Author: admin

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு !

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு !

தியாகி இம்மானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாடு ! 07.02.2021 – ஞாயிறு – மதியம் 2.00 மணி ஆர்.கே.மண்டபம் – ஒத்தக்கடை – மதுரை. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் MP, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை அமைப்பின் தலைவர் தோழர் பேரா சுபவீரபாண்டியன் ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள். தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற  வேண்டும்...

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்.. தோழர் தா.பா முடிவெய்திவிட்டார். தா.பாண்டியன் அவர்களின் கம்பீரமான குரல் இன்று மவுனித்துவிட்டது. கடந்தகாலத் தலைமுறையில் மிக மூத்த பொதுவுடமைத் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன்னுடைய 88 ஆவது வயதில் முழுவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவதிக்குள்ளாகி, டையாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பெரியார் இயக்கம், பொதுவுடமை இயக்கம் இரண்டும் சேர்ந்து பயணிக்க வேண்டும். வர்க்க பேதம், வர்ண பேதம் இரண்டுக்கும் எதிரான ஒரு மக்கள் அணி திரட்டல் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று அவர் பொதுவுடமை மேடைகளிலும் பேசினார், பெரியார் இயக்க மேடைகளிலும் பேசினார். இட ஒதுக்கீட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோர்...

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா!

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மகளிர் தின விழா! நாள் :07.03.2021, ஞாயிறுகாலை நேரம் : 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்: ஆயிரப்பேரி விலக்கு அருகேயுள்ள தோப்பு பழைய குற்றாலம் செல்லும் வழி, குற்றாலம். தலைமை :தோழர். கலாவதி , பொறுப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம், தென்காசி மாவட்டம். முன்னிலை : தோழர். கோமதி, நெல்லை தோழர். வெற்றிச் செல்வி , சூரங்குடி தோழர். சுமதி , செட்டியூர், தென்காசி தோழர். மாரீஸ்வரி, தூத்துக்குடி தோழர். அனிதா, கபாலிபாறை வரவேற்புரை : தோழர். இரமணி, கீழப்பாவூர். சிறப்புரை : “திராவிடர் இயக்கமும் பெண்ணுரிமையும்” எனும் தலைப்பில் பால். பிரபாகரன் (பரப்புரைச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்) மகளிர் தின விழா உரை தோழர். சங்கீதா, (அமைப்பாளர், திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம்) தோழர். அ. மாசிலாமணி தென்காசி மாவட்டத்தலைவர் தி.வி.க. தோழர். பா.பால்வண்ணன் நெல்லை...

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கருத்தரங்கம் !

பேரறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி கருத்தரங்கம் !

பேரறிஞா அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் #கருத்தரங்கம் ! தலைப்பு : “அண்ணாவைப் பேசுவோம் வாசிப்போம்” நாள் : 27.02.2021 சனிக்கிழமை நேரம் : மாலை 5 மணி இடம் : திவிக தலைமை அலுவலகம், மைலாப்பூர்,சென்னை. தமிழ்நாடு மாணவர் கழக தோழர்கள் கருத்துரையாற்றுகின்றனர். சென்னை அறிவுமதி நிகழ்விற்கு தலைமை ஏற்கிறார். கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றவுள்ளார். அண்ணாவைப் பற்றி அறிவோம், உரையாடுவோம் !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் அவர்களும் மற்றும் தோழமை இயக்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள். நாள் : 28.02.2021 ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி இடம் : வாடிப்பட்டி,மதுரை. மாநாடு ஒருங்கிணைப்பு : RMPl தமிழ்நாடு மாநிலக் குழு

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் !

கழக செயல் வீரர் தோழர்.மு.அறிவரசு அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் ! வருகிற ஞாயிறு 28/02 மாலை 4 மணிக்கு, துடியலூர், அண்ணா (காலனியில்)குடியிருப்பு … படத்தை திறந்து வைத்து நினைவேந்தல் உரையாற்றுபவர் : தோழர் கொளத்தூர் மணி அவர்கள். (தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம்)

துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

துடிப்பு மிக்க இளைஞரை கழகம் இழந்து விட்டதே; கோவை அறிவரசு மாரடைப்பால் முடிவெய்தினார்

திராவிடர் விடுதலைக் கழக கோவை மாவட்டத் தோழர் கார்த்தி என்கிற அறிவரசு (36) கடந்த 21.02.2021 அன்று அதிகாலை 3:30 மணியளவில் மாரடைப்பு காரணமாக முடிவெய்தினார். துடியலூரில் உள்ள அண்ணா குடியிருப்பில் அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக உடல் வைக்கப்பட்டது. தோழர் அறிவரசு கொள்கைப்படியே இறுதி நிகழ்வு எந்தவித, ஜாதி, மத சடங்குகள் இல்லாமல் கருப்புத் துணியும், கழகக் கொடியும் போர்த்தி, கழகப் பெண் தோழர்கள் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த திருநங்கை மெஹந்தி ஆகியோர் அவரது உடலை தூக்கினர். துடியலூர் மின் மயானத்தில் அறிவரசு உடல் மாலை 5:30 மணியளவில் எரியூட்டப்பட்டது. இல்லத்தில் இருந்து மின் மயானம் வரை கழகத் தோழர்களும், அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்களும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டே வந்தனர். கடந்த 09.02.2020 அன்று கோவையில் நடைபெற்ற நீலச்சட்டை பேரணியில் குடும்பத்துடன் தன்னை கழகத்தில் அறிவரசு இணைத்துக்கொண்டார். மேட்டுப்பாளையத்தில் நடந்த பெரியாரியல் பயிலரங்கில் குடும்பத்துடன் பங்கேற்றார். பெரியாரியலை தேர்வு செய்து...

சென்னையில் ‘ஊபா’ எதிர்ப்பு கருத்தரங்கம்

சென்னையில் ‘ஊபா’ எதிர்ப்பு கருத்தரங்கம்

‘‘ஊபா’வை நீக்கிட என்.அய்.ஏ வை கலைத்திட குரலெழுப்புவோம்’ கருத்தரங்கம் சென்னை நிருபர்கள் சங்க கட்டிடத்தில் 20.02.2021 அன்று மதியம் 3 மணியளவில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, “பிரிட்டிஷ் அரசாங்கம் கொண்டு வந்த சட்டங்களே பிரிட்டிஷ் அரசாங்கமே கலைத்துவிட்டது. அதன் மாற்றே இந்த ஊபா சட்டம். அது தேச விரோதி களுக்கு எதிராக பயன்படுத்துவதாக பாஜக அரசு கூறி வருகிறது, மக்களுக்காக சிந்திப்பவர்கள் தான் தேச விரோதி களென்றால், நாம் தேச விரோதிகளா கவே இருப்போம்” என்று கருத்துரை யாற்றினார். கருத்தரங்கில் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி, மயிலை இராவணன் மற்றும் சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 25022021 இதழ்

கழக ஏடுகளுக்கு சந்தா: கோபி இளங்கோவன் பாராட்டத் தக்க பணி

கழக ஏடுகளுக்கு சந்தா: கோபி இளங்கோவன் பாராட்டத் தக்க பணி

கொரோனா காலத்தைப் பயன்படுத்தி கழக வெளியீட்டு செயலாளர் கோபி இராம. இளங்கோவன் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு தலா 108 சந்தாக்களை சேர்த்து முகவரிப் பட்டியலுடன் உரிய தொகை ரூ.54,000/-த்தை அனுப்பியுள்ளார். ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்கு மாவட்டம் தோறும் நன்கொடை வழங்க தலைமைக் குழுவில் முடிவெடுக்கப்பட்டதைத்  தொடர்ந்து இதுவரை சேலம் (மேற்கு), சென்னை மாவட்டம் தலா ரூ.10,000/- வழங்கியுள்ளது. பெரியார் முழக்கம் 25022021 இதழ்

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு

திருப்பூர் மாவட்டம் ஆத்துப் பாளையம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மதனின் ‘தந்தை பெரியார் மளிகை அங்காடி’ திறப்பு விழா 18.02.2021, வியாழன் காலை 11.30 மணியளவில் நடை பெற்றது. விழாவிற்கு திருப்பூர் மாவட்டக் கழகத் தலைவர் முகில்ராசு தலைமை தாங்கினார். முதல் நிகழ்வாக பகுத்தறிவுப் பாடல்களை து. சோ. பிரபாகர், பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோர் பாடினர். கழகப் பொருளாளர் துரைசாமி அங்காடியை திறந்து வைத்து உரையாற்றினார்.  அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின்முன்னாள் வார்டு கவுன்சிலர் செந்தில்குமார்  விற்பனையை தொடங்கி வைத்தார்.  கழக அமைப்புச் செயலாளர் இரத்தின சாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி, இயற்கை ஆர்வலர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்திகழ்வில், திவிக கோவை மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட அமைப்பாளர் அகிலன், சங்கீதா, திருப்பூர் தெற்குப் பகுதிச் செயலாளர் ராமசாமி, மாநகரத் தலைவர் தனபால், திராவிடர் இயக்கத்...

மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.02.2021 அன்று ஞாயிறு மாலை 4 மணியளவில் கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வெளியீட்டு செய லாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும், வீரப்பன் வழக்கில் பெரும் சிக்கலுக்கு ஆளாகி சிறையில் வாடுபவர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டக்...

‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

‘சமூக நீதி சாதனையாளர்’ விருது பெற்றார் வே. ஆனைமுத்து

சர்வதேச சமூக நீதி நாளான பிப்ரவரி 20 – முன்னிட்டு 20.02.2021 அன்று 25க்கும் மேற்பட்ட பிற்படுத்தப்பட்ட ஊழியர் சங்கங்களை உள்ளடக்கிய தேசிய பிற்படுத்தப்படட ஊழியர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் ஓய்வறியா இட ஒதுக்கீட்டு போராளி, மண்டல் குழு அமைக்கக் காரணமான முன்னோடிகளில் ஒருவருமான, சீரிய பெரியார் கொள்கை செயல்பாட்டாளர், 96 வயதாகும் அய்யா ஆனைமுத்து அவர்களுக்கு வாழ்நாள் சமூக நீதி சாதனையாளர் விருது வழங்கியும், அவருடைய சீரிய பணியினை பாராட்டும் விதமாக ஒரு லட்சம் ரூபாய் நிதியும் அளிக்கப்பட்டது. நிகழ்வில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் ஆச்சாரி தல்லொஜு, பெல் ராணிப் பேட்டை தொழிற்சாலையின் நிர்வாக இயக்குனர் மூர்த்தி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர். பேரமைப்பின் நிர்வாகிகளான கு.தனசேகர், சி.சேதுபதி , ஆர்.அப்சல், ஆர்.செந்தாமரைக்கண்ணன் பங்கேற்றனர். பெல் இராணிப்பேட்டை கலையரங்கத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் திரளான பெல் தொழிலாளர்களும் சமூக நீதி ஆதரவாளர்களும் பங்கேற்றனர். முன்னதாக பெல் பிற்படுத்தப்பட்டோர் சங்கத்திற்கு வழங்கப்பட்ட...

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (2) பிறவி ஆதிக்கம் – பணக்கார ஆதிக்கம் – இரண்டையும் எதிர்க்க  வேண்டும் என்று கூறியவர் பெரியார்

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (2) பிறவி ஆதிக்கம் – பணக்கார ஆதிக்கம் – இரண்டையும் எதிர்க்க வேண்டும் என்று கூறியவர் பெரியார்

டி           காங்கிரசிலிருந்து கொண்டே பொதுவுடைமை பேசினார், பெரியார். டி           நீதிக் கட்சியை ஆதரித்த பெரியார், அதில் தலைவர்களாக இருந்த ஜமீன்தார்களையும் மிட்டா மிராசுதாரர்களையும் கடுமையாக எதிர்த்தார். டி           தீண்டப்படாத மக்களுக்கு ‘தனிக் கிணறு’ திறக்கக் கூடாது; பொதுக் கிணற்றில் நீர் எடுக்கப் போராட வேண்டும் என்றார். டி           பார்ப்பனரல்லாதாரில் 2 சதவீதம் பேர் மட்டுமே படிக்கத் தெரிந்த காலத்தில் ‘ரிவோல்ட்’ என்ற புரட்சி ஆங்கில இதழை சோவியத் புரட்சி நடந்த நவம். 7ஆம் தேதியை தேர்வு செய்து தொடங்கினார். குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது. முதல் பாகம் தொடர்ச்சி  எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி-மதப்...

உயர்ந்தவர் யார்?

உயர்ந்தவர் யார்?

ஓட்டல்காரன் – அன்னதானப் பிரபு ஆவானா ? சம்பள உபாத்தியாயர் – குருநாதனாவானா ? தாசி – காதலியாவாளா? என்பது போலத்தான் தன்தன் நலனுக்கு, தன்தன் பொறுப்புக்கு ஆகக் காரியம் செய்யும் எவனுடைய காரியம் – எப்படிப் பட்டதாயினும் அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியில்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் – அதாவது தன்னைப் பற்றிய கவலையில்லாமல், பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துக் கொண்டு தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத்தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள் – தனிப்பட்ட வகுப்புகள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது, பொதுவாக மதிக்காததாகாது.                                                         விடுதலை 08.04.1930 பெரியார் முழக்கம் 25022021 இதழ்

வினா விடை

வினா விடை

தவறு பா.ஜ.க. மீது இல்லை; சட்டமன்ற உறுப்பினர்களைக் கட்சியில் தக்க வைத்துக் கொள்ளாத நாராயணசாமி மீது தான் குற்றம். – தொலைக்காட்சியில் பா.ஜ.க. விவாதம் ஆமாம்! வீடு புகுந்து பணம், நகைகளைக் கொள்ளையடித்தவன் மீது குற்றம் அல்ல; அதைப் பாதுகாப்பாக தக்க வைத்துக் கொள்ள முடியாத வீட்டுக்காரர்தான் குற்றவாளி! ம.பி. முதல்வர் சவுகான் அரசு விடுதியில் கொசுக்கடிக்கு உள்ளானதால் அதிகாரி பதவி நீக்கம். – செய்தி கடித்த கொசு வேறு மதத்தைச் சார்ந்த கொசுவாக இருக்கலாம்! பாவம்! அந்த அதிகாரியை விட்டு விடுங்கள்! பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றிய கேள்விகளுக்கு பதிலளிப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. – நிர்மலா சீத்தாராமன் அதை உங்கள் கட்சி தமிழ்நாட்டு தலைவர்களிடம் விட்டுவிடுங்கள். பெட்ரோல் விலை உயர்வது மோடி ஆட்சியின் பொருளாதார வளர்ச்சியே என்று பதிலடி தருவார்கள்! பா.ஜ.க.வில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு கோரும் திட்டமில்லை. – பா.ஜ.க. முருகன் ஆமாம்! இங்கே ஆளுநர்...

அறிவியலாளர்கள் எதிர்ப்பால் பல்கலைக்கழக மானியக் குழு  பசு மாடு குறித்து நடத்தவிருந்த தேர்வு நிறுத்தப்பட்டது

அறிவியலாளர்கள் எதிர்ப்பால் பல்கலைக்கழக மானியக் குழு பசு மாடு குறித்து நடத்தவிருந்த தேர்வு நிறுத்தப்பட்டது

அறிவியலாளர்கள் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மூடநம்பிக்கை கட்டுக் கதைகளைக் கொண்ட ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வை ‘இராஷ்டிரிய காமதேனு அயோக்’ என்ற தேர்வை மத்திய அரசு நிறுவனம் நிறுத்தி வைத்துள்ளது. ஆன்லைன் வழியாக பிப். 25இல் இந்தத் தேர்வு நடக்கவிருந்தது. மாணவர்களை ‘காமதேனு பசு அறிவியல்’ தேர்வு எழுதச் செய்ய ஊக்கு விக்குமாறு பல்கலைக்கழக மான்ய ஆணையம் (யுஜிசி) நாட்டின் அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் உத்தரவிட் டிருக்கிறது. இது மூட நம்பிக்கையைப் பரப்பும் நடவடிக்கை என கேரள அறிவியல் இயக்கம் (கேரள சாஸ்திரிய சாகித்ய பரிசத் – கேஎஸ்எஸ்வி) மற்றும் அறிவியல் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பல்கலைக் கழக துணைவேந்தர் களுக்கான சுற்றறிக்கையில், “மாட்டு அறிவியலில் ஒரு நபர் எவ்வளவு நிபுணத்துவம் பெற்றிருக்கிறார் என்பதை சோதிக்க ‘காமதேனு கோ விஞ்ஞான் பிரச்சார் தேர்வு’ எழுதுமாறு (யுஜிசி) மாணவர்களைக் கேட்டுக் கொண் டுள்ளது. யுஜிசி செயலாளர் ரஜ்னீஷ் ஜெயின் கையெழுத்திட்ட சுற்றறிக்கையை...

