Category: நாமக்கல்
பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 29122016
தந்தை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் 29122016 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருப்பரசன் நாடக குழுவினர் மிகச் சிறப்பாக பெரியாரிய கருத்துக்களால் உலுக்கிய எடுத்தார். கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 1 கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 2
ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு
நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் 06.10.2016 அன்று தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. குமார பாளையம் நகர கழகத் தலைவர் மீ.த.தண்டபாணி வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் முன்னதாக பாவலர் இரா.நிறைமதி தலைமையில் “தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது “மதமே” என்ற தலைப்பில் பொன் கதிரவன், “பெண்ணடிமையே”என்ற தலைப்பில் நா.அன்பழகன், “சமூக அநீதியே” என்ற தலைப்பில் மதுபாரதி, “ஜாதியே” என்ற தலைப்பில் பகலவனும் கவிதை நடையில் சிறப்பாக எடுத்துரைத்தனர். கவியரங்கம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக துரை தாமோதரனின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது. சாமியார்களின் மோசடித்தனங்களை விளக்கி மக்களின் அறியாமையைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. பின்னர் பா.செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், செயலாளர் மு.சரவணன், அமைப்பாளர் மா.வைரவேல், ...
நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் இளைஞர் பலி
திருச்செங்கோட்டில் 13.10.2016 அன்று நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மூளைச்சிதறி சௌந்தர்ராஜன் எனும் இளைஞன் மரணமடைந்தார். சட்டவிரோதமாக நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பிற்கு காரணமான கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு,நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் மனு அளித்தனர்.
பள்ளிபாளையம் காவல்நிலையம் முற்றுகை !
ஆயுத பூஜை கழக தோழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடிய பள்ளிபாளையம் காவல்நிலையத்தில்… நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைங்களில் இந்து மத பண்டிகையான ஆயுதபூஜை கொண்டாட கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. கழகத்தின் கோரிக்கையையும் ஏற்காமலும், அரசின் சட்ட விதிகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக அரசின் மதசார்பினையை சீர்குலைக்கும் வகையில் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் ஆயுதபூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தது,இதை அறிந்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் தலைமையில் கழக தோழர்கள் காவல்நிலையம் சென்று விசாரித்தனர். பள்ளிபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜா தோழர்களிடம் ஒருமையில் பேசி கலைந்து செல்லுமாறு மிரட்டியதோடு உள்ளே வைத்து அடித்து விடுவதாகவும் மிரட்டினார். உடனடியாக தோழர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆயுத பூஜையை நிறுத்துமாறும், பூஜைக்கு தயார்படுத்திய பொருட்களை அப்புறப் படுத்துமாறும், ஒருமையில் தகாத வார்த்தைகளை பேசிய துணை ஆய்வாளர் ராஜாவை மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை வைத்தனர்,...
தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !
தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 09.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.OO மணி வரை. இடம்: சீதாராம்பாளையம்,தெப்பாறை, திருச்செங்கோடு தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”மகளிர் சந்திப்பு” 9.10.2016. ஞாயிறு அன்று திருச்செங்கோடு சீதாராம்பாளையம் செப்பாறையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பெண்கள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் தங்கள் வாழ்வில் பெரியாரியலின் தாக்கங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெரியாரியல் அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக கூறினர்.பெரியாரியல் வாழ்க்கை நெறியில் கணவருடன் சிக்கல்களை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் முரண்பாடுகளை எளிதில் களைய முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினர். மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் தாய்வழிசமூக...
தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – குமாரபாளையம் 06102016
தந்தை பெரியார் 138வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் தலைமை தோழர் கொளத்தூர் மணி நாள் 06102016 நேரம் மாலை 5 மணி முதல் இடம் நகர பேருந்து நிலையம் அருகில், குமாரபாளையம் தோழர் பெரம்பலூர் துரை தாமோதரனின் மந்திரமா தந்திரமா என்ற அறிவியல் நிகழ்ச்சி மற்றும் கவியரங்கம் நடைபெறும் தொடர்புக்கு 9944333855
நாமக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழா
குமாரபாளையத்தில்… நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமையில்,காவேரி நாகரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியில் சென்று நகரின் எட்டு இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது மற்றும் பெரியாரின் பொன்மொழி வாசகப் பலகை திறக்கப்பட்டது,பல்வேறு இடங்களில் பெண் தோழர்கள் கொடியேற்றினர்,இறுதியாக கத்தேரி சமத்துவபுரத்தில் வாகனப் பேரணி முடிவடைந்த்து,பின்பு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினர்,இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்றனர். திருச்செங்கோட்டில்… நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை.தனலட்சுமி,ச.ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர்,பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளிபாளையத்தில்… நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர்...
பள்ளிபாளையம் நாமக்கல் மாவட்டத்தில் பெரியார் பிறந்தநாள் விழா
தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தில் நகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக பேருந்து நிலையம் அருகில் வைக்கப்பட்ட அய்யாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,நகரத் தலைவர் பிரகாசு,நகர செயலாளர் சரவணன்,நகர பொருளாளர் கோபி ,நகர இளைஞரணிச் செயலாளர் யுவராஜ் மற்றும் குப்புசாமி, சங்கர்,தம்பிதுரை, தங்கராஜ், வேணுகோபால்,பிரகாசு,பாலண்,சங்கர் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்
திருப்பூர் அணியின் பயண பரப்புரை தொகுப்பு
090816 செவ்வாய் காலை 1030 மணி கிணத்துக்கடவு தலைமை நிர்மல் குமார்தி.வி.க.கோவை மாவட்டச்செயலாளர் தொடக்கவுரை .தோழர் மணிமொழி அவர்கள் வாழ்த்துரை தமிழ் பித்தன் தி.மு.க அவர்கள், தோழர்.வானுகன் அவர்கள் ஆதி தமிழர்பேரவை அவர்கள் இயக்க பாடல் தோழர்கள் .சங்கீதா உக்கடம் கிருட்டிணன் அவர்கள், தோழர் ராமசந்திரன் தி.வி.க. புற நகர் மாவட்ட தலைவர் அவர்கள், தோழர் பொள்ளாச்சி.வெள்ளிங்கிரி தி .வி.க அமைப்பாளர் பொள்ளாச்சி நகரம் தோழர் காவை இளவரசன் அவர்கள் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கநிகழ்ச்சி தோழர் திருப்பூர்.சு.துரைசாமி திவிக. மாநில பொருளாளர் தோழர்.கோபி வேலுச்சாமி தி.வி.க. தலைமைக்கழகப்பேச்சாளர். நன்றியுரை தோழர் வடபுதூர் ராமகிருட்டிணன் அவர்கள் மதிய உணவு ஏற்பாடுகள். தோழர்கள் திமுக பொருப்பாளர் நடராசன் தமிழ்பித்தன் வெள்ளக்கிணறு மருதகனி கொண்டம்பட்டி செல்வராசு வடவள்ளி ஒவியர் தமிழேந்தி மிக சிறப்பாக ஏற்ப்பாடுகள் செய்து கொடுத்தனர் நன்றி மாலை 0415க்கு பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் தலைமை பொள்ளாச்சி வெள்ளிங்கிரி அவர்கள் தி வி க.நகர...
பாமர மக்களை பற்றிப்படரும் பெரியாரியம்….
