திருச்செங்கோட்டில் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்த முடிவு

திருச்செங்கோட்டில்  கழகத்தில் புதிதாக இணைந்த தோழர்களிடமும், இளைஞர் களிடமும் பெரியாரியலை சரியான புரிதலோடு எடுத்துச் செல்லும் நோக்குடன் தொடர் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என கடந்த மாதம்  06.08.2015 அன்று நடை பெற்ற நாமக்கல் மாவட்ட கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது

இதைத் தொடர்ந்து முதல் கட்டமாக திருச்செங்கொடு பெரியார் மன்றத்தில் 13.09.2015, ஞாயிறன்று “தமிழ்நாடு-திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முன்பும் பின்பும்” என்ற தலைப்பில் ஒருநாள் பயிற்சி வகுப்பு மிகவும் சிறப்பாக நடைபெற்றது. மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் – திராவிடர் இயக்க தோற்றத்திற்கு முந்தைய தமிழகத்தின் நிலையையும், திராவிடர் இயக்க தோற்றத்தற்கு பின் தமிழகம் பெற்ற நலனையும் மிகவும் சிறப்பான முறையில் விளக்கி பயிற்சியளித்தார், இறுதியில் தோழர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கமளித்தார். நாமக்கல் மாவட்ட செயலாளர் மு.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பினை நாமக்கல் மாவட்ட அமைப் பாளர் மா.வைரவேல், திருச்செங்கோடு நகர செயலாளர் நித்தியானந்தம், ஒன்றிய அமைப்பாளர் சதிசு, இளைஞரணி பொறுப்பாளர்கள் கார்த்தி மற்றும் பிரகாசு உள்ளிட்ட திருச்செங்கோடு நகர கழக தோழர்கள் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்திருந்தனர்.

பெரியார் முழக்கம் 24092015 இதழ்

You may also like...

Leave a Reply