தலையங்கம் இதற்குப் பெயர்  ‘இந்துத்துவா’ ஜனநாயகம்

தலையங்கம் இதற்குப் பெயர் ‘இந்துத்துவா’ ஜனநாயகம்

பா.ஜ.க.வும் சங் பரிவாரங்களும் பேசும் இந்துத்துவா அரசியல் மக்கள் உரிமைகளுக்கும் சுயமரியாதைக்கும் நேர் எதிரானது. சுருக்கமாக இப்படி கூறலாம். பெரும்பான்மை உழைக்கும் மக்களை, பார்ப்பனிய வைதிக ஒடுக்குமுறை பண்பாட்டுக்கு சேவகம் செய்ய வைத்து மக்களின் சுயமரியாதையை அதற்கு விலையாகக் கேட்கும் கொள்கையே இந்துத்துவா. சமூக  அதிகாரம் ஒரு குறிப்பிட்ட ஆதிக்க சக்திகளிடமே தொடர வேண்டும் என்ற பார்ப்பனிய கோட்பாட்டையே அரசியலிலும் அவர்கள் செயல்படுத்துகிறார்கள். அதற்காக இந்தியாவின் ஆட்சி அதிகாரம் முழுமையும் பா.ஜ.க.வின் அதிகாரத்துக்குள் கொண்டு வரத் துடிக்கிறார்கள். மதத் தாவல் சட்ட விரோதம் என்று சட்டம் போடுகிறார்கள். ஆனால், ‘கட்சித் தாவல்’ செய்வதை ஊக்குவிக்கிறார்கள். ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத மாநிலங்களில் ஆட்சி அதிகாரங்களை முறைகேடுகளாக ஒளிவுமறைவின்றி பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற ஆட்சிகளைக் கவிழ்க்கிறார்கள். இப்போது புதுச்சேரியிலும் நாராயணசாமி அவர்களை முதல்வராகக் கொண்டு நடந்த காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்திருக்கிறார்கள். அடுத்த வாரத்தில் மாநில சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வரப்போகும் நேரத்தில்...

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

அரியலூரில் கழகம் நடத்திய ஒரு நாள் பயிற்சி வகுப்பு

20.02.21 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடலூர் மற்றும் அரியலூர் மாவட்டம் இணைந்து நடத்திய ஒருநாள் பயிலரங்கம், ஆண்டிமடத்தில் பெரியார் – அண்ணா அரங்கில் நடைபெற்றது. கடலூர் மாவட்ட அமைப்பாளர் அ. மதன்குமார், கடவுள் மறுப்பு கூறி நிகழ்வை தொடங்கி வைத்தார். முதல் நிகழ்வாக தலைமைக் குழு உறுப்பினர் மயிலாடு துறை ந. இளையராஜா, ‘பயிலரங்கத்தின் நோக்கம் மற்றும் நடப்பு அரசியல்’ குறித்து உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து ‘திராவிட இயக்க வரலாறு’ குறித்து தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். மதிய உணவுக்குப் பிறகு 2.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்ட தலைவர் துரை. தாமோதரன், அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்பு நிகழ்ச்சிகளை கலை வடிவில் நடத்தினார். அதனைத் தொடர்ந்து தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார், ‘அமைப்பாவோம்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, ‘பெரியாரிய பார்வையில் அம்பேத்கர்’ எனும் தலைப்பில் உரையாற்றினார். பயிலரங்கத்தில்...

‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை’ உருவாக்கக் களம் கண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்

‘ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை’ உருவாக்கக் களம் கண்ட உச்சநீதிமன்ற நீதிபதி பி.பி. சாவந்த்

உச்சநீதிமன்ற நீதிபதியாகி ஓய்வு பெற்ற பிறகும் விளிம்பு நிலை மக்களான தலித், இஸ்லாமியர், ஆதிவாசிகளுக்காகப் போராட்டக் களத்தில் நின்றவர் நீதிபதி பி.பி. சாவந்த். அண்மையில் முடிவெய்தி விட்டார். அவர் வழங்கிய தீர்ப்புகள் சமூக நீதி, மாநில உரிமை வரலாறுகளில் என்றென்றும் உயிர்ப்புடன் இருக்கும். எதிர்கால தீர்ப்புகளுக்கு வெளிச்சம் பாய்ச்சும்! எஸ்.ஆர். பொம்மை வழக்கில் ஆளுநர்கள், மாநில அரசுகளைக் கலைக்கும் தங்கு தடையற்ற அதிகார முறைகேடுகளுக்கு கடிவாளம் போட்டு, அவற்றில் நீதிமன்றம் தலையிட உரிமை உண்டு என்று தீர்ப்பளித்து, மாநில உரிமைக்கு வலு சேர்க்கும் தீர்ப்பை வழங்கி இந்தியா மதச்சார்பற்ற நாடு என்பதையும் உறுதி செய்தார். மண்டல் பரிந்துரை அடிப்படையில் 27 சதவீத பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை எதிர்த்த வழக்கில் (இந்திரா சகானி) அரசியல் சாசன அமர்வில் ஒருவராக இருந்து சமூக நீதியின் நியாயங்களுக்கு தனது தீர்ப்பு வாசகங்கள் வழியாக வலிமை சேர்த்தார். மக்கள் எண்ணிக்கையில் ஒரு சிறு பிரிவினராக இருப்பவர்களின் நலக் கண்ணோட்டத்தில்...

மோடி ஆட்சி கோல்வாக்கர் தத்துவத்தைக் கொண்டாடுகிறது

மோடி ஆட்சி கோல்வாக்கர் தத்துவத்தைக் கொண்டாடுகிறது

மோடி ஆட்சியின் கலாச்சாரத் துறை அமைச்சகம், ஆர்.எஸ்.எஸ். ‘தத்துவத் தந்தை’யான எம்.எஸ். கோல்வாக்கரின் பிறந்த நாளில் அதிகாரப் பூர்வமாக டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட் டிருக்கிறது. “கோல்வாக்கர் மிகப் பெரும் சிந்தனை யாளர்; அறிவு ஜீவி; வரலாற்றில் இடம் பிடித்த மாபெரும் தலைவர்; அவரது சிந்தனைகள் நமக்கு என்றென்றும் ஊக்கம் தரும். நமது அடுத்தடுத்த தலை முறைக்கு வழிகாட்டி நிற்கும்” என்று கோல்வாக்கர் படத்துடன் அந்தப் பதிவு வெளியிடப் பட்டுள்ளது. காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சஷிதரூர் உள்ளிட்ட பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு கலாச்சாரத் துறை அமைச்சரின் பத்திரிகை தொடர்பாளரான நிதின் திரிபாதி என்ற அதிகாரி பதிலளித்துள்ளார். “இந்தியா பல்வேறு கலாச்சாரம் – தத்துவங் களைக் கொண்ட நாடு. எந்தத் தத்துவத்தையும் பேசக் கூடாது என்று ஒதுக்கி வைக்கவோ மவுனிக்கச் செய்யவோ நாங்கள் விரும்பவில்லை” என்று பதில் கூறியிருக்கிறார். இந்தியாவில் பெரியார் தத்துவங்கள் – மார்க்சிய தத்துவங்கள் – மாவோயிச...

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

குமாரபாளையத்தில் பெரியாரிய – இடதுசாரி அமைப்பினர் இணைந்து நடத்திய மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் வட்டம் குமாரபாளையம் கம்பன் நகரில் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழக நகரத் தலைவர் மீ.த.தண்டபாணி தலைமையில் தலித்குமார் வரவேற்புரை நிகழ்த்த, மு. கேப்டன் அண்ணாதுரை, வழக்கறிஞர் கார்த்திகேயன், ஏ. தேவி, எழில்சேரன், பி.ஏ., பி.எல்., பி.லிட்., வழக்குரைஞர் முன்னிலை வகிக்க வாழ்த்துரையாக மு.சாமிநாதன், ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் வேணுகோபால், அன்பழகன் (இலக்கியத் தளம்), பொன் கதிரவன், மார்க்சிய கம்யூனிஸ்ட் (மார்க்சிய-லெனினிஸ்ட்) வாழ்த்துரை வழங்கினர். நிறைவாக மணமக்கள் சரண்யா, பி.ஏ., ச. நந்தக்குமார், பி.ஏ.,  ஆகியோருக்கு உறுதிமொழி கூறி நகரத் தலைவர் வாழ்க்கை இணையேற்பு விழாவை நடத்தி வைத்தார். குருவை வேல்முருகன், முருகாண்டி, வடிவேல் மற்றும் குமாரபாளையம் கழகத் தோழர்களும், கழகக் குடும்பங்களும், மாவட்டச் செயலாளர் மு.சரவணன், முத்துப்பாண்டி மற்றும் தோழர்களும் கலந்து கொண்டனர். இணையேற்பு விழாவில் அனைவருக்கும் தேநீர் விருந்து வழங்கப்பட்டது. தேவி-மாதேஸ்வரன் நன்றி கூற நிகழ்வு நிறைவடைந்தது. ‘புரட்சிப்...