நாமக்கல் மாவட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய அறிவியல் பரப்புரைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. புகைப்படம் தோழர் வைரம், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்
சத்தியமங்கலம் அணியின் நான்காம் நாள் எழுச்சி பரப்புரை பயணம்
திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை பயணத்தில் சத்தி அணியின் நான்காவது நாள் பயணம் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் துவங்கியது. முதல் நிகழ்வாக தோழர் ஆனந்து தலைமையில் ஆன வீதி நாடக குழுவின் பறை இசை மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்புசார்ந்த வீதி நாடகம் நடைபெற்றது. தொடர்ந்து தோழர் சுவாமி நாதன்,முத்துபாண்டி,அய்யனார் ஆகியோர் கருத்துரை வழங்க தோழர் வைரவேல் நன்றி கூற பயணம் ஆவத்திபாளையம் சென்றடைந்த்து. ஆவத்திபாளையம் பேருந்து நிறுத்தத்தில் பயணக்குழு தனது பரப்புரையை தொடர்ந்த்து.அப்பகுதியில் கழகத்தின் பொது செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் உரை நிகழ்த்த தோழர் சரவணன் நன்றி கூற பயணக்குழு திருச்செங்கோடு சென்று அடைந்த்து.மதிய உணவுக்கு பின் பயணக்குழு தேவனாங்குறிச்சி சென்றடைந்த்து. அங்கு கலைக் குழுவின் வீதி நாடகம் மற்றும் மேட்டூர் டி.கே.ஆர் இசைக்குழு வின் பகுத்தறிவு பாடல்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து விடுதலை இராசேந்திரன் அவர்கள் கருத்துரை வழங்க, தோழர் சதிஷ் நன்றி...
நாமக்கல் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ! கல்வியில் மத்திய பாஜக அரசின் சமஸ்கிருத திணிப்பை கண்டித்தும், மத்திய அலுவல் மொழி பட்டியலில் இருந்து சமஸ்கிருதத்தை நீக்கிட வலியுறுத்தியும் 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 4 மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்,பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமை தாங்கினார். ,அ.முத்துப்பாண்டி மாவட்டச் பொருளாளர், மு.சாமிநாதன் மாவட்ட தலைவர் ,மா வைரவேல் மாவட்ட அமைப்பாளர் ,நன்றியுரை மு சரவணன் நகரச் செயலாளர் ,ஆ.பிரகாஷ் நகரச் தலைவர்,வெங்கட் ,குப்புசாமி மற்றும் 30 க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்
இடஒதுக்கீடு பற்றிய கலந்துரையாடல் திருச்செங்கோடு 26062016
திருச்செங்கோடு பெரியார் மன்றத்தில் 26062016 அன்று தோழர் பால் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இடஒதுக்கீடு பற்றிய நீண்ட நெடிய கலந்துரையாடல் நிழற்படங்கள்
இடஒதுக்கீடு கலந்துரையாடல் – நாமக்கல் 26062016
இடஒதுக்கீடு நீண்ட நெடிய போராட்ட வரலாறு குறித்த கலந்துரையாடல் இடம் பெரியார் மன்றம், திருச்செங்கோடு நாள் 26062016 முன்பதிவு அவசியம்
ஜாதிவெறியர்களை கைதுசெய் – நாமக்கல் மாவட்டத்தில் கழகம் புகார் மனு
