பெண்களையும், சூத்திரர்களையும் அவமதிக்கும் மனுசாஸ்திரம்
- பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.)
- கணவன் துராசாரமுள்ளவனாக “(ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு உறவு வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154)
- பெண்கள் துரோகிகள் ; பெண்களைக் கொல்லுவது பாவமில்லை. படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (அத்தியாயம் 9 ; ஸ்லோகம் 17)
- பெண்களையும், பிராமணர் அல்லாதவரையும் கொல்லுவது பாவமில்லை. (அத்தியாயம் 11; ஸ்லோகம் 65)
- சூத்திரர்கள் அனைவரும் பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள்.
சூத்திரர் என்போர் ஏழு வகைப்படுவர். 1. போரில் புறங்காட்டி ஓடியவன், 2. போரில் கைதியாகப் பிடிக்கப்பட்டவன், 3. பிராமணனிடத்தில் பக்தியினால் ஊழியம் செய்பவன், 4. விபச்சாரி மகன், 5. விலைக்கு வாங்கப்பட்டவன், 6. ஒருவனால் கொடுக்கப்பட்டவன், 7. தலைமுறை தலைமுறையாக ஊழியம் செய்பவன். (அத்தியாயம் 8, ஸ்லோகம் 415)
- ஊர் – சேரிப் பிரிவினை
இவர்கள் (தாழ்த்தப்பட்டோர்) அனைவரும் பட்டணத்திற்கும், ஊருக்கும் வெளியில் மரத்தடி, தோப்பு, சுடுகாட்டிற்கு அருகிலுள்ள இடம், மலைப் பூந்தோட்டம் இவைகளில், அனைவருக்கும் இவர்கள் இன்ன தொழிலாளிகள் என்று தெரியும்படி தன் தன் தொழிலைச் செய்து கொண்டு வாழ செய்ய வேண்டியது. (அத்தியாயம் 10; ஸ்லோகம் 50)
- பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கக் கூடாது
சூத்திரன் மனப்பாடம் பண்ணும் நோக்கத்துடன் வேதம் படிப்பதைக் கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும், அரக்கையும் ஊற்ற வேண்டும். அவன் வேதம் ஓதினால் ஓதும் நாக்கு துண்டிக்கப்பட வேண்டும். வேதத்தில் முழுத் தேர்ச்சி அடைந்தால் அவனது உடம்பு துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்கப்பட வேண்டும். (அத்தியாயம் 12; ஸ்லோகம் 4)
– சென்னை மாவட்டக் கழகத் துண்டறிக்கை
பெரியார் முழக்கம் 29092022 இதழ்