வினா விடை

வினா விடை

வெங்காயத்தை தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பதுக்கியதால் தான் விலை உயர்ந்துள்ளது. – ‘தினமலர்’ செய்தி அப்படியா! அப்ப பெட்ரோல் – டீசலையும் இவுங்கதான் எங்கோ பதுக்கியிருப்பாங்க போல! உடனே கண்டுபிடிக்கனும். இராமன் கோயில் கட்ட இதுவரை 1511 கோடி நிதி வசூல். – அறக்கட்டளைத் தகவல் நிர்மலா சீத்தாராமனிடம் கேட்டிருக்கக் கூடாதா? உணவு மான்யங்களை நிறுத்திவிட்டு பட்ஜெட்டிலேயே நிதி ஒதுக்கியிருப்பாரே! இந்திய நீதிமன்றங்களில் நீதி கிடைப்பது இல்லை.. – ஓய்வு பெற்ற நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதி கிடைக்காவிட்டாலும் ஓய்வு பெற்ற பிறகு நீதிபதிகளுக்கு எம்.பி. பதவி கிடைக்கும். சென்னையில் நடந்த திருப்பதி கோயில் விழாவில் காஞ்சி சங்கரச்சாரி, சேகர் ரெட்டி சிறப்பு விருந்தினர்கள். – செய்தி முன்னாள் கைதிகள் தான்; ஆனாலும் சிறைகளுக்குள்ளும் பக்தியை விட்டு விடாத ‘ஒழுக்கசீலர்கள்’. தனித்துப் போட்டியிட்டால் 234 தொகுதிகளும் தே.மு.தி.க. தான் வெற்றி பெறும். – பிரேமலதா அய்யய்யோ… அப்படி எல்லாம் செஞ்சிடாதீங்க. பாவம் தி.மு.க.,...

மணப்பாறையில் கழகக் கூட்டம்: கொளத்தூர் மணி சிறப்புரை

மணப்பாறையில் கழகக் கூட்டம்: கொளத்தூர் மணி சிறப்புரை

மணப்பாறையில் திராவிடர் விடுதலைக் கழகம், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ‘திராவிடத்தை ஆதரிப்போம்’ விளக்கப் பொதுக்கூட்டம் 3.2.2021 அன்று மாலை 6 மணியளவில் மணப்பாறை தந்தை பெரியார் சிலை அருகில் பெரியார் பெருந்தொண்டர் டைலர் சேகர் நினைவு திடலில் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் ஒன்றிய அமைப்பாளர் வீ.தனபால் வரவேற்புரையாற்றினார்.  மணவை சீரா. ஆனந்தன் (ஒன்றிய பொருளாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி), சந்துரு (வழக்கறிஞர் திராவிடர் விடுதலைக் கழகம், திருச்சி, மாதம்பட்டி), கார்த்திகேயன் (மணப்பாறை நகர அமைப்பாளர்), விஜயகுமார் (கடவூர் பகுதி பொறுப்பாளர், திராவிடர் விடுதலைக் கழகம்), விஜயா மோகன் (கடவூர் ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர்  முன்னிலை வகித்தார்கள். பகுத்தறிவு பாடல்களை பெரியார் பிஞ்சுகள் யாழிசை, யாழினி பாடினார்கள். ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியை துரை தாமோதரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர், திவிக)  நடத்தினார். பெரியார் பெருந்தொண்டர்கள் அய்யா திருமால், டெய்லர் சேகர் ஆகியோர் படங்களை கழகத் தலைவர் கொளத்தூர்...

ஐ.ஐ.டி.யில் ஓராண்டில் மட்டும் ‘902’ இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை

ஐ.ஐ.டி.யில் ஓராண்டில் மட்டும் ‘902’ இடஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படவில்லை

ஐ.ஐ.டி முனைவர் பட்ட அனுமதிகளில் ஓ.பி.சி, எஸ்.சி., எஸ்.டி பிரிவினர்க்கான இட ஒதுக்கீட்டில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது . மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் அளித்த அதிர்ச்சியான பதிலில் உண்மைகள் வெளி வந்துள்ளன. முனைவர் பட்டக் கல்வியில் அனுமதிக்கப் பட்டுள்ள பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், இதர பிற்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர் எண்ணிக்கை, அப்பிரிவுகளுக்குரிய இட ஒதுக்கீடுசதவீதங்களை விட மிகக் குறைவாக உள்ளது. இந்தியாவின் 23 ஐ.ஐ.டி களில் மொத்தம் 7186 மாணவர்கள் 2020 ஆம் ஆண்டில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இதில் ஓ.பி.சி மாணவர்கள் 1635 பேர், 707 பேர் பட்டியல் சாதியினர், 321 பேர் பழங்குடியினர் என அப் பதிலில் தெரிவிக்கப் பட்டுள்ளது.பட்டியல் சாதியினர் 10 சதவீதத்திற்கு கீழ்பட்டியல் சாதி மாணவர்களின் சதவீதம் குறைந்தபட்சம் 15 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால்...

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (1) பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது

‘பெரியாரும்-மார்க்சியமும்’ தலைப்பில் கொளத்தூர் மணி உரை (1) பெரியார் பேசிய நாத்திகம் சமூக மாற்றத்துக்கானது

டி           சாதியத்தை முதலாளித்துவத்தைப் பாதுகாக்கும் கட்சி என்பதாலேயே பெரியார் காங்கிரசிலிருந்து விலகினார். டி           ஜாதித் திமிர் – பணத் திமிர் அடிப்படையில் இரண்டு சுரண்டல்களையுமே பெரியார் எதிர்த்தார்.   குமரி மாவட்டம் குழித்துறையில் ஜன.24, 2021 அன்று ‘பெரியாரும் மார்க்சியமும்’ என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை இது. எம்.சி.பி.அய்.(யு) என்ற மார்க்சிய கட்சி – தமிழ்நாட்டில் மார்க்சியர்கள் – பெரியாரியலை உள்வாங்கிக் கொள்ளவில்லை என்ற விமர்சன அறிக்கையை வைத்திருந்தது. அதைத் தொடர்ந்து இக்கட்சி வெளியிட்டுள்ள கொள்கை அறிக்கையில், “சாதி-மதப் பிரிவினை சக்திகள் வலிமை பெற்றிருக்கும் இக்காலக்கட்டத்தில் பெரியார், அம்பேத்கரின் தேவையை கட்சி பூரணமாக உணர்ந்துள்ளது” என்று இந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அந்தப் பின்னணியில் இந்தக் கருத்தரங்கையும் ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. நிகழ்வில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. பெரியார் என்பது பெரியாரினுடைய நான்கு கொள்கைகள் தான்.. பெரியாருடைய முதன்மை கொள்கையாக அவர்...

தேசாபிமானமும் தேசியமும்

தேசாபிமானமும் தேசியமும்

தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்ற தேச முதலாளிகளுடன் சண்டைப் போட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக் கொள்ள, ஏழை மக்களை – பாமர மக்களைப் பலி கொடுப் பதற்காகக் கற்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும். குடிஅரசு – 20.11.1932 பார்ப்பனர்கள் என்ன நோக்கத் துடன் தேசியம், தேசியம் என்று கூப்பாடு போடு கிறார்கள் என்பது பற்றிப் பல தடவைகளில் நாம் வெளியிட்டிருக் கிறோம்.  ‘தேசியம்’ என்ற சூழ்ச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதற்குக் காரணமே பார்ப்பனீயமான சனாதன தர்மங்களைப் பலப்படுத்தவே ஒழிய வேறில்லை. குடிஅரசு – 19.03.1933 பெரியார் முழக்கம் 18022021 இதழ்

நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் – கேஸ் விலை உயர்வு

நடுவண் ஆட்சியின் ஈவிரக்கமற்ற பெட்ரோல் – கேஸ் விலை உயர்வு

சிலிண்டர் ‘கேஸ்’ விலை 785 ஆகிவிட்டது. பா.ஜ.க.வின் பொருளாதாரப் புலிகள் இதை நியாயப்படுத்துகிறார்கள். இந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 உயர்ந்துள்ளது. 2014 மே மாதத்தில் டெல்லியில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் அனைத்து வரிகளும் நீங்கலாக ரூ.47.12; இது பிப்ரவரி யில் 2021இல் வரிகள் நீங்கலாக ரூ.29.34 ஆக குறைந்தது. ஆனால், அடிப்படையான பெட்ரோல் விலை மீது நடுவண் ஆட்சி வரி, டூட்டி, கமிஷன், லெவி என்ற பெயர்களில் 217 சதவீத வரிகளைப் போட்டு குறைந்த விலைக்கு மக்களுக்குக் கிடைக்காமல் பார்த்துக்  கொள்கிறது. 2021 பிப்ரவரியில் பெட்ரோலின் சர்வதேச சந்தை நிலவரப்படி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.29.34 காசுகள் மட்டுமே. இத்துடன் மத்திய அரசு போடும் வரி 32.98 (38 சதவீதம்), விற்பனையாளர் கமிஷன் ரூ.3.69 (4 சத வீதம்), விற்பனை வரி ரூ.19.92 (23 சதவீதம்), ஆக அனைத்தையும் சேர்த்து ரூ.86.3-க்கு விற்கப் படுகிறது. (அனைத்து வரிகள் கமிஷன்...

தலையங்கம் ஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா?

தலையங்கம் ஆட்சியை விமர்சித்தால் தேச விரோதிகளா?

ஆட்சிக்கு எதிராக முன்வைக்கப்படும் விமர்சனங்களைக் கண்டு நடுங்குகிறது நடுவண் பா.ஜ.க. ஆட்சி. தங்களிடமுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி செயல்பாட்டாளர்கள், பத்திரிகையாளர்கள், முகநூல் பதிவாளர்களைக் கைது செய்யும் ‘இட்லரிச’ அடக்குமுறைகளைக் கொடூரமாகக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். இதற்காக தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள விசாரணை அமைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். சட்டத்துக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்ற அறவுணர்வு இல்லாத நபர்களை ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்டவர்களை உயர் பதவிகளில் அமர்த்தியிருக்கிறார்கள். மகாராஷ்டிரா மாநிலம் பீமாகோரேகானில் உள்ள தலித் மக்களின் நினைவிடத்துக்கு வீரவணக்கம் செலுத்தச் சென்ற தலித் மக்கள் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். பீமாகோரேகான் பகுதியில் பேஷ்வா பார்ப்பனர் ஆட்சி நடந்த போது கொடூரமான ஜாதி அடக்குமுறைகளை சட்டமாக்கியிருந்தனர். அப்போது பிரிட்டிஷார் படையில் இணைந்து ஒடுக்கப்பட்ட தலித் மக்கள் ‘பேஷ்வா’ படையினருடன் போரிட்டு அவர்களை வீழ்த்தியதன் நினைவாக அங்கே நினைவுத் தூண் எழுப்பப்பட்டது. 2018 ஜனவரி முதல் நாள் அங்கே வீர வணக்கம் செலுத்த வந்தவர்கள் மீது...

அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்துகிறது: கணிப்பொறியில்  மோசடி செய்து பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு

அமெரிக்க நிறுவனம் அம்பலப்படுத்துகிறது: கணிப்பொறியில் மோசடி செய்து பொய் வழக்குகளைத் தயாரிக்கும் புலனாய்வு அமைப்பு

பீமா கோரேகானில் நடைபெற்ற போரில், மராத்திய பேஷ்வா படைகளை வெற்றி கொண்டதன் நூற்றாண்டை, மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள தலித்துக்கள் கடந்த 2018 ஜனவரி 1 அன்று விழாவாக கொண்டாடினர். ஆனால், இந்த விழாவிற்குள் புகுந்த சாதி ஆதிக்க வெறியர்கள், தலித் மக்கள் மீது கொடூர வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் ஒருவர் பலியானார். பலர் காயமடைந்தனர். அன்றைய ஆளும் பாஜக அரசோ, சாதி வெறியர்களை கைது செய்யாமல், விழாவில் கலந்து கொண்ட ஆனந்த் டெல்டும்டே, கவுதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் உள்ளிட்ட தலித் தலைவர்கள், அறிவுஜீவிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து சிறையில் அடைந்தது.இவர்களில் கேரளத்தைச் சேர்ந்த ரோனா வில்சனும் ஒருவராவார். தில்லியில் வசித்து வந்த இவர், ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் எம்.பில் முடித்து, சர்ரே பல்கலைக்கழகம் அல்லது இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி ஆராய்ச்சிக்கான உதவித் தொகை எதிர்பார்த்து காத்திருந்தவர் ஆவார்....

‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்

‘ஊபா’ சட்டத்தை இரத்து செய்: சென்னையில் ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன், தோழர்கள் சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா (ருஹஞஹ) சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 13.02.2021 அன்று காலை 10:30 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு, ஊபா சட்டத்தின் அடக்குமுறைகள் பற்றியும், “அரசியல் சக்திகளை முற்றும் முழுமையாக புறக்கணிக்காமல், அந்த அரசியல் சக்திகள் மக்களின் உணர்வுகளை பேசக்கூடியவர்களாக மாற்றி அந்த அரசியல் சக்திகளை கேடயங் களாக பயன்படுத்தி போராட வேண்டும். மேலும், இது போன்ற கூட்டியக்கத்தில் கலந்து கொண்டிருக்கும் அமைப்புகள் கூட்டியக்கத்தின் நோக்கங்களை பேச வேண்டுமே தவிர அந்த அமைப்புகளின் தத்துவங்களை பேசி இந்த ஒன்றிணைவின் நோக்கத்தை திசை திருப்பாமலும் செயல்பட வேண்டும். ஏனென்றால் தத்துவங்கள் வேறு வேறாக இருப்பதால் தான் நாம் தனித்தனியாக...

வந்து விட்டார் செந்தமிழ் காவலர்

வந்து விட்டார் செந்தமிழ் காவலர்

ஆடிட்டர் குருமூர்த்தி, சசிகலாவை சாக்கடை என்றார். தி.மு.க. என்ற நெருப்பை அணைக்க ‘கங்கை ஜலத்துக்கு’ காத்திருக்க முடியாது; ‘ஆத்து வாசல்ல’ (வீடு என்பதற்கு அவாள் பயன்படுத்தும் மொழி) உள்ள சாக்கடைத் தண்ணீரையும் பயன்படுத்த வேண்டியதுதான் என்பது ‘அவாளின்’ கருத்து. “ஆமாம். ஊழல் என்றாலே, ‘பிரம்மா’வின் நெற்றியில் பிறந்தவாளுக்கு சுத்தமாகப் பிடிக்காது; அவ்வளவு சுத்த சுயம்பிரகாச தங்கக் கட்டிகள்; அது சூத்திரர்களுக்கு மட்டும் தான்; ஜெயலலிதாவுக்கு பொருந்தாது! ஜெயலலிதாகூட ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை பெற்றவர் தான்; 100 கோடி அபராதம் வேறு; ஆனால், தி.மு.க. தான் ஊழல் கட்சி; ஜெயலலிதா புரட்சித்  தலைவி” என்பார்கள். மோடி நேர்மையின் சின்னம் என்பார்கள். அவர், சென்னை அரசு விழாவில் மேடையில் வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா படத்துக்கு ‘மலர்தூவி’ மரியாதை செலுத்திய காட்சியை தொலைக்காட்சிகளில் எல்லோரும் பார்த்தார்கள். அரசுப் பதவியை முறைகேடாகப் பயன்படுத்தி, சொத்துகளைக் குவித்திருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் எழுதியே காட்டியிருக்கிறது....

