கழகத் தோழர் மல்லை கண்ணன் முடிவெய்தினார்

நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றிய அமைப்பாளர், ந.கண்ணன் உடல்நலக் குறைவால் 01.01.2016 அன்று முடிவெய்தினார். அவரது இறுதி நிகழ்வு 02.01.2016 அன்று நடைபெற்றது.
இறுதி நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக அமைப்பு செயலாளர் இரத்தினசாமி மற்றும் மறுமலர்ச்சி திமுக, விடுதலை சிறுத்தைகள், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர், தமிழ்ப் புலிகள் ஆகிய அமைப்புகளைச் சார்ந்த தோழர்களும், நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோரும் பங்கேற்று மரியாதை செலுத்தினர். இறுதியாக நண்பகல் 12.30 மணியளவில் மல்லசமுத்திரம் பொதுமயானத்தில் கண்ணனின் உடல் எரியூட்டப்பட்டது.
கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக சிறந்த களப்பணியாளராக செயல்பட்டு வந்த கண்ணன் இழப்பு அவர் குடும்பத்தார்க்கு மட்டுமின்றி திராவிடர் விடுதலைக் கழகத்திற்கும் மிகுந்த இழப்பு. கடைசியாக நடந்த சேலம் கழக மாநாட்டில் கலந்து கொண்டு கழகத் தோழர்களிடம் உரையாடினார். அதுவே அவர் பங்கேற்ற கடைசி மாநாடாக அமைந்து விட்டது.

பெரியார் முழக்கம் 07012016 இதழ்

You may also like...