவது. 4. வார ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் 250 சந்தாவை தோழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சேர்த்து அதற்கான தொகையையும் முகவரி பட்டியலையும் 2021 டிசம்பர் இறுதிக்குள் தலைமையிடம் ஒப்படைப்பது. பெரியார் முழக்கம் 25112021 இதழ்

திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

திராவிடர் கழக செயல்பாட்டாளர் ஈரோடு பிரகலாதன் நினைவேந்தல் நிகழ்வு கழக சார்பில் நடந்தது

மறைந்த திராவிடர் கழக ஈரோடு மண்டலத் தலைவர் பெரியார் தொண்டர் ப.பிர கலாதன் நினைவேந்தல் கூட்டம், 21.11.2021 அன்று மாலை 6:30 மணியளவில் ஈரோடு குருவரெட்டி யூர், தந்தை பெரியார் திடலில் நடைபெற்றது. ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் நாத்திகஜோதி கூட்டத்திற்கு தலைமை வகித்தார். கு.வேல் முருகன் (அம்மா பேட்டை ஒன்றிய செய லாளர்), காவை ஈஸ்வரன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), ப. ரத்தின சாமி (மாநில அமைப்பு செயலாளர்), சு. துரைசாமி (மாநில பொருளாளர்), ப. சத்தியமூர்த்தி (திராவிடர் கழகம்), வேணுகோபால் (மாவட்ட செயலாளர்), அரங்க-இராசகோபால் (வழக்குரைஞர்), சாமிநாதன் (நாமக்கல் மாவட்ட தலைவர்), பெரியநாயகம் (அம்மாபேட்டை பேரூர் கழக செயலாளர் திமுக.), வெ.கிருஷ்ணமூர்த்தி (வழக்குரைஞர்- பாமக), வேங்கை பொன்னுசாமி (தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர்), விஸ்வநாதன் (முன்னாள் ராணுவ வீரர் குருவை) ஆகியோர் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். கழக பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (17) ஆர்.டி.அய். சட்டத்தைக் குலைத்த ஒன்றிய ஆட்சி விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (17) ஆர்.டி.அய். சட்டத்தைக் குலைத்த ஒன்றிய ஆட்சி விடுதலை இராசேந்திரன்

மனித மலத்தை மனிதர் சுமக்கும் இழிவுக்கு முற்றுப் புள்ளி வைக்க ஒதுக்கிய நிதி – பாதியளவில் குறைப்பு. மோடி பட்டம் பெறவில்லை என்ற உண்மையை வெளி உலகிற்கு மறைக்க ஆர்.டி.அய். சட்டமே திருத்தப்பட்டது. உயர் கல்விக்கான நிதியும் குறைக்கப்பட்டது.   பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். தலித் மக்களின் வளர்ச்சிக்கான நிதியை படிப் படியாகக் குறைத்த மோடி ஆட்சி, மாணவர் கல்விக்கான உதவித் தொகையிலும் கை வைத்தது. தலித் மக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தது. பட்டியல் இனப் பிரிவு மேம்பாட்டுக்காகவும் நலனுக்காகவும் அவர்களுக்கான மக்கள் தொகை அடிப்படையில் ஒவ்வொரு துறை யிலும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சியில் நிதி ஒதுக்கீடு மிக மிகக் குறைவு என்பதையே புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. 22.5...

தொழிற்சங்கம் பற்றி ஒரு சிறுகதை !

தொழிற்சங்கம் பற்றி ஒரு சிறுகதை !

நான் ஒரு சிறுகதை கேள்விப்பட்டிருக்கின்றேன். ஒரு குளத்திலுள்ள தவளைகள் ஒன்று சேர்ந்து தங்களுக்கு ஒரு தலைவர் வேண்டும் என்று கடவுளைக் கேட்டதாகவும், கடவுளும், ஒரு மரக்கட்டையைத் தலைவராகக் கொடுத்ததாகவும், அம் மரக்கட்டை ஒன்றும் செய்யாமல் சும்மா இருந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளிடம் எங்களுக்குக் கொடுத்தத் தலைவர் உபயோகமில்லையென்றும் வேறு தலைவர் வேண்டுமென்று கேட்டதாகவும், கடவுள் ஒரு பாம்பைக் கொடுத்ததாகவும், அப்பாம்பு தினம் 10 தவளைகளைத் தின்று வந்ததாகவும், பிறகு தவளைகள் கடவுளை நோக்கி தங்களுக்குக் கொடுத்த தலைவரை எடுத்துக் கொள்ளும்படி வேண்டி, தங்களது காரியத்தை வேறொரு தலைவரில்லாமல் பார்த்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுபோல, உங்களிலேயே உங்களுக்குத் தலைவர்களும், காரிய தரிசியும், நிர்வாகிகளும், கிடைக்கவில்லையானால் கண்டிப்பாய் உங்களுக்கு சங்கம் வேண்டாம். ‘குடிஅரசு’  30.05.1926 பெரியார் முழக்கம் 25112021 இதழ்

வினா – விடை

வினா – விடை

வன்னியர்களை அவமதித்து படமெடுத்த சூர்யாவுக்கு 5 கோடி இழப்பீடு கேட்டு பா.ம.க நோட்டீஸ். – செய்தி பா.ம.க. நிறுத்திய வன்னியர் வேட்பாளர்களைத் தோற்கடித்து அவமானப்படுத்திய வாக்காளர் களுக்கும் நோட்டீஸ் அனுப்புங்க. அப்பதான் புத்தி வரும். இராம பக்தர்களுக்கான சிறப்பு இரயிலில் பணியாளர்கள் காவி உடை, உத்திராட்சை மாலை அணிவது எங்களை புண்படுத்துகிறது. – சாதுக்கள் எதிர்ப்பு அப்ப,  ‘அனுமான்’ வேடம் தான் போட வேண்டும். சைவ உணர்வாளர்களின் மனம் புண்படுவதால் மீன், இறைச்சியை வெளிப்படையாக உண்பதற்கு குஜராத்தில் அரசு தடை. – செய்தி இது அநியாயம் ! சிறுபான்மை சைவ இந்துக்களை அசைவத்துக்கு மாறச் சொல்லுங்க. பெரும்பான்மை தான் ‘இந்து’ க்களுக்கு முக்கியம். விவசாய சட்டங்களில் ‘ஒரு கமா, புள்ளி’ யைக் கூட மாற்ற மாட்டோம். – பாஜக அண்ணாமலை. சொன்னதை அப்படியே நிரூபிச்சுட்டீங்க… கமா, புள்ளியை மாற்றாமல் சட்டத்தையே ஓரங்கட்டிட்டீங்க… மும்மொழித் திட்டத்தை எதிர்க்கும் சூர்யா தனது படத்தை 5...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு கழகம் துணை நிற்கும்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை ஜாதிவெறி சக்திகளுக்கு எதிராக நடிகர் சூர்யாவுக்கு கழகம் துணை நிற்கும்

சூர்யாவுக்கு எதிராக ஜாதி வெறியை தூண்டி வன்னிய மக்களை அவருக்கு எதிராக நிறுத்த முயல்கிறார்கள் சனாதன சக்திகள். உண்மையில் இது பழங்குடியின மக்களின் வலிகளை சொல்லும் ஜெய் பீம் திரைப்படத்திற்கு ஆதரவாக நிற்கும் பெரியாரிய, அம்பேத்கரிய, மார்க்சிய முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு எதிராக வன்னிய மக்களை திருப்பிவிட வேண்டும் என்ற பூநூல்கள் பின்புலத்திலிருந்து இயக்கும் வேலை. இதில் அன்புமணியும் தன் சுய நல அரசியலை செய்கிறார். நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் மூலம் தங்கள் கட்சிக்கு பெரும்பான்மை வன்னிய சமுதாய மக்களின் ஆதரவு இல்லை என்கிற உண்மை நிலையால் எதையாவது செய்து தன்னை அரசியலில் முன்னிலைப்படுத்த முனையும் தந்திர முயற்சியே இது. தியேட்டரை கொளுத்துவேன் என்று சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் காடுவெட்டி குருவின் மருமகனுக்கு அக்னியில் பிறந்ததாக சொல்லப்படும் புராணக்கதை என்னவென்றுகூடத் தெரியவில்லை. புரட்சியாளர் அம்பேத்கர் சொல்லுவார் “ஜாதி என்பது ஒரு மனநோய்”. இவர்கள் மனநோயால் பிடிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை இயக்குவது பார்ப்பன...