அருந்ததிய இளைஞரை காதலித்தால் கௌரவ (ஆணவ)கொலை செய்வோம் என்றும், அந்த இளைஞரையும் கொலைசெய்வோம் என்றும் திருச்செங்கோடு செங்குந்தர் கல்லூரி மாணவியை “அலைபேசி”யில்(யுவராஜ் பாணியில்)மிரட்டிய கவுண்டர் ஜாதிவெறியர்களை வன்கொடுமை தடுப்பு மற்றும் கொலைமிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கைதுசெய்…! மாணவிக்கு தகுந்த உயிர்பாதுகாப்பு வழங்கு…! என்று நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் காவல்துறையில் இன்று புகார் அளித்துவிட்டு பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை சந்தித்து செய்திகளை பதிவு செய்தோம்… உடன் மாவட்ட கழகசெயலாளர் சரவணன், பள்ளிபாளையம் நகரகழக செயலாளர் பிரகாசு, திருச்செங்கோடு நகரகழக செயலாளர் நித்தியானந்தம், நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு, ஒன்றிய அமைப்பாளர் சதீசு,கார்த்தி உள்ளிட்ட கழகத்தோழர்கள் வந்திருந்தனர் செய்தி வைரவேல், நாமக்கல் மாவட்ட அமைப்பாளர்
ரோகித் வெமுலா – ஆர்ப்பாட்டம் – நாமக்கல் புகைப்படங்கள்
நாமக்கல்லில் ஆர்ப்பாட்டம் ! “ரோஹித் வெமுலா” மரணத்திற்கு நீதிகேட்டு 01.02.2016, அன்று மாலை,5.00மணிக்கு நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. தலைமை: தோழர்.முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர்.திவிக. முன்னிலை: தோழர்.மா.வைரவேல். மாவட்ட அமைப்பாளர்.திவிக. தோழர்.மு.சரவணன். மாவட்ட செயலாளர். திவிக. கண்டன உரை: தோழர்.மு.சாமிநாதன். மாவட்ட தலைவர். திவிக. தோழர்.இரா.செல்வகுமார். மாநில கொ.ப.செயலாளர். ஆதித்தமிழர் பேரவை. தோழர்.ஆ.ஆதவன். மாநில துணைசெயலாளர். தமிழர் படை.(தவாக) தோழர்.வே.காமராஜ். மேற்கு மாவட்ட செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.செந்தமிழன். மாவட்ட செயலாளர். தமிழ்புலிகள். தோழர்.செம்மணி. தொகுதி செயலாளர். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.பெரியண்ணன். மல்லை ஒன்றிய தலைவர்.திவிக. தோழர்.சுடர்வளவன். விடுதலை சிறுத்தைகள் கட்சி. தோழர்.இரா.பிரகாசு. இளைஞரணி செயலாளர்.திவிக. தோழர்.மாணிக்கம். நகர செயலாளர். புரட்சிகர இளைஞர் முண்ணனி. தோழர்.சி.சிவகுமார். திராவிடர் விடுதலைக் கழகம். நன்றியுரை: தோழர். மு.சரவணன். நகர செயலாளர். மாவட்டம் முழுவதுமாக இருந்து 50க்கும் மேற்பட்ட கழகத்தோழர்கள் கலந்துக்கொண்டனர். செய்தி : மா.வைரவேல். மாவட்ட...
கழகத் தோழர் மல்லை கண்ணன் முடிவெய்தினார்
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர், ந.கண்ணன் உடல்நலக் குறைவால் 01.01.2016 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வு 02.01.2016 அன்று நடைபெற்றது. இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி மற்றும் மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர், தமிழ்ப் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இறுதியாக நண்பகல் 12.30 மணியளவில் மல்லசமுத்திரம் பொதுமயானத்தில் கண்ணனின் உடல் எரியூட்டப்பட்டது. கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறந்த களப்பணியாளராக செயல்பட்டு வந்த கண்ணன் இழப்பு அவர் குடும்பத்தார்க்கு மட்டுமின்றி திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் மிகுந்த இழப்பு. கடைசியாக நடந்த சேலம் கழக மாநாட்டில் கலந்து கொண்டு கழகத் தோழர்களிடம் உரையாடினார். அதுவே...
திருச்செங்கோடு நகராட்சி வளாகத்திற்குள் வினாயகர் கோவில் கட்ட நிர்வாகம் முயற்சி !