வினா விடை

வினா விடை

சசிகலா வரவேற்பு; சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற அமைச்சர்கள் காவல்துறை இயக்குனரிடம் மனு. – செய்தி அடுத்து காவல்துறை இயக்குனர் ‘கான்ஸ்டபிளை’ நேரில் சந்தித்து ‘சல்யூட்’ அடித்து, மனு கொடுப்பார் போல! ரூ.250 கட்டினால் பழனி கோயில் பிரசாதம் அஞ்சல் துறை மூலம் வீடு தேடி வரும்.     – அறநிலையத் துறை  அமைச்சர் பக்தியை இப்படியே அமேசான் ‘ஆன் லைன்’ சேவைகளாக்கி விட்டால், கோயில்களையே இழுத்து மூடி விடலாம்! சபாஷ்! பகுத்தறிவு பக்திக்குள்ளும் நுழைஞ்சுட்டுதே! 7 பேர் விடுதலையில் குடியரசுத் தலைவர் முடிவு எடுப்பார். – தமிழக ஆளுநர் அதாவது, ‘எந்த முடிவும் எடுக்க மாட்டேன்’ என்ற முடிவை எடுப்பார்; அப்படித் தானே! நல்ல முடிவு! கடந்த 5 ஆண்டுகளில் சாக்கடைக் குழியில் மனிதக் கழிவுகளை அகற்றும்போது 340 பேர் உயிரிழந்துள்ளனர். – செய்தி அதனால் என்ன? ‘ஸ்வச் பாரத்’ திட்டத்துக்கு எதிராக தீவிரவாதிகள் சதின்னு அறிவிச்சுடலாம்! போராடும் விவசாயிகளுடன் பேசத்...

மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழ வேந்தன்-பேபி இணையரின் மகள் இளவரசி – ஆம்பூர் முபீன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு 3.2.2021 அன்று சென்னை இராயப் பேட்டை பகல் 11 மணியளவில் நடந்தது. இது ஜாதி-மத மறுப்பு திருமணமாகும். மண விழாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி பங்கேற்று வாழ்த்தினர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன் கொடையாக ரூ.5,000/- பொதுச்செயலாளரிடம் வேழவேந்தன் வழங்கினார். பெரியார் முழக்கம் 11022021 இதழ்

கவிக்கொண்டல்  மா. செங்குட்டுவன் முடிவெய்தினார்

கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் முடிவெய்தினார்

திராவிட இயக்க மூத்த பத்திரிகையாளர் கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் தனது 95ஆவது வயதில் சென்னையில் பிப்.5 அன்று முடிவெய்தினார். 70 ஆண்டுகாலம் திராவிட இயக்க இதழ்களில் பணியாற்றிய பெருமைக்குரிய அவர், தி.மு.க. தொடங்கப்பட்ட 1949 செப்டம்பர் 17இல் நடந்த அதன் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற 150 பேரில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமணி, விடுதலை, நம்நாடு உள்ளிட்ட நாளேடுகளில் பணியாற்றியதோடு, ‘எழுச்சி’, ‘கவிக்கொண்டல்’ என்ற இதழ்களையும் நடத்தினார். சீரிய பகுத்தறிவாளர். அவரது முழுமையான திராவிட இயக்கப் பயணத்தை ‘நிமிர்வோம்’ மாத இதழ் (2017, டிசம்பர்) விரிவாக அவருடன் நேர்காணல் நடத்திப் பதிவு  செய்துள்ளது. அவரது தன் வரலாற்றுச் சுருக்கமாக உள்ள ஒரே ஆவணமாக ‘நிமிர்வோம்’ நேர்காணல் உள்ளது. தனது குறிப்பிடத்தக்க சாதனைகளாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு (டிச. 24, 2020) அவர் எழுதிய கடிதம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் பதிவு செய்துள்ளது. ‘கவிக்கொண்டல்’ என்ற கவிதை இலக்கிய...

சமூக நீதிக்கு எதிராக தனியார் துறை ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளை குறுக்கு வழியில் அரசு பதவியில் அமர்த்தும் ஆபத்து: ஸ்டாலின் கண்டனம்

சமூக நீதிக்கு எதிராக தனியார் துறை ஆர்.எஸ்.எஸ். அதிகாரிகளை குறுக்கு வழியில் அரசு பதவியில் அமர்த்தும் ஆபத்து: ஸ்டாலின் கண்டனம்

“சமூகநீதியைச் சீர்குலைக்கும் வகையில் மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்குத் தனியார் துறையி லிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். புதிய கல்விக் கொள்கை, நீட் தேர்வு, வங்கித் தேர்வுகள், யூபிஎஸ்சி தேர்வுகள், ரயில்வே தேர்வுகள், தபால் தந்தி இலாகா உள்ளிட்ட மத்திய அரசின் துறைகளுக்கு நடைபெறும் பல்வேறு தேர்வுகள் ஆகியவற்றில், ஏற்கெனவே சமூகநீதிக்குச் சாவுமணி அடித்து, போதாக்குறைக்குப் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய பிரிவினருக்கு மின்னல் வேகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு அளித்து, இந்நாட்டின் நிர்வாகத்தில் இதர பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின இளைஞர்கள் பங்கேற்க உரிமையில்லை என்று இந்திய அரசிய லமைப்புச் சட்டத்திற்கு எதிராகவே மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்திய வரலாற்றில், சமூகநீதிக்கும் இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கும் முற்றிலும் எதிரான இப்படியொரு அரசு இப்போது பாஜக தலைமையில் அமைந்திருக்கிறது என்பது, நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் கேடு. இதன் அடுத்த கட்டமாகவே, தற்போது இணைச்...

170 தொழிலாளர்கள் பலியானது ஏன்?

170 தொழிலாளர்கள் பலியானது ஏன்?

உத்தரகாண்ட்டில் சூழலைக் கெடுக்கும் மின் திட்டங்களை அனுமதித்ததாலேயே பேரழிவு. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வழக்கத் துக்கு மாறாக உடைந்து உருகியிருக் கிறது. இதன் காரணமாக இரண்டு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு. ரேனி எனும் கிராமத்தில் அமைக்கப்பட்டு வந்த ரிஷிகங்கா நீர் மின் திட்ட, கட்டுமானங்கள் முழுமையாக ஆற்று நீரில் அடித்துச் செல்லப்பட்டதோடு, கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களும் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர். மற்றொரு நீரியல் மின் திட்டமான ‘தபோவன்’ திட்டம் பாதியளவு நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது. 31 பேர் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப் பட்டுள்ளன. தொழிலாளர்கள் 170 பேர் பலியாகிவிட்டனர். இவர்கள் உ.பி., பீகார் மாநிலங்களைச் சார்ந்த தொழிலாளர்கள். பனிப்பாறைகளைக் கொண்ட பகுதியில் ரிஷி கங்கா மின் திட்டத்தை அமைப்பது கடுமையான இயற்கை சீரழிவுகளை உருவாக்கிவிடும் என்று உள்ளூர் கிராம மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். 2019இல் இந்த கிராமத்தைச் சார்ந்த குந்தன் கிங் – உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில்...

‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது

‘தேச துரோகச் சட்டம்’ நீடிக்கக் கூடாது

டி           பத்திரிகையாளர்கள் மீது  தேச துரோகச் சட்டத்தை ஏவுகிறது பா.ஜ.க. ஆட்சி. டி           பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் இப்போது அந்த நாட்டிலேயே நீக்கப்பட்டு விட்டது. டி           அரசியலமைப்பு சபையில் கடும் எதிர்ப்பால் புறக்கணிக்கப்பட்ட இந்த சட்டப் பிரிவு, பிறகு தண்டனைச் சட்டத்தில் திடீரென்று நுழைந்தது.   விவசாயிகள் பேரணி குறித்தும், அதன் தொடர்ச்சியாக நிகழ்ந்த வன்முறைகள் குறித்தும் செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது, வழக்கு போடப்பட் டுள்ளது. ‘இந்தியா டுடே’ வின் ராஜ்தீப் சர்தேசாய், ‘நேஷனல் ஹெரால்டு’ இதழின் மூத்த ஆசிரியர் மிருணாள் பாண்டே, ‘குவாமி ஆவாஸ்’ ஆசிரியர் ஜாஃபர் ஆகா, ‘கேரவன்’ இதழின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத், அதே இதழின் ஆனந்த் நாத், வினோத் கே.ஜோஸ் ஆகியோர் மீது வழக்குகள் பாய்ந்துள்ளன. தேச துரோகம், வகுப்புவாத அமைதி யின்மையைத் தூண்டுதல், மத நம்பிக்கைகளை அவமதித்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் ஒரே நேரத்தில் அய்ந்து...

