கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் முடிவெய்தினார்

திராவிட இயக்க மூத்த பத்திரிகையாளர் கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன் தனது 95ஆவது வயதில் சென்னையில் பிப்.5 அன்று முடிவெய்தினார். 70 ஆண்டுகாலம் திராவிட இயக்க இதழ்களில் பணியாற்றிய பெருமைக்குரிய அவர், தி.மு.க. தொடங்கப்பட்ட 1949 செப்டம்பர் 17இல் நடந்த அதன் அமைப்புக் கூட்டத்தில் பங்கேற்ற 150 பேரில் ஒருவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாலைமணி, விடுதலை, நம்நாடு உள்ளிட்ட நாளேடுகளில் பணியாற்றியதோடு, ‘எழுச்சி’, ‘கவிக்கொண்டல்’ என்ற இதழ்களையும் நடத்தினார். சீரிய பகுத்தறிவாளர். அவரது முழுமையான திராவிட இயக்கப் பயணத்தை ‘நிமிர்வோம்’ மாத இதழ் (2017, டிசம்பர்) விரிவாக அவருடன் நேர்காணல் நடத்திப் பதிவு  செய்துள்ளது. அவரது தன் வரலாற்றுச் சுருக்கமாக உள்ள ஒரே ஆவணமாக ‘நிமிர்வோம்’ நேர்காணல் உள்ளது. தனது குறிப்பிடத்தக்க சாதனைகளாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்கு (டிச. 24, 2020) அவர் எழுதிய கடிதம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் பதிவு செய்துள்ளது. ‘கவிக்கொண்டல்’ என்ற கவிதை இலக்கிய மாத இதழைப் பல ஆண்டுகாலம் தனது வாழ்நாள் இறுதி வரை நடத்தியவர் கவிக்கொண்டல் மா. செங்குட்டுவன்.

பெரியார் முழக்கம் 11022021 இதழ்

You may also like...