ஒரு மதம் சார்ந்த வழிபாட்டுத்தளத்தை அரசு அலுவலகத்தில் அமைப்பது என்பது இந்திய அரசியல் சட்ட சாசனத்தில் இந்தியா ஒரு மத சார்பற்ற நாடு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதற்கு எதிரான செயலாகும். அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொதுஇடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது.அரசு அதிகாரிகள் இதுபோன்ற காரியங்கள் செய்வதால் பொது நிர்வாகம் மதசார்பற்ற தன்மையோடு நடுநிலையாக நடைபெறுவது என்பது சந்தேகத்திற்கிடமாகிறது. அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது.அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டுள்ள அதிகாரிகளே தமிழக அரசாணைக்கு எதிராக செயல்படுவது என்பது தமிழக அரசுக்கே எதிரான செயல்தான். இவ்வாறு சட்டவிரோதமாக கட்டப்பட்டு வரும் வினாயகன் கோயிலை அப்புறப்படுத்தக்கோரி நகராட்சி ஆணையாளரையும், வருவாய் கோட்டாட்சியரையும் நேரில் சந்தித்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் அவர்களும்,நகரசெயலாளர் தோழர் நித்தியானந்தமும் திராவிடர் விடுதலைக் கழகத்தின்...
கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது
திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு
திருச்செங்கோட்டில் கழகத்தில் புதிதாக இணைந்த தோழர்களிடமும், இளைஞர் களிடமும் பெரியாரியலை சரியான புரிதலோடு எடுத்துச் செல்லும் நோக்குடன் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என கடந்த மாதம் 06.08.2015 அன்று நடை பெற்ற நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக திருச்செங்கொடு பெரியார் மன்றத்தில் 13.09.2015, ஞாயிறன்று “தமிழ்நாடு-திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முன்பும் பின்பும்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் – திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலையையும், திராவிடர் இயக்க தோற்றத்தற்கு பின் தமிழகம் பெற்ற நலனையும் மிகவும் சிறப்பான முறையில் விளக்கி பயிற்சியளித்தார், இறுதியில் தோழர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட அமைப் பாளர் மா.வைரவேல், திருச்செங்கோடு நகர செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய...
கழகச் செயல்வீரர்கள் எடுத்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள்
கழகச் செயல்வீரர்கள் உற்சாகத்துடன் களப்பணியாற்றி வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் நடந்த பெரியார் பிறந்த நாள் விழாக்கள் குறித்த செய்தி. சேலம் : தந்தை பெரியாரின் 137ஆவது பிறந்த தினத்தையொட்டி, 17-09-2015 அன்று, சேலம் மாவட்டம் இளம்பிள்ளை பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக இருசக்கர வாகனப் பேரணி சிறப்பாக நடைபெற்றது. அன்று காலை 7-30 மணிக்கு இளம்பிள்ளை பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, தோழர்கள் அனைவரும் தங்களின் வாகனங்களில் கழக கொடியினை கட்டி அலங்கரித்துக் கொண்டு, காடையாம்பட்டி நோக்கி புறப்பட்டனர்; அங்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பு சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சுமார் 8-00 மணியளவில் அப்பகுதியில் பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து, பிறந்தநாள் கேக் வெட்டி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து வாகனப் பேரணி திருமலைகிரி, சிவதாபுரம் வழியாக 9-00 மணியளவில் சேலம் மாநகரை அடைந்தது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியார்...
