வள்ளலார் வைதீக எதிர்ப்பு கருத்தரங்கம்: சென்னை மாவட்டக் கழகம் முடிவு

 

  • சமகால அரசியல் சூழல் குறித்த விவாதம்
  • பெரியார் முழக்கம் சந்தா 1000 இலக்காக வைத்து சேர்ப்பது
  • சென்னை மாவட்ட கழகத்தின் எதிர்கால திட்டங்கள், ஆகியவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

வட சென்னை, திருவல்லிக் கேணி, மயிலை, அடையாறு, திருவான்மியூர், நங்கநல்லூர், எம்.ஜி.ஆர். நகர், சூலை, ராமாபுரம் ஆகிய பகுதிகளுக்கு புதிய பொறுப்பாளர்களை கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவித்தார்.

முன்னதாக, கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்,  “தமிழ்நாட்டில் பார்ப்பனிய மதவாதம் காலூன்று வதற்கு எப்படி திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்பதை விளக்கினார். கட்சிகளை உடைத்தல்; ஊடகங்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருதல்; தமிழ்நாட்டில் இரண்டா வது இடத்தில் பா.ஜ.க. இருப்பது போன்ற பிம்பங்களைக் கட்ட மைத்தல்; இந்த செயல் திட்டங் களுக்காகப் பணத்தை பெருமளவு செலவு செய்தல் போன்ற விரிவான  தகவல்களைப் பகிர்ந்து கொண் டார். உண்மைக்கு மாறான பா.ஜ.க.வின் பரப்புரைகளை நாம் எப்படி சந்திக்க வேண்டும் என்பது பற்றியும் வள்ளலார் விழாவை வேத வைதீக எதிர்ப்போடு முன்னெடுக்க லாம்” என்ற கருத்தையும் முன் வைத்து உரையாற்றினார்.

கழகத்தின் எதிர்கால நடவடிக் கைகள் பற்றியும், கொள்கை அணுகுமுறைகளையும் விவரித் தார். தொடர்ந்து, தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் ஆகியோர் மாவட்ட கழகத்தின் நோக்கங்களை விளக்கிப் பேசினர்.

கலந்துரையாடலில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நிதியாக திருவல்லிக்கேணி பகுதி செய லாளர் அருண் குமார் ரூ. 10000/-யை கழகத் தலைவர், பொதுச் செயலாளரிடம் வழங்கினார்.

மாவட்ட கலந்துரையாடலில், ஆலந்தூர் பகுதியைச் சேர்ந்த அருண்ராஜ், போரூர் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ், ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தோழர்களுக்கு, ‘திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?’ நூலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி வழங்கி வரவேற்றார்.

 

 

சென்னை மாவட்ட திவிக கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் இன்று 04.10.22  காலை 10:30 மணியளவில் தலைமை அலுவல கத்தில் நடைபெற்றது.

கலந்துரையாடலில் –

 

நன்கொடை

கழகத் தலைமை அலுவலகத்தில் 06.10.2022 அன்று காலை

10 மணியளவில் நீலாவதி – பாலாஜி இணையரின் சுயமரியாதைத் திருமணம் சென்னை மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் நடைபெற்றது. இணையர் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வளர்ச்சி நிதியாக 2000 ரூபாய் வழங்கினர்.

பெரியார் முழக்கம் 13102022 இதழ்

You may also like...