வேத – ஆகம சாஸ்திரப் புராணங்களைக் கடுமையாக எதிர்த்தார் வள்ளலார்
வள்ளலார் தொடக்கக் காலத்தில் சைவத்திலும் முருகக் கடவுளிடமும் நம்பிக்கைக் கொண்டிருந்தாலும் அவரது சிந்தனையில் மாற்றங்கள் வந்து கொண்டிருந்தன. அவர் எழுதிய ஆறாம் திருமுறையில் சைவம், ஆகமம், வேதங்களைக் கேள்விக்கு உட்படுத் தினார். பெரியார் ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டாh. வள்ளலாரின் வரலாற்றில் தலைசிறந்த நூலாகக் கருதப்படும் நூல் – முனைவர் ஊரன் அடிகள் எழுதியதாகும். அண்மையில் ஜூன் 13, 2022 அன்று தமது 89ஆம் அகவையில் முடிவெய்தினார். தமிழக அரசின் விருது பெற்ற அந்த நூலிலிருந்து வள்ளலாரின் வேத ஆகம எதிர்ப்புக் கருத்துகளின் தொகுப்பு. வேத, ஆகம, சாத்திர, புராண, இதிகாசங்கள் முடிவான உண்மையைத் தெரிவிக்க மாட்டா. வேதங்கள் ஆகமங்கள் சாத்திரங்கள் புராணங்கள் இதிகாசங்கள் கூறும் கதைகளையும் கற்பனைகளையும் பெருமான் ஒவ்வார் . ‘கலை உரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும் கண்மூடி வழக்கமெல்லாம் மண்மூடிப்போக’ என்பார். வேதாகமங்கள் சூதாகச் சொல்லுகின்றன, உண்மையை வெளிப்படையாக உரைக்கவில்லை, இவற்றால் என்ன...