சென்னையில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்: “சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்”

“சனாதனத்தை வேரறுக்க உறுதியேற்போம்” என்ற தலைப்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் பொதுக்கூட்டம், 17.09.2022 சனிக்கிழமை அன்று சென்னை, இராயப்பேட்டை, இலாயிட்ஸ் சாலை, பி.எம்.தர்கா அருகில் நடைபெறவுள்ளது.

கூட்டத்திற்கு, இரண்யா தலைமை வகிக்கிறார். கிருத்திகா வரவேற்று பேச வுள்ளார். தோழர்கள் தேன்மொழி, இரம்யா, யாழினி முன்னிலை வகிக்கின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத்தின்பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு, திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர் இராஜீவ் காந்தி ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.

புதுவை விடுதலை கலைக் குழுவினரின் எழுச்சி இசையோடு நிகழ்வு கள் நடக்கும். இறுதியாக இசை இனியாள் நன்றி கூறுவார்.

 

பெரியார் முழக்கம் 08092022 இதழ்

You may also like...