நாமக்கலில் பெரியார் பிறந்த நாள் விழா
நாமக்கல் – பெரியார் பிறந்த நாள் விழா ! நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் நகரின் இரு பகுதிகளில் கழக கொடியேற்றப்பட்டது, இந்நிகழ்வில் மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி,திருச்செங்கோடு நகர தலைவர் சோமசுந்தரம்,நகர செயலாளர் நித்தியானந்தம்,ஒன்றிய அமைப்பாளர் சதிசு,பள்ளிபாளையம் நகர தலைவர் பிரகாசு,மல்லை பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்
திருச்செங்கோட்டில் களமிறங்குகிறது கழகம்
‘சூத்திரர்’ என்று இழிவுபடுத்தும் வேத, புராண, சாஸ்திரங்களைத் தடைசெய்! பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல் திருச்செங்கோடு பெண்களை இழிவுபடுத்துவதாக ஜாதி-மத வாத சக்திகள் அச்சுறுத்தி, மிரட்டி ஒரு இலக்கியவாதியின் படைப்பை முடக்கியுள்ளன. ஆனால், பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் ‘மனு சா°திரம்’ பெண்களை இழிவுபடுத்தும் புராணங்களை ‘புனிதமாக’ப் போற்றுகிறார்கள். பல நூறு ஆண்டுகளாக தொடர்ந்து ‘புனிதங்கள்’ என்ற பெயரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ‘இழிவுகளுக்கு’ எதிராக பெரியார் இயக்கம் போராடி வருகிறது. ஆனால், பெரியார் இயக்கம் ‘மதத்தைப் புண்படுத்துவதாக’ குற்றம் சாட்டுகிறார்கள். ‘பெரும்பான்மை’ மக்களை இழிவுபடுத்தும் வேத புராண சாஸ்திரங்களை தடை செய்யக் கோரி திராவிடர் விடுதலைக் கழகம் திருச்செங்கோட்டில் ஜன.23இல் பொதுக் கூட்டம் நடத்தவிருக்கிறது. அதையொட்டி மக்களிடையே பரப்புவதற்காக கழகம் வெளியிட்ட துண்டறிக்கை: சூத்திரன் என்றால் யார்? இந்து மதத்தில் பார்ப்பனர்களைத் தவிர பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஜாதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரும் சூத்திரர்கள் என இந்து மத சாஸ்திரங்கள்...
நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு!
அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில் கழக தோழர்களின் முயற்சியால் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை வளாகத்தில் புதியதாக ஒரு வினாயகர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் அந்த கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மேலும் 26.03.2015 அன்று அரசு மருத்துவமனை நிலத்தை ஆக்கிரமித்த மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே இரவோடு இரவாக அந்த கோயிலை இடித்து கட்டுமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர். இந்த முயற்சிக்கு பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதி கழகத் தோழர்கள் பெரிதும் உழைத்தனர். பெரியார் முழக்கம் 02042015 இதழ்
யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக காவல்துறை அறிவிக்கக் கோரி திருச்செங்கோட்டில் கழகம் ஆர்ப்பாட்டம்
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...
ஜாதி வெறியன் யுவராஜை உடனே கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 17082015
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...
நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல்
திருச்செங்கோடு, பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனக் கட்டிடத்தில் நாமக்கல் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 6-8-15 அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது
தந்தை பெரியார் சிலையை மறைத்து ஜாதிக்கட்சியின் கொடி நட முயற்சி; கழக செயல்வீரர்கள் பதிலடி
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் அமைந்துள்ள தந்தை பெரியாரின் சிலையை இழிவுபடுத்தும் நோக்கோடு சிலைக்கு முன்பாக கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சி சார்பில் அவர்களின் கொடிமரம் நடுவதற்கு முயற்சிகள் நடந்தது. செய்தியறிந்த நாமக்கல் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயலாளர் வைரம் தடுக்க முயன்றார். காவல்துறை தலையிட்டு இருதரப்பினரையும் கலைத்தனர். மீண்டும் கழகம் சார்பில் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட அதை காவல்துறை வாங்க மறுத்தது. பின்பு திவிக தோழர்கள் சதீசு, பிரகாசு, கார்த்தி, நித்தியானந்தம், மாணிக்கம் மற்றும் ஆதித்தமிழர் பேரவையின் மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் செல்வவிள்ளாலன் அவர்களும், மாவட்ட செயலாளரோடு மதியம் 2.00 மணிக்கு பெரியார் சிலைக்கு முன் திரண்டு ஜாதிவெறியர்களின் கொடிமரத்திற்கான பீடத்தை இடித்து நொறுக்கினார்கள். இச்சம்பவத்தை தொடர்ந்து தோழர்கள் மீது வழக்கு பதிவுசெய்ய வலியுறுத்தி காவல்நிலையம் விரைந்தனர் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியினர்.