நீட்டை நீக்கு; போராட்டம் தீவிரம்!

Ban_NEET! மற்றும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்று!, தமிழ்நாடு அரசு நீட்விலக்கு மசோதாவை நிறைவேற்று, தொடர் போராட்டத்துக்கு இடம் கொடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நீட் எதிர்ப்பு கூட்டியக்கம் சார்பில் சென்னை கோயம்பேடு திருவள்ளுவர் இல்லத்தில், கடந்த 10 நாட்களாக காலவரையறையற்ற பட்டினிப் போராட்டத்தில் 4 தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தோழர் ரவி 7 நாட்கள் உண்ணாவிரத்தில் ஈடுபட்டு தற்போது மருத்துவமனையில் உள்ளார்.

பட்டினிப் போராட்டத்துக்கு, ஆக-2, அன்று தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, ஷர்மிளா, குடிஅரசு, குறளரசி, பரணி, தமிழ்க்குமரன் ஆகியோரும், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, வடசென்னை மாவட்டத் தலைவர் சேத்துப்பட்டு இராசேந்திரன், மாவட்ட அமைப்பாளர் ந. தட்சிணாமூர்த்தி, மாவட்டத் துணைச் செயலாளர் ஆ.வ. வேலு, தோழர்கள் கார்த்தி ராஜேந்திரன், ராஜன், இளைஞரணி சார்பில் அருண்(மாவட்ட அமைப்பாளர்), யாழினி, குமார், இளவரசன், பிரசாந்த்
ஆகியோர் பங்கேற்று ஆதரவளித்தனர்.

பெரியார் இயக்கக் கொள்கைக்கு உண்ணாவிரதப் போராட்ட முறை முரண்பாடானதாக இருக்கும் நிலையில், போராட்ட இலக்குக்கும் நோக்கத்துக்கும் ஆதரவளிக்கப்பட்டது.

ஆக-2, மாலை 3 மணிக்கு, தமிழ்நாடு மாணவர் இளைஞர் கூட்டமைப்பின் (TYSF) ஆலோசனைக் கூட்டமும், பத்திரிகையாளர் சந்திப்பும், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. பல்வேறு மாணவர் இயக்கங்கள் பங்கேற்ற இந்நிகழ்வில், தமிழ்நாடு மாணவர் கழகத்தின் சார்பில் ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, கழகத்தின் சார்பில் சென்னை மாவட்ட அமைப்பாளர் ம.கி. எட்வின் பிரபாகரன், தாமரை ஆகியோர் பங்கேற்றனர்.

ஜூலை-27, மாலை 4 மணிக்கு, சென்னை மந்தைவெளி செயின்ட் மேரிஸ் பாலம் அருகில், இராவணன் (மாவட்டத் துணைச் செயலாளர்) தலைமையில், நீட் தேர்வை தடைச் செய்யக்கோரி, கழகத் தோழர்கள் தோழமை இயக்கத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பெரியார் முழக்கம் இதழ் 13082026

You may also like...