அய்.நா.வில் இனஅழிப்புக்கு எதிரான தீர்மானம் இலங்கையை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்

அய்.நா.வில் இலங்கை அரசு மீது பன்னாட்டு விசாரணை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக இலங்கையை எதிர்த்து இந்தியா வாக்களிக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இதை வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று ஈழத் தமிழர் பாதுகாப்பு கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் 51ஆம் அமர்வு ஜெனிவாவில் கூடியுள்ளது. இது குறித்து மனிதவுரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் கடந்த செப்டம்பர் 6ஆம் நாள் அறிக்கையளித்துள்ளார். சிறிலங்காவின் கடுமையான பொருளியல் நெருக்கடிக்கும் மனிதவுரிமை மீறல்களுக்குமான தொடர்பை உயர் ஆணையர் இவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாதிப்புற்றவர்களுக்கு நீதி வழங்காமல் படைச் செலவை உயர்த்தி அடக்குமுறைக் கருவிகளை வலுவாக்கும் முயற்சிகளால்தான் நெருக்கடி இந்த அளவுக்கு முற்றியது என்று தமிழ்மக்கள் தரப்பில் எடுத்துக் காட்டி வரும் உண்மையை உயர் ஆணையர் அறிக்கை உறுதி செயதுள்ளது.

சிறிலங்காவின் குற்றங்களை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்குக் கொண்டு செல்லவும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் உயர் ஆணையர் உறுப்பு நாடுகளுக்குப் பரிந்துரை செய்துள்ளார்.

மேலும் சிறிலங்காவில் நடந்த பன்னாட்டுச் சட்ட மீறல் குற்றங்கள் தொடர்பான சான்றுகளைத் திரட்டிப் பாதுகாப்பதற்கான பொறிமுறை ஒன்றை உயர் ஆணையர் அலுவலகம் ஏற்படுத்த வேண்டும் என்று சென்ற 2021 மார்ச்சு திங்கள் நடைபெற்ற 46ஆம் அமர்வில் இயற்றப்பட்ட 46/1 தீர்மானம் கட்டளையிட்டது. ஆனால் இதற்குப் போதிய நிதி ஒதுக்கப்படாத நிலையில் இப்போதாவது உறுப்பு நாடுகள் நிதி வழங்குமாறும் உயராணையர் கேட்டுள்ளார்.

இந்தப் பின்னணியில் இந்த அமர்வில் சிறிலங்கா தொடர்பாக நிறைவேற்ற வேண்டிய தீர்மானம் 51/1க்கான வரைவை இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளடங்கிய மையக் குழு (ஊடிசந பசடிரயீ) வெளியிட்டுள்ளது. இதன் மீதான விவாதமும் வாக்கெடுப்பும் வரும் அக்டோபர் 6ஆம் நாள் நடைபெறவுள்ளன. இப்போது ஜெனிவாவில் இதற்கான உரையாடல்களும் கருத்துப் பரிமாற்றங்ககளும் நடந்து வருகின்றன.

2009இல் முள்ளிவாய்க்காலில் இன அழிப்பை சிங்கள இராணுவம் நடத்தி முடித்தது. அதற்கு ஈடுசெய் நீதி பெறும் வகையில் (சுநஅநனயைட துரளவiஉந) பின்வரும்  கோரிக்கைகளைத் தமிழினம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

1)           சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் கூண்டிலேற்ற வேண்டும்

2)           சிறிலங்காவின் இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மானிட விரோதக் குற்றங்கள் குறித்துத் தற்சார்பான பன்னாட்டுக் குற்றவியல் புலனாய்வு நடத்த வேண்டும்,

3)           ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளாக  தாயகத்திலும் புலம்பெயர் உலகிலும் ஐ.நா. மேற்பார்வையில் ஈழத்தமிழர் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

ஐநா மனிதவுரிமைப் பேரவையில் முன்மொழியப் பட்டிருக்கும் தீர்மானம் மேற்கண்ட கோரிக்கை களை உள்ளடக்கியதாக இல்லை என்பது வருத்தத்திற் குரியது. தீர்மானம் முகப்புரைப் பகுதியில் சிறிலங்கா அரசைக் கடுமையாகக் குறை கூறியிருப்பினும் செயல் படுத்தும் பகுதியில் உருப்படியான எந்த நடவடிக்கைக் கும் வழி செய்வதாக இல்லை. இந்தத் தீர்மானத்தில் கண்டுள்ளவாறு 2025 செப்டம்பர் வரை சிக்கலை ஒத்தி வைப்பதற்கு எவ்வித நியாயமும் இல்லை.

