மார்ச் 8 – கழகக் குடும்ப சந்திப்பு: ஈரோடு வடக்கு மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகத்தின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 7.02.2021 அன்று ஞாயிறு மாலை 4 மணியளவில் கோபி நாகப்பன் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில வெளியீட்டு செய லாளர் இராம. இளங்கோவன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் நாத்திக சோதி, மாவட்ட செயலாளர் வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும், போராடும் விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டியும், வீரப்பன் வழக்கில் பெரும் சிக்கலுக்கு ஆளாகி சிறையில் வாடுபவர்களையும் தமிழக அரசு உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு வடக்கு மாவட்டக் கழகத் தோழர்களின் குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி நடத்துவது எனவும் முடிவ செய்யப்பட்டது. இறுதியில் அலிங்கியம் செந்தில் நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட கழகத் தோழர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

 

பெரியார் முழக்கம் 25022021 இதழ்

You may also like...