தலையங்கம் அதிகார ஆணவத்தை தகர்த்தது, மக்கள் சக்தி

தலையங்கம் அதிகார ஆணவத்தை தகர்த்தது, மக்கள் சக்தி

விவசாயிகளின் சக்தி, அரசு அதிகாரத்தைப் பணிய வைத்துவிட்டது. ஓராண்டு காலமாக கொட்டும் பனியில் இரவு பகலாக அமைதி வழியில் போராடிய விவசாயி களின் கோரிக்கை மூன்று வேளாண் சட்டங்களை நீக்கம் செய்ய வேண்டும் என்பது தான். விவசாயம் – மனு சாஸ்திரத்தால் பிராமணர்களுக்கு தடை செய்யப்பட்ட சூத்திரர்களுக்கான தொழில். எனவே விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளை நுழைக்கத் துடிக்கிறது ‘இந்துத்துவா’ ஆட்சி. டெல்லியில் தொடங்கிய போராட்டம், பஞ்சாப், அரியானா, மேற்கு உத்திர பிரதேசம் என்று விரிவடைந்து நாடு தழுவிய போராட் டமாகி உலக அளவில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில் ஆணவத்தை வெளிச்சப்படுத்தியது என்றே கூறலாம். இந்த சட்டம் நல்ல சட்டம் என்றும், இதன் பயன்களை விவசாயிகளின் ஒரு பிரிவினருக்கு புரிய வைக்க முடியாத நிலையில் திரும்பப் பெறுவதாகவும் மோடி அறிவித்திருப்பது, விவசாயிகளை புரியும் திறனற்றவர்கள் என்று அவமதிப்பதாகும். ஆனாலும் விவசாயப் பொருள்களுக்கு குறைந்தபட்ச விலையை உறுதிப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்டு, விவசாயத்தோடு தொடர்புடைய மின்சார...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் சொல்கிறார் “பிராமணர்களும் பனியாக்களும் எங்களின் பாக்கெட்டில் உள்ளனர்!”

பாஜக பொதுச் செயலாளர் முரளிதர ராவ் சொல்கிறார் “பிராமணர்களும் பனியாக்களும் எங்களின் பாக்கெட்டில் உள்ளனர்!”

‘பிராமணர்’களும் பனியாக்களும் பாஜக-வின் பாக்கெட்டில் உள்ளனர் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் முரளிதர ராவ் கூறியுள்ளார்.  மத்திய பிரதேசத் தலைநகர் போபாலில் முரளிதர ராவ் செய்தியாளர்களுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். “பாஜக-வும் பாஜக ஆட்சிகளும் பழங்குடிகள், தாழ்த்தப்பட் டோர் முன்னேற்றத்துக்கு சிறப்பு கவனம் செலுத்தி வருகின்றன.  பழங்குடிகள், தாழ்த்தப்பட்டோரை வாக்கு வங்கிகளாக நாங்கள் கருதவில்லை. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, வளர்ச்சித் திட்டங்களை வழங்கவே பாஜக விரும்புகிறது. அதனால்தான் தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் மீது கவனம் செலுத்துகிறோம்” என்று அந்தப் பேட்டியில் அவர் கூறியுள்ளார். அப்போது, “பாஜக என்றாலே “பிராமணர்கள்”, பனியாக்கள்  கட்சிதான் என அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. இன்றோ  தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்கள் மீது கரிசனம் காட்டுகிறீர்கள். மற்றொரு பக்கம் அனைவருக்குமான வளர்ச்சி, முன்னேற்றம் என முழக்கம் எழுப்புகிறீர்கள். இது முரண்பாடாக இல்லையா?” என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்குப் பதிலளித்த முரளிதர ராவ், “உண்மைதான்… “பிராமணர்”களும் பனியாக்களும் எங்க பாக்கெட்டில்தான்...

அர்ச்சகர் உரிமை: பார்ப்பனர்கள் இரட்டை வேடம்

அர்ச்சகர் உரிமை: பார்ப்பனர்கள் இரட்டை வேடம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தபோது இப்படி ஒரு ஆணையைப் பிறப்பிப்பதற்கு அறநிலையத் துறைக்கோ, தமிழ்நாடு அரசுக்கோ உரிமையில்லை என்றும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக கூடாது என்றும் அனைத்து பார்ப்பனர்களும் கூறினார்கள். உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார்கள். உச்சநீதிமன்றத்திலும் சுப்ரமணியசாமி இதன் அடிப்படையில் வழக்கு தொடர்ந்திருக்கிறார். அவர்களிடம் சில கேள்விகளை நாம் கேட்க வேண்டி இருக்கிறது. 14.11.2021 அன்று பத்திரிக்கையில் வந்த இரண்டு சம்பவங்களை குறிப்பிட விரும்புகிறோம். முதலில் ஸ்ரீரங்க கோவிலை பற்றி. ஸ்ரீரங்க கோவில் ஒரு வைணவக் கோவில். இந்தக் கோவிலுக்குள் மோடியின் பேச்சை ஒலிபரப்பி யிருக்கிறார்கள். ஒலிபரப்பியது, பாஜக தலைவர் அண்ணாமலை, அவரது பாஜக தொண்டர்கள். இதை எதிர்த்து ரங்கராஜ நரசிம்மன் என்கிற வைணவப் புரோகிதர், முகநூலில் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். இந்த எதிர்ப்பு தெரிவித்ததனால் பாஜகவினர் கடுமையாக மிரட்டுகிறார்கள். லாரி ஏற்றி கொன்றுவிடுவோம் என்று கூறுகிறார்கள். அப்படி ஒரு மரணம் நிகழுமானால் பாஜக...

அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

அன்பு தனசேகர் இல்ல மணவிழா : கழக ஏட்டுக்கு ரூ.50,000/- நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் -லதா இணையரின் மூத்த மகள் தமிழ்செல்வி – சிறீராம்குமார் மணவிழா வரவேற்பு நிகழ்வு 9.11.2021 அன்று சென்னையில் நடைபெற்றது. நிகழ்வில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி,  தியாகராயர் நகர் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன், பேராசிரியர் சரஸ்வதி, மாணவர் நகலகம் உரிமையாளர் சவுரிராசன், மணிமேகலை, பொள்ளாச்சி மா. உமாபதி, தடா ஓ. சுந்தரம், வருமான வரித் துறை முதன்மை ஆணையர், செல்வகணேஷ், இணை ஆணையர் பி. நந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர். தலைமை நிலையச் செயலாளர் மற்றும் சென்னை மாவட்ட நிர்வாகிகள் பெருந்திரளாகப் பங்கேற்று சிறப்பித்தனர். சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், மணமக்களை நேரில் வந்து வாழ்த்தினார். மணமக்கள் சார்பாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு ரூ.50,000/-மும், குழுமூர் அனிதா அறக்கட்டளைக்கு ரூ.10,000/- அளிக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18112021...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (16) ஒன்றிய ஆட்சியின் இந்தித் திணிப்புகள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (16) ஒன்றிய ஆட்சியின் இந்தித் திணிப்புகள் விடுதலை இராசேந்திரன்

