இயக்க வளர்ச்சி – தீவிர கொள்கைப் பரப்பலுக்கான திட்டங்களை விவாதித்தது, கழகத் தலைமைக் குழு
17.6.2022 அன்று திருப்பூரில் கழகப் பொருளாளர் துரைசாமி இல்ல வளாகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் பகல் 11.30 மணியளவில் தொடங்கியது. 17 உறுப்பினர் களில் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் உட்பட 14 பேர் பங்கேற்றனர். இயக்க செயல்பாடுகள், ‘நமக்கான அடையாளம் திராவிட மாடல்’ என்ற தலைப்பில் நடந்த வீதிக் கூட்டங்கள், மண்டல மாநாடுகள், எதிர்கால செயல் திட்டங்கள் குறித்து உறுப்பினர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்தனர். மாலை 7 மணி வரை கருத்துப் பரிமாற்றங்கள் நடந்தன. கழகத்தின் தொடக்க நாளான ஆகஸ்டு 12ஆம் தேதி ஆண்டுதோறும் பரப்புரைப் பயண நிறைவு மாநாடாக இதுவரை நடத்தப் பட்டது. கொரானா காரணமாக கடந்த இரண்டாண்டுகளாக பயணங்கள் நடத்த முடியவில்லை. 2022, ஆகஸ்டு 12 – கழகம் தொடங்கி 10ஆம் ஆண்டு நிறைவு பெறுவதால், 10 ஆண்டு நிறைவு விழாவோடு...