முந்தைய தீர்மானங்களை மட்டுமல்ல, இந்தத் தீர்மானத்தையும் கூட ஏற்க முடியாது என்று மறுத்து அழிச்சாட்டியம் செய்யும் பேரினவாத சிறிலங்க அரசை வழிக்கு கொண்டுவர இந்தத் தீர்மானத்தில் எவ்வித முடிவும் இல்லை.

ஆனால் இந்தத் தீர்மானத்தையும் ஏற்கப் போவ தில்லை என்று சிறிலங்கா அறிவித்துள்ளது. சிறிலங் காவுக்கு ஆதரவான சீனம் போன்ற அரசுகளும் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கப் போவதாக அறி வித்து விட்டன. இந்தியா என்ன செய்யப் போகிறது என்று இது வரை தெளிவாகத் தெரியவில்லை.

இந்தியா போர்க்குற்றங்களுக்கும் இன அழிப்புக்கும் நீதி கோருவதை விட்டு விட்டு ஒன்றுக்கும் உதவாத 13ஆம் திருத்தச் சட்டம் பற்றிப் பேசிக் கொண்டிருப்பதால் பயனில்லை. வரவிருக்கும் 51/1 தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிக்கும் என்று சிறிலங்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்தியா அப்படிச் செய்தால் அது தமிழர்களுக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகமாகி விடும் என்று எச்சரிக்க விரும்புகிறோம்.

51/1 தீர்மானத்தைத் தமிழ் மக்களின் கோரிக்கைக்கு இசைவாகத் திருத்தம் செய்து ஆதரிக்க வேண்டும் என்பது தமிழர்களின் எதிர்பார்ப்பு ஆகும். எக்காரணத்தை முன்னிட்டும் இந்தத் தீர்மானத்தை எதிர்த்து வாக்களிக்கவோ வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கவோ கூடாது எனக் கோருகிறோம்.

தமிழர்களுக்கு எதிரானக் குற்றங்கள் தொடர்பில் சான்றுகள் திரட்டிவரும் மாந்த உரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்தின் (டீஊழசுஊ) பணிக்கு இந்திய அரசு நிதியுதவி செய்ய வேண்டும்.

51/1 தீர்மானம் தொடர்பான இந்தக் கோரிக்கையைத் தமிழக அரசும் இந்திய அரசிடம் வலியுறுத்தக் கேட்டுக் கொள்கிறோம். தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் கோர வேண்டும்.

மேலும் தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் ஐ.நா. மனித உரிமைப் பேரவை உறுப்பு நாடுகள் அனைத்துக்கும் மடல் எழுதி மேற்சொன்ன தமிழர்களின் நீதிக் கோரிக்கைகளுக்கு ஆதரவு திரட்டும் படி வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாடு சட்டப்பேரவை கடந்த காலத்தில் ஒருமனதாக இயற்றிய தீர்மானங்களை அடியொற்றி, ஐநா மனிதவுரிமைப் பேரவையில் இந்தியா தமிழர்களின் நீதிக்கான கோரிக்கைகளை ஆதரிக்க வேண்டும், சிங்கள அரசுக்கு ஆதரவாக நிலை எடுக்கக் கூடாது என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் புதிய தீர்மானம் இயற்ற வலியுறுத்துகிறோம்.

ஐ.நா. பாதுகாப்புப் பேரவையின் 77ஆவது அமர்வில் போர்க் குற்றங்களுக்கு பொறுப்புக்கூறல் பற்றிப் பேசிய இந்திய அயலுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எந்நிலையிலும் போர்க்குற்றங்களுக்குத் தன்டனையில்லாத நிலை (iஅயீரnவைல) கூடாது என்று பேசியிருப்பதை சிறிலங்காவுக்கும் பொருத்திப் பார்க்கும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இன்று 29.9.2022 வியாழன் காலை 11 மணி அளவில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த ஊடக சந்திப்பில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலாளர் தியாகு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராஜேந்திரன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனீபா,  எஸ்.டி.பி.ஐ. கட்சி யின் மாநிலச் செயலாளர் ஏ.கே. கரீம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செய லாளர் வந்தியத்தேவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி யின் தலைமை நிலையப் பேச்சாளர் திருவொற்றியூர் மாரிமுத்து, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் குமரன், தமிழ்த் தேச மக்கள் முன்னணியைச் சேர்ந்த ராஜா,  இளந்தமிழகம் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 06102022 இதழ்

 

You may also like...