உள்துறை அமைச்சகத்தில் அனைத்து கோப்பு களும் இந்தியில் மட்டுமே எழுதப்படுவதாக பெருமை பேசுகிறார் அமித்ஷா. மும்மொழிக் கொள்கையிலிருந்து விலக்கு பெற்ற தமிழ்நாட்டில் தொடர்ந்து இந்தியைத் திணிக்கிறது, ஒன்றிய ஆட்சி. அஞ்சல் துறை, வங்கித் துறை, ஒன்றிய அரசுத் துறைகளில் இந்தித் திணிப்பு வேகம் வேகமாக நடக்கும்போது – தமிழ்நாட்டில் ஒன்றிய அரசுத் துறைகளில் இந்திக்காரர்களே நியமிக்கப்படு கிறார்கள். பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங் களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். இந்தித் திணிப்பு (3.5.2017 ‘ஆனந்தவிகடன்’ தீட்டிய தலையங்கம்) 2011ஆம் ஆண்டு நாடாளுமன்ற நிலைக்குழு சமர்ப்பித்த இந்தி மொழி தொடர்பான பரிந்துரை களுக்குக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இப்போது ஒப்புதல் அளித்துள்ளார். இந்தி பேசாத மாநிலங்களின் மீது இடியைப்போல் இறங்கி யிருக்கும் இந்தப் பரிந்துரைகள் கீழ்வருமாறு… ஜனாதிபதி, பிரதமர், மத்திய...

உண்மையான பெண் விடுதலைக்கு

உண்மையான பெண் விடுதலைக்கு

சட்டத்தாலும், மதத்தாலும், மாத்திரம் ஏற்பட்டதென்று சொல்வதற் கில்லாமல் பெண் சமூகம் ஒப்புக்கொண்டு, இந்நிலைக்கு உதவிபுரிந்து வருவதனாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும். அநேக வருட பழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக் கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும் விளங்கவும் முந்துகிறார்களோ, அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துக்களென்றும், ஆண்களுக்கு கட்டுப்பட்டவர்களென்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக்கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கிறார்கள். உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்பந்தக் கற்பு முறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும். குடி அரசு 08.01.1928 பெரியார் முழக்கம் 18112021 இதழ்

ஜெய் பீம் படத்தை எதிர்ப்பவர்கள் மதவாதிகளா? சமூக நீதியாளர்களா?

ஜெய் பீம் படத்தை எதிர்ப்பவர்கள் மதவாதிகளா? சமூக நீதியாளர்களா?

ஜெய் பீம் படம் குறித்து டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஹரிஷ் எஸ். வாங்கடே இந்து ஆங்கில நாளேட்டில் (நவம்பர் 11,2021) விமர்சனக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஜெய் பீம் என்ற முழக்கம் தலித் மக்களுக்கானது மட்டுமல்ல அனைத்து விளிம்பு நிலை மக்களுக்குமான உரிமை முழக்கம் என்றும், அதைத்தான் ஜெய்பீம் படமும் குறிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். கதாநாயகனாக வரும் சந்துரு ஒரு மார்க்சிஸ்டாக சித்தரிக்கப்பட்டாலும், வர்க்கப்போராட்டம், மக்களை அணிதிரட்டல் என்ற மார்க்சிய அணுகுமுறைகளிலிருந்து விலகி ஜாதிய ஒடுக்குமுறை, அதற்கு துணைபோகும் காவல்துறையின் வன்முறைகளை தான் படமாக்கியுள்ளனர். சொல்லப்போனால் பூலே, பெரியார், அம்பேத்கர் பேசிய ஜாதி ஒடுக்குமுறைகளுக்கு எதிரான கருத்துக்களை, ஒரு மார்க்சிஸ்ட் வழக்கறிஞர் சட்டப்போராட்டம் வழியாக நடத்துகிறார். இடதுசாரிகள் வர்க்கப் பார்வையோடு ஜாதி எதிர்ப்பையும், தமிழ்நாடு,ஆந்திரா, மகராஷ்டிரா மாநிலங்களில் இணைத்து செயல்பட்டுக்கொண்டு வருகிறார்கள். அத்தகைய கதாநாயகர்தான் சந்துரு. என்று கட்டுரையாளர் சுட்டிக்காட்டுகிறார். விளிம்பு நிலையில் தள்ளப்பட்டுள்ள பல்வேறு சமூகத்தினருடைய படமாக இதைப்...

தலையங்கம் “சூத்திரர்களை” இழிவுபடுத்திய ஆதி சங்கரரை பிரதமர் புகழ்வதா?

தலையங்கம் “சூத்திரர்களை” இழிவுபடுத்திய ஆதி சங்கரரை பிரதமர் புகழ்வதா?

உத்தரகாண்ட் மாநிலம் கேதார் நாத்தில், ஆதி சங்கரரின் 12 அடி உயர சிலையைத் திறந்து வைத்துப் பேசிய பிரதமர் மோடி, “சமுதாய நன்மைக்காக ஆதி சங்கரர், புதிய குறிக்கோளுடன் செயல்பட்டார். சமஸ்கிருதத்தில் உள்ள வேதங்களை வரும் தலைமுறைக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும். தீர்த்த யாத்திரைகள் வழியாக நமது கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல வாய்ப்பு கிடைக்கிறது” என்று பேசி இருக்கிறார். பல்வேறு – மொழி – இனம் – மதங்களைக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர், இப்படி கலாச்சாரத்தை ‘ஓர்மைப்படுத்தி’ பார்ப்பனிய சமஸ்கிருதப் பண்பாடு தான் இந்தியாவின் பண்பாடு என்று பேசுவது, அவர் அனைத்து பிரிவினருக்குமான பிரதமர் அல்ல என்பதையே வெளிப்படுத்துகிறது. ஆதி சங்கரர் யார்? அவர் உருவாக்கிய அத்வைத சித்தாந்தத்தின் நோக்கம் என்ன? இந்தியாவை இந்து இராஷ்டிரமாக்க வேண்டும் என்பதற்காகவே விடுதலைப் போராட்டம் நடத்திய திலகர், ஆதிசங்கரர் பற்றி இவ்வாறு கூறுகிறார்: “நாட்டில் எங்கும் பரவி இருந்த சமண பவுத்த...

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் , காந்தி

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் , காந்தி

ஆர்.எஸ்.எஸ்.  பற்றி காமராஜர் “குறிப்பாக அவர்களுக்கு (ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களுக்கு) பயம் என்னைப் பற்றித்தான். இந்த காமராஜ் தான் சோசியலிச சமுதாயத்தினை அமைத்து தீருவேன் என்றே சொல்கின்றான். அவன்தான் அதிலே தீவிரமாக இருக்கின்றான் என்று நினைக்கிறார்கள். என் வீட்டுக்குத் தீ வைக்கின்றான். ஆனால் நான் இதற்கெல்லாம் கவலைப்பட மாட்டேன். என் வேலையை நான் செய்தே தீருவேன்.” – 11.12.1966 சேலம் பேருரை. நவசக்தி 15.12.1966 ஆர்.எஸ்.எஸ். பற்றி காந்தி “‘வார்தா’ ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமுக்கு ஆர்.எஸ்.எஸ்.சின் அழைப்பின் பெயரில் காந்தி பார்வையிட சென்ற போது காந்தியின் சீடர் காந்தியிடம் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் நல்ல சேவைகளை செய் கிறார்கள் என்று சொன்ன போது. காந்தியார் அளித்த பதில் என்ன தெரியுமா? “ஹிட்லரின் நாசிப்படையும், முசோலியின் பாசிசப் படையும் இதே போல்தான் சேவை செய்தது என்பதை மறந்துவிட வேண்டாம்.” பெரியார் முழக்கம் 18112021 இதழ்

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலுக்கு எதிர்ப்பா? சங்கிகள் அடாவடியை எதிர்த்து – அனைத்துக் கட்சிகளும் திருப்பூரில் ஒன்று திரண்டன

பா.ஜ.க.-இந்து முன்னணி அடா வடியை எதிர்த்து அனைத்துக் கட்சி களும் களத்தில் இறங்கும் நடவடிக்கை திருப்பூரில் தொடங்கி இருக்கிறது. திருப்பூர் மாநகராட்சி பள்ளி நூலகத் திற்கு தன்னார்வலர் பெரியார் புத்தகங்களை கொடையாக வழங்கியதை எதிர்த்து பள்ளிக்கு அத்துமீறி நுழைந்து ஆசிரியர் களை மிரட்டிய பாஜகவினர் ! திருப்பூர் மாநகராட்சி பள்ளியில் பெரியார் புத்தகம் மொத்தமாக விநியோகம் செய்ததாகக் கூறி, பள்ளியை பாஜகவினர் முற்றுகையிட்டனர். திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள நூலகத்துக்கு தன்னார்வலர்கள் புத்தகங்கள் வழங்கி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு பெரியார் எழுதிய, ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்ற புத்தகம் சுமார் 2 ஆயிரம் பிரதிகளை தன்னார்வலர் ஒருவர் வழங்கினார். இதனை அறிந்த திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை யில் பாஜகவினர் சுமார் 10 பேர் பள்ளி வளாகத்துக்கு வந்து, புத்தகங்களை யாருக்கும் தரக் கூடாது...

சிவ… சிவ… சிவ…

சிவ… சிவ… சிவ…

‘இந்து மதம்’ என்பதாக ஒரு மதமே இல்லை என்றார் இறந்து போன காஞ்சி சீனியர் சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரர்; தமிழ்நாட்டில் சைவம் – வைணவர்கட்கும் கடும் பகை. வைணவத்திலேயே வடகலைக் கும் தென் கலைக்கும் நடந்த மோதல்களை சொல்லவே வேண்டாம். மதுரையில் 8000 சமணர்களை கழுவேற்றித் துடிக்க துடிக்க கொலை செய்தது சைவம். மறைந்த ‘கரிசல் மண்’ எழுத்தாளர் கி. ராஜநாராயணன், வைணவக் குடும்பத் தில் பிறந்தவர். அவர் தனது ‘கரிசல் காட்டுக் கடுதாசி நூலில்’ கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்: “சிவனுடைய பெயரை யாரும் எங்கள் வீட்டில் மறந்தும் உச்சரிக்க மாட்டோம். அசந்து மறந்து சொல்லி விட்டால் சாட்டை அடி விழும். எங்கள் வீட்டில் வேலை செய்யும் வேலையாட் களின் பெயர்கள்கூட சிவப் பெயர் கிடையாது. இதில் எங்கள் அப்பா ரொம்ப ஜாக்கிரதை! நாங்கள் மணிகட்டி வைணவர்களின் பரம்பரை! மணிகட்டி வைணவர்களின் ரண்டு காதுகளிலும் சிறிய வெள்ளி மணிகள் கட்டித் தொங்கவிட் டிருக்கும். எங்காவது...

தமிழ்நாடு கொடியை  கொளத்தூர் மணி ஏற்றினார்

தமிழ்நாடு கொடியை கொளத்தூர் மணி ஏற்றினார்

நவ. 1 தமிழ்நாடு நாளாக முன்னெடுக்கப்பட்டு தமிழ்நாட்டு கொடி ஏற்றும் நிகழ்வு தமிழகம் முழுவதும் நடைபெறும் என பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. நவம்பர் 1 காலை 8 மணியளவில், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக வெளிடப்பட்ட தமிழ்நாடு கொடியை, கழகத் தலைவர் கொளத்தூர் மணி,  கொளத்தூர் செக்போஸ்ட்டில் ஏற்றி வைத்தார். மேட்டூர் கழகத் தோழர்கள் உடனிருந்தனர். அதன் அடிப்படையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளியில் கழகத் தோழர்கள் 01.11.2021 திங்கள் காலை 10.30 அளவில் தமிழ்நாடு கொடி ஏற்ற முயன்ற பொழுது அதற்கு அனுமதி மறுத்து காவல்துறை தடுத்தது. காவல்துறையின் தடையையும் மீறி தமிழ் நாட்டுக் கொடியை ஏற்ற முயன்ற கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்ட தோழர்கள் கிருஷ்ணன், ராஜேந்திரன், கண்ணன், சந்திரசேகரன், பிரபாகரன், தீனதயாளன், அருண்குமார், கோகிலா ஆகிய 8 பேரும் நங்கவள்ளி ஆசூஏ மஹால் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டார்கள். மாலை 6.00 மணிக்கு...

‘ஜெய்பீம்’ உருவாக்கிய தாக்கம்

‘ஜெய்பீம்’ உருவாக்கிய தாக்கம்

ஜெய்பீம் இப்போது பேசப் படுகிற ஒரு திரைப்படமாக மாறி யிருக்கிறது. ஜோதிகா சூர்யா தயாரிப்பில் வெளிவந்து இருக்கிற ஒரு படம். ஏற்கனவே ஜாதிய வன்கொடுமைகளை ஜாதிய ஒடுக்கு முறைகளை பேசுகிற பல திரைப் படங்கள் தமிழகத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கிறது. பரியேறும் பெருமாள், அசுரன், கர்ணன் இவைகள் ஜாதிய ஒடுக்குமுறைகளை பேசின என்று சொன்னால், இருளர் என்ற பழங்குடி மக்கள் மீதான ஜாதிய ஒடுக்குமுறையை பேசுகிற படமாக ஜெய் பீம் வந்திருக்கிறது. 1995ஆம் ஆண்டு இருளர் சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு மீது காவல்துறை பொய்யான திருட்டு குற்றம் ஒன்றை சுமத்தி, காவல் நிலையத்தில் அவரைச் சித்திரவதை செய்து அடித்துக் கொன்றதை சித்தரிக் கின்ற ஒரு படம். உண்மையான நடந்த நிகழ்வு இப்போது ஒரு திரைப்படமாக மாற்றப்பட்டிருக்கிறது. இருளர் சமூகத்திற்கான ஒரே அடையாளம் ஜாதி என்ற ஒன்று மட்டும் தான். அவர்களுக்கு அரசு அங்கீகாரம் தரக்கூடிய எந்த அடையாளங்களும் கிடையாது. ரேஷன் அட்டைகள்...

குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்

குடியாத்தம் – இராமாலையில் சிறப்புடன் நடந்தது ‘நான் இந்துவாக இருக்கப் போவதில்லை’: பெரியாரின் நூல் திறனாய்வு கூட்டம்

வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 7.11.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் தலித்முரசு மற்றும் காட்டாறு பதிப்பகம் வெளியிட்ட பெரியாரின் கட்டுரைத் தொகுப்புகள் “நான் இந்துவாக இருக்கப் போவதில்லை” இன்னும் நூல் குறித்த அறிமுக நிகழ்வும் சமூகநீதி தளத்தில் தொடர்ந்து களப்பணி ஆற்றி வருகின்ற தோழர்களுக்கு அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் ஊக்கப்படுத்தி பாராட்டி நினைவுப் பரிசு வழங்கும் நிகழ்வும் நடை பெற்றது. இந்நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தலித்முரசு ஆசிரியர் மற்றும் தமிழ்நாடு தாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் துணைத் தலைவர் புனித பாண்டியன், எழுத்தாளர் அழகிய பெரியவன், திராவிடர் கழக வேலூர் மண்டல தலைவர் சடகோபன், இந்திய குடியரசு கட்சி வேலூர் மாவட்டத் தலைவர் தலித் குமார் ஆகியோர் பங்கேற்று நூல் குறித்து மிக விரிவாகப் பேசினர். இந்நிகழ்விற்கு   ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் திலீபன் தலைமை தாங்கினார் கழகத்தினுடைய...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (15) ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி பறித்த சமூக நீதி உரிமைகள் விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (15) ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி பறித்த சமூக நீதி உரிமைகள் விடுதலை இராசேந்திரன்

102ஆவது சட்டத் திருத்தத்தின் வழியாக ‘பிற்படுத்தப்பட்டோரை’ நிர்ணயிக்கும் உரிமையை மாநில அரசிடமிருந்து பறித்த ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, பிறகு பா.ஜ.க. பிற்படுத்தப்பட்ட எம்.பி.கள் எதிர்ப்பு காரணமாக மீண்டும் 105ஆவது சட்டத்திருத்தம் கொண்டு வந்து மாநிலங்களிடம் ஒப்படைத்தது. மருத்துவப் படிப்புகளுக்கு அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு வழங்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி நடத்திய சட்டப் போராட்டத்தின் விளைவாக உச்சநீதிமன்றக் கண்டனத்துக்கு உள்ளானதால் மீண்டும் இடஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தது.   பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங் களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறு களைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். 27 சதவீத இடஒதுக்கீடு மறுப்பு பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24...

பந்தயம் கட்டி கேட்கிறேன்…!

பந்தயம் கட்டி கேட்கிறேன்…!

பந்தயம் கட்டிக் கேட்கிறேன். உலகில் நான் அறிந்த வரையில் நம்நாட்டு மக்களிடம் (இந்துக்கள் என்பவரிடம்) ஒழுக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100 க்கு 99 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன ? நமக்கு ‘கடவுள்’ இல்லையா ? நாம்  ‘கடவுள் பக்தி’ இல்லாதவர்களா ! நாம் ‘மதம்’ அற்றவர்களா ? நமக்கு ‘கடவுள் பயம்’ இல்லையா ? ‘கடவுள் நெறி’ இல்லையா ? நன்மை செய்தால் ‘நற்பயன்’ கிடைக்கும், தீமை செய்தால் ‘தீய பயன்’ கிடைக்கும் என்கின்ற தான எச்சரிக்கைச் சாதனங்கள் இல்லையா ? நம்மில் பெரியவர்கள் ‘தெய்வீகத் தன்மை’ கொண்ட மக்கள் என்பவர்கள் ஏற்பட்டு நமக்கு அறிவுரை கூறியவர்கள் – கூறுபவர்கள், கூறும்படியான நீதிநூல்கள் இல்லையா ? அரசாங்க கட்டுத் திட்டம், தண்டனை முதலியவைகள் இல்லையா ? நமக்கு குருமார்கள் – மடாதிபதிகள் இல்லையா ? இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும் போது நமக்கு நம்...

மூட நம்பிக்கைகளுக்கு தடை விதிக்க கேரளாவில் புதிய சட்டம்

மூட நம்பிக்கைகளுக்கு தடை விதிக்க கேரளாவில் புதிய சட்டம்

கேரள மாநிலத்தில்  மூடநம்பிக்கைகளையும்  தேவையற்ற ஆசார  முறைகளையும்  தடை  செய்வதற்காக  சட்ட உருவாக்கம்  இறுதி நிலையில் உள்ளது. சட்ட மறு சீரமைப்பு ஆணையம் சமர்ப்பித்த நகல் சட்ட வடிவம் உள் துறையின் கீழ் பரிசீலனையில் உள்ளது. மிக விரைவாக சட்டப் பேரவையில் அதை சமர்ப்பித்து சட்டமாக்கும் நடவடிக்கையில் உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. மூடநம்பிக்கையும் தேவையற்ற  ஆசாரங்களையும் பிரச்சாரம் செய்வதும் அதை நடைமுறைப்படுத்து பவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் ஒரு லட்சம் ரூபாய்  அபராதமும் விதிக்கப்படும் என்று உள்ளது. மந்திரவாதம், நாசகர மந்திர வாதம், பேய் விரட்டுதல், நிதி  தேடி நடத்தும் தொல்லை,  சிகிச்சையைத் தடை செய்வது போன்ற செயல்கள் குற்றத்திற்கு உட்பட்டதாகும். மந்திரவாதத்தின் பெயரில்  தொல்லைகள் மிரட்டல்களும் கடும் குற்றமாகக் கருதப்படும். ஒவ்வொரு குற்றத்திற்கும் உரிய தண்டனையை நகலில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மூடநம்பிக்கையும் தேவையற்ற  ஆசாரங்களையும் தடை செய்ய சட்டம் கொண்டு வரப்படும் என்று  அரசு முன்னரே தெரிவித்திருந்தது....

வன்னியர் இட ஒதுக்கீடு இரத்தானது ஏன் ?

வன்னியர் இட ஒதுக்கீடு இரத்தானது ஏன் ?

பாட்டாளி மக்கள் கட்சியுடன், தேர்தல் கூட்டணி நோக்கத்துக்காக அக்கட்சி விதித்த நிபந்தனைகளை ஏற்று, கடந்த பிப்ரவரியில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அவசரம் அவசரமாக வன்னியர் தனி இட ஒதுக்கீடு மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்தது. தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்த பின், அரசு எந்த புதிய முடிவையும் வெளியிட முடியாது என்பதால், ஆணையத்தின் அறிவிப்பு வெளி வருவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு அன்றைய முதலமைச்சர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார். இப்போது மதுரை உயர்நீதிமன்றத்தின் கிளை 10.5ரூ இட ஒதுக்கீட்டை இரத்து செய்து விட்டது. நீதிமன்றம் ஏன் இரத்து செய்தது என்பது குறித்து ஆங்கில ‘இந்து’ நாளேடு(3.11.2021) எழுதியுள்ள தலையங்கத்தின் சில முக்கியமான கருத்துக்கள். 1)         பிப்ரவரி 2021 இல் சட்டசபையில் 10.5ரூ இட ஒதுக்கீடு வந்த போது அரசியல் சட்டத்தின் 102 ஆவது திருத்தம் அமலில் இருந்தது. இதன்படி பிற்படுத்தப்பட் டோர் இட ஒதுக்கீட்டை நிர்ணயிக்கும்...

தலையங்கம் நாட்டார் வழிபாடும் வைதீக எதிர்ப்பும்!

தலையங்கம் நாட்டார் வழிபாடும் வைதீக எதிர்ப்பும்!

