திருவிடைமருதூர் கோவிலில்…

தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர் கோயிலில் போய்ப் பார்த்தால் தெரியும். வரகுண மகாராஜன் என்ற பாண்டியன் தான் மோட்சம் அடைவதற்காக தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்தது சித்திரமாகச் சுவரிலேயே தீட்டப்பட்டு இருக்கின்றது ! இவனது சிவபக்தியின் மேலீட்டைப் பற்றிப் பட்டினத்தார் பாடியுள்ள பாடலிலேயே வரகுண மகாராஜன் தன் மனைவியைப் பார்ப்பானுக்குக் கொடுத்ததை புகழ்ந்து பாடியுள்ளார். அந்தப் பாண்டியன் சேர-சோழர்களையெல்லாம் பராக்கிரமசாலி என்று சரித்திரம் கூறுகின்றது. அப்படிப்பட்டவன் தான் இப்படிக் கேவலமாக, மானமற்று நடந்து கொண்டான்.

அடுத்தாற்போல, திருவண்ணாமலையில் ஒரு அரசன் ஆண்டுள்ளான். அவன் பெயர் வல்லாள மகாராஜன் என்பது. அந்த மடையனும், தான் மோட்சமடைய வேண்டித் தன் மனைவியைப் பார்ப்பானுக்கு விட்டுக் கொடுத்து இருக்கிறான்.    ‘விடுதலை’  30.04.1961

பெரியார் முழக்கம் 04022021 இதழ்

You may also like...