மா.வேழவேந்தன் இல்ல ஜாதி-மத மறுப்பு மணவிழா

சென்னை மாவட்ட கழகத் தலைவர் வேழ வேந்தன்-பேபி இணையரின் மகள் இளவரசி – ஆம்பூர் முபீன் வாழ்க்கை ஒப்பந்த நிகழ்வு 3.2.2021 அன்று சென்னை இராயப் பேட்டை பகல் 11 மணியளவில் நடந்தது. இது ஜாதி-மத மறுப்பு திருமணமாகும். மண விழாவில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பேராசிரியர் சரசுவதி பங்கேற்று வாழ்த்தினர். சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன் கொடையாக ரூ.5,000/- பொதுச்செயலாளரிடம் வேழவேந்தன் வழங்கினார்.

பெரியார் முழக்கம் 11022021 இதழ்

You may also like...