நாட்டார் தெய்வ வழிபாடுகள், தமிழர் மரபின் அடை யாளங்கள் என்றும் வைதீக பார்ப்பனியத்துக்கு எதிரானவை என்றும் பெருமை கொண்டாடுகிறவர்கள் இருக்கிறார்கள். வைதீகப் பண்பாட்டுக்கு எதிரானவை இந்த நாட்டார் வழிபாடுகள் என்றால், வைதீகத்திடமிருந்து எதிர்ப்புகள் வந்திருக்க வேண்டுமே! அப்படி எந்த எதிர்ப்புகளும் அவர்களிடமிருந்து வரவில்லை என்பதோடு, இந்த வழிபாட்டு முறைகள் மீதான மக்கள் நம்பிக்கை தொடர்ந்து நீடித்தால் தான், தங்களின் வைதீக பார்ப்பனிய மரபுக்கு வலிமை சேர்க்க முடியும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். அதேபோன்று, ‘நாட்டார் மரபு’ வழிபாடுகளைப் பின்பற்றும் பார்ப்பனரல்லாத தமிழர்களும் தங்களது வழிபாடு வைதீகத்துக்கு எதிரானது என்று கருதுவதும் இல்லை. மாறாக, ‘வைதீக’ வழிபாட்டு முறைகளோடு பார்ப்பனியம் கட்டமைத்த சமஸ்கிருதப் பண்பாட்டு சடங்குகளையும் வாழ்க்கையோடு இணைத்துக் கொள்கிறார்கள். நாட்டார் சடங்கு வழிபாடுகள் பெரும்பாலும் கிராமங்களில் ஜாதியக் கட்டமைப்புக்குட்பட்டே நிகழ்த்தப்படுகின்றன.  ஒடுக்கப்பட்ட ஜாதியினரை உள்ளூர் வழிபாடுகளில் ஒதுக்கி வைக்கிறார்கள். பல நாட்டார் வழி பாடுகளில் பெண்கள் பங்கேற்பதும் தடை செய்யப்படுகிறது....

திராவிட கட்சியினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? வைகோ விளக்கம்

திராவிட கட்சியினர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன்? வைகோ விளக்கம்

இந்துக்களின் பண்டிகையான தீபாவளிக்கு திராவிட இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் வாழ்த்து தெரிவிக்கவில்லை. இதற்கு பா.ஜ.க. உள்பட சில அரசியல் கட்சிகள், இந்து அமைப்புகள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தன. இந்தநிலையில், தீபாவளி பண்டிகைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வைகோ உள்பட திராவிட இயக்கத்தைச் சேர்ந்த வர்கள் யாருமே வாழ்த்து தெரிவிக்கவில்லை. ரம்ஜான், கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகை களுக்கு வாழ்த்து சொல்கிறீர்களே? என்று கேட்டதற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விளக்கம் அளித்துள்ளார். “புராணப் பொய், மூட நம்பிக்கைகளை எதிர்த்து திராவிட இயக்கம் போராடி வந்திருக்கிறது. தீபாவளி பண்டிகை என்பது அப்படியொரு புராணப் பொய் யின் அடிப்படையில் கொண் டாடப்படும் பண்டிகையாகும். அதனால் நாங்கள் தீபாவளியை கொண்டாடுவது இல்லை. தீபாவளி என்பது வட நாட் டினருக்கே உரித்தான, அவர்கள் கொண்டாடும் பண்டிகை. அது தமிழர்களுக்கான பண்டிகை அல்ல. பண்டைய தமிழர்கள் தீபாவளி பண்டிகையை கொண் டாடியதற்கான எந்த வரலாற்று சான்றுகளும் இல்லை. இஸ்லாத்தை பொறுத்தமட்டில் நபிகள் நாயகம்...

தீபாவளி ‘பட்டாசு’ப் புகையால் மூச்சுத் திணறிய தலைநகரம்

தீபாவளி ‘பட்டாசு’ப் புகையால் மூச்சுத் திணறிய தலைநகரம்

தீபாவளி என்ற பண்டிகை நடந்து முடிந்துவிட்டது. நரகாசூரன் என்ற அசுரனை, மகாவிஷ்ணு பன்றி அவதாரம் எடுத்து சூழ்ச்சியாகக் கொன்ற நாள். அசுரர்கள் கொன்று ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்பதற்காக, புராணக் கற்பனைக் கதையிலிருந்து உருவாக்கப்பட்டது தான் தீபாவளிக் கதை. அந்த தீபாவளி பண்டிகையாக மக்கள் மீது திணிக்கப் பட்டது. அந்த விழா கொண்டாட் டத்தைப் பட்டாசு வெடித்துக் கொண் டாடுங்கள் என்று ஒரு வழக்கமும் சமூகத்தில் திணிக்கப்பட்டது. அசுரர்கள் என்பவர்கள் இந்த நாட்டின் உழைக்கின்ற மக்கள். தேவர்கள் என்பவர்கள் வேதங்களை ஓதி, மந்திரங்களை ஓதி, யாகங்களை நடத்தி உழைக்கின்ற மக்களை சுரண்டிக்கொண்டிருந்தவர்கள். அவர்களுக்கு இந்த உழைக்கின்ற மக்கள் மிகப் பெரிய சவாலாக இருந்தார்கள். வேதங்களை கேள்வி கேட்டார்கள். அதன் காரணமாக இந்த அசுரர்கள் என்கிற உழைக்கும் மக்களை கொல்ல வேண்டும், அழிக்க வேண்டும் என்பதற்காக பல அவதாரங்களை எடுத்து வந்து, கடவுள்கள் அழித்தார்கள் என்று ஆரிய, பார்ப்பனியப் புராணங்கள் பல கட்டுக்கதைகளை உருவாக்கியது....

கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் தோழர்களுடன் சந்திப்பு – உரையாடல்

கழகப் பொறுப்பாளர்கள் சுற்றுப் பயணம் தோழர்களுடன் சந்திப்பு – உரையாடல்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களின் கவனத்திற்கு, கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020, 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனைப் போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழகப் பொருளாளர் மற்றும் அமைப்புச் செயலாளர், பரப்புரைச் செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டங்கள் நடைபெற உள்ளன. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளியிடப்படுகிறது. வரும் வாரங்களில்...

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

கருஞ்சட்டைப் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

சீமான், மணியரசன் நடத்தும் அமைப்புகள், தமிழ்த் தேசியம் என்ற போர்வையில் பெரியார் எதிர்ப்பையும் மத அடையாளங்களையும் உயர்த்திப் பிடிப்பதை மறுத்து சென்னையில் தமிழ்த் தேச நடுவம் நடத்திய கருத்தரங்கில் கருத்தாளர்கள் நிகழ்த்திய உரையை கருஞ்சட்டைப் பதிப்பகம் நூலாக வெளியிட்டிருக்கிறது. திராவிடம் யாருக்கு சொந்தம்? – பேரா. கருணானந்தன், விலை : ரூ.20/- திராவிடத் தமிழ்த் தேசியம் – வாலாஜா வல்லவன், விலை : ரூ.20/- பச்சைத் துரோகம் – ஆழி செந்தில்நாதன், விலை : ரூ.10/- தமிழ்த் தேசிய அரசியலை சிதைக்கும் பார்ப்பன கங்காணிகள் – பொழிலன், விலை : ரூ.20/- இது தவிர மேலும் இரு நூல்களும் வெளியிடப்பட்டுள்ளன. கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும் – முனைவர் வெ. சிவப்பிரகாசம், விலை : ரூ.130/- நீங்கள் எந்தப் பக்கம்? – சுப. வீரபாண்டியன், விலை : ரூ.70/- கிடைக்குமிடம் : 120, என்.டி.ஆர். தெரு, ரெங்கராஜன்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. தொடர்புக்கு...

