Category: மின்னூல்கள்

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

புரட்சியாளர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம்பெற்றுள்ள தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்கள்

டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பில் இடம் பெற்றுள்ள நூல் தொகுதிகளைப் பற்றிய சுருக்கமான தகவல்களை இங்கே பார்ப்போம். 1. ஜாதி ஒழிப்பு, மொழிவாரி மாகாணம், வீரரும் வீர வழிபாடும் முதல் தொகுதி 1. சாதி பற்றியவை, 2. மொழி வாரி மாகாணங்கள் குறித்து, 3. வீரரும், வீர வழிபாடும் என்ற மூன்று பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் இந்தியாவில் சாதிகள், அவற்றின் அமைப்பியக்கம், தோற்றம், வளர்ச்சி ஆகியன பற்றிப் பேசுகிறார் அம்பேத்கர்.  பல மானுடவியல் அறிஞர்களின் கூற்றுகளிலிருந்து மேற்கோள்களைச் சுட்டிக்காட்டி, சாதியின் தோற்ற இலக்கணத்தை விளக்கும் அம்பேத்கர் சாதித் தீவிரத்தில் அகமணமுறை எப்படிப் பங்களித்து வருகிறது என்று குறிப்பிடுகிறார்.  அடுத்து, சாதியை ஒழிக்க சமுதாய அமைப்பை எப்படிச் சீர்திருத்த வேண்டும் என்று தகுந்த வாதங்களை எடுத்து வைக்கிறார். நூலின் இரண்டாவது பகுதியில், மொழிவாரி மாகாணங்களினால் எழும் சிரமங்களையும், அனுகூலங்களையும் விவாதித்து, சிரமங்களைத் தீர்ப்பதற்கான வழிவகைகளையும் கூறுகிறார். மூன்றாவது பகுதி, மகாதேவ் கோவிந்த்...