அரசியல் நிலை

அரசியல் நிலை

யோக்கியர்களே அரசி யல் பொது வாழ்வுக்கு வரும் படியான நிலையை இன்னமும் நம்முடைய நாடு எய்தவில்லை.  பணக்காரனுக்குப் போனது போக மீதிதான் பணக்காரன் அல்லாதவர் களுக்குக் கிடைக்கிறது. அப்படி மற்றவர் களுக்கு கிடைக்கும் ஸ்தானங்களும் பணக்காரத் தன்மைக்கு எவ்வளவு அயோக்கியத்தனம், நாணயக்குறைவு, துரோக புத்தி வேண்டி இருக்கிறதோ அவ்வளவும், அதற்கு மேலும் உள்ளவர் களுக்குத்தான் பெரிதும் கிடைக்கிற மாதிரியில் இருக்கிறது. ஏதோ சிலர் யோக்கியர்களும் இருக்க நேரலாம்; என்றாலும் அவர்கள், யோக்கியமாய் நடந்து கொள்ள முடியாத சூழ்நிலையும், யோக்கியமாய் நடந்தாலும் பயன் ஏற்படாத சூழ்நிலையும், இருந்துவருவதால் யோக்கியமாய் நடந்து கொள்வது முட்டாள்தனம் என்று கருதும்படியாக நேரிட்டுவிடுகிறது. ‘விடுதலை’ 23.07.1952 பெரியார் முழக்கம் 11022021 இதழ்

குமாரபாளையத்தில் நடந்த சரண்யா-நந்தகுமார் மணவிழா

குமாரபாளையத்தில் நடந்த சரண்யா-நந்தகுமார் மணவிழா

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த இ.சரண்யா – ச. நந்தகுமார் இணையரின் சுயமரியாதை திருமணம் 05.02.2021 அன்று காலை 11 மணியளவில் குமாரபாளையம் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்றது. திருமணத்திற்கு  திராவிடர் விடுதலைக் கழக குமாரபாளையம் நகரத் தலைவர் மீ.த. தண்டபாணி தலைமையில், கழகத்தின் நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் உறுதிமொழி கூறி சுயமரி யாதை திருமணத்தை நடத்தி வைத்தார். நிகழ்வில், நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன், மாவட்ட அமைப்பாளர் அ.முத்துப்பாண்டி மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர். வாழ்விணையர்கள் சார்பாக புரட்சி பெரியார் முழக்கத்திற்கு நன்கொடையாக ரூ.1000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 11022021 இதழ்

தமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை

தமிழகத்தின் 48 கேந்திர வித்தியாலயாவில் தமிழோ தமிழாசிரியரோ இல்லை

தமிழ்நாட்டில் மத்திய அரசின் 48 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இங்கே இந்தியும் சமஸ்கிருதமும் கட்டாயம். சமஸ்கிருதம் படித்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே 6ஆம் வகுப்பிலிருந்து 7ஆம் வகுப்புக்கு செல்ல முடியும். அது மட்டுமல்ல, சமஸ்கிருதத்துக்கு பதிலாக தமிழைப் பாட மொழியாக தமிழ்நாட்டு மாணவர்கள் ஏற்று படிக்கவும் முடியாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்த உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் விருப்பப் பாடமாக கற்பிக்கப்படுகிறது என்று மத்திய அரசின் வழக்கறிஞர் சென்னை உயர்நீதி மன்றத்தில் கூறினார். தமிழ் ஏன் விருப்பப் பாடமாக இருக்க வேண்டும்? பிரெஞ்சு, ஜெர்மன், வங்காளம் உள்ளிட்ட மொழி களைக் கற்கலாம். தமிழ் மொழியை கற்கக் கூடாதா என்று நீதிபதிகளே கேட்டனர். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பைக் கண்டித்து வெளியிட்ட அறிக்கையில் இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி கற்றுக் கொடுக்க மாட்டோம்; இந்தி ஆசிரிர்களை நியமிக்க...

தலையங்கம் தமிழக அரசியல் அவலங்கள்

தலையங்கம் தமிழக அரசியல் அவலங்கள்

‘பொது மக்களிடம் பெரிதும் புத்தியும் இல்லை; ஒழுக்கமும் இல்லை; மானமும் இல்லை என்ற நிலை இருப்பதால் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஆளும் கட்சியும் வயிற்றுப் பிழைப்புக்கும் பொது நல வேடம் போட்டுக் கொண்டு திரியும் எந்த அரசியல் கட்சியும் திருந்துவதற்கு வகையே இல்லாமல் போய்விட்டது.” – இது 1959ஆம் ஆண்டு பெரியார் ‘விடுதலை’யில் எழுதிய அரசியல் குறித்த மதிப்பீடு. சுமார் 60 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஆனாலும் தமிழ்நாட்டில் கட்சி அரசியல் –  தேர்தல்அரசியல் – மாண்புகள் மேலும் மேலும் சீரழிந்து கொண்டே இருக்கின்றன. தமிழ்நாட்டில் இப்போது எம்.ஜி.ஆர். தொடங்கிய ‘அ.இ.அ.தி.மு.க.’வில் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் தமிழகத்தையே தலைகுனியச் செய்துள்ளன என்ற உண்மையை மறுக்கவே முடியாது. இந்தியாவிலேயே முதலமைச்சராக பதவியில் இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக ஊழல் செய்து சொத்துக்களைக் குவித்த வழக்கில் தண்டிக்கப்பட்டவர் – முடிவெய்திய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஒருவர் மட்டுமே. சிறைத் தண்டனையோடு 100 கோடி அபராதமும்...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றாலே ‘ஊபா’ சட்டத்தை ஏவுவதா? கழகத் தலைவர் கண்டனம்

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றாலே ‘ஊபா’ சட்டத்தை ஏவுவதா? கழகத் தலைவர் கண்டனம்

கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே வனப்பகுதியில் கேரள போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த கணவாய்ப்புதூர் கிராமத்தைச் சேர்ந்த மணிவாசகம் என்பவர் கொல்லப்பட்டார். அவரது உடல் சொந்த ஊரான கணவாய்புதூரில் கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தகனம் செய்யப்பட்டது.  அந்த இறுதி நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக தோழர்கள் சிலர் மீது சட்ட விரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சில பிரிவுகளில் தமிழக அரசு வழக்குப் பதிவு செய்தது. அவர்கள் மீது மாவோயிஸ்ட்டுக்கு ஆதரவாகவும், அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியதாக புகார் எழுப்பப்பட்டது. இந்நிலையில் சேலத்தில் 07.02.2021 அன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் பாலன் (41), தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாவட்ட தலைவர் சீனிவாசன் (66) இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் அடக்குமுறை ‘ஊபா’...

மானாட, மயிலாட

மானாட, மயிலாட

(சசிகலா, ஊழல் வழக்கிலிருந்து தண்டனைப் பெற்று விடுதலையாகி வருவதைக் கொண்டாடி மகிழ்வதைக் கண்டு குமுறி ஒரு வாசகர் மின்னஞ்சல் வழியாக அனுப்பியது.) தாய்த் திருநாட்டை தளை கொண்ட எதிரியை மூண்டெழுந்த போரில் வீழ்த்தி வாகை சூடி வீதிவலம் வருகின்ற வெற்றித் திருவுருவை வாழ்த்தி வரவேற்க முழங்கிடு சங்கே! ஆடிடு மயிலே! அரண்மனை நீங்கி அரியணை துறந்து கானகம் ஏகி கடுந்தவம் புரிந்து மானுட வாழ்வின் துக்கம் நீங்க மருந்தொன்று தாங்கி போதிமரத்து மனிதர் வருகிறார் கொட்டுக பறையே! கூவிடு குயிலே! எங்கோ பிறந்து வளர்ந்து இங்கு வந்து, ஏழையின் துயர்கண்டு பசி, பட்டினி பாழ்நோய் போக்க தனித்த நின்று தவ வாழ்க்கைக் கொண்டு ஈ(க) என இரந்து இழிமொழி சுமந்து தள்ளா வயதிலும் உலகம் சுற்றி நிதி திரட்டி விழிநீர் துடைக்கும் ஏந்தல் வருகிறார் மகுடமே ஒலித்திடு! மான்களே ஆடுங்கள்! சாதி மத பேதம் மாய்த்திட சாமானியனின் முதுகு நிமிர்ந்திட (தன்)...

இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு இளைஞர்கள் வகுப்பு எடுத்த பெரியாரியல் பயிற்சி முகாம்

இளைய தலைமுறையினருக்கு பெரியாரியலை அறிமுகப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் மேட்டூரில் 2021, பிப். 6, 7 தேதிகளில் தாய்த் தமிழ்ப் பள்ளி அரங்கில் சிறப்புடன் நடந்தன. இரு நாள் பயிற்சி வகுப்பிலும் 50 மாணவிகள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்றனர். முதல் நாள் பயிற்சி வகுப்பை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடங்கி வைத்தார். வாழ்க்கையில் முக்கியமான இளமைக் காலத்தில் பதிய வைக்கும் சிந்தனைகள் மானுட வாழ்க்கையில் மிகவும் முக்கியமானவையாகும். இன்றைய சமூகச் சூழல் இளைஞர்களைக் குழப்பக் கூடியதாகவும் பல நேரங்களில் சமூக விரோதிகளாக செயல்படவும் தூண்டுகின்றன. சிலர் ஜாதி சங்கங்களிலும் சிலர் பொழுது போக்கு கேளிக்கைகளிலும் மூழ்கி விடுகிறார்கள். நேர்மையான சமூகக் கவலையுள்ள சமூக மாற்றத்துக்கு பங்களிப்புகளை வழங்கக் கூடிய இளைஞர்களாக உருவாவதற்கு உரிய சிந்தனைகளை நாம் சிந்தனையில் ஏற்றிக் கொள்ள வேண்டும். பெரியார் சிந்தனைகள் வாழ்க்கைக்கான இலட்சியத்தையும் மானுடப் பண்புகளையும் சுயமரியாதை உணர்வுகளையும் பகுத்தறிவையும் பெண்களை சமமாக ஏற்கும்...

வினா விடை

வினா விடை

பா.ஜ.க. – அ.இ.அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும்.                                 – ஜே.பி. நட்டா அ.இ.அ.தி.மு.க.வுக்கு 20 இடங்கள் ஒதுக்குவீர்களா? அல்லது அதற்கும் குறைவாகவா? உலகப் பிரச்சினைகளையெல்லாம் இந்தியா தீர்த்து வைத்திருக்கிறது.                                 – மோடி கடந்த ஆண்டு நீங்கள் உலகப் பயணமே போகவில்லையே! அதுதான் ‘ஜி’ காரணம்! புரட்சித் தலைவி அம்மா உயிருடன் இருந்திருந்தால்கூட இவ்வளவு சிறப்பாக நினைவிடம் அமைத்திருக்க முடியாது. – அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் இந்தப் பொன்மொழியை அங்கேயே ஒரு கல்வெட்டில் செதுக்கி, எவரும் இடித்து விடாமல் பாதுகாக்க அங்கேயே உட்கார்ந்துக்குங்க. நான் எதற்கு கருவறைக்குள் போக வேண்டும்? அதற்குரிய தகுதி உள்ளவர்கள்தான் போக முடியும். – பா.ஜ.க. தலைவர் முருகன் பா.ஜ.க. தலைவராக இருக்க உங்களுக்கு முழுத் தகுதி இருக்கிறது என்பதை நிரூபிச்சுட்டீங்க. தேசியக் கொடி அவமதிப்பால் தேசம் அதிர்ச்சி அடைந்துள்ளது. – மோடி பேச்சு அதை சரி செய்யத்தான் தேசத்தைப்...

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் தந்தை நடேசன் படத்திறப்பு

கழகத் தலை மைக் குழு உறுப் பினர் ந. அய்யனார் தந்தை நடேசன்(75) கடந்த 25.01.2021 அன்று அதிகாலை உடல் நலக் குறைவால் முடிவெய்தினார். நடேசன் அவர்களின் இறுதி நிகழ்வு 25.01.2021 அன்று மாலை 4 மணியளவில் எந்த வித சடங்கு, சம்பிரதாயங்களும் இல்லாமல் நடைபெற்றது. நடேசனின் படத்திறப்பு நிகழ்வு 31.01.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் கடுவனூரில் காலை 10 மணியளவில் நடைபெற்றது. நிகழ்விற்கு, ச.கு.பெரியார் வெங்கட் வரவேற்பு கூறினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி படத்தைத் திறந்து வைத்தார். தலைமைக் குழு உறுப்பினர் ந. அய்யனார் தொடக்கவுரையாற்றினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, தலைமைக்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன், திவிக  கள்ளக்குறிச்சி  மாவட்ட அமைப்பாளர் சி.சாமிதுரை, விழுப்புரம் மாவட்டத் தலைவர் பூ.ஆ. இளையரசன், விழுப்புரம் மாவட்ட செயலாளர் கோ.சாக்ரடீசு, வேலூர் மாவட்ட செயலாளர் இரா.பா.சிவா, சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, மக்கள் குடியரசுக் கட்சி தம்பி மண்டேலா, கள்ளக்குறிச்சி திராவிடர்...

தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்

தேர்தல் களத்தை மாற்றி அமைக்கும் தி.மு.க.வின் மக்கள் சந்திப்புகள்

தமிழ்நாட்டு தேர்தல் களத்தில் மக்கள் பிரச்சினைகளை நேரடியாக  அறிந்து அவைகளை ஆட்சிக்கு வந்தால் தீர்த்து வைக்கும் ஒரு திட்டத்தோடு தி.மு.க. களமிறங்கியிருப்பது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒரு அணுகுமுறையாகும். கடந்த காலங்களில் குறிப்பாக ‘எம்.ஜி.ஆர். – ஜெயலலிதா’ என்ற திரைப்பட பிம்பங்கள் அரசியலுக்கு வந்த பிறகு தேர்தல் பரப்புரையின் முறைமைகளே மாறிப் போனது. இந்த ‘பிம்பங்களை’ நேரில் பார்க்க வேண்டும் என்று துடித்துக் கொண் டிருந்த மக்கள் கூட்டத்தைத் திரட்டி அவர்கள் முன் தோன்றினாலே போதும்  என்ற நிலை உருவாக்கப்பட்டது. தேர்தலுக்கு 15 நாட்களுக்கு முன்பு அவர்களுக்கான பரப்புரைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு மக்களை உரிய ‘வசதி’களைத் தந்து திரட்டிக் கொண்டு வருவார்கள். இதற்கு பல கோடி ரூபாய் பணம் தண்ணீராய் வாரி இறைக்கப்படும். ஹெலிகாப்டர்களில் தலைவர்கள் வந்து இறங்கி எழுதி வைத்த உரையைப் படிப்பார்கள். 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் வரும்போது, அந்த 15 அல்லது 20 நாட்கள் மட்டுமே...

காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

காந்தி கொலை: காபூர் விசாரணையிலிருந்து தப்பிக்க முயன்றவர் சாவர்க்கர் (3) ‘ஆனந்த விகடன்’ வார ஏடு, 2019, டிசம்பர் 18 இதழில் சாவர்க்கர் பற்றிய கட்டுரை இது.

  காந்தி கொலையை மறு விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட கபூர் ஆணையம் அமைத்த ஒரு மாதத்திலேயே சாவர்க்கர் பட்டினி கிடந்து மரணத்தை ஏற்றார். விசாரணையில் சிக்கி விடுவோம் என்ற அச்சமே காரணம். பசுவை வணங்கினால் நாமும் சாந்தமாகி விடுவோம்; கோழையாவோம் என்ற காரணத்தால் பசு வணக்கத்தை எதிர்த்தார். நேதாஜியுடன் இணைந்து போரிடாததற்குக் காரணம் நேதாஜியிடம் இஸ்லாமிய எதிர்ப்பு இல்லை என்பதுதான். எந்த நடவடிக்கையிலும் தன்னை நேரடியாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் திறைமறைவில் இயங்குவதே சாவர்க்கர் பண்பு.   பாட்ஜேவின் வாக்குமூலம் இது… `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14ஆம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பே யில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும்...

திருவிடைமருதூர் கோவிலில்…

திருவிடைமருதூர் கோவிலில்…

தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண மகாராஜன் என்ற பாண்டியன் தான் மோட்சம் அடைவதற்காக தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாகச் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது ! இவனது சிவபக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே வரகுண மகாராஜன் தன் மனைவியைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததை புகழ்ந்து பாடியுள்ளார். அந்தப் பாண்டியன் சேர-சோழர்களையெல்லாம் பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. அப்படிப்பட்டவன் தான் இப்படிக் கேவலமாக, மானமற்று நடந்து கொண்டான். அடுத்தாற்போல, திருவண்ணாமலையில் ஒரு அரசன் ஆண்டுள்ளான். அவன் பெயர் வல்லாள மகாராஜன் என்பது. அந்த மடையனும், தான் மோட்சமடைய வேண்டித் தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறான்.    ‘விடுதலை’  30.04.1961 பெரியார் முழக்கம் 04022021 இதழ்