‘நீட்’ மற்றொரு உயிர் பலி: தமிழ்நாடு மாணவர் கழகம்  மாணவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

‘நீட்’ மற்றொரு உயிர் பலி: தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவரின் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதி நெம்பர் 10, முத்தூரைச் சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் நீட் தேர்வு எழுதி முடிவுக்கு காத்திருந்த நிலையில் 30.10.2021 அன்று திடீரென தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த உடன் 31.10.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். கிராமப்புற விவசாய குடும்பத்தை சேர்ந்த மாணவர் கீர்த்தி வாசன் தொடர்ந்து நான்காவது முறையாக நீட் தேர்வை எழுதியுள்ளார். இந்தச் சந்திப்பில் தோழர்கள் சபரிகிரி, விஷ்ணு, திருப்பூர் சந்தோஷ், பிரசாந்த், ராமகிருஷ்ணன் மற்றும் மகேந்திர குமார் உள்ளிட்ட மாணவர் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 04112021 இதழ்

யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

யாழ் பிரபா- மணிகண்டன் இணையேற்பு ஒப்பந்த விழா

கழகத் தோழர் யாழ் இரவி- திராவிடச்செல்வி இணையரின், மகள் யாழ் பிரபா- மணிகண்டன் ஆகியோரின் இணையேற்பு ஒப்பந்த விழா 2.09.2021  மாலை 6 மணியளவில், மேடவாக்கம் ஆ’ள பார்ட்டி ஹாலில் நடைபெற்றது. திராவிடச் செல்வி மறைந்த கழகப் பேச்சாளர் கீசகனின் மகள் வயிற்றுப்  பேத்தி ஆவார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று இணையேற்பை நடத்தி வைத்தார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், புதிய குரல் ஓவியா, தமிழக மக்கள் முன்னணி பொழிலன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கழக ஏட்டிற்கு நன்கொடையாக ரூ. 2000/- வழங்கினர். பெரியார் முழக்கம் 04112021 இதழ்

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்களின் இல்ல சந்திப்பு 26.09.2021 காலை 9:30 மணிக்கு ஆரம்பமானது. முதல் சந்திப்பு  ஆசிரியர் சிவக்குமார்  இல்லத்தில் தொடங்கியது. காலை உணவு அருந்தியபடியே தோழர்கள் உரையாடினர். பிறகு சி.எம். நகர் பிரபு இல்லம், சித்தோடு கமலக்கண்ணன் இல்லம், முன்னாள் மாவட்டச் செய லாளர் கு. சண்முகப்பிரியன் இல்லத்தில் தோழரின் உடல் நலம் குறித்த விசாரிப்பும் , உரையாடலுமாக சந்திப்பு நிகழ்ந்தது. பிறகு பெருமாள் மலை ராசண்ணன் இல்லத்திலும், கொங்கம்பாளையம் அருள் இல்லத்திலும், நசியனூர் குமார் இல்லத்திலும் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து செம்மாம்பாளையம்  கணேஷ் இல்லத்திலும், ரங்கம்பாளையம் கிருஷ்ணன்-மணிமேகலை இல்லத்திலும், அதே பகுதியில் வசிக்கும் விஜயரத்தினம்  கடையில் தோழர்களின் முதல் கட்ட சந்திப்பும், உரையாடலும் இனிதே நிறைவு பெற்றது. ஒவ்வொரு தோழர்களின் இல்லத்திலும் இனிப்புகளும், பலகாரமும், பழங்கள், பழச்சாறு, தேநீரென தோழமையும் அன்புமான உபசரிப்பிலும் கழகத்தின் அடுத்த கட்ட பணிகளுக்கான திட்டமிடலும் என பயனுள்ள சந்திப்பாகவும், கழகப்...

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (14) ஜனநாயகக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன விடுதலை இராசேந்திரன்

பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (14) ஜனநாயகக் கட்டமைப்புகள் சிதைக்கப்பட்டன விடுதலை இராசேந்திரன்

மதச்சார்பின்மை என்பது மோசமான வார்த்தை என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசினார். டெல்லி சட்டமன்ற உறுப்பினர்களின் விளக்கத்தைக் கேட்காமலேயே தேர்தல் ஆணையம் அவர்களின் பதவி பறித்தது. ஊழலை ஒழிப்பதாகக் கூறி பதவிக்கு வந்தவுடன், பல ஊழல் அதிகாரிகளை, தங்களுக்கு உதவி னார்கள் என்று பதவி வழங்கி காப்பாற்றியது மோடி ஆட்சி.   பிரிட்டிஷ் ஆட்சி – காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் – அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம். “தேசியம் – பெரும்பான்மை-மதச்சார்பின்மை” என்ற சொல்லாடல் வழியாக சங்பரிவாரங்கள் திணித்து வைத்துள்ள நச்சு சிந்தனைகளின் அடிப் படையில் அதன் எதேச்சாதிகார அதிகாரப் பறிப்புகள் தொடருகின்றன. அவற்றை சுருக்கமாகப் பட்டியலிடுவோம். திட்டக்குழு – நிதிஅயோக்காக மாற்றப்பட்டது இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்களுக்கு அதற்கேற்ற திட்டங்களை உருவாக்கவும் அது குறித்து சுதந்திரமான விவாதங்கள் உரையாடல்களுக்கு வழி வகுக்கும்...

அவர்களுக்கு சுயமரியாதையே இல்லை

அவர்களுக்கு சுயமரியாதையே இல்லை

ஆந்திரா பிரிந்ததில் இருந்தே எனக்கு பொதுவாக நாட்டுப் பிரிவினையில் நாட்டமில்லாமல் போய்விட்டது. கன்னடன், மலையாளி ஒரு சில காரணங்களுக்காக பிரிந்தால் தேவலாம், ஏனென்றால் அவர்களுக்கு, சுயமரியாதையோ, பகுத்தறிவோ, இனப்பற்றோ கிடையாது. மேலும், மத மூட நம்பிக்கைகளில் (பார்ப்பனிய சடங்குகள்) மூழ்கிக் கிடக் கிறார்கள். இதனால் பிரிந்தால் தேவலாம்.          – விடுதலை 11.10.1955 பெரியார் முழக்கம் 04112021 இதழ்

கிரிக்கெட்டில் சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு

கிரிக்கெட்டில் சங்கிகளின் இஸ்லாமிய வெறுப்பு

உ.பி. தேர்தலில் மக்கள் செல்வாக்கை இழந்துள்ள பா.ஜ.க. ஆட்சி, இஸ்லாமியர்களை எதிரிகளாக்கி, இந்துக்கள் வாக்குகளை மத அடிப்படை யில் வாரிக் கொள்ளலாம் என்ற வழமையான தந்திரத்தில் இறங்கியிருக்கிறது. டி-20 கிரிக்கெட் விளையாட்டில் பாகிஸ்தானிடம் – இந்தியா தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து, பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடியதாக ஜம்மு-காஷ்மீர், உ.பி., இராஜஸ்தான் மாநிலங்களில் மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். உ.பி., ஜம்மு-காஷ்மீர் மாநிலங்களில் கைது செய்யப்பட்ட மாணவர்கள் மீது சட்ட விரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டம் (ரயயீய) பாய்ந்துள்ளது. 2 ஆண்டுகள் விசாரணையின்றி சிறையில் அடைத்து வைக்கலாம். இராஜஸ்தான் காங்கிரஸ் ஆட்சியும், ஒரு பெண் ஆசிரியை பதவி நீக்கம் செய்து கைது செய்திருக்கிறது. அனைவருமே இஸ்லாமியர்கள். நடப்பது ஒரு விளையாட்டுப் போட்டி. இதில் இந்தியாவிலுள்ள அனைவருமே இந்தியர் தான் வெற்றி பெற வேண்டும் என்ற மன நிலையில் கட்டாயம் இருக்க வேண்டும். மாற்றி சிந்திப்பது, தேசத் துரோகம் என்றால், தே பக்தியை இவர்களே கேலிப் பொருளாக்குகிறார்கள்...

