தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது. சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது....