2022 : கழகம் கடந்து வந்த பாதை தொகுப்பு: க. இராசேந்திரன்
2022இல் திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய செயல்பாடுகள் குறித்து ஒரு சுருக்கமான தொகுப்பு. ஜனவரி : டெல்லி குடியரசு தின அணி வகுப்பில் தமிழக அரசு சார்பில் தேர்வு செய்யப்பட்ட தமிழக ‘சுதந்திரப் போராட்டக்காரர்களான’ வ.உ.சி., பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்களின் அலங்கார ஊர்தியை கடைசி நேரத்தில் ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி அனுமதிக்க மறுத்தது. தமிழ்நாட்டின் குடியரசு தின அணி வகுப்பில் இந்த ஊர்திகள் பங்கேற்கும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர். இந்தத் தலைவர்களோடு பெரியார் சிலையையும் சேர்த்து தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வைத்ததோடு குடியரசு நாள் அணி வகுப்பிலும் பங்கேற்கச் செய்தது, தமிழக அரசு. மருத்துவ உயர் மட்டப் படிப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத ஒதுக்கீடு வழங்க முடியாது என்று ஒன்றிய பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றது. தமிழக அரசு தமிழ்நாட்டுக்கு...
