விநாயகன் அரசியல் ஊர்வலத்தில் விதிமீறல்களைக் கண்காணிக்கக் கோரிக்கை

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி நடைபெறும் ஊர்வலங்கள், சிலை கரைப்பு நிகழ்ச்சிகளில் அரசு ஆணை, நீதிமன்ற உத்தரவுகள், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை சரியாக கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் 24.08.22 புதன்கிழமை மாலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் முகில்ராசு,கழக நிர்வாகிகள் தனபால், ராமசாமி மாணவர் கழகத்தின் மகிழவன், கழகத் தோழர்கள் அய்யப்பன் திலகவதி, மாரிமுத்து ஆகிய தோழர்கள் பங்கேற்றனர்.

ஈரோடு வடக்கு மாவட்டம்: திராவிடர் விடுதலைக் கழகம் ண ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பாக, பிள்ளையார் சிலையை வைப்பதற்கும், கரைப்பதற்கும், ஊர்வலமாக எடுத்து செல்வதற்கும் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்,  தமிழ் நாட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின் படியும், சிலை வைப்பவர்கள் அரசின் விதி முறைகளை கடைபிடிக்கிறார்களா என்றும்  விதி மீறல்கள் இருக்கும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் இடம் ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் தோழர் வேணுகோபால் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.

இதில்,  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பவானி தொகுதி செயலாளர் ஆற்றல் அரசு, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் செம்பன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதிதாக இணைந்துள்ள சதீஷ் ஆகியோர் உடன்  இருந்தனர்.

பெரியார் முழக்கம் 01092022 இதழ்

 

You may also like...