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகமே, விநாயகர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்து

தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக நிர்வாகமே, விநாயகர் கோவில் கட்டுவதை உடனடியாக நிறுத்து

பொது இடங்களில் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் கட்டுவது கூடாது என்று அரசு ஆணைகள் தெளிவாக கூறுகின்றன. உச்சநீதிமன்றமும், தமிழ்நாடு உயர்நீதி மன்றமும் பல வழக்குகளில் இதை திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. அண்மையில் கூட சென்னை உயர்நீதி மன்றம், பொது இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் அகற்றப்பட வேண்டும். இதற்கு மேல் எந்த பொது இடங்களிலும் எவரும் சிலைகள் வைக்க கூடாது என்றும் ஒரு தீர்ப்பை அண்மையில் வழங்கியிருக்கிறது. குறிப்பாக பல்கலைக்கழகங்களில் இது போன்ற கோவில்கள் கட்டப்படுவது என்பது நிச்சயமாக சட்டத்திற்கு புறம்பான ஒன்றாகும். ‘தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம்’ (கூயஅடையேனர கூநயஉhநசள நுனரஉயவiடிn ருniஎநசளவைல) என்ற அரசு பல்கலைக்கழகம் ஒன்று சென்னை காரப்பாக்கத்தில் இயங்கி வருகிறது. இது 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆசிரியர் பணிகளுக்காக, கல்வியியல் கல்லூரிகளை இணைத்து நடத்தப்படுகிற பல்கலைக்கழகம் இது. இந்த பல்கலைக் கழகத்தின் வளாகத்திற்குள் மிகப்பெரிய விநாயகர் கோவில் ஒன்று இப்போது மிக வேகமாக கட்டப்பட்டுக்கொண்டு இருக்கிறது....

தலையங்கம் தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்

தலையங்கம் தமிழ்நாடு கல்வித் திட்டத்திற்கு மதச்சாயம் பூச வேண்டாம்

இல்லம் தேடி கல்வி என்ற திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மரக்காணத்தில் தொடங்கி வைத்திருக்கிறார். முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் மட்டும் இப்போது அமல்படுத்தப்பட இருக்கிறது. பிறகு மாநிலம் முழுவதும் விரிவாக்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தை ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையோடு இணைத்து மதச் சாயம் பூச நினைப்பது முற்றிலும் தவறான பார்வை. இரண்டு திட்டங்களிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதற்காக இதுவும் மற்றொரு புதிய கல்வி கொள்கை என்பது சரியான கருத்து அல்ல. இரண்டிலும் தன்னார்வலர்கள் பயன்படுத்தப்படுகிற நோக்கங்களே வேறு. புதிய கல்வி கொள்கையின் கீழ் தன்னார்வலர்கள் என்பவர்கள், பள்ளி நிர்வாகத்தில் நேரடியாக தலையிடுவதற்கு உரிமை வழங்கப்பட்டு இருந்தது. அது மட்டுமின்றி பள்ளிகளுக்கு வெளியே முறை சாரா கல்வியை கற்பிக்கிற உரிமையும் அவர்களுக்கு வழங்கப்பட்டு இருந்தது. இதை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ் காரர்கள் தன்னார்வலர்கள் என்ற பெயரில் ஊடுருவி கல்வியை தங்கள் வசப்படுத்திக் கொள்கிற வாய்ப்பு இருக்கிற காரணத்தினால், கல்வியாளர்கள் பலரும் எதிர்த்தார்கள், நாமும்...

அண்ணாமலையின் ‘திடீர்’ தமிழ் நாட்டுப் பற்று

அண்ணாமலையின் ‘திடீர்’ தமிழ் நாட்டுப் பற்று

அண்ணாமலை ‘வந்து விட்டார்’; ‘தமிழ்நாடு’ நாளை நவம்பர் 1ஆம் தேதி தான் கொண்டாட வேண்டும். அதுவே பிறந்த நாள், பெயர் வைத்த நாளை பிறந்த நாளாகக் கொண்டாடுவதா? என்று கேட்கிறார். தமிழ், தமிழ்நாடு உணர்ச்சி அண்ணாமலைக்குப் பீறிட்டு விட்டது போலும்! பிறந்த நாளுக்கு நாள், நட்சத்திரம், நாழிகை பார்த்து ஜாதகம் பார்க்க  வேண்டும் என்ற கட்சிக்காரர் ஆயிற்றே! அதனால் பிறந்த நாள் தான் இவர்களுக்கு முக்கியம். நோயுடன் சவலையாகப் பிறந்த குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து முழுமையான குழந்தையாக மாற்றிய நாளை, பிறந்த நாளாக ஏன் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டால், அதற்கு நாள், நட்சத்திரம் எப்படிப் பொருந்தும் என்று தான் இவர்கள் கேட்பார்கள். ‘சனாதனம்’ அப்படித்தான் பார்க்கும். ஆனால்,  அரசியல் சட்டம் சூட்டிய ‘இந்தியா’ என்ற பெயரை இவர்கள் ஏற்க மாட்டார்கள். ‘பாரத்’, ‘பாரதியம்’, ‘பாரத தேசம்’ என்று பெயர் சூட்டிக் கொள்வார்கள். எந்தத் தாய்க்கு மாநிலம் பிறந்தாலும்...

‘ஜூலை 18 – நவம்பர் 1’ முரண்பாடுகள் இல்லை! தமிழர் ஒற்றுமைக்கான குறியீடுகளை முன்னெடுப்பதே நோக்கம் சிறப்புத் தலையங்கம்

‘ஜூலை 18 – நவம்பர் 1’ முரண்பாடுகள் இல்லை! தமிழர் ஒற்றுமைக்கான குறியீடுகளை முன்னெடுப்பதே நோக்கம் சிறப்புத் தலையங்கம்

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு – மொழி வழி மாநிலங்கள் பிரிந்த நாளான நவம்பர் முதல் தேதியை ‘தமிழ்நாடு’ நாளாக பின்பற்ற வேண்டும் என்று முடிவு ஏற்கனவே செய்து, அந்த நாளில் தமிழ் நாட்டுக்கான கொடி ஒன்றை ஏற்ற கடந்த ஆண்டு முடிவு செய்தது. எடப்பாடி பழனிச்சாமி தலைமை யிலான ஆட்சி, நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாளாக அறிவித்தது. விழா நடத்தியது. ஆனாலும், பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் அமைப்பாளர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களைக் கைது செய்தது எடப்பாடி. பழனிச்சாமி ஆட்சி. இந்த ஆண்டு இதே போன்று நவம்பர் முதல் நாளை ‘தமிழ்நாடு’ நாளாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு முடிவு செய்தது. தமிழக முதல்வரிடம் நேரில் கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தது. இந்த நிலையில் நவம்பர் 1, மொழி வழி மாநிலம் பிரிந்தபோது தமிழ்நாட்டுக்கு ‘சென்னை மாகாணம்’ என்கிற பெயர் இருந்தது. பெரியார் தமிழ் நாடு என்று பெயர் சூட்டப்பட வேண்டும்...

கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக ஏட்டுக்கு நன்கொடை

கடந்த 10.01.2021 அன்று திருமணமான புதிய இணையர்கள் அறிவுமதி-தமிழன்பன், கழக வார ஏடான, ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு வளர்ச்சி நிதியாக ரூ 5000-யை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் அண்ணா நினைவு நாள் கருத்தரங்கில் (பிப்.27) வழங்கினர். அதைத் தொடர்ந்து, சென்னை கழகத் தோழர் விஜயனும் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கு நன்கொடையாக ரூ 1000 அளித்தார். 17.2.2021 அன்று தென்சென்னை மாவட்ட செயலாளர் இரா. உமாபதி பிறந்த நாளன்று விரட்டுக் கலைக் குழு ஆனந்த் கழக ஏட்டிற்கு ரூ.2000 நன்கொடை அளித்தார். பெரியார் முழக்கம் 04032021 இதழ்