நாமக்கல் மாவட்டத்தில் தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழா

குமாரபாளையத்தில்…

நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன் தலைமையில்,காவேரி நாகரிலிருந்து இருசக்கர வாகனப் பேரணியில் சென்று நகரின் எட்டு இடங்களில் கழகக் கொடியேற்றப்பட்டது மற்றும் பெரியாரின் பொன்மொழி வாசகப் பலகை திறக்கப்பட்டது,பல்வேறு இடங்களில் பெண் தோழர்கள் கொடியேற்றினர்,இறுதியாக கத்தேரி சமத்துவபுரத்தில் வாகனப் பேரணி முடிவடைந்த்து,பின்பு சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தோழர்களுக்கு மதிய உணவு வழங்கினர்,இந்நிகழ்வில் மாவட்டத்தின் அனைத்து பகுதி தோழர்களும் பங்கேற்றனர்.

திருச்செங்கோட்டில்…

நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் மா.வைரவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,நகரின் இரு பகுதிகளில் கழகத் தோழர்கள் வை.தனலட்சுமி,ச.ராஜலட்சுமி ஆகியோர் கழகக் கொடியேற்றினர்,பின்பு பேருந்து நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் கழகத் தோழர்கள்,ஆதரவாளர்கள் பலர் பங்கேற்றனர்.

பள்ளிபாளையத்தில்…

நாமக்கல் மாவட்டச் செயலாளர் மு.சரவணன் தலைமையில்,பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் மாவட்டப் பொருளாளர் முத்துப்பாண்டி உள்ளிட்ட கழகத் தோழர்கள் பலர் பங்கேற்றனர்.

இராசிபுரத்தில்…

நகர அமைப்பாளர் தோழர் பிடல் சேகுவேரா தலைமையில் இராசிபுரத்தில், கழக அலுவலகத்தில் வைக்கப்பட்ட பெரியாரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது,இந்நிகழ்வில் நகர வளர்ச்சி மன்றத் தலைவர் பாலு,மதிமுக நகரச் செயலாளர் ஜோதிபாசு,விசிக நகர அமைப்பாளர் பூபதி மற்றும் தோழர்களும,ஆதரவாளர்களும் பங்கேற்றனர்.

14329898_1806936556256903_5532371648285969944_n 14344270_1806936189590273_5617329512844328859_n 14364905_1806936296256929_446462118904219017_n 14390790_1806936446256914_7570843920120910610_n

You may also like...