தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021
தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது.
சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார்.
தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடத்தில் கல்வியின் முக்கியத்துவம், கல்விக்கு ஏற்படும் பாதிப்புகளான நீட் தேர்வு, இட ஒதுக்கீட்டிற்கு வரும் ஆபத்து போன்றவற்றை விளக்கும் வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும், மாணவர்களிடத்தில் முற்போக்கு சிந்தனைகளை வளர்க்கும் நோக்கில் கலை வடிவிலான நிகழ்வுகள் நடத்தப்பட வேண்டும், சமூக வலைதளங்களை முறையாகப் பயன்படுத்தி சமூகநீதிக் கொள்கைகளைப் பரப்ப வேண்டும். மூடநம்பிக்கையற்ற சுய ஒழுக்கம் மிகுந்தவர்களாக குழந்தைகள் வளர்க்கப்பட வேண்டும், கல்விக்கடன் தேவைப்படும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும், மாணவர் சங்கத் தேர்தல் அனைத்துக் கல்லூரிகளிலும் நடத்தப்பட வேண்டும். வாசகர் வட்டங்கள் மூலம் புத்தக வாசிப்பு பழக்கப்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை மாணவர்கள் விவாதித்தனர்.
நிகழ்வை, திருப்பூர் கனல்மதி, தேன்மொழி, சந்தோஷ், இரண்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
கழகத்தின் அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி
திருப்பூர் மாவட்ட கழகத் தலைவர் முகில் இராசு ஆகியோரும் மாணவர்களின் நலன் சார்ந்த கருத்துக்களை கூறினர்.
இறுதியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சென்னிமலை ஷர்மிளா நன்றி கூறினார்.
திருப்பூர் – தேன்மொழி, கனல்மதி, முத்தமிழ், ஈழமாறன், கார்த்திகா, மிதுன், ஆகாஷ், பிரசாந்த், சந்தோஷ், யாழினி, யாழிசை, அகராதி.
திண்டுக்கல் – ஆயுதன், ஆதித்யா
கோவை – விஷ்ணு, மனோ, பொள்ளாச்சி – சபரிகிரி
ஈரோடு – கார்மேகம், சர்மிளா, அறிவழகன், சௌந்தர்யன், ஜோதிலக்ஷ்மி, சௌந்தர்யன்
நாமக்கல் – புகழேந்தி, அறிவுக்கொடி
சென்னை – இரண்யா, பிரவீன்குமார், இளவரசன், புகழ்வனவன், உதயகுமார், எழிலரசன்.
சேலம் – பிரபாகரன், சிவசண்முகம், கோபாலகிருஷ்ணன், வெங்கடேசன், முரளி, பிரதாப், சிவசண்முகம், திவாகர், முருகன், ஜோதிபாசு ஆகிய தோழர்கள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட முன்னாள் கழகத் தலைவர் பாபு, மதிய உணவாக கோழிக்கறி பிரியாணி மற்றும் கலந்துரையாடலுக்கான இடத்தையும் வழங்கினார். கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி கலந்துரையாடலுக்கான ஏற்பாடுகளை செய்தார்.
தீர்மானங்கள் :
1) தமிழக மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு, நீட் தேர்வு இரத்து, போன்ற பல்வேறு கல்வி சார்ந்த நடவடிக்கைகளை சிறப்பாகவும், மாணவர்களின் நலன்சார்ந்த நோக்கிலும் தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளைத் தமிழ்நாடு மாணவர் கழகம் பாராட்டி நன்றி தெரிவிக்கிறது.
2) மாணவர் கழகத் தோழர்களுக்குப் பயிற்சி வகுப்புகள் நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
3) புத்தகங்களை வாசித்து மாணவர்கள் பேசும் வகையில் மாதம் மாதம் வாசகர் வட்டம் நடத்துவது.
4) இணையதளப் பயன்பாட்டைப் பயனுள்ள வழியில் அதிகரிப்பது.
5) பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையில் பாலினசர சமத்துவம், பாலியல் விழிப்புணர்வு ஆகியவற்றுக்கான பாடத்திட்டங்களை உருவாக்கி, மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.
6) காமராசர் பிறந்தநாளை கலைஞர் அவர்கள் கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்துப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்குவது போல் பெரியார் பிறந்த நாளான செப்டம்பர்-17 சமூகநீதி நாளையும் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்க வேண்டுமெனத் தமிழக அரசைக் கேட்டுக்கொள்கிறோம்