கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்”

“இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்”

என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது.
தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன.
கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள்.
இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது.
கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது

10997885_526388944183318_2080966821225986064_n 12036520_526389117516634_3372207875037157827_n 12039242_526390050849874_1105069795407337637_n 12039547_526389377516608_3788871163552207048_n 12039590_526389237516622_8217243103869659744_n 12046837_526390224183190_4434369379073358614_n 12046909_526389764183236_2918130754916027758_n 12074769_1635670343379323_8926317263